பசுந்தீவனத்தை உற்பத்தி செய்தால் கால்நடை வளர்ப்பில் ஏற்படும் செலவை கணிசமாக குறைக்கலாம்.
நன்மைகள்
- பால் உற்பத்தி செலவில் 70 சதவீதம் தீவனத்திற்கே செலவாகிறது.எனவே பால் உற்பத்தியில் அடர் தீவனத்தை குறைத்து பசுந்தீவனத்தை கொடுத்து தீவனச் செலவை 40 - 50 சதவீதமாக குறைக்கலாம்.
- உலர் தீவனங்களை விட இதில் புரதம் மற்றும் தாது உப்புகளின் அளவு அதிகமாக இருக்கிறது.
- பசுந்தீவனத்தை உலர் தீவனங்களுடன் சேர்த்து தரும்போது உலர்தீவனங்களின் உட்கொள்ளும் அளவு மற்றும் அவற்றின் செரிமானத் தனமை அதிகரிக்கிறது. வகைகள் -- தானிய வகை, புல் வகை, பயறுவகை, மர வகை.
தானிய வகை
- சோளம், கம்பு மற்றும் மக்காசோளம்
- அதிக மாவு சத்தும் , ஒரளவு புரதமும் கொண்டவை
புல் வகை
- கினியாப் புல், கம்பு நெப்பியர் ஒட்டுப்புல் ( கோ-1,கோ-2,
கோ-3 மற்றும் கோ-4), நீர்ப்புல் ( எருமைப் புல்), கொழுக்கட்டைபுல்,
ஈட்டிப்புல், மற்றும் மயில் கொண்டைப்புல். - அதிக மாவு சத்தும் , ஒரளவு புரதமும் கொண்டவை
பயறு வகை
- வேலிமசால், குதிரை மசால், முயல் மசால், தட்டைப் பயறு.
- அதிக புரதமும் சுண்ணாம்பு சத்தும் கொண்டவை.
- அகத்தி, சூபாபுல் ( சவுண்டல் ), கிளிரிச்சிடியா, கருவேல், வெல்வேல்,
ஆச்சா மற்றும் வேம்பு - நடுத்தரமான புரதம் மற்றும் தாது உப்புகள் கொண்டவை.
- பசும் புல் மற்றும் தானிய வகை தீவனப் பயிர்களை 3 பங்கும் பயறுவகை தீவனங்களை
1 பங்கும் கொடுக்க வேண்டும் . - இவ்வாறு அளிக்கும்போது கால்நடைகளுக்கு புரதம் மற்றும் மாவு சத்துகள்
சரியான விகிதத்தில் கிடைக்கும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக