யா அல்லாஹ்!!!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன்.என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக.

வெள்ளி, 31 மே, 2013

TN Govt. Logo and Animal Husbandry Department Logo

TN Government LogoAnimal Husbandry Logo


TNVAS Association Logo


அசோலா – கால்நடைத் தீவனம்


                                                      Photos: Permbalur District, TNVAS


அசோலா பெரணி வகையைச் சார்ந்த நீரில் மிதக்கும் தாவரம். பெரும்பாலும் பச்சை அல்லது இலேசான பழுப்பு நிறத்தில் காணப்படும். இதனை மூக்குத்திச் செடி அல்லது கம்மல் செடி என்றும் அழைப்பர்.

இதில் புரதச்சத்து 25-35%, தாதுக்கள் 10-12% மற்றும் 7-10% அமினோ அமிலம் கார்போஹைட்ரேட் எண்ணெய் சத்துக்கள்.

தேவையான பொருட்கள்
(6’X3’, தினம் 500கி-1 கிலோ உற்பத்தி செய்ய போதுமானது)
1.    செங்கல்                       -           30-40 கற்கள்
2.    சில்பாலின் பாய்          -           2.5 மீ நீளம், 1.5மீ அகலம் (அ) 6’X3’
3.    செம்மண்                     -           30 கிலோ
4.    புதிய சாணம்              -           30 கிலோ
5.    சூப்பர் பாஸ்பேட்        -           30 கிராம் (அ)
அசோஃபெர்ட்             -           20 கிராம்
6.    தண்ணீர்                      -           10 செ.மீ. உயரம் (சராசரியாக 6-9 குடம்)
7.    அசோலா விதை          -           300-500 கிராம்
8.    யூரியா சாக்கு              -           தேவையான எண்ணிக்கை (6’X3’ ச.அடியை நிரப்ப)

இடத்தைத் தயார் செய்தல்
1.    மர நிழலில் (நேரடி சூரிய ஒளி ஒரு நாளைக்கு 3 மணி நேரத்திற்கு மேல் இருக்கக்கூடாது) இருக்குமாறு தேர்வு செய்ய வேண்டும்.
2.    இடத்தின் அளவு 6’X3’ இருக்க வேண்டும்.
3.    புல் பூண்டுகளை அகற்றி இடத்தை சுத்தம் செய்ய வேண்டும்.
4.    இடம் குண்டும் குழியுமாக இல்லாமல் சம தளமாக்க வேண்டும்.
5.    புல் பூண்டுகள் வளருவதை தடுக்க யூரியா சாக்கினை  பரப்பவும்.

செய்முறை
1.    செங்கலை குறுக்கு வாட்டில் தயார் செய்யப்பட்ட இடத்தை சுற்றிலும் வைக்க வேண்டும்.
2.    அதன் மேல் சில்பாலின் பாயை பரப்பி விட வேண்டும்.
3.    சில்பாலின் பாயின் மீது 10-15 கிலோ செம்மண்ணை சம அளவில் பரப்பி விட வேண்டும்.
4.    தண்ணீரின் அளவு 10 செ.மீ உயரம் வரும் வரை சுமார் 6-9 குடம் ஊற்ற வேண்டும். ஊற்றுவது குடிநீராக இருக்க வேண்டும்.
5.    புதிய சாணம் 2 கிலோ மற்றும் 20 கி அசோஃபெர்ட் (அ) 30 கி சூப்பர் பாஸ்பேட் 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
6.    500-1000 கிராம் சுத்தமான அசோலா விதைகளை போட்டு அதன் மேல் லேசாக தண்ணீர் தெளிக்கவும்.

வளர்ச்சி
1.    விதைத்த 3 நாட்களில் எடை மூன்று மடங்காக பெருகும்.
2.    பசுந்தீவனம் 15 நாட்களில் நல்ல வளர்ச்சி அடைந்து அறுவடைக்கு தயாராக இருக்கும்.
3.    15 நாட்கள் கழித்து நாள் ஒன்றுக்கு 500 கிராமிலிருந்து 1 கிலோ வரை அறுவடை செய்யலாம்.

பராமரிப்பு
1.    தினந்தோறும் குழியிலுள்ள அசோலாவினை கலக்கி விட வேண்டும்.
2.    தண்ணீன் அளவு 10 செ.மீ. க்குக் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
3.    5 நாட்களுக்கு ஒரு முறை 2 கிலோ புதிய சாணம் மற்றும் 20கிராம்  அசோஃபெர்ட்  (அ) 10 கிராம் ( ஒரு தீப்பெட்டி அளவு) சூப்பர் பாஸ்பேட் தண்ணீரில் கலந்து ஊற்ற வேண்டும்.
4.    10 நாட்களுக்கு ஒரு முறை மூன்றில் ஒரு பங்கு தண்ணீரை வெளியேற்ற வேண்டும். பதிலாக சுத்தமான தண்ணீரை ஊற்ற வேண்டும்.
5.    மாதம் ஒரு முறை மூன்றில் ஒரு பங்கு மண்ணை வெளியேற்ற வேண்டும். பிறகு சுத்தமான சலித்த செம்மண்ணை இட வேண்டும்.
6.    6 மாதத்திற்கு ஒரு முறை அசோலா விதைகளை தவிர அனைத்து இடுபொருட்களையும் வெளியேற்றி புதியதாக இட வேண்டும்.

தீவனம் அளிக்கும் முறை
1.    தினமும் 500கிராம்- 1 கிலோ அசோலாவை எடுத்து நீரில் அலசிக்கொள்ள வேண்டும்.
2.    பச்சையாகவோ அல்லது பதப்படுத்தியோ அல்லது அடர் தீவனத்துடன் கலந்தும் கொடுக்கலாம்.
3.    உணவு உப்புடன் சேர்த்தும் அளிக்கலாம்.
4.    வைக்கோலுடன் சேர்த்தும் அளிக்கலாம்.

பயன்கள்
1.    1 கிலோ அசோலா 1 கிலோ புண்ணாக்கிற்கு சமம்.
2.    அசோலாவை உட்கொள்வதால் பால் உற்பத்தி 15-20% அதிகரிக்கும்.
3.    பாலில் கொழுப்பு மற்றும் கொழுப்பு அல்லாத சத்துக்கள் அதிகரிக்கிறது.
4.    கோழிக்கும், வாத்திற்கும் தீவனமாக பயன்படுத்தலாம். அதிக எடை கிடைக்கும்.
5.    உணவு உப்புடன் சேர்த்து பன்றிகளுக்கு அளித்தால் பன்றியின் எடை கூடுவதுடன் இறைச்சி தன்மையும் நன்றாக இருக்கும்.
6.    முயல்கள் அசோலாவை விரும்பி உண்ணும்.
7.    அசோலா வளர்க்கும் இடத்தில் கொசுத் தொல்லை இருக்காது.

வளர்ச்சியை பாதிக்கும் காரணிகள்
1.    தண்ணீர்:
அசோலாவனது தண்ணீர் ஊற்றி வறண்டுவிட்டால் உடனே இறந்து விடுகிறது.
2.    ஈரப்பதம்:
காற்றின் ஈரப்பதம் 85-90% இருக்கும்போது அசோலா நன்கு வளர்கிறது. ஈரப்பதம் 60%ற்கு குறையும்போது வறண்டு இறந்துவிடுகின்றது.
3.    சூரிய ஒளி:
கோடைக் காலங்களில் பகல் நேரங்களிலுள்ள அதிக சூரிய ஒளி அசோலாவை பழுப்பு நிறமாக மாற்றிவிடுகின்றது.
4.    காற்று:
வேகமாக வீசும் காற்றானது பாத்திகளிலுள்ள அசோலாவை ஒரு பக்கமாகக் கொண்டு சேர்த்துவிடும். இதனால் அசோலாவின் வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்படுகிறது.
5.    மண்ணின் கார அமிலத் தன்மை:
காரத் தன்மையுள்ள மண்ணில் அசோலாவின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. நுண்ணூட்டச் சத்துக்களுக்கு ஏற்ப அசோலாவின் வளர்ச்சி மாறுபடுகின்றது.

ஞாயிறு, 19 மே, 2013

வெள்ளாட்டுப்பண்ணை பதிவேடு பராமரிப்பு


பதிவேடுகள் என்றால் நாம் நம் பண்ணையில் செய்யக்கூடியவைகளையும் பண்ணைகளில் கவனிக்க வேண்டியவைகளையும் ஒரு குறிப்பிட்ட படிவத்தில் குறித்து வைத்துக் கொள்வதுதான். பதிவேடுகள்தான் பண்ணையின் திறனாய்வுக்கு உதவியாய் உள்ளவை.

பதிவேடுகள் ஒரு பண்ணையில் வரவு செலவுகள், அங்குள்ள ஆடுகளின் திறன் மற்றும் ஆடுகளின் முக்கிய பொருளாதார குணங்களை அறிய உதவுகின்றன. பதிவேடுகள் உபயோகத்திற்குத் தகுந்த முறையில் கையாளப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும். பதிவேடுகள் பராமரிக்கப்படாத ஆட்டு மந்தைகளின் மதிப்பு குறைத்தே மதிப்பிடப்படும்.

உதாரணமாக ஓர் ஆட்டுப்பண்ணையில் ஒவ்வொரு ஆட்டின் பாராம்பரியம், அதன் திறன், வளர்ச்சி போன்ற மற்ற விவரங்கள் பதிவேடுகள் மூலம்தான் அறியப் படுகிறது. எனவே குறைந்தபட்சம் சில முக்கிய தகவல்கள் கிடைப்பதற்காக வேண்டியாவது சில பதிவேடுகள் அவசியம் வைக்க வேண்டும். தற்போது நாம் ஒரு வெள்ளாட்டுப் பண்ணையில் வைக்கப்பட வேண்டிய முக்கியமான பதிவேடுகளைப் பற்றி தெரிந்துகொள்வோம்.


1. பிறப்பு பதிவேடு:
இதில் தொடர் எண், இனம், தனிப்பட்ட ஆட்டின் எண், ஆணா/பெண்ணா, நிறம், பிறந்ததேதி, தாய் தகப்பன், பிறப்பு எடை போன்றவைகள் குறிக்கப்பட வேண்டும்.

2. இளம் ஆடுகள் பதிவேடு:
இது ஆட்டுக்குட்டிகள், பால் மறந்தபின்பு பதிவு செய்யப்படுகிறது. இதில் எண், ஆண்/பெண், என்று பால் மறந்தது, இதற்கு போட்டுள்ள தடுப்பூசிகள் போன்றவை குறிக்கப்படும்.

3. இனவிருத்திகள் பதிவேடு:
இதில் இனவிருத்திக்கு அனுமதிக்கப் பட்ட பெட்டை ஆடுகளின் எண்ணிக்கை, அதில் எத்தனை பெட்டை ஆடுகள் கிடாவினால் சினைக்குச் சேர்க்கப்பட்டன, அப்படி சேர்க்கப்பட்ட பெட்டை ஆடுகளில் எத்தனை குட்டிகள் ஈன்றன என்ற கணக்கு, ஈன்ற குட்டிகளில் பால் மறக்கடிக்கப்பட்ட வகையில் அதாவது 3 மாதம் வரை வளர்ந்தது, இரட்டை குட்டிகள் போட்டால் அதன் விவரம், குட்டிகளின் பிறப்பு எடை மற்றும் பால் மறக்கடிக்கப்படும் வரை உள்ள எடை போன்றவை குறிக்கப்பட வேண்டும்.

4. இறப்பு பதிவேடு:
இறந்த ஆடுகளின் எண்ணிக்கை மற்றும் இறப்பிற்கான காரணம் போன்றவை பதிவு செய்யப்பட வேண்டும்.

5. கழிக்கப்பட்ட ஆடுகள் பதிவேடு:
குறைபாடுள்ள ஆடுகள் மற்றும் இனவிருத்திக்குப் பயன்படாத ஆடுகளின் விற்பனை விபரம் பற்றிய பதிவேடு, தீவனப் பதிவேடு, மருந்துகள் பதிவேடு, தடுப்பூசி பதிவேடு மற்றும் பொருளாதார அல்லது வரவு செலவு பதிவேடு பராமரிக்கப்பட வேண்டும். தகவல்: கே.வெங்கடேஷ், போன்: 98430 71006.
-கே.சத்தியபிரபா, உடுமலை.

நாட்டுக்கோழிகளில் அதிக குஞ்சுகளைப் பெற வழிமுறைகள்      நாட்டுக்கோழிகளில் அதிக குஞ்சுகள் பெற நாம் வளர்க்கும் பெட்டைக் கோழிகளுக்கு ஒரு சேவல் என்ற விகிதத்தில் பெட்டை சேவலை இணைத்து வளர்க்க வேண்டும். இவ்வாறு வளர்க்கும்போது சேவல் பெட்டைக் கோழியுடன் இணைந்தவுடன் கருவுறுதல் எளிதில் நடைபெற்று கருக்கூடிய முட்டைகள் அதிகளவில் கிடைக்க வாய்ப்புள்ளது. மாறாக பெட்டை சேவல் கோழிகளின் விகிதம் 10:1 என்று இருந்தால் குஞ்சு பொரிப்புத்திறன் குறையும்.

முட்டைகளை சேகரிக்கும் காலம்.    கோடைக்காலங்களில் இடப்படும் முட்டைகளைமுட்டைகள் இடப்பட்டு நான்கு நாட்கள் வரையிலும் குளிர்காலங்களில் முதல் நாட்கள் வரை இடப்பட்ட முட்டைகளையும் ஒன்றாக அடைக்கு சேர்த்து வைத்து குஞ்சு பொரிக்க பயன்படுத்தலாம். இதற்கு மாறாக 10 நாட்களுக்கு முன் போட்ட முட்டைகளை இன்று போட்ட முட்டைகளுடன் இணைத்து அடைக்கு வைத்தால் குறிப்பிட்ட காலக் கெடுவிற்கு முன் இட்ட முட்டைகளில்இருந்து குஞ்சுகள் வெளிவராது. இயற்கையில் கோழிகளின் மூலம் அடைகாத்தல் செய்யும்போது குறைந்த நாட்கள் இடைவெளியில் முட்டைகளை அடைக்கு வைத்து குஞ்சுகள் அதிகம்பெற விவசாயிகள் முயற்சி எடுக்க வேண்டும்.


அடைகாத்தலுக்கு பெட்டைக் கோழியினை உட்கார வைக்கும் நேரம்:
       பொதுவாக கிராமப்புறங்களில் நாட்டுக்கோழிகள் பகல் முழுவதும் சுதந்திரமாக சுற்றித்திரிந்து இரவில் வீடுகளில் அடைத்து வைத்து வளர்க்கப்பட்டு வருகிறது. எனவே ஒரு பெட்டைக்கோழியை முட்டை அடைகாக்கும் பணியில் தேர்வு செய்து அடைமுட்டை மீது உட்கார வைக்கும்போது அடைக்கோழி 21நாட்கள் அடைக்காலம் வரை அதிகநேரம்அடிக்கடி கூடையை விட்டு வெளியே எழுந்திருக்காமல் முட்டையோடு உடன் இருப்பதுஅதிக குஞ்சுகள் பெறுவதற்கு வழிவகுக்கும். அடைக்கோழியானது அடைக்கு வைக்கப்பட்ட முட்டைகளில் தனக்கு சொந்தமான குஞ்சுகள் வளர்கிறது. அதனை நாம் வளர்க்க வேண்டும் என்ற பாச உணர்வு எழும்போது முட்டையை விட்டு அடிக்கடி வெளியே செல்லாமல் ஒருநாளில் நீண்டநேரம் அடையில் உட்கார வாய்ப்புள்ளது. அந்திசாயும் மாலை வேளையில் ஒரு கோழியை அடைக்கு உட்கார வைக்கும்போது இரவு முழுவதும் ஒரே இடத்தில் இருந்து பழக்கப்பட்டு வளர்ந்த காரணத்தால் கோழி வெளியேறாமல் 12 மணி நேரம் அடை முட்டைகள் மீது ஒரு இரவு முழுவதும் அமரும்போது அக்கோழிக்கு தாய்மை உணர்ச்சி அதிகமாகி முட்டைகளை முறையாக அடைகாக்க வேண்டும் என்ற எண்ணம் வருகிறது. எனவே 21 நாட்கள் அடைகாக்கும் காலத்தில் இரவு நேரத்தில் வைக்கப்பட்ட அடைக்கோழிகள் வெளியே அதிகமாக முட்டையை விட்டு எழுந்திருப்பது இல்லை.

    மாறாக முதன்முதலில் அடைக்கு வைக்கும்போது காலை நேரத்தில் அடைக்கு உட்காரவைத்தால் தீவனம் எடுக்கும் நோக்கம் அதிகமாகி 21 நாட்கள் அடைக்காலத்தில் இடையிடையே வெளியில் சென்றுவிட்டு மீண்டும் வந்து உட்காரும் நிலை வரும். இவ்வாறு அடைக்கோழி முட்டையை விட்டு அடிக்கடி சென்று வருவதால் குஞ்சு வளர தேவையான வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் பாதிக்கப் பட்டு குஞ்சு இறப்பு ஏற்பட்டு குறைந்தளவில் மட்டுமே முட்டைகள் பொரிப்பதற்கு காரணமகிவிடுகிறது.


    எனவே இயற்கை முறையில் அடைக்கோழி மூலம் குஞ்சு பெறும் போது அடைக்கோழிகளை மாலை அல்லது இரவு நேரங்களில் அடைக்கு உட்கார பயன்படுத்தும்போது பகலில் உட்கார வைக்கும் கோழிகளிடமிருந்து கிடைக்கும் குஞ்சுகளைவிட இரவில் கோழியை உட்காரவைத்து பெறப்படும் குஞ்சுகள் அதிகளவில் கிடைக்க வாய்ப்புள்ளது. எனவே இயற்கை முறை அடைகாத்தலில் அடைக்கோழிகளை அடைகாத்தலுக்கு பயன்படுத்த தேர்ந்தெடுக்கும் காலமும் முட்டை குஞ்சு பொரிப்புத்திறன் அதிகரிக்க காரணமாக உள்ளது.


அடைக்கோழியின் உடல்நலன்:
    பேன்செல் பாதிப்பு இருந்தால் பியூடாக்ஸ் என்ற மருந்தினை மிலி மருந்து ஒரு லிட்டர் நீரில் கலந்து கோழிகளின் தலையைத் தவிர மற்ற பாகங்களை மருந்து கலந்த நீரில் முக்கி எடுத்து வெயிலில் விடவேண்டும். இவ்வாறு செய்வதால் உடலில் பேண்செல் பாதிப்பினால் ஏற்படும் அரிப்புநமச்சல் குறைந்து நல்ல நலத்துடன் அடைகோழிகள் அடையில் அமர்ந்து குஞ்சு பொரிக்க முடியும்.

கருக்கூடிய முட்டையைக் கண்டறிதல்:
    நாட்டுக்கோழிகளில் முட்டைகளிலிருந்து குஞ்சுகள் அதிக எண்ணிக்கையில் பெற 21 நாட்கள் ஆகிறது. நாம் வைத்துள்ள முட்டைகளில் கருக்கூடாமல் கூமுட்டைகளாக எத்தனை உள்ளன என்பதை முட்டை அடை வைத்த 7நாட்களில் கருமுட்டை பரிசோதனை செய்து தெரிந்துகொள்ளலாம்.
   இதற்கு தேவையானவை ஒரு டார்ச்லைட் அல்லது மின்சார பல்புஒரு அட்டை. கருமுட்டையைக் கையில் வைத்துக்கொண்டு ஒரு இருட்டு அறையில் ஒரு அட்டையில் முட்டை போகும் அளவிற்கு ஓட்டை போட்டு முட்டையின் அகலமான பகுதி மேலாகவும் கூம்பு வடிவமான பகுதி கீழாக வரும்படி நெட்டு வசமாக வைத்து கீழ்புறத்தில் இருந்து விளக்கு வெளிச்சம் கொடுக்கும்போது முட்டையில் கருக்கூடியிருந்தால் முட்டையின் மேற்பகுதியில் வளர்ச்சிஅடைந்த கருவின் தலை கரும்புள்ளியாகவும்ரத்தநாளங்கள் சிவப்பாகவும் தெரியும். கருக்கூடாத முட்டையில் இவ்வாறு எந்தவிதமான புள்ளிகளோரத்த நாளங்களோ இல்லாமல் வெறுமனே இருக்கும். எனவே அடைக்கு வைத்த 7வது நாளில் கருக்கூடிய முட்டையை மட்டும் கண்டறிந்து மீதமுள்ள கருக்கூடாத கூமுட்டையை அடையிலிருந்து எடுத்துவிடலாம்.
கிராமப்புறங்களில் நாட்டுக்கோழி வளர்ப்பவர்கள் மேற்கூறிய மேலாண்மை முறைகளைக் கவனத்தில் கொண்டு பெட்டை அடைக்கோழிகள் மூலம் இயற்கை முறையில் அடைவைத்து அதிக குஞ்சுகளை பெற்று பலன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*****************************************************************************
புறக்கடை முறையில் நாட்டுக் கோழி வளர்ப்பு

குறைந்த முதலீடு, குறைந்த தீவனச் செலவுடன், மண் வளத்தை மேம்படுத்தக் கூடிய புறக்கடை முறையில் நாட்டுக் கோழி வளர்ப்பு குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவ அறிவியல் கல்லூரி நிர்வாகம் பல்வேறு வழிமுறைகளைத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கல்லூரியின் விரிவாக்கத் துறை பேராசிரியர்கள் என்.நர்மதா, எம்.சக்திவேல், எம்.ஜோதிலட்சுமி ஆகியோர் கூறியது:
கோழிகளை பகல் முழுவதும் திறந்த வெளியில் இரை தேட வைப்பதே புறக்கடை முறையில் நாட்டுக் கோழி வளர்க்கும் முறையாகும். இந்த முறையில் வீடுகளிலுள்ள நெல், அரிசிக் குறுணை, கம்பு, சோளம், எஞ்சிய சமைத்த உணவுகளைத் தீவனமாக அளிக்கலாம். எனினும், இந்த முறையில் அதிக எண்ணிக்கையில் கோழிகளை வளர்க்க முடியாது.

புறக்கடையில் நாட்டுக் கோழி வளர்ப்பில் இனப் பெருக்கத்துக்காக எந்தவொரு தனிக் கவனமும் செலுத்தத் தேவையில்லை. அந்தந்தப் பகுதியில் பலமுள்ள சேவல்கள் மூலமாகவே இனப் பெருக்கத்துக்கு தயாராகின்றன.
இதற்காக உடல் எடையின் அடிப்படையில் சேவல்களைத் தேர்வு செய்வது அவசியமாகும்.
முட்டை சேகரித்தல்..: பெட்டைக் கோழிகள் 20 வார வயதில் முட்டையிடத் தொடங்கும். பெரும்பாலும் பகல் நேரத்திலேயே முட்டையிடும். எனவே, காலையில் இரண்டு முறையும், பகலில் ஒரு முறையும், மாலையில் ஒரு முறையும் முட்டைகளைச் சேகரிக்க வேண்டும்.
முட்டைகளை உப்புச் சட்டியில் அல்லது அரிசிப் பானைகளில் அடைத்து வைக்கக் கூடாது. இதனால், சுமார் 50 சதவீதம் முட்டைகள் குஞ்சு பொரிக்கும். முட்டைகளின் குஞ்சு பொரிக்கும் திறனை அதிகரிக்க, இரும்புச் சட்டியில் மணல் பரப்பி தண்ணீர் தெளித்து அதன் மேல் சாக்கைப் போட வேண்டும். பிறகு முட்டைகளை அதன் மேல் வைத்து பருத்தித் துணி கொண்டு மூடவேண்டும். இதன் மூலம் முட்டைகளின் குஞ்சு பொரிக்கும் திறன் 97 சதவீதம் வரை இருக்கும்.
அடை வைத்தல்..: மூங்கில் கூடைகள் அல்லது அகலமான இரும்புச் சட்டியைப் பயன்
படுத்தி அடை வைக்கலாம். அடை வைக்கும் கூடையை ஒரு அறையின் இருண்ட பகுதியிலேயே வைக்க வேண்டும். வெளிச்சம் அதிகம் இருந்தால் கோழிகள் சரியாக அடைக்கு உதவாது.
மேலும், கோழிகளுக்குத் தகுந்தாற்போல் 10 முதல் 15 முட்டைகள் வரை மட்டுமே அடைக்கு வைக்க வேண்டும். அதிகமான முட்டைகள் வைத்தால் குஞ்சு பொரிக்கும் திறன்  குறையும்.
அடை காக்கும் கோழிகளில் புற ஒட்டுண்ணிகளின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் கோழிகளை தினமும் சிறிது நேரம் வெளியில் சென்றுவர அனுமதிக்க வேண்டும். அடை வைத்த 7ஆம் நாள் முட்டைகளில் கரு கூடிவிட்டதா எனக் கண்டறிந்து, கரு கூடாத முட்டைகளை உணவுக்காகப் பயன்படுத்தலாம். 
தீவனப்  பராமரிப்பு..: புறக்கடை முறையில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு சில நேரங்களில் போதுமான ஊட்டச் சத்து கிடைக்காமல் போகக்கூடும்.
எனவே, மேய்ச்சலால் கிடைக்கும் உணவுப் பொருள்களுடன் கோழிகளுக்குக் குருணை அரிசி, தானியங்கள், வைட்டமின், கால்சியம், பாஸ்பரஸ் போன்ற கனிமக் கலவைப் பொருள்களையும் தர வேண்டும். மேலும், புறக்கடையில் வளர்க்கப்படும் கோழிகளுக்குப் புரதச் சத்து நிறைந்த தீவனமாக உள்ள பானைக் கரையான், அசோலா ஆகியவற்றையும் வழங்கலாம் 

பாரம்பரியமிக்க நாட்டுக்கோழி வளர்ப்பு


பாரம்பரிய நாட்டுக் கோழியை மகளிர் குழுக்கள், வளரும் குழந்தைகள், வயோதி கர்கள்,பென்ஷன்தாரர்கள், வீட்டில் உள்ள பெண்கள், மனஅழுத்தம் உள்ளவர்கள், கடுமையான வேலைப்பளு உள்ளவர்கள், விவசாயிகள், தோப்புகள், தோட்டம், மேய்ச்சல் நிலம் உள்ளவர்கள், காலி இடம் உள்ளவர்கள் என யாவரும் வளர்க்கலாம்.


நாட்டுக்கோழி வாங்கும் பொழுது கவனிக்க வேண்டியவை: கழிச்சல் இல்லாமல், எச்சம் இடும் பகுதி வெள்ளையாக மிச்சம் ஒட்டி இருக்கக்கூடாது. ரோமம் கட்டி ஒட்டி இருக்கக்கூடாது. கோழியின் கால்கள் இளம் மஞ்சள் நிறத்துடன் கொண்டை சிவந்த நிறத்துடன், மூக்கு இளம் மஞ்சள் நிறத்துடன், பிடிக்கும்பொழுது திமிறிக் கொண்டு பலத்த சப்தம் இடவேண்டும். தொடைப்பகுதி நல்ல இறுக்கத்துடன் இருக்க வேண்டும். கொண்டை கருமை நிறத்துடன் இருக்கக்கூடாது. நல்ல சுறுசுறுப்புடன் ஓடியாடி மண்ணில் புரண்டு விளையாட வேண்டும்.
இப்படிப்பட்ட குணநலன்கள் கொண்ட நாட்டுக் கோழியாக பார்த்து வாங்க வேண்டும். முட்டை இடுகின்ற கோழிகள், அடைபடுத்த கோழிகள், முட்டை இட்டு கழிக்கின்ற கோழிகளை வாங்கக்கூடாது. வளர்ப்பதற்கு 3, 4 மாத வயது கோழிகளை வாங்க வேண்டும். உங்கள் இடத்தில் பழகி பெட்டையும் சேவலும் இனச்சேர்க்கை சேர்த்து முட்டையிட்டு அடைவைத்து குஞ்சு பொரிக்க வேண்டும்.
6 பெட்டைக்கு ஒரு சேவல் என்ற கணக்கில் திறந்த வெளியில் வெயிலில் மேய விட்டு வளர்க்கலாம். விற்பனைக்கு சந்தைகள், கறிக் கடைகள், திருவிழா காலங்கள், பண்டிகைகள் என ஏராளமான வழிவகைகள் விற்பனை வாய்ப்புள்ளது. சிறிய முதலீட்டில் பாரம்பரிய நாட்டுக் கோழியை வளர்க்கலாம்.
6 பெட்டை கோழிகள் 7, 8 மாத வயதில் முட்டை இட ஆரம்பிக்கும். ஒரு கோழி 10லிருந்து 13 முட்டைகள் வரை இடும். வருடத்தில் 6 முறை மட்டும் முட்டை இடுவதாக வைத்துக்கொண்டாலும் வருடத்தில் தோராயமாக 60-75 முட்டைகள் கிடைக்கும். ஒரு கோழிக்கு 9 முட்டை அடை வைத்து ஏழு குஞ்சுகள் பொறித்தாலும் இன்றைய நிலவரப்படி ஒரு கோழிக்குஞ்சின் விலை ரூ.40/- (ஒரு நாள் வயது கோழிக்குஞ்சு).


இன்குபேட்டர் மின்சார குஞ்சு பொரிப்பான் கோழி வாத்து மற்றும் அனைத்து வகை முட்டைகளைப் பொரிக்க வைக்க
   Contact Suppiler   


yarasoolgoatfarm@gmail.com
hajamohinudeen20062@gmail.com
hajamohinudeen2006yahoo.co.in
+918973908930


பால் கறவை இயந்திரம்


பண்ணைகளில் அதிக எண்ணிக்கையில் கறவை மாடுகளைப் பராமரிக்கும் போது அதிகப்படியான ஆள்களும், அதிக நேரமும் தேவைப்படுகிறது. வேலையாள்களின் தேவையைக் குறைக்கவும், நேரத்தை மிச்சப்படுத்தவும், சுகாதாரமான முறையில் பால் உற்பத்தி செய்வதற்கும் இயந்திரங்களைப் பயன்படுத்துவது அவசியமாகிறது.
பத்து கறவை மாடுகளுக்கு மேல் வைத்திருப்பவர்களுக்கு பால் கறவை இயந்திரத்தைப் பயன்படுத்துவது இலாபகரமாக இருக்கும். இந்தக் கறவை இயந்திரம் மூன்று பேர் செய்யக்கூடிய வேலையைச் சுலபமாக செய்து முடித்துவிடும். மேலும், இந்த இயந்திரம் மூலம் சுகாதாரமான முறையில் பால் உற்பத்தி செய்ய முடிவதுடன், கையால் கறப்பதைவிட 50 சதம் குறைந்த நேரத்தில் முழுமையாகப் பாலைக் கறந்து விடலாம். இதனால், கறவை மாடுகளின் எண்ணிக்கைகளை அதிகப்படுத்தி குறைந்த பராமரிப்புச் செலவில் அதிகப் பால் உற்பத்தி செய்ய முடிகிறது. குறிப்பிட்ட நேரத்தில் சீரான முறையில் பால் கறப்பதால் கறவை மாடுகளுக்கு மடிநோய் வராமலும் தடுக்க முடியும்.
இயங்கும் முறை
மாட்டின் மடியில் சேர்ந்திருக்கும் பாலை காம்பில் பொருத்தும் குழாய்கள் மூலம் உறிஞ்சுவதால் பால் கறக்கப்படுகிறது. காம்புக்கு விட்டு விட்டு அழுத்த நிலை கொடுக்கப்படுகிறது.
இடையிடையே பால் உறிஞ்சும் செயலும் நடைபெறுகிறது. அழுத்தும் நிலை, உறிஞ்சும் நிலை என்று மாறி மாறி ஏற்படுவதால் பால் கறக்கும் செயலானது இயற்கையில் கன்று பாலைக் குடிப்பது போன்ற உணர்ச்சியைத் தாய்ப் பசுவிற்கு அளிக்கிறது. பால் வரும் குழாய் கண்ணாடி ஆனதால் பால் வருவதைக் கவனித்து, பால் வராத சமயத்தில் இயந்திரத்தை நிறுத்த முடிகிறது.
பால் கறப்பதற்கு முன்பு கைகளைக் கிருமி நாசினி கொண்டு சுத்தமாகக் கழுவ வேண்டும். மடியைச் கிருமி நாசினி கொண்ட தண்ணீரால் கழுவி, பின்பு உலர்ந்த சுத்தமான துணியால் துடைக்க வேண்டும். பால் கறவை இயந்திரத்தை உபயோகிக்கும் முன்பு சிறிதளவு பாலை, கறுப்புத் துணி கொண்டு மூடிய சிறிய கிண்ணத்தில் கறந்து பார்ப்பதன் மூலம் பாலின் தரத்தை நிர்ணயம் செய்ய முடியும்.
உறிஞ்சும் குழாயைப் பசுவின் காம்பில் வைத்து கறவை இயந்திரத்தை இயக்க வேண்டும். பால் கறந்த பின் காம்புகளைக் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்வதால் மடி வீக்க நோய் வருவதிலிருந்து பாதுகாக்கலாம்.

கறவை மாடு வைத்திருப்பவரே தீவனப் பயிர் வளர்க்கலாம்


தமிழகத்தில் பால் தேவை எப்போதும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இப்போதையை பால் உற்பத்தி, நமது தேவையை முழுமையாகப் பூர்த்தி செய்வதாக இல்லை.
பால் தட்டுப்பாடுதான் பல்வேறு கலப்படங்களுக்கும், விலையேற்றத்துக்கும் மூலகாரணம். எனவே பால் உற்பத்தியைப் பெருக்குவதன் மூலம் கலப்படமற்ற, சுத்தமான பாலை நியாயமான விலையில் பெறமுடியும்.
பால் உற்பத்தியைப் பெருக்க தமிழகத்தில் இன்னமும் நிறைய கறவை மாடுகள் வளர்க்கப்பட வேண்டும். நிறைய மாட்டுப் பண்ணைகள் உருவாக வேண்டும். எனவே தான் தமிழக அரசு மாடு வளர்ப்புக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. இலவசமாகவும் மானியத்திலும் கறவைமாடுகள் வழங்கப்படுகின்றன. மாடுகள் அதிக அளவில் வளர்க்க மேய்ச்சல் நிலம் தேவை. ஆனால் மேய்ச்சல் நிலங்கள் எல்லாம் காணாமல் போய் பல ஆண்டுகள் ஆகிவிட்டன.
இதனால் மாடுகளுக்கான தீவனப் புல் கிடைப்பதில் பெருமளவு தட்டுப்பாடு நிலவி வருகிறது. கறவை மாடுகளுக்கு கால் பங்கு வைக்கோல், அரைப் பங்கு பசுந் தீவனம், கால் பங்கு கடைகளில் கிடைக்கும் ஏனைய தீவனங்கள் கொடுத்தால் மாடுகள் ஆரோக்கியமாகவும், நிறைய பாலும் கறக்கும். பராமரிப்புச் செலவும் குறையும் என கால்நடை மருத்துவர்கள் கூறுகின்றனர்.
எனவே பால் உற்பத்தியில் தீவனப் பயிர்களின் பங்கு பெரிதும் அங்கம் வகிக்கிறது. 5 மாடுகளுக்கு மேல் வைத்து இருப்பவர்கள் நிச்சயம் தீவனப் பயிர்களை வளர்க்க வேண்டும். அல்லது விலைகொடுத்து வாங்கவேண்டும் என்கிறது கால்நடை பராமரிப்புத்துறை.
வீட்டுக்கு 2 மாடுகள் வைத்திருக்கும் ஐவர் சேர்ந்து, தீவனப் பயிர்களை விளைவிக்கலாம். தீவனப் பயிர்கள் வளர்க்க, கால்நடை பராமரிப்புத் துறை நிறைய மானியம் வழங்குகிறது.

தீவனப்பயிர்கள்

தீவனப் பயிர்களில் முக்கியமானவை
 • தீவன மக்காச் சோளம்
 • தீவனச் சோளம்
 • தீவனக் கம்பு
 • கினியா புல்
 • தீவன தட்டைப் பயறு
 • கம்பு நேப்பியர் புல்
ஆகியவை.

தீவன மக்காச் சோளம்

தீவன மக்காச் சோளத்தில் ஆப்பிரிக்கன் உயரம், டெக்கான், கங்கா, கோ1 என்ற ரகங்கள் உள்ளன. இவற்றுக்கு உரத்தேவை ஹெக்டேருக்கு 40 கிலோ யூரியா, 64 கிலோ சூப்பர் பாஸ்பேட், 16 கிலோ பொட்டாஷ். ஹெக்டேருக்கு 16 கிலோ விதை தேவை. விதைத்த 3-ம் நாள் தண்ணீர், பின்னர் வாரம் ஒரு முறை நீர்பாய்ச்சினால் போதும். 60-வது நாள் முதல் பூக்கும் வரை தொடர்ந்து அறுவடை செய்யலாம்.


தீவனச் சோளம்


தீவனச் சோளம் கோ 11, கோ 27 என்ற ரகங்கள் கிடைக்கின்றன. இவற்றுக்கு ஹெக்டேருக்கு 12 கிலோ யூரியா, 16 கிலோ சூப்பர் பாஸ்பேட், 8 கிலோ பொட்டாஷ், மேலுரமாக 30-வது நாளில் 12 கிலோ யூரியா இட வேண்டும். விதைத் தேவை ஹெக்டேருக்கு 16 கிலோ. விதைத்த உடன் முதல் தண்ணீரும், 3-ம் நாளில் 2-வது தண்ணீர், பின்னர் 10 நாள்களுக்கு ஒருமுறை நீர்ப் பாய்ச்சினால் போதும். 60 முதல் 65 நாளில் அறுவடை செய்யலாம்.

தீவனக் கம்பு


தீவனக் கம்பு கோ 8 என்ற ரகம் கிடைக்கிறது. இதற்கு ஹெக்டேருக்கு அடியுரமாக 12 கிலோ யூரியா, 96 கிலோ சூப்பர் பாஸ்பேட், 8 கிலோ பொட்டாஷ், மேலுரமாக 21 கிலோ யூரியா இட வேண்டும். விதை அளவு ஏக்கருக்கு 4 கிலோ. 10 முதல் 15 நாள்களுக்கு ஒருமுறை நீர்ப் பாய்ச்சினால் போதும். 40 முதல 45 நாள்களில் அறுவடை செய்யலாம்.

கினியா புல்ஏக்கருக்கு 20:20:60 கிலோ முறையே தழை, மணி, சாம்பல் சத்துக்களும், மேலுரமாக 10 கிலோ தழைச்சத்தும் இட வேண்டும். ஏக்கருக்கு ஒரு கிலோ விதை தேவை. வேர்க் கரணை ஏக்கருக்கு 20,640. விதைத்த உடன் முதல் தண்ணீர் 3-ம் நாளும், பின்னர் 15 முதல் 20 நாள்களுக்கு ஒருமுறையும் நீர்ப்பாய்ச்சினால் போதும். 50 முதல் 55 நாள்களில் அறுவடை செய்யலாம்.

தீவன தட்டைப்பயறுஇதில் கோ 5 ரகம் கிடைக்கிறது. உரத்தேவை ஏக்கருக்கு அடியுரம் 10:16:8 முறையே தழை, மணி, சாம்பல் சத்துக்கள் இட வேண்டும். ஏக்கருக்கு 14 கிலோ போதுமானது. விதைத்து 3-வது நாளில் முதல் தண்ணீரும், பின்னர் 10 நாள்களுக்கு ஒரு முறையும் நீர்ப் பாய்ச்சினால் போதும். 50 முதல் 55 நாளில் அறுடைக்கு வரும்.

கம்பு நேப்பியர் புல்


என்.பி.21, என்.பி.2, கோ1, கோ2, கோ3 ஆகிய ரகங்கள் கிடைக்கின்றன. விதைக் கரணைகள் ஏக்கருக்கு 16 ஆயிரம் தேவை. அடியுரமாக ஏக்கருக்கு 20:20:16 கிலோ விகிதத்தில் முறையே தழை, மணி, சாம்பல் சத்துக்கள் இடவேண்டும். முதல் தண்ணீர் நடும் போதும், 2-வது தண்ணீர் நட்ட 3-வது நாளிலும் பாய்ச்ச வேண்டும். பின்னர் 10 நாள்களுக்கு ஒருமுறை நீர்ப் பாய்ச்சினால் போதும். முதல் அறுவடை 80 நாள்களிலும், பின்னர் 45 நாள்களுக்கு ஒரு முறையும் செய்யலாம்.

கறவை மாடு வைத்திருப்பவரே தீவனப் பயிர் வளர்க்கலாம்


தமிழகத்தில் பால் தேவை எப்போதும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இப்போதையை பால் உற்பத்தி, நமது தேவையை முழுமையாகப் பூர்த்தி செய்வதாக இல்லை.
பால் தட்டுப்பாடுதான் பல்வேறு கலப்படங்களுக்கும், விலையேற்றத்துக்கும் மூலகாரணம். எனவே பால் உற்பத்தியைப் பெருக்குவதன் மூலம் கலப்படமற்ற, சுத்தமான பாலை நியாயமான விலையில் பெறமுடியும்.
பால் உற்பத்தியைப் பெருக்க தமிழகத்தில் இன்னமும் நிறைய கறவை மாடுகள் வளர்க்கப்பட வேண்டும். நிறைய மாட்டுப் பண்ணைகள் உருவாக வேண்டும். எனவே தான் தமிழக அரசு மாடு வளர்ப்புக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. இலவசமாகவும் மானியத்திலும் கறவைமாடுகள் வழங்கப்படுகின்றன. மாடுகள் அதிக அளவில் வளர்க்க மேய்ச்சல் நிலம் தேவை. ஆனால் மேய்ச்சல் நிலங்கள் எல்லாம் காணாமல் போய் பல ஆண்டுகள் ஆகிவிட்டன.
இதனால் மாடுகளுக்கான தீவனப் புல் கிடைப்பதில் பெருமளவு தட்டுப்பாடு நிலவி வருகிறது. கறவை மாடுகளுக்கு கால் பங்கு வைக்கோல், அரைப் பங்கு பசுந் தீவனம், கால் பங்கு கடைகளில் கிடைக்கும் ஏனைய தீவனங்கள் கொடுத்தால் மாடுகள் ஆரோக்கியமாகவும், நிறைய பாலும் கறக்கும். பராமரிப்புச் செலவும் குறையும் என கால்நடை மருத்துவர்கள் கூறுகின்றனர்.
எனவே பால் உற்பத்தியில் தீவனப் பயிர்களின் பங்கு பெரிதும் அங்கம் வகிக்கிறது. 5 மாடுகளுக்கு மேல் வைத்து இருப்பவர்கள் நிச்சயம் தீவனப் பயிர்களை வளர்க்க வேண்டும். அல்லது விலைகொடுத்து வாங்கவேண்டும் என்கிறது கால்நடை பராமரிப்புத்துறை.
வீட்டுக்கு 2 மாடுகள் வைத்திருக்கும் ஐவர் சேர்ந்து, தீவனப் பயிர்களை விளைவிக்கலாம். தீவனப் பயிர்கள் வளர்க்க, கால்நடை பராமரிப்புத் துறை நிறைய மானியம் வழங்குகிறது.

தீவனப்பயிர்கள்

தீவனப் பயிர்களில் முக்கியமானவை
 • தீவன மக்காச் சோளம்
 • தீவனச் சோளம்
 • தீவனக் கம்பு
 • கினியா புல்
 • தீவன தட்டைப் பயறு
 • கம்பு நேப்பியர் புல்
ஆகியவை.

தீவன மக்காச் சோளம்

தீவன மக்காச் சோளத்தில் ஆப்பிரிக்கன் உயரம், டெக்கான், கங்கா, கோ1 என்ற ரகங்கள் உள்ளன. இவற்றுக்கு உரத்தேவை ஹெக்டேருக்கு 40 கிலோ யூரியா, 64 கிலோ சூப்பர் பாஸ்பேட், 16 கிலோ பொட்டாஷ். ஹெக்டேருக்கு 16 கிலோ விதை தேவை. விதைத்த 3-ம் நாள் தண்ணீர், பின்னர் வாரம் ஒரு முறை நீர்பாய்ச்சினால் போதும். 60-வது நாள் முதல் பூக்கும் வரை தொடர்ந்து அறுவடை செய்யலாம்.


தீவனச் சோளம்தீவனச் சோளம் கோ 11, கோ 27 என்ற ரகங்கள் கிடைக்கின்றன. இவற்றுக்கு ஹெக்டேருக்கு 12 கிலோ யூரியா, 16 கிலோ சூப்பர் பாஸ்பேட், 8 கிலோ பொட்டாஷ், மேலுரமாக 30-வது நாளில் 12 கிலோ யூரியா இட வேண்டும். விதைத் தேவை ஹெக்டேருக்கு 16 கிலோ. விதைத்த உடன் முதல் தண்ணீரும், 3-ம் நாளில் 2-வது தண்ணீர், பின்னர் 10 நாள்களுக்கு ஒருமுறை நீர்ப் பாய்ச்சினால் போதும். 60 முதல் 65 நாளில் அறுவடை செய்யலாம்.

தீவனக் கம்புதீவனக் கம்பு கோ 8 என்ற ரகம் கிடைக்கிறது. இதற்கு ஹெக்டேருக்கு அடியுரமாக 12 கிலோ யூரியா, 96 கிலோ சூப்பர் பாஸ்பேட், 8 கிலோ பொட்டாஷ், மேலுரமாக 21 கிலோ யூரியா இட வேண்டும். விதை அளவு ஏக்கருக்கு 4 கிலோ. 10 முதல் 15 நாள்களுக்கு ஒருமுறை நீர்ப் பாய்ச்சினால் போதும். 40 முதல 45 நாள்களில் அறுவடை செய்யலாம்.

கினியா புல்


ஏக்கருக்கு 20:20:60 கிலோ முறையே தழை, மணி, சாம்பல் சத்துக்களும், மேலுரமாக 10 கிலோ தழைச்சத்தும் இட வேண்டும். ஏக்கருக்கு ஒரு கிலோ விதை தேவை. வேர்க் கரணை ஏக்கருக்கு 20,640. விதைத்த உடன் முதல் தண்ணீர் 3-ம் நாளும், பின்னர் 15 முதல் 20 நாள்களுக்கு ஒருமுறையும் நீர்ப்பாய்ச்சினால் போதும். 50 முதல் 55 நாள்களில் அறுவடை செய்யலாம்.

தீவன தட்டைப்பயறுஇதில் கோ 5 ரகம் கிடைக்கிறது. உரத்தேவை ஏக்கருக்கு அடியுரம் 10:16:8 முறையே தழை, மணி, சாம்பல் சத்துக்கள் இட வேண்டும். ஏக்கருக்கு 14 கிலோ போதுமானது. விதைத்து 3-வது நாளில் முதல் தண்ணீரும், பின்னர் 10 நாள்களுக்கு ஒரு முறையும் நீர்ப் பாய்ச்சினால் போதும். 50 முதல் 55 நாளில் அறுடைக்கு வரும்.

கம்பு நேப்பியர் புல்என்.பி.21, என்.பி.2, கோ1, கோ2, கோ3 ஆகிய ரகங்கள் கிடைக்கின்றன. விதைக் கரணைகள் ஏக்கருக்கு 16 ஆயிரம் தேவை. அடியுரமாக ஏக்கருக்கு 20:20:16 கிலோ விகிதத்தில் முறையே தழை, மணி, சாம்பல் சத்துக்கள் இடவேண்டும். முதல் தண்ணீர் நடும் போதும், 2-வது தண்ணீர் நட்ட 3-வது நாளிலும் பாய்ச்ச வேண்டும். பின்னர் 10 நாள்களுக்கு ஒருமுறை நீர்ப் பாய்ச்சினால் போதும். முதல் அறுவடை 80 நாள்களிலும், பின்னர் 45 நாள்களுக்கு ஒரு முறையும் செய்யலாம்.

கால்நடைக்கு கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் – கோ-3

          கால்நடை தீவனப் பயிரான “கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் கோ-3′ பயிரிட்டு மாடுகளுக்கு அளிப்பதன் மூலம் பால்வளத்தை அதிகரிக்க முடியும் என  கால்நடை மருத்துவர்கள் யோசனை தெரிவிக்கின்றனர்.
         இத் தீவனப் பயிரை ஆண்டு முழுவதும் பயிரிடலாம். நிலத்தை தயாரிக்க இரண்டு அல்லது மூன்று முறை நன்கு உழ வேண்டும். ஹெக்டேருக்கு 25 டன் மக்கிய தொழு உரம் இட வேண்டும். 60 செ.மீ. இடைவெளியில் பார்கள் அமைக்க வேண்டும்.
  உரமிடுதல்: 
மண் பரிசோதனை செய்து அதன் பின்னர் உரமிடவது நல்லது. மண் பரிசோதனை செய்யாவிடில் ஹெக்டேருக்கு 150:50:50 கிலோ தழை, மணி, சாம்பல் சத்து இட வேண்டும். 50 சதவீத தழைச்சத்தை நட்ட 30ஆவது நாளில் மேலுரமாக இட வேண்டும். ஒவ்வொரு அறுவடைக்கு பின்னரும் 75 கிலோ தழைச்சத்தை அடியுரமாக இடுவதன் மூலம் மகசூலை நிலை நிறுத்தலாம்.
     இடவேண்டிய தழை மணிசத்தின் அளவில் 75 சதவீதத்துடன் அசோஸ்பைரில்லம் (ஹெக்டேருக்கு 2 கிலோ), பால்போபாக்டீரியா (2 கிலோ) அல்லது அசோபாஸ் (4 கிலோ) கலந்து கலவையாக இடும்போது விளைச்சலை அதிகரிப்பதுடன் 25 சதவீத உர அளவு குறைகிறது.
நடவு: 
நன்கு நீர் பாய்ச்சிய பின் ஒரு வேர்கரணை அல்லது ஒரு தண்டக்கரணையை 50 ஷ் 50 செ.மீ. இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். இவ்வாறு நடவு செய்ய ஒரு ஹெக்டேருக்கு 40 ஆயிரம் கரணைகள் தேவைப்படுகின்றன.
கலப்புப் பயிராக 3 வரிகள் கம்பு நேப்பியர் ஒட்டுப்புல்லும், ஒரு வரி வேலி மசாலும் பயிர் செய்தால் ஊட்டச்சத்தை அதிகப்படுத்தலாம்.
நீர் மேலாண்மை: 
நட்ட 3ஆவது நாளில் உயிர் நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். பின்பு 10 நாள்களுக்கு ஒரு முறை நீர்ப்பாய்ச்சுவது சிறந்தது. கழிவு நீரையும் பாசனத்துக்குப் பயன்படுத்தலாம்.
அறுவடை: 
நடவுக்கு பின்னர் 75 முதல் 80 நாள்களில் முதல் அறுவடையும், அதற்கடுத்து 45 நாளிலும் அறுவடை செய்யலாம். ஹெக்டேருக்கு 400 டன் தீவனம் கிடைக்கும். அதிகப்படியான தூர்களை மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை வெட்டி எடுத்து விட வேண்டும்.
ஆக்சலேட் என்ற நச்சுபொருளின் தன்மையை குறைக்க இத்தீவனத்துடன் 5 கிலோ பயறுவகை தீவனத்தை கலந்து கால்நடைகளுக்கு கொடுக்க வேண்டும். அல்லது சுண்ணாம்பு தண்ணீர் அல்லது தாது உப்பு கலவையை கால்நடைகளுக்கு அளிக்கலாம்.

கால்நடைக்கு கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் – கோ-3

கால்நடை தீவனப் பயிரான “கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் கோ-3′ பயிரிட்டு மாடுகளுக்கு அளிப்பதன் மூலம் பால்வளத்தை அதிகரிக்க முடியும் என  கால்நடை மருத்துவர்கள் யோசனை தெரிவிக்கின்றனர்.
இத் தீவனப் பயிரை ஆண்டு முழுவதும் பயிரிடலாம். நிலத்தை தயாரிக்க இரண்டு அல்லது மூன்று முறை நன்கு உழ வேண்டும். ஹெக்டேருக்கு 25 டன் மக்கிய தொழு உரம் இட வேண்டும். 60 செ.மீ. இடைவெளியில் பார்கள் அமைக்க வேண்டும்.
உரமிடுதல்: 
மண் பரிசோதனை செய்து அதன் பின்னர் உரமிடவது நல்லது. மண் பரிசோதனை செய்யாவிடில் ஹெக்டேருக்கு 150:50:50 கிலோ தழை, மணி, சாம்பல் சத்து இட வேண்டும். 50 சதவீத தழைச்சத்தை நட்ட 30ஆவது நாளில் மேலுரமாக இட வேண்டும். ஒவ்வொரு அறுவடைக்கு பின்னரும் 75 கிலோ தழைச்சத்தை அடியுரமாக இடுவதன் மூலம் மகசூலை நிலை நிறுத்தலாம்.
இடவேண்டிய தழை மணிசத்தின் அளவில் 75 சதவீதத்துடன் அசோஸ்பைரில்லம் (ஹெக்டேருக்கு 2 கிலோ), பால்போபாக்டீரியா (2 கிலோ) அல்லது அசோபாஸ் (4 கிலோ) கலந்து கலவையாக இடும்போது விளைச்சலை அதிகரிப்பதுடன் 25 சதவீத உர அளவு குறைகிறது.
நடவு: 
நன்கு நீர் பாய்ச்சிய பின் ஒரு வேர்கரணை அல்லது ஒரு தண்டக்கரணையை 50 ஷ் 50 செ.மீ. இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். இவ்வாறு நடவு செய்ய ஒரு ஹெக்டேருக்கு 40 ஆயிரம் கரணைகள் தேவைப்படுகின்றன.
கலப்புப் பயிராக 3 வரிகள் கம்பு நேப்பியர் ஒட்டுப்புல்லும், ஒரு வரி வேலி மசாலும் பயிர் செய்தால் ஊட்டச்சத்தை அதிகப்படுத்தலாம்.
நீர் மேலாண்மை: 
நட்ட 3ஆவது நாளில் உயிர் நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். பின்பு 10 நாள்களுக்கு ஒரு முறை நீர்ப்பாய்ச்சுவது சிறந்தது. கழிவு நீரையும் பாசனத்துக்குப் பயன்படுத்தலாம்.
அறுவடை: 
நடவுக்கு பின்னர் 75 முதல் 80 நாள்களில் முதல் அறுவடையும், அதற்கடுத்து 45 நாளிலும் அறுவடை செய்யலாம். ஹெக்டேருக்கு 400 டன் தீவனம் கிடைக்கும். அதிகப்படியான தூர்களை மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை வெட்டி எடுத்து விட வேண்டும்.
ஆக்சலேட் என்ற நச்சுபொருளின் தன்மையை குறைக்க இத்தீவனத்துடன் 5 கிலோ பயறுவகை தீவனத்தை கலந்து கால்நடைகளுக்கு கொடுக்க வேண்டும். அல்லது சுண்ணாம்பு தண்ணீர் அல்லது தாது உப்பு கலவையை கால்நடைகளுக்கு அளிக்கலாம்.
அரசே இந்த தீவனப் பயிருக்கான புல்கரணைகளை இலவசமாக அளிக்கிறது.