புதுவை அரசு கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை நலத்துறை மூலமாக மத்திய அரசின் வேளாண் அபிவிருத்தி திட்டத்தின்கீழ் 3 பசுக்களைக் கொண்டு ஒரு சிறு பால் பண்ணை அமைக்கும் திட்டத்தின் கீழ் 50% மானியத்தில், கால்நடை வளர்ப்பவர்களிலிருந்து 400 பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இவற்றில் 249 பயனாளிகள் தற்காலிகமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில் 27 பயனாளிகள் இத்திட்டத்தை முழுவதுமாக முடித்துள்ளார்கள். இவர்களுக்கு 50% மானியமாகிய ரூ.13 லட்சத்தி 50 ஆயிரம் முதல்வர் ரங்கசாமி இன்று வழங்கினார்.
வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள, கால்நடை வளர்ப்போருக்கு 50% மானியத்தில் ஒரு கறவை மாடு வாங்க 560 பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளது. இவர்களில் 515 பயனாளிகள் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.
இவர்களில் தற்பொழுது 47 பயனாளிகள் முழுவதுமாக இத்திட்டத்தை செயல்படுத்தியுள்ளார்கள். இவர்களுக்கு 50% மானியமாகிய 5 லட்சத்து 87 ஆயிரத்தை முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.
முதல்வர் ரங்கசாமி அலுவலகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் பிப்டிக் தலைவர் அங்காளன் எம்.எல்.ஏ, கால்நடை பராமரிப்புத் துறை இயக்குநர் பத்மநாபன், இணை இயக்குநர் டாக்டர் மனோகரன், டாக்டர்கள் ராஜீவ், ராணி, சையத் அலி மற்றும் துறையின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக