யா அல்லாஹ்!!!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன்.என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக.

வெள்ளி, 28 பிப்ரவரி, 2014

தீவன தட்டைப்பயறு

பருவம் : இறவை ஜூன் – ஜூலை

உழவு : நிலத்தை இரும்புக்கலப்பை கொண்டு இருமுறையும் நாட்டுக்கலப்பை கொண்டு மூன்று அல்லது நான்கு முறையும் உழவேண்டும்.
தொழு உரமிடுதல்  : எக்டருக்கு 12.5 டன் தொழு உரம் அல்லது கம்போஸ்ட் இடவேண்டும்.
பார் பிடித்தல்  : 30 செ.மீ. இடைவெளியில் 6 மீ நீளத்திற்கு பார்பிடிக்க வேண்டும். பார் பிடிக்காவிட்டால், பாசன நீரின் அளவைப் பொறுத்து 20 சதுர மீட்டருக்கு பாத்திகள் பிடிக்கவேண்டும்.
உரமிடுதல் : மண் பரிசோதனைக்கேற்ப உரங்களை இடவேண்டும். மண் பரிசோதனை செய்யாவிடில் எக்டருக்கு 25:40:20 கிலோ தழை, மணி மற்றும் சாம்பல்சத்து இடவேண்டும். இதனை 55:250:33 கிலோ, யூரியா, சூப்பர் பொட்டாஷ் உரங்கள் மூலமாக இடலாம்.
விதைப்பு : 3 பாக்கெட்டுகள் [600 கி] ரைசோபியம் உயிர் உரத்தை அரிசிக் கஞ்சியில் கலந்து விதை நேர்த்தி செய்யவும்.
விதை அளவு : எக்டருக்கு 40 கிலோ இடைவெளி 30 X 15 செ.மீ.
நீர் மேலாண்மை  : விதைத்தவுடன் பாசனம் செய்ய வேண்டும் மற்றும் மூன்றாவது நாளில் உயிர்ப்பு நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். பின்பு 10 நாட்களுக்கு ஒரு முறை பாசனம் அளிப்பது சிறந்தது.
களை நிர்வாகம்  : தேவைப்படும் போது களை எடுக்கவும்.
பயிர் பாதுகாப்பு  : பொதுவாகத் தேவையில்லை
அறுவடை : விதைத்த 50-55 நாட்களில் அறுவடை செய்ய வேண்டும். [50 சதம் பூக்கும் தருவாயில்]
தகவல் : இணைப்பேராசிரியர் மற்றும் தலைவர் உழவியல் துறை, அடிப்படை அறிவியல் புலம், சென்னை கால்நடை மருத்துவக்கல்லூரி, சென்னை- 600 007, தொலைபேசி: 044-25304000.
தகவல் அனுப்பியவர் : முருகன், சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம், திருவையாறு

கருத்துகள் இல்லை: