யா அல்லாஹ்!!!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன்.என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக.

ஞாயிறு, 9 மார்ச், 2014

ஆடுகளுக்கு ஆண்மை நீக்கம் செய்தல்.,

  • விலங்குகளை அமைதிப்படுத்தவும், முறையற்ற இனப்பெருக்கத்தினைத் தடுக்கவும், இனப்பெருக்க உறுப்புகளின் மூலம் பரவும் நோய்களைத் தடுக்கவும் அவைகளுக்கு ஆண்மை நீக்கம் செய்யப்படுகிறது.
  • விலங்குகளின் உடல் எடையினை விரைவில்  அதிகரிக்கச்செய்யவும், அவற்றின் இறைச்சியின் தரத்தினை மேம்படுத்தவும் ஆண்மை நீக்கம் செய்யப்படுகிறது.
  • இளம் குட்டிகளில் அவற்றின் 2-3  மாத வயதில் அறுவை சிகிச்சை மூலம் அல்லது எலாஸ்டேட்டர் முறை மூலம் ஆண்மை நீக்கம் செய்யப்படுகிறது.
  • இளம் குட்டிகளின் ஒரு வயது பூர்த்தி அடைவதற்கு முன்பு மூடிய முறை ஆண்மை நீக்கம் பர்டிசோ ஆண்மை நீக்கக் கருவி கொண்டு ஆண்மை நீக்கம் செய்யப்படுகிறது.
  • பர்டிசோ ஆண்மை நீக்கக் கருவி மூலம் ஆண்மை நீக்கம் செய்யும்போது விரைகளுடன் இணைக்கப்பட்டிருக்கும் ஸ்பெர்மாட்டிக் குழாயினை நசுங்கி விடுவதால் விரைகளுக்கு செல்லும் இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு  விரைகள் சுருங்கி விந்துகளின் உற்பத்தி தடை செய்யப்படுகிறது.
  • குளிர் காலத்தில் மட்டுமே விலங்குகளுக்கு ஆண்மை நீக்கம் செய்யவேண்டும். மழைக்காலத்தில் கட்டாயம் ஆண்மை நீக்கம் செய்யக்கூடாது. ஏனெனில் மழைக்காலத்தில் ஈரப்பதம் இருப்பதால் ஆண்மை நீக்கம் செய்யப்பட்ட உடற்பகுதியில் ஈக்கள் உட்கார்ந்து அதனால் புண்கள் ஏற்பட வாய்ப்புண்டு.
  • ஆண்மை நீக்கம் செய்யப்பட்ட குட்டிகளை சில நாட்களுக்கு சுத்தமான, சவுகர்யமான கொட்டகைகளில் கட்டி பராமரிக்கவேண்டும்.
  • பர்டிசோ கருவி மூலம் ஆண்மை நீக்கம் செய்வது பாதுகாப்பான, விரைவான, கிருமிகளின் தாக்கம் குறைவாக ஏற்படக்கூடிய ஆண்மை நீக்க முறையாகும்.
  • எலாஸ்டேட்டர் மூலம் ஆண்மை நீக்கம் செய்வது கன்றுகளுக்கு அல்லது இதர விலங்குகளுக்கு வலியினை அதிகம் ஏற்படுத்தும் என்பதால் இம்முறை பொதுவாக  பின்பற்றப்படுவதில்லை.

ஆண்மை நீக்கம் செய்யும் முறைகள்
1. பர்டிசோ முறை
  • இம்முறை இரத்தம் வெளியேறாத ஆண்மை நீக்க முறையாகும். பர்டிசோ ஆண்மை நீக்கக் கருவி மூலம் ஆண்மை நீக்கம் செய்யும்போது விரைகளுடன் இணைக்கப்பட்டிருக்கும் ஸ்பெர்மாட்டிக் குழாயினை நசுக்கி விடுவதால் விரைகளுக்கு செல்லும் இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு  விரைகள் சுருங்கி விந்துகளின் உற்பத்தி தடை செய்யப்படுகிறது.
  • ஆண்மை நீக்கம் செய்வதற்கு முன்பாக முதலில் கால்நடைகளை அசையாமல் நன்றாகக் கட்ட வேண்டும்.
  • விரைப்பையின் ஒரு பக்கமாக விரைப்பைக்குச் செல்லும் குழாய்ப் பகுதியை நகர்த்தி, விரைகளுக்கு 3-5 செமீ மேற் பகுதியில் பர்டிசோ ஆண்மை நீக்கக் கருவி மூலம் ஸ்பெர்மாட்டிக் கார்ட் எனப்படும் விரைகளுக்குச் செல்லும் குழாயினை நசுக்கி விட வேண்டும்.
  • பிறகு முதலில் நசுக்கிய இடத்திற்கு ஒரு செமீ கீழ் மீண்டும் நசுக்க வேண்டும்.
  • இது ஒரு பாதுகாப்பான, விரைவான, நுண்கிருமிகளின் தாக்குதல் குறைவாக ஏற்படக்கூடிய ஒரு ஆண்மை நீக்க முறையாகும்.
2.திறந்த முறை அல்லது அறுவை சிகிச்சை மூலம் ஆண்மை நீக்கம் செய்தல்
  • இம்முறையில் விரைப்பையினை அறுவை சிகிச்சை மூலம் திறந்து, விரைகளை அகற்றிவிட்டு அறுவை சிகிச்சையால் ஏற்பட்ட புண்ணை ஆண்டிசெப்டிக் மருந்து தடவி சிகிச்சை அளிக்கப்படுகிறது.
  • இளங்காளைகளில் பொதுவாக ஸ்பெர்மாட்டிக் காரட் பகுதியினை முறுக்காமல் நறுக்கப்படுகிறது. ஆனால் வயது முதிர்ந்த இளங்காளைகளில் ஸ்பெர்மாட்டிக் கார்ட் பகுதியினை முதலில் நன்றாக முறுக்கி விட்டுப் பிறகு நறுக்கப்பட வேண்டும்.
3. எலாஸ்டேட்டர் அல்லது ரப்பர் வளையம் முறை
  • இம்முறையில் உறுதியான ரப்பர் வளையம் கன்றுகளின் இளம் வயதிலேயே ஸ்பெர்மாட்டிக் கார்ட் பகுதியைச் சுற்றிப் பொருத்தப்படுகிறது.
  • இந்த ரப்பர் வளையத்தால் ஏற்படும் தொடர்ந்த அழுத்தத்தின் காரணமாக விரைகள் அளவில் சிறியதாகி விடும். பிறகு ரப்பர் வளையம் கீழே விழுந்து விடும்.
  • எலாஸ்டேட்டர் மூலம் ஆண்மை நீக்கம் செய்வது கன்றுகளுக்கு அதிக வலியினை ஏற்படுத்தும் என்பதால் இம்முறை பொதுவாக  பின்பற்றப்படுவதில்லை.

பர்டிசோ ஆண்மை நீக்கக் கருவி
Chaff cutter
  • இந்தக் கருவியினைப் பயன்படுத்தி ஆட்டுக் கிடாய்களை ஆண்மை நீக்கம் செய்யலாம்.
  • இக்கருவியினைப் பயன்படுத்தி 3-4 வயதான வெள்ளாடு மற்றும் செம்மறியாட்டுக் குட்டிகளை ஆண்மை நீக்கம் செய்யலாம்.
                                                                     DSC_3651

கருத்துகள் இல்லை: