அசோலா
கோழித்தீவனமாக அசோலா: அசோலா எனப்படும் பெரணி வகை நீர்த்தாவரம் கோழிக்குஞ்சுகளுக்கு அளிக்கப்படும் தீவனத்தில் 20 சதவீதம் வரை சேர்த்தால் குஞ்சுகள் நன்கு வளர்ந்து நல்ல எடையுடன் காணப்படும். கோழிகளுக்கு அசோலாவை உணவாக இடுகின்றபொழுது மஞ்சள்கருவானது நல்ல தேர்ச்சியுடன் உருவாகிறது. மேலும் கோழிகளில் நோய் எதிர்ப்புத்தன்மை இருப்பதாகவும் திகழ்கிறது.
மாட்டுத்தீவனமாக அசோலா: அசோலாவை கால்நடைகளுக்கு தீவனமாகவோ,பச்சையாகவோ அல்லது பதப்படுத்தியோ பயன்படுத்தலாம். அசோலாவில் அதிக புரதச்சத்தும், கொழுப்புச்சத்தும் உள்ளது. மேலும் இதில் நார்ப்பொருட்கள் குறைவு. கால்நடைகளின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து அமினோ அமிலங்களையும் அசோலா கொண்டுள்ளது. அசோலாவை உப்புடன் சேர்த்து பன்றிகளுக்கு அளித்தால் பன்றிகள் அசோலாவை நன்றாக உட்கொண்டு அதிக எடையுடன் திகழ்கின்றன. மேலும் இறைச்சியின் தன்மையும் நன்றாக இருக்கிறது. கால்நடைகளுக்கு அசோலாவை கோதுமை வைக்கோலுடன் சேர்த்து அளித்தால் கால்நடைகளின் எடையும் வளர்ச்சியும் அதிகரிக்கிறது.
மீன் வளர்ச்சிக்கு அசோலா: மீன்கள் மற்ற தீவனத் தாவரங்களைவிட அசோலாவை விரும்பி உண்கின்றன. மீன்கள் வளரும் குட்டைகளில் ஒரு ஓரத்தில் மிதக்கும் மூங்கில் கழிவுகளைப்போட்டு அசோலாவை வளர்க்க வேண்டும். மீன்கள் தேவைப்படும் சமயத்தில் வந்து அசோலாவை உண்டுவிட்டு சென்றுவிடும். மேலும் அசோலாவை காயவைத்து பொடி செய்து தண்ணீரில் தெளித்துவிடலாம்.
நெல் வயல்களில் அசோலாவும் மீன் வளர்த்தலும்:தண்ணீர் ஓரளவு தேங்கி நிற்கும் நெல் வயல்களில் மீன் வளர்த்து அதிக லாபம் பெறலாம். அசோலாவை மீன் வளர்க்கும் வயலில் வளர்ப்பதால் அசோலா மீன்களுக்கு உணவாகப் பயன்படும். நெல் வயல்களில் வரப்பு ஓரத்தில் 1.5 மீட்டர் அளவுக்கு0.50 மீட்டர் ஆழத்திற்கு வயலின் இரண்டு வரப்பு ஓரங்களிலும் பள்ளம் செய்து மற்ற இடங்களில் வயலைத் தயாரித்து நடவு செய்ய வேண்டும். வயலில் நெற்பயிர் வேர் பிடித்தபிறகு தண்ணீர் 7.5 செ.மீ. முதல் 10 செ.மீ. அளவு தேங்கும் அளவுக்கு பராமரிக்க வேண்டும். நடவு நட்ட 7வது நாள் ஒரு ஏக்கருக்கு200 கிலோ அளவு அசோலாவை தூவிவிட வேண்டும். அசோலா வளர்ந்து பெருக்கமடையும். நடவு நட்ட10 நாட்களில் ஏக்கருக்கு 2500-3000 மீன் குஞ்சுகள் வயலில் விடவேண்டும். அசோலாவைத் தனியாக பொடி செய்து தூவிவிடுவதன் மூலம் மீன்களுக்கு உணவாகப் பயன்படும். அசோலாவை பசுமையாக எடுத்து மாட்டுச்சாணத்துடன் 1:1 என்ற அளவில் சேர்த்து இரண்டு வாரம் மக்கவைத்து நெல்வயலில் இடுவதன் மூலம் மீன்களுக்கு உணவாகப் பயன்படும்.
(தகவல்: ரா.ராஜேஷ், ந.ஜெய்வேல், வேளாண் நுண்ணுயிரியல் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்-641 003. 99448 93580)
தாய்லாந்து நிறுவனத்தின் தலைசிறந்த F1 ஹைபிரிடு விதைகள்: போர்டடோ, சூப்பர் குட்டை புடல், சிவப்பு சதை பப்பாளி ""சப்னா'', ""சாம்பல் பூசணி'' விதைகள் வாங்க அணுக வேண்டிய முகவரி: East West Seeds India Pvt. Ltd., Gut No.66, Village Narayanpur (BK), P.O., Waluj, Aurangabad 431 133. 98552 38393, 99656 23265.
-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்

100 கிலோ பசுமையான அசோலாவை 100 கிலோ பச்சைச் சாணம், 50 கிராம் சூப்பர் பாஸ்பேட்டுடன் கலந்து ஒன்று சேர்த்து குவியலாக வைத்து 2 வாரத்திற்கு மக்கச்செய்து பிறகு அதில் 500 மி.கி. நீலப்பச்சைப்பாசி கலவையும் சேர்த்து மீன்களுக்கு உணவாக நெல்வயலில் இடவேண்டும். இவ்வாறு மீன், அசோலா இரண்டையும் வளர்ப்பதன்மூலம் மீன்கள் அசோலாவை உணவாக எடுத்துக்கொண்டு வளர்கின்றன. இதனால் மீன்களின் கழிவுப் பொருட்களும் நெற்பயிருக்கு பயன்படுகின்றன. இதன்மூலம் ஒரு ஏக்கருக்கு கிட்டத்தட்ட 150, 200 மீன்கள் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் இதன்மூலம் அதிக வருமானம் பெறலாம்.
(தகவல்: ரா.ராஜேஷ், ந.ஜெய்வேல், வேளாண் நுண்ணுயிரியல் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்-641 003. 99448 93580)
தாய்லாந்து நிறுவனத்தின் தலைசிறந்த F1 ஹைபிரிடு விதைகள்: போர்டடோ, சூப்பர் குட்டை புடல், சிவப்பு சதை பப்பாளி ""சப்னா'', ""சாம்பல் பூசணி'' விதைகள் வாங்க அணுக வேண்டிய முகவரி: East West Seeds India Pvt. Ltd., Gut No.66, Village Narayanpur (BK), P.O., Waluj, Aurangabad 431 133. 98552 38393, 99656 23265.
-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்
நவீன தொழில்நுட்பம் - அசோலா
அசோலா:
தண்ணீரில் வாழும் மிதவை வகை பெரணியாகும். தழைச்சத்தை நிலைநிறுத்தும் நீலப்பச்சைப் பாசியைக் கூட்டுவாழ்முறை நிலையில் கொண்டுள்ளது. இந்த பெரணி - பாசி கூட்டமைப்பில் உள்ள இரண்டும் ஒளிச்சேர்க்கையில் ஈடுபடும் உயிரினங்களாகும். நீலப் பச்சைப்பாசி காற்று மண்டலத்தில்இருக்கும் தழைச்சத்தையும் நிலைநிறுத்தும் திறன் கொண்டது.
சமீப காலமாக அசோலா ஒரு உன்னத கால்நடை கோழித் தீவனமாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் 25-30 சதம் புரதச்சத்து உள்ளது. கால்நடைகளுக்குத் தேவையான அமினோ அமிலங்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள், பீட்டா கெரோட்டின் ஆகிய சத்துக்கள் உள்ளன. பீட்டாகெரோட்டின் நிறமி வைட்டமின் "ஏ' உருவாவதற்கு மூலப்பொருளாகும். இச்சத்து உள்ளதால் கோழிகளுக்கு நோய் எதிர்ப்புசக்தி அதிகரிப்பதால் அசோலா சாப்பிட்ட கோழியின் முட்டைகளை நாம் உட்கொள்வதால் கண் பார்வைக்கு உகந்தது.
அசோலா பெரணி அனபினை அசோலா என்ற பாசியை தன் இலையில் வைத்துக்கொண்டு அதற்கு பாதுகாப்பும் தேவையான ஊட்டச் சத்துக்களையும் கொடுக்கிறது. இதற்கு மாற்றாக பெரணி பாசியிடமிருந்து நிலைநிறுத்தப்பட்ட தழைச்சத்தையும் வளர்ச்சிக்கு உதவும் பொருட்களையும் எடுத்துக்கொள்கிறது. அசோலாவை தீவனமாகப் பயன்படுத்துவதால் நாள் ஒன்றுக்கு ஒரு கோழிக்கு அடர்தீவனம் செலவில் 20 பைசா சேமிக்கலாம் என்று ஆராய்ச்சி பூர்வமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அசோலாவை கால்நடைகளுக்கு தீவனமாக அளிப்பதால் பால் உற்பத்தி 15-20 சதம் அதிகரிப்பதுடன் பாலின் தரமும் மேம்படுகிறது. பாலின் கொழுப்புச் சத்து 10 சதம் வரை உயருகிறது. கொழுப்புச்சத்து இல்லாத திடப் பொருளின் (எஸ்என்எப்) அளவு 3 சதம் வரை கூடுகிறது. அசோலா இடப் பட்ட கோழியின் முட்டையின் எடை ஆல்புமின் குளோபுலின கரோட்டின் அளவு அடர்தீவனம் மட்டும் இடப்பட்ட கோழியின் முட்டையின் அளவைவிட அதிகமாக உள்ளது.
நிழற்பாங்கான இடத்தில் 10 அடி நீளம், 2 அடி அகலம், ஒரு அடி ஆழம் கொண்ட பாத்தி அமைக்கவும். பாத்தியின் அடித்தளத்தில் சில்பாலின் ஷீட்டை சீராக விரிக்க வேண்டும். இதன்மேல் 2 செ.மீ. அளவிற்கு தண்ணீர் ஊற்றியும் பின் பாத்தி ஒன்றுக்கு 100 கிராம் சூப்பர் பாஸ்பேட், 5 கிலோ பசுஞ்சாணம் கரைத்து இடவேண்டும். பின்னர் இப்பாத்தியில் உள்ள மண்ணை நன்கு கலக்குவதால் மண்ணின் சத்துக்கள் தண்ணீரில் கரைந்து அசோலாவிற்கு எளிதாக கிடைக்கச் செய்கிறது. 15 நாட்களில் ஒரு பாத்தியில் (10 x 2 x 1 அடி) 30 முதல் 50 கிலோ அசோலா தயாராகிறது. மூன்றில் ஒரு பங்கு அசோலாவை பாத்தியிலேயே விட்டுவிட்டு எஞ்சிய இரண்டாவது பகுதியை அறுவடை செய்யலாம். 10 நாட்களுக்கு ஒர முறை 5 கிலோ பசுஞ்சாணம் கரைப்பது நல்லது. அசோலாவை அறுவடை செய்து கால்நடை கோழிகளுக்கு சத்து நிறைந்த, சுவை மிகுந்த உணவாகப் பயன்படுத்தலாம்.
பொதுவாக அசோலாவை பூச்சி, நோய்கள் தாக்குவதில்லை. பாத்திகளில் அசோலாவின் அடர்த்தி அதிகமானால் பூச்சி, நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதிலிருந்து அசோலாவை பாதுகாக்க பாத்தியின் இருபுறமும் காற்று அதிகமாக புகாதவாறு தடுப்புகள் (அ) வலைகள் அமைக்க வேண்டும். பொதுவாக பூச்சித் தொல்லை வந்தால் 5 மிலி வேப்பெண்ணெயை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து அசோலா பாத்தியில் தெளிக்க வேண்டும்.

அசோலாவை உற்பத்தி செய்யும் முறை:

அசோலா பூச்சி நோய் கட்டுப்பாடு:
பொதுவாக அசோலாவை பூச்சி, நோய்கள் தாக்குவதில்லை. பாத்திகளில் அசோலாவின் அடர்த்தி அதிகமானால் பூச்சி, நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதிலிருந்து அசோலாவை பாதுகாக்க பாத்தியின் இருபுறமும் காற்று அதிகமாக புகாதவாறு தடுப்புகள் (அ) வலைகள் அமைக்க வேண்டும். பொதுவாக பூச்சித் தொல்லை வந்தால் 5 மிலி வேப்பெண்ணெயை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து அசோலா பாத்தியில் தெளிக்க வேண்டும்.
20 சதுர அடி அளவில் அசோலாவை வளர்க்க தேவையான பொருட்கள்:
அசோலா தாய்வித்து - 5 கிலோ, வளமான மண் 2 செ.மீ. சமமான அளவு, பசுஞ்சாணம் 5 கிலோ, சூப்பர் பாஸ்பேட் 100 கிராம், சில்பாலின் ஷீட் 20 சதுர அடி, தண்ணீர் 100 லிட்டர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக