யா அல்லாஹ்!!!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன்.என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக.

ஞாயிறு, 5 மே, 2013

வாத்து வளர்ப்பு
‘அனாட்டிடே’ குடும்பத்தைச் சார்ந்த அனைத்துப் பறவைகளுக்கும் வாத்து என்பது பொதுவான பெயர். அன்னப்பறவை, பெருவாத்து, சிறு வாத்து என பல வகை இக்குடும்பத்தினுள் அடக்கம். எனினும் சிறுவாத்துகளையே பொதுவாக வளர்ப்பது வழக்கம். இவை நல்ல நீரிலும், உப்புகொண்ட கடல்நீரிலும் கூட வாழக்கூடியவை. பெரும்பாலான வாத்து வகைகளில் அதன் அலகு அகண்டு தட்டையாகவும் இறையைத் தோண்டி எடுப்பதற்கு ஏற்றவாறு இருக்கும். வாத்துகள் பல்வேறுபட்ட உணவை எடுத்துக் கொள்பவை. புற்கள், நீர்த்தாவரங்கள், மீன்கள், புழுக்கள், சிறுநத்தைகள், தவளை போன்ற பலவகை உயிரிகளை உணவாக உண்கின்றன.
கோழி வளர்ப்பிற்கு அடுத்தபடியாக வாத்துவளர்ப்பு நம் நாட்டில் முக்கியமான ஒன்றாகும். நமது நாட்டின் மொத்த பறவைகள் எண்ணிக்கையில் 10 சதவீதமும், முட்டை உற்பத்தியில் 6-7 சதவீதமும் பங்கு வகிக்கிறது.
வாத்துகள் நாட்டின் கிழக்கு மற்றும் தென் மாவட்டங்களில் கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் அதிகம் வளர்க்கப்படுகின்றன. வாத்து இறைச்சி, கோழி இறைச்சியைவிட சற்று கடினமானவை. வாத்துகளைக் கையாள்வது எளிது. வாத்துகள் தமது இரண்டாவது வருடத்தில் கூட நல்ல முட்டை உற்பத்தியை அளிக்கக் கூடியவை.
இனங்கள் 
காக்கி கேம்பெல் முட்டை உற்பத்திக்கும், வெள்ளை பெக்கின் இறைச்சிக்கும் பெயர்பெற்ற வாத்து இனங்களாகும்.

காக்கி கேம்பெல்
இவ்வகை லண்டனில் இருந்து இறக்குமதி செய்யப்ட்டவை. ஒரு முட்டை சுழற்சியில் 300 முட்டைகள் வரை தரக்கூடிய இனங்கள் இவை. கிரமப்புற மேம்பாட்டிற்கு பயன்படுத்தக் கூடிய முக்கியமான இனங்கள் இவை. முட்டை உற்பத்தியில் மிகச் சிறந்த இனம் காக்கி கேம்பெல் ஆகும். நாளொன்றுக்கு தவறாமல் 1 முட்டை என 300 முட்டைகள் எளிதில் கிடைக்கும். இவ்வின பெட்டை வாத்துகள் 2-2.2 கி.கி. மும் ஆண் வாத்துகள் 2.2-2.4 கி.கி எடையும் கொண்டிருக்கும். முட்டை எடை 65-75 கிராம் வரை இருக்கும்.
Khaki Campbell
காக்கி கேம்பெல்

வெள்ளை பெக்கின்
வியட்நாமிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இவ்வினம் இந்தியச் சூழ்நிலைக்கு மிகவும் ஏற்பது. இவ்வினம் விரைவில் வளரும் தன்மைக்கும் நல்ல இறைச்சி உற்பத்திக்கும் புகழ் பெற்றது. குறைந்தளவு தீவனம் உண்டு நல்ல தரமான இறைச்சியை உற்பத்தி செய்யக்கூடியது. இது 2.2-2.5 கி.கி எடையை 42 நாட்களில் அடைந்துவிடும். இதன் தீவன மாற்றுத்திறன் விகிதம் 1:2.3 - 2.7 கி.கி ஆகும்.
White pekin
வெள்ளை பெக்கின்

இனப்பெருக்க வாத்துகளின் பராமரிப்பு
6-8 வார வயதான ஆண், பெண் வாத்துகளை இனச் சேர்க்கைக்கெனத் தேர்ந்தெடுக்கலாம். நல்ல இனச்சேர்க்கைக்கு ஆண் வாத்துகள் பெட்டை வாத்துக்களை விட 4-5 வாரங்கள் வயது முதிர்ந்தவையாக இருக்க வேண்டும். ஆண் : பெண் விகிதம் 1:6 அல்லது 1:8 ஆக இருக்க வேண்டும். இறைச்சிக்காக வளர்க்கப்படும் இனங்களில் இவ்விகிதம் குறைவாகப் பராமரிக்கப்பட வேண்டும். 
Breeders
இனப்பெருக்க வாத்துகள்

முட்டை வாத்துக்களின் அடைகாப்பு
அடைக்காப்புக் காலம் 28 நாட்கள் ஆகும். 6-8 வாரத்திற்குட்பட்ட வாத்துகள் இட்ட முட்டைகளையே குஞ்சு பொரிப்பதற்குப் பயன்படுத்த வேண்டும். ஆண், பெண் வாத்துகளை இனச்சேர்க்கைக்கு விட்ட 10 நாட்களுக்குப் பின்பு முட்டைகள் சேகரிக்கத் தொடங்கலாம். அழுக்கான முட்டைகளை கழுவிப் பயன்படுத்துதல் வேண்டும். இவ்வாறு கழுவுவதற்கு 27 டிகிரி செல்சியஸ் சூடான நீரில் கிருமிநாசினி உடனே உலரவைக்க வேண்டும். இல்லையெனில் முட்டை அழுகிவிட வாய்ப்புள்ளது.
Incubation
அடைகாப்பு
14-16 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 80 சதவீகிதம் ஈரப்பதமுள்ள இடத்தில் முட்டைகளை சேகரித்து வைக்க வேண்டும். முட்டைகளை செயற்கை முறையில் பொரிக்க வைக்க செலுத்தப்பட்ட அடைகாப்பானைப் பயன்படுத்தலாம். எனினும் வாத்துமுட்டைகளுக்கு ஈரப்பதம் அதிகம் தேவைப்படுகிறது. எனவே இயஞ்சூடான நீரை இரண்டாம் நாளிலிருந்து அடைக்காப்பின் 23ம் நாள் வரை தெளிக்க வேண்டும். முட்டைகளை 24ம் நாள் வரை நாளொன்றுக்கு 4 முறையாவது திருப்பிவிடுதல் வேண்டும். 24ம் நாள் முட்டைகள் அடைகாப்பகத்தில் இருந்து பொரிப்பகத்திற்கு மாற்றப்படுகிறது.
duckling emerging
குஞ்சுபொரித்தல்


37.5 முதல் 37.2 டிகிரி செல்சியஸ் அளவு வெப்ப நிலை இருக்க வேண்டும் (99.5-99டிகிரி ஃபாரன்ஹீட்டில்) அடைக்காப்பின் முதல் 25 நாட்களுக்கு 30-31டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பொரிப்பகத்தில் கடைசி 3 நாட்களுக்கு 32.7-33.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பராமரிக்கப்பட வேண்டும். முட்டைகளின் மீது கிருமிநாசினி கலந்த இளஞ்சூடான நீரை அரை மணி நேரம் நாளொன்றிற்கு என 25 நாட்களுக்குத் தெளிக்கலாம். 7ம் நாளில் ஒளியில் கருவளர் நிலை காணலாம். 
emerged duckling
வாத்துக் குஞ்சுகள்

வெப்பமளித்தல்  (0-4 வாரங்கள்)
காக்கி கேம்பெல் குஞ்சுகளுக்கு வெப்ப மூட்டும் காலம் 3-4 வாரங்கள். இறைச்சிவகை வாத்துக்குஞ்சுகலான பெக்கின் போன்ற இனங்களுக்கு 2-3 வாரங்கள் போதுமானது. அடைப்பானுக்குள் இடவசதி 90-100 ச.செ.மீ அளவு ஒவ்வொரு குஞ்சிற்கும் அளிக்கப்படவேண்டும். 29-32 டிகிரி செல்சியஸ் அளவு வெப்பநிலை முதல் வாரத்தில் அளித்தல் அவசியம். பின்பு இது வாரத்திற்கு 3 டிகிரி செல்சிஸ் என்று 24 டிகிரி செல்சியஸ் அளவு குறைக்கப்படுகிறது (4வது வாரத்தில்).

வாத்துக் குஞ்சுகளை கம்பி வலை அமைப்பிலோ, குளத்தின் மீதோ அல்லது பேட்டரிகளின் மீதோ வளர்க்கலாம். கம்பிவலையாக இருப்பின் 0.046 மீ2 அளவும் 3 வார வயது வரை ஒவ்வொரு குஞ்சிற்கும் அளிக்கப்படுதல் வேண்டும். 5-7.5 செமீ (2-3 அங்குளம்) ஆழமுள்ள நீர்த்தொட்டிகள் வாத்துக் குஞ்சுகளுக்குப் போதுமானது. ஏனெனில் அதிக ஆழத்தில் குஞ்சுகள் உள்ளே விழுந்துவிட வாய்ப்புண்டு.
Duck_incubation
வெப்பமளித்தல்

வளரும் வாத்துகளின் பராமரிப்பு
வாத்துகள் 4 வார வயது வரை மித தீவிர வளர்ப்பு முறையில் வளர்க்கப்படுகின்றன. இம்முறையில் ஒரு ஹெக்டரில் 5000 வாத்துக்குஞ்சுகள் வரை வளர்க்க முடியும். சிறிய அளவிலும் 200 குஞ்சுகள் வரை வளர்க்கலாம்.
தீவிர வளர்ப்பு முறையில், ஆழ் கூள முறை, அல்லது சட்டப் பலகை முறையில் வளர்க்கலாம். குடிதண்ணீர் தேவையான அளவு தாராளமாக வழங்கப்பட வேண்டும். நீர்த்தொட்டிகளின் ஆழம் வாத்துகள் அவற்றின் அலகை நனைக்க ஏற்றவாறு இருக்க வேண்டும். 13-15 செ.மீ ஆழம் இருத்தல் நலம்.
care of growing ducks
மித தீவிர வளர்ப்பு முறை

தீவிர வாத்து வளர்ப்பு முறையில் இட அளவு 4-5 ச.டி ஒரு வாத்திற்கு இருக்க வேண்டும். மித தீவிர வளர்ப்பு முறையில் 3 ச.அடி இரவிலும் பகலில் மேயவிடுவதற்கு 10-15 ச.அடி அளவும் போதுமானது. ஈரப்பதமுள்ள தீவனங்களை ‘V’ வடிவமான தீவனத்தட்டுகளில், 10-12.5 செ.மீ இடைவெளிவிட்டு வைக்கலாம். உலர் தீவன வகைகளில் அல்லது குச்சித்தீவனமாக இருப்பின் வாத்துகள் உண்ணக்கூடிய அளவு தீவனத்தை 5-7.5 செ.மீ இடைவெளியில் வைக்கலாம்.
duck pond
வளர்ப்பு முறை
நல்ல முட்டை உற்பத்தி அதிகமுள்ள வாத்து வகைகள் 16-18 வார வயதில் முட்டையிடத் துவங்கிவிடும். 95-98 சதவீத முட்டைகள் காலை 9 மணிக்குள் இடப்பட்டுவிடும். ஒவ்வொரு 3 வாத்துகளுக்கும் 80 x 30 x 45 செ.மீ (12 x12 x18”) அளவுள்ள முட்டைக் கூடு பெட்டிகள் வைக்கப்படவேண்டும். முட்டையிடும் வாத்துகளுக்கு ஆண், பெண் இனச்சேர்க்கை விகிதம் 1:6-7 என்று இருக்கலாம். நல்ல உற்பததிக்கு 14-16 மணி வரை சூரிய ஒளி அவசியம். திறந்தவெளி அமைப்பில் 1 ஏக்கரில் பரப்பில் இருக்கும் உணவைப்பொறுத்து  1000 வாத்துகள் வரை வளர்க்கலாம். 
முட்டையிடும் வாத்துகளின் பராமரிப்பு
வாத்துகள் பொதுவாக அதிகாலையிலேயே முட்டையிட்டுவிடும். சாதாரணமாக வாத்து முட்டையின் எடை 65-70கி இருக்கும். 5-6 மாத வயதில் முட்டையிடத் துவங்கும். முட்டையிடத் துவங்கிய 5-6 வாரங்களுக்குப் பிறகுதான் உற்பத்தி அதிகமாக (உச்ச நிலையில்) இருக்கும் குறைந்தது 14 மணிநேர சூரிய ஒளி கிடைக்கச் செய்தால் மட்டுமே நல்ல முட்டை உற்பத்தி இருக்கும். வாத்துகளுக்கு நாளொன்றுக்கு காலை 1 மாலை இரு வேளை தீவனம் அளித்தல் சிறந்தது. நன்கு அரைக்கப்பட்ட தீவனங்களையோ உருளை (குச்சித்) தீவனங்களையோ அளிக்கலாம். எனினும் அரைக்கப்பட்ட ஈரமான தீவனங்களே பெரிதும் உகந்தவை. தீவனமானது 18% புரதம், 2650 கிலோ கலோரி / கி.கி ME ஐப் பெற்றிருக்க வேண்டும். தீவனத் தொட்டி இடைவெளி வாத்து ஒன்றிற்கு 10 செ.மீ தீவிர வளர்ப்பு முறையில் தரை இடஅளவு ஒரு வாத்திற்கு 3710 - 4650 செ.மீ2 அளவு தேவைப்படும். ஆனால் இதுவே கூண்டு வளர்ப்பு முறையில் 1380 செ.மீ2 போதுமானது. மித தீவிர வளர்ப்பு முறையில் தரைஇடஅளவு 2790 செ.மீ2 அளவு இரவிலும் 929-1395 செ.மீ2 அளவு பகலில் உலர்த்தவும் தேவைப்படுகிறது. முட்டையிடும் வாத்துகளுக்கு முட்டைக் கூடுகள் அவசியம். 30 செ.மீ அகலம், 45 செ.மீ ஆழம் 30 செ.மீ உயரம் கொண்ட முட்டைக் கூடுகள் போதுமானவை. ஒரு கூடைப்பெட்டி 3 வாத்துகளுக்கு அளிக்கலாம்.
laying duck
முட்டையிடும் வாத்து
முட்டையிடும் வாத்துகளுக்கான உணவு அடடவனை.

வ.எண்
கலவைப்பொருட்கள்(விகிதம்) அளவு
1.மக்காச்சோளம்42.00
2.பாலிஸ் செய்யப்பட்ட அரிசி20.00
3.எள்ளுப் பிண்ணாக்கு7.00
4.சோயாபீன் துகள்14.00
5.உலர்த்தப்பட்ட மீன்10.00
6.கடற்சிற்பி ஓடுகள்5.00
7.தாது உப்புக்கலவை1.75
8.உப்பு0.25
                   மொத்தம்100
ஒவ்வொரு 100 கி.கி தீவனக்கலவையுடன் விட்டமின் ஏ 600 விட்டமின் பி2 600 மி.கி மற்றும் நிக்கோட்டினிக் அமிலம் 5 கி. சேர்த்துக் கொள்ள வேண்டும்.
வாத்துக் குஞ்சுகளின் பராமரிப்பு
வாத்துக்குஞ்சுகளை தீவிர அல்லது மித தீவிர முறைப்படி வளர்க்கலாம். தீவிர முறையில் தரை இட அளவு 91.5 அடி ஆழ் கூளத்திலும் 29.5 அடி கூண்டுகளிலும் 16 வார வயதுவரை தேவைப்படும். மித தீவிர முறையில் தரை இட அளவு 45.7 அடி ஒரு பறவைக்கு இரவிலும் திறந்த வெளியில் 30-45.7 அடியும் 16 வார வயது வரையிலும் அளிக்கப்பட வேண்டும். முதல் சில நாட்களுக்கு வெப்பக் கூட்டிற்குள் 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பராமரித்தல் அவசியம். பின்பு ஒவ்வொரு 2-3 நாட்களுக்கு ஒரு முறை 3 டிகிரி செல்சியஸ் அளவு குறைத்துக் கொள்ளலாம். வெயில் காலங்களில் வாத்துக் குஞ்சுகளை 8-10 நாட்கள் வரை வெப்பக்கூடுகளில் வைத்திருக்கலாம். அதுவே குளிர்காலங்கள் 2-3 வாரங்கள் வரை கூட வைத்திருக்கலாம்.
care of duckling
குஞ்சுகளின் பராமரிப்பு
வாத்துக்குஞ்சுகளுக்கு வெப்பமிளிக்க பேட்டரி புரூடர்களையும் பயன்படுத்தலாம். பல அடுக்கு பேட்டரி புரூடர்களும் பயன்படுத்தப்பட்டாலும் ஒரு அடுக்கு முறையே கையாள்வதற்கு எளிதானதாகும். வாத்துக் குஞ்சுகளுக்கு புரதம் 20%, 2750 கி. கலோரி / கி.கி வளர்சிதைமாற்ற எரிசக்தி உள்ள, நன்கு அரைக்கப்பட்ட தீவனம் 3 வார வயது வரையிலும், 18% புரதம், 2750 கி. கலோரி / கி.கி வளர்சிதைமாற்ற எரிசக்தி கொண்ட தீவனம் 4-8 வது வார வயதிலும் கொடுத்தல் வேண்டும். தீவனமும், அதை தயாரிக்கப் பயன் படுத்தப்படும் பொருட்களும் பூஞ்சான பாதிப்புகள் ஏதுமின்றி தூய்மையானதாக இருக்க வேண்டும்.
growing duck
வளரும் வாத்துகள்
கொட்டகை அமைப்பு
வாத்துகளுக்கு கொட்டகை பெரிய அளவில் தேவைப்படாது. நல்ல காற்றோட்டத்துடனும், எலித்தொல்லைகள் இன்றி இருத்தல் வேண்டும். கூரை கூடாரமாகவோ, அரை வட்டமாகவோ இருக்கலாம். தரை சாதாரணமாகவோ உலோகக் கம்பிகளாலோ அமைக்கப்பட்டிருக்கலாம். மித தீவிர வளர்ப்பு முறையில் திறந்தவெளி அமைப்பை ஒட்டியே கொட்டகை இருக்க வேண்டும். அப்போதுதான் மழைக்காலங்களின் போதும், பகல்நேரங்களிலும் பறவைகளை வெளியில் அனுமதிக்க எளிதாக இருக்கும். இரவு கொட்டகைக்கும் திறந்த வெளிக்கும் உள்ள விகிதம் 1/4 : 3/4 என்றவாறு இருக்க வேண்டும். முறையான வடிகால் வசதி அமைக்கப்படுதல் வேண்டும். 50 செ.மீ அளவில் அகலமும் 15-20 செ.மீ ஆழமும் கொண்ட தொடர்ச்சியான நீர்க்கால்வாய் அமைக்க வேண்டும். இரவில் தங்கும் கொட்டகை அமைப்பிற்கு இருபுறமும் இதுபோன்ற கால்வாய்கள் வடிகாலுக்காக அமைக்கப்பட வேண்டும்.
duck house_01 duck house_02
கொட்டகை அமைப்பு
நீர்
வாத்துகளுக்கு நீர்த்தேவை அதிகமாக இருப்பினும் அவை நீந்துமளவிற்கு நீர் அவசியம் இல்லை. நீர்த்தொட்டிகளில் வாத்துகள் தமது அகன்ற அலகை முழுதும் நனைக்குமாறு நீர் எப்போதும் நிறைந்திருக்க வேண்டும். சரியாக தண்ணீர் அளிக்கப்படாவிடில் வாத்தின் கண்கள் சிவந்து, செதில் செதிலாகக் காணப்படும். தீவிர நிலையில் கண்கள் தெரியாமல் போகவும் வாய்ப்புண்டு. அதேநேரம் அவ்வப்போது தண்ணீர்த் தொட்டிகளை சுத்தப்படுத்தித் தூய்மையாக வைக்க வேண்டும். இறைச்சிக்காக வளர்க்கப்படும் வாத்துகளில் ஏழாவது வாரத்தில் உடல்எடை அளவு கூடும். ஆனால் முட்டையிடும் வாத்துகளில் இவ்வாறு எடை அதிகரிப்பு 0.3% மேல் இருக்கக் கூடாது.

தீவனப் பராமரிப்பு
வாத்துகளுக்கு அரைக்கப்பட்ட அல்லது உருளை மற்றும் குச்சித்தீவனங்களை அளிக்கலாம். விழுங்குவதற்கும் கடினமாக இருப்பதால் வாத்துகள் ஈரப்பதமுள்ள உணவையே விரும்பி உண்ணும். உருளைத் தீவனங்கள் சற்று விலை அதிகமாக இருப்பினும், வீணாவதைக் குறைக்கலாம், குறைந்த அளவே போதுமானது, ஆட்கூலி குறைவு, பராமரிப்பு எளிதானது. எனவே உருளைத் தீவனங்களே சிறந்தவையாகும். வாத்துகளுக்கு நார்த்தீவனம் மிகவும் ஏற்றது. குளங்கள், பச்சைத் தீவனங்களையும் பயன்படுத்தினால் தீவினச் செலவைக் குறைக்கலாம்.

duck feeding
தீவனப் பராமரிப்பு

வாத்துகள் எப்போதும் நீருடன் சேர்ந்துதான் உணவருந்தும். முதல் 8 வாரங்களுக்கு வாத்துகளுக்கு நாள் முழுதும் உணவருந்த அனுமதிக்க வேண்டும். பின்பு நாளொன்றுக்கு இருமுறை அதாவது காலை முதல் பிற்பகலிலும் அளிக்கலாம். காக்கி கேம்பெல் இன வாத்துகள் 20 வார வயது வரை 12.5 கி.கி தீவனம் உட்கொள்ளும். 20 வாரங்களுக்குப் பிறகு வாத்துகளின் உற்பத்தி மற்றும் கிடைக்கும் தீவன அளவைப் பொறுத்து பறவை ஒன்றிற்கு ஒரு நாளைக்கு 120 கிராம் அல்லது அதிகமாகவும் கொடுக்கலாம்.

முட்டை மற்றும் இறைச்சி உற்பத்திக்கான வாத்துகளின் தீவன அளவு அட்டவணை:

ஊட்டச்சத்துகள் (சதவீதத்தில்)
இளம் குஞ்சுகள்வளரும் குஞ்சுகள்முட்டையிடும் வாத்துகள்இறைச்சிக் குஞ்சுகள்இறைச்சி வாத்துகள்
ஈரப்பதம் % (அதிக அளவு)
11.00
11.00
11.00
11.00
11.00
பண்ப்படா புரதம் % (குறைந்த அளவு)
20.00
16.00
18.00
23.00
20.00
பண்படாத நார்பொருள் % (அதிக அளவு)
7.00
8.00
8.00
6.00
6.00
அமிலத்தில் கரையாத சாம்பல் சத்து  (அதிக அளவு)
4.00
4.00
4.00
3.00
3.00
உப்பு  (அதிக அளவு)
0.60
0.60
0.60
0.60
0.60
கால்சியம் (குறைந்த அளவு) 
1.00
1.00
3.00
1.20
1.20
பாஸ்பரஸ் (குறைந்த அளவு) கிடைக்கக்கூடியது
0.50
0.50
0.50
0.50
0.50
லினோலெயிக் அமிலம் (குறைந்த அளவு)
1.00
1.00
1.00
1.00
1.00
லைசின் (குறைந்த அளவு)
0.90
0.60
0.65
1.20
1.00
மெத்தியோனைன் (குறைந்த அளவு)
0.30
0.25
0.30
0.50
0.35
மெத்தியோனைன் + சிஸ்டைன்
0.60
0.50
0.55
0.90
0.70
வளர்சிதைமாற்ற எரிசக்தி (க.கலோரி / கி.கி) (குறைந்த அளவு)
2600
2500
2600
2800
2900

விட்டமின்கள் மற்றும் தாது உப்புகள்:

வ.எண்
தாதக்கள் & விட்டமின்கள். மி.கி / கி.கிஇளம் குஞ்சுகள்வளரும் குஞ்சுகள்முட்டையிடும் வாத்துகள்இறைச்சிக் குஞ்சுகள்இறைச்சி வாத்துகள்
1.மாங்கனிசு
90.00
50.00
55.00
90.00
90.00
2.அயோடின்
1.00
1.00
1.00
1.00
1.00
3.இரும்பு
120.00
90.00
75.00
120.00
120.00
4.துத்தநாகம்
60.00
50.00
75.00
60.00
60.00
5.தாமிரம்
12.00
9.00
9.00
12.00
12.00
6.விட்டமின் ஏ
6000
6000
6000
6000
6000
7.விட்டமின் டி.3. சர்வதேச அளவு / கி.கி
600
600
1200
600
600
8.தயமின்
5.00
3.00
3.00
5.00
5.00
9.ரிபோஃபிளேவின்
6.00
5.00
5.00
6.00
6.00
10.பண்டாதொனிக் அமிலம்
15.00
15.00
15.00
15.00
15.00
11.நிக்கோடினிக் அமிலம்
70.00
60.00
60.00
70.00
70.00
12.பயோட்டின்
0.20
0.15
0.15
0.20
0.20
13.விட்டமின் பி.12
0.015
0.10
0.10
0.015
0.015
14.ஃபோலிக் அமிலம்
1.00
0.50
0.50
1.00
1.00
15.கயோலின்





16.விட்டமின் ஈ
15.00
10.00
10.00
15.00
15.00
17.விட்டமின் கே
1.00
1.00
1.00
1.00
1.00
18.பைரிடாக்ஸின்
5.00
5.00
5.00
5.00
5.00

நோய் பராமரிப்பு
பிற பறவைகளைவிட வாத்துகள் பொதுவாக கடின உடலமைப்பைப் பெற்றவை. வாத்துகளைத் தாக்கும் நோய்களில் முக்கியமானவை வாத்து பிளேக், பூசண நச்சு நோய் மற்றும் பாஸ்சுரெல்லா நுண்டி நோய் போன்றவை. இவைகளைத் தடுக்க முக்கியமான வழி பூஞ்சான் (பிடித்த) தாக்கிய தீவனங்களை வாத்துகளுக்கு அளிக்காமல் இருப்பதே வாத்து பிளேக்கிற்கு தற்போது தடுப்பூசிகள் உள்ளன. இது 8-12 வார வயதில் இத்தடுப்பூசிகள் அளிக்கப்பட வேண்டும். வாத்துக்குஞ்சுகளில் வைரஸினால் கல்லீரல் அழற்சி ஏற்பட்டால் இறப்பு வீதம் அதிகரிக்கும்.
வாத்து கொள்ளை (பிளேக்) நோய்
இவ்வைரஸ் நோய் பெரும்பாலும் முதிர்ந்த வாத்துகளையே தாக்குகிறது. இந்நோயால் பாதிக்கப்பட்ட வாத்துக்களில் இரத்த நாளங்கள் உடைந்து இரத்தம் உடலுக்குள் பரவுகிறது. குடல்பகுதியிலும் இரைப்பைக்குள்ளும் இரத்தம் பரவுகிறது. பாதிக்கப்பட்ட பிறகு எவ்வித சிகிச்சையும் பலன்தராது. ஆகையால் வாத்து பிளேக் தடுப்பூசிகளை 8-12 வார வயதில் கொடுத்தல் சிறந்த பயன் அளிக்கும். முடிந்தவரை நோய் பரவாமல் தடுப்பதே சிறந்தது.

வாத்து நச்சுயிரி கல்லீரல் அழற்சி 
2-3 வார வயதுடைய வாத்துக்குஞ்சுகளையே இந்நோய் அதிகம் பாதிக்கிறது. இந்நோய்க்கும் பாதிக்கப்பட்ட பிறகு சிகிச்சை கிடையாது. இனச்சேர்க்கைக்கு ஈடுபடும் வாத்துகளுக்கு வீரியம் குறைக்கப்பட்ட வைரஸ் தடுப்பூசிகள் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டுதல் நலம் பயக்கும். இதனை முட்டை உற்பத்தியைத் தொடங்கும் முன்பு செய்தல் வேண்டும். ஒரு நாள் வயதான வாத்துக்குஞ்சுகளுக்கு இந்த வீரியம் குறைக்கப்பட்ட தடுப்பூசிகள் அளிப்பதால் மிகுந்த பலன் பெறலாம்.

வாத்து காலரா கழிச்சல்நோய்
பாஸ்சுரெல்லா மல்டிகோடா எனும் பாக்டிரிய உயிரியால் 4 வார வயதுடைய வாத்துகளில் இந்நோய் அதிகம் பரவுகிறது. பசியின்மை, உடல் வெப்பம் கூடுதல், தாகம், வயிற்றுப்போக்கு மற்றும் திடீர் இறப்பு போன்றவை இந்நோயின் அறிகுறிகள். மூட்டு வீக்கம், தோலுக்கடியில் இரத்த ஒழுக்கு, இதய உறை அழற்சி, இரத்தப் புள்ளிகள் போன்றவை இந்நோயின் உள்நோயின் உள் அறிகுறிகள். கல்லீரல், மண்ணீரல், போன்றவை விரிவடையும். சல்பா மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் மூலம் இந்நோயைக் கட்டுப்படுத்தலாம். வாத்து வளர்ச்சியின் 4வது வாரத்திலும், 18 வது வாரத்திலும் காலரா (கழிச்சல்) தடுப்பூசி அளித்தல் அவசியம். என்ரோசின் சிகிச்சை அல்லது 30 மி.லி. சல்ஃபா மெஸ்த்தின் (33.1%) 5 லிட்டர் நீரில் கலந்தும் அல்லது 30-60 மி.லி.சல்ஃபா குயினாக்ஸலனைன் 5லி நீரில் கலந்தும் இம்மருந்தை குடிநீரில் கலந்து 7 நாட்களுக்கு வாத்துகளுக்கு அளிக்கலாம். எரித்ரோமைசின், ராபட்ரன் துகள்கள், நியோடாக்ஸ் - போர்ட், மார்ட்டின் வெட், வொர்க்ரின் கயஸோல் போன்ற மருந்துகளையும் கால்நடை மருத்துவர் ஆலோசனைப்படி நீரில் கலந்து கொடுக்கலாம்.

பொட்டுலிசம் நச்சுத்தன்மை
வாத்துகளில் உணவு நச்சு ஒரு முக்கிய பிரச்சனை ஆகும். கெட்டுப்போன உணவுகள் (பயிர்களில்) வளர்ந்துள்ள பாக்டீரியாக்கள் உயிர்க்கொல்லும் நோயைத் தோற்றுவிக்கும். முடிந்தவரை அழுகிய, கெட்டுப்போன உணவுகளை வாத்துகள் உட்கொள்ளா வண்ணம் பாதுகாத்தல் வேண்டும். எப்சோம் உப்பை குடிநீரில் கலந்தும் கொடுக்கலாம்.

ஒட்டுண்ணிகள்
பொதுவாக வாத்துகள் உட்புற ஒட்டுண்ணிகளுக்கு எதிர்ப்புச் சக்தி பெற்றவை. தேங்கி நிற்கும் குட்டைகள், சிறு கலங்கிய ஓடைகளில் அதிகமாக உலவும் வாத்துகளுக்கு இவ்வகை உட்புற ஒட்டுண்ணித் தாக்குதல் இருக்கலாம். தட்டைப்புழு, உருளைப்புழு, நாடாப்புழு, போன்ற புழுக்கள் இதில் அடங்கும். இப்புழுக்கள் உடலில் உள்ள ஊட்டச்சத்துக்களை உறிஞ்சிக் கொள்வதால் உடலில் உண்டாகும் நச்சுப்பொருட்கள் சிவப்பு இரத்தச் செல்களை அழித்துவிடுவதால் இரத்த சோகை நோய் ஏற்படுகிறது.
வாத்துகளில் புற ஒட்டுண்ணிகள் நோய் உண்டாக்கவில்லை எனினும் வளர்ச்சியைத் தடைப்படுத்தும் முக்கியக் காரணிகள் தெள்ளுப்பூச்சி, உண்ணி, சிற்றுண்ணிகள் போன்றவை முக்கிய புற ஒட்டுண்ணிகள் ஆகும். இவை ஏற்படுத்தும் தொந்தரவு மற்றும் எரிச்சலால் முட்டை உற்பத்தி பாதிக்கப்படுகிறது. மேலும் இவை சில நோய் உண்டாக்கும் நுண்ணுயிரிகளையும் பரப்புகின்றன. எனினும் கோழிகள் அளவிற்கு வாத்துகளில் பாதிப்பு அதிகம் இருக்காது.

பூசண நச்சு நோய்
வேர்கடலை, மக்காச்சோளம், பாலிஸ் செய்யப்பட்ட அரிசி போன்ற உணவுகளில் பூஞ்சானம் வளர்ந்துவிடும். இவ்வாறு பூஞ்சான் தாக்கிய உணவுப்பொருட்களை வாத்துகளுக்கு அளிப்பதால் இந்நோய் ஏற்படுகிறது. அதிக ஈரப்பதம் மிக்க சூழ்நிலையிலும், சரியாக பயிறுகளை உலர்த்தாமல் விடுவதாலும் இந்நோய் எளிதில் வாத்துகளை பாதிக்கக் கூடியது. பி, பி 2, ஜி, ஜி 2 எனும் நான்கு வகை நச்சுகளில் பி, வகை அதிக நச்சுத் தன்மை வாய்ந்தது. ஒரு கிலோ தீவனத்தில் 0.03 பிபிஎம் அல்லது 0.03 பி.கி அளவு மட்டுமே நச்சுத்தன்மை இருக்கலாம்.

இப்பூசன நச்சுக்கள் கல்லீரலில் புண்களை ஏற்படுத்துவதால் நச்சுத்தன்மை அதிகமாகும்போது வாத்துகளில் இறப்பு ஏற்படும். குறைந்த நச்சுத்தன்மையின் போது வாத்துகள் சுறுசுறுப்பின்மை, கல்லீரல் அழற்சி போன்ற பாதிப்புகளுடன் உயிரிழப்பும் ஏற்படுவதுண்டு. பூசன நச்சு நோய்க்கு சிகிச்சையளிக்கும் மருந்துகள் ஏதும் இல்லை. தீவனங்களின் பூசனத்தை நீக்கி நன்கு உலர்த்திக் கொடுப்பதே இந்நோயிலிருந்து காக்க சிறந்த வழி ஆகும்.

வாத்துகளுக்கான தடுப்பு மருந்து அட்டவணை
வ.எண்தடுப்பு மருந்தின் பெயர்கொடுக்கும் வழிஅளவுவயது
1.
வாத்து காலரா கழிச்சல் நோய் (பாஸ்சுரெல்லா நுண்ம நோய்)
தோலின் (அடிப்) கீழ்ப்பகுதியில்
1 மி.லி
3-4 வாரங்கள்
2.
வாத்து கொள்ளை நோய்
தோலின் அடிப்பகுதியில்
1 மி.லி
8-12 வாரங்கள்
 
(ஆதாரம்: www.vuatkerala.org)

கருத்துகள் இல்லை: