யா அல்லாஹ்!!!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன்.என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக.

வெள்ளி, 28 பிப்ரவரி, 2014

பஞ்சாப் மாநில விவசாய மாநாட்டின், கண்காட்சி

பஞ்சாப் மாநில விவசாய மாநாட்டின், கண்காட்சியில் பங்கேற்ற விவசாயி ஒருவரின் எருமைக்கு, 10 கோடி ரூபாய் வரை பணம் கொடுப்பதாக வெளிநாட்டினர் ஒருவர் கூறியும், அந்த எருமையின் உரிமையாளர் விற்க மறுத்துவிட்டார்.

பஞ்சாபில், முதல்வர், பிரகாஷ் சிங் பாதல் தலைமையிலான, சிரோன்மணி அகாலிதளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி உள்ளது. இங்குள்ள, மொகாலியில், இரு தினங்களுக்கு முன், முதல்வர் பாதல், பஞ்சாப் விவசாய உச்சி மாநாட்டை துவக்கி வைத்தார். இதில், விவசாயம் சார்ந்த பல்வேறு கருத்தரங்குகள் மற்றும் கால்நடை வளர்ப்பு பற்றிய கண்காட்சியும் இடம் பெற்றுள்ளது. இங்கு, இந்தியா மட்டுமின்றி, வெளிநாடுகளைச் சேர்ந்த பலரும் வந்திருப்பதால், உள்நாட்டு விவசாயிகள், தங்கள் பயிர் வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு பற்றிய சாதனைகளை வெளிநாட்டு விவசாயிகளிடம் காண்பிப்பதில், அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். கண்காட்சியில், கபூர்தலா மாவட்டத்தை சேர்ந்த, லம்பர்தார் சோமல் என்பவர், தன், கொழு கொழு எருமையை பார்வையாளர்களிடம் காண்பிப்பதற்காக அழைத்து வந்தார். 5 அடி, 8 அங்குல உயரமும், 11 அடி நீளமும் உடைய இந்த எருமை, 1,200 கிலோ எடை கொண்டுள்ளது. தினசரி தீவனத்துடன், 10 லிட்டர் பால் குடிக்கும் பழக்கமுள்ள இந்த எருமையைக் கண்டு, உள்நாட்டினர் மட்டுமின்றி, வெளிநாட்டை சேர்ந்த பலரும் வியப்படைந்துள்ளனர். சிறந்த எருமை வளர்ப்பிற்கான மாநில, தேசிய அளவிலான, பல போட்டிகளில் தன் எருமையுடன் கலந்து கொண்ட சோமல், அனைத்திலும் முதல் பரிசை பெற்றுள்ளார்.

இதுவரை இந்த மாதிரியான எருமையை பார்த்திராக வெளிநாட்டினர் பலரும், கோடிக் கணக்கில் பணம் கொடுத்து, இதை விலைக்கு வாங்க முன் வந்துள்ளனர். அதிகப்படியாக, வெளிநாட்டை சேர்ந்த ஒருவர், 10 கோடி ரூபாய் வரை விலை கொடுப்பதாக கூறியும், சோமல் தன் எருமையை விற்க மறுத்துவிட்டார். எருமையை தன் பிள்ளை போல் வளர்த்து வருவதாகக் கூறியுள்ள சோமல், தொடர்ந்து, பல போட்டிகளில் தன் எருமை மாட்டை பங்கேற்க செய்து, வெற்றி பெற திட்டமிட்டுள்ளார்
மொகாலி: பஞ்சாப் மாநில விவசாய மாநாட்டின், கண்காட்சியில் பங்கேற்ற விவசாயி ஒருவரின் எருமைக்கு, 10 கோடி ரூபாய் வரை பணம் கொடுப்பதாக வெளிநாட்டினர் ஒருவர் கூறியும், அந்த எருமையின் உரிமையாளர் விற்க மறுத்துவிட்டார்.

பஞ்சாபில், முதல்வர், பிரகாஷ் சிங் பாதல் தலைமையிலான, சிரோன்மணி அகாலிதளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி உள்ளது. இங்குள்ள, மொகாலியில், இரு தினங்களுக்கு முன், முதல்வர் பாதல், பஞ்சாப் விவசாய உச்சி மாநாட்டை துவக்கி வைத்தார். இதில், விவசாயம் சார்ந்த பல்வேறு கருத்தரங்குகள் மற்றும் கால்நடை வளர்ப்பு பற்றிய கண்காட்சியும் இடம் பெற்றுள்ளது. இங்கு, இந்தியா மட்டுமின்றி, வெளிநாடுகளைச் சேர்ந்த பலரும் வந்திருப்பதால், உள்நாட்டு விவசாயிகள், தங்கள் பயிர் வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு பற்றிய சாதனைகளை வெளிநாட்டு விவசாயிகளிடம் காண்பிப்பதில், அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். கண்காட்சியில், கபூர்தலா மாவட்டத்தை சேர்ந்த, லம்பர்தார் சோமல் என்பவர், தன், கொழு கொழு எருமையை பார்வையாளர்களிடம் காண்பிப்பதற்காக அழைத்து வந்தார். 5 அடி, 8 அங்குல உயரமும், 11 அடி நீளமும் உடைய இந்த எருமை, 1,200 கிலோ எடை கொண்டுள்ளது. தினசரி தீவனத்துடன், 10 லிட்டர் பால் குடிக்கும் பழக்கமுள்ள இந்த எருமையைக் கண்டு, உள்நாட்டினர் மட்டுமின்றி, வெளிநாட்டை சேர்ந்த பலரும் வியப்படைந்துள்ளனர். சிறந்த எருமை வளர்ப்பிற்கான மாநில, தேசிய அளவிலான, பல போட்டிகளில் தன் எருமையுடன் கலந்து கொண்ட சோமல், அனைத்திலும் முதல் பரிசை பெற்றுள்ளார்.

இதுவரை இந்த மாதிரியான எருமையை பார்த்திராக வெளிநாட்டினர் பலரும், கோடிக் கணக்கில் பணம் கொடுத்து, இதை விலைக்கு வாங்க முன் வந்துள்ளனர். அதிகப்படியாக, வெளிநாட்டை சேர்ந்த ஒருவர், 10 கோடி ரூபாய் வரை விலை கொடுப்பதாக கூறியும், சோமல் தன் எருமையை விற்க மறுத்துவிட்டார். எருமையை தன் பிள்ளை போல் வளர்த்து வருவதாகக் கூறியுள்ள சோமல், தொடர்ந்து, பல போட்டிகளில் தன் எருமை மாட்டை பங்கேற்க செய்து, வெற்றி பெற திட்டமிட்டுள்ளார்

கருத்துகள் இல்லை: