யா அல்லாஹ்!!!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன்.என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக.

சனி, 11 மே, 2013

தேனி மாவட்டத்தில் வாய்ஸ் மெயில் மூலம் ஆடு வளர்ப்பு
பதிவு செய்த நாள் -
மே 05, 2013  at   8:17:27 PM
 
இன்றைய காலகட்டத்தில் விவசாயம் வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், கிராமங்களின் முக்கியத் தொழில்களில் ஒன்றான ஆடுவளர்ப்பும் பின்னடைவை சந்தித்து வருகிறது. ஆனால், தேனி மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களில் செல்போன் வாய்ஸ் மெயில் மூலம் ஆடுவளர்ப்பை லாபகரமான தொழிலாக மாற்றி பயனடைந்து வருகின்றனர்.
வாய்ஸ் மெயில் மூலம் ஆடு வளர்ப்பு: தேனி மாவட்டம் போடி அருகேயுள்ள கிராமத்துப் பெண்களுக்கு இது பழகிப்போன ஒன்று. காமன்வெல்த் கூட்டமைப்பின், கற்றல் காமன்வெல்த் நிறுவனத்தின் உதவியுடன் தன்னார்வ அமைப்பு ஒன்று இவ்வாறு ஆடு வளர்ப்பு மற்றும் செல்போன் வசதி குறித்து 33 மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு பயிற்சி அளித்துள்ளது. இதன் மூலம் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் வாய்ஸ் மெயில் சேவையை பயன்படுத்தி ஆடுவளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.
ஆடுவளர்ப்பில் லாபம் ஈட்டும் பெண்கள்: கல்வியறிவு இல்லாத இப்பெண்கள் தற்போது ஆடுவளர்ப்பில் நல்ல லாபம் ஈட்டி வருவதுடன், ஆடு விற்பனையில் தரகர்களின் உதவி இல்லாமல் செயல்பட்டு வருவதாகவும் கூறுகின்றனர்.
செல்போனின் ஆக்கப்பூர்வ பயன்பாடு : போடி அருகேயுள்ள சின்னபட்டிபுரம், கிராசிங்காபுரம், மணியம்பட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பெண்களுக்கு ஆடுவளர்ப்பு மட்டுமில்லாமல், விவசாயம், சட்ட விழிப்புணர்வு, சுகாதாரம், வங்கி சேவை ஆகியவை குறித்த தகவலும் வாய்ஸ் மூலம் அளிக்கப்பட்டு வருகிறது. இதனால், அவர்கள் தன்னம்பிக்கை நிறைந்த பெண்களாக திகழ்கின்றனர்.
நேரத்தைப் போக்குவதற்கு பலர் செல்போன்களை பயன்படுத்தி வரும் நிலையில், அதை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி வரும் இந்த பெண்கள் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவர்கள்தான்.

கருத்துகள் இல்லை: