ஆடுகளில் நீலநாக்கு நோய் (Bluetongue Disease) - தடுக்கும் வழிமுறைகள்:
ஆடுகளில் நீலநாக்கு நோய் - தடுக்கும் வழிமுறைகள்: நீலநாக்கு நோய் எல்லா ஆடுகளுக்கும் வரும் என்றாலும், செம்மறி ஆடுகளில்தான் அதிக சேதத்தை ஏற்படுத்தும். நம்முடைய ஆட்டு மந்தையையும், பொருளாதாரத்தையும் காக்க வேண்டுமாயின், இந்நோய் குறித்த விளக்கங்களை தெரிந்துகொள்வது அவசியம்.
நோயின் அறிகுறிகள்: நோயுற்ற ஆடுகளில் உடல் வெப்பநிலை உயர்ந்து (காய்ச்சல்) அவை நடுக்கத்துடன் காணப் படும். உடல் வெப்பநிலை 105 முதல் 107 டிகிரி பாரன்ஹீட் வரை இருக்கும். மூக்கின் வழியாக தண்ணீர் போன்ற திரவம் ஒழுகும். இத்திரவமானது பின்னர் 2-3 தினங்களில் சளியாக மாறும். மூக்குச்சளி பின்னர் காய்ந்து கட்டியாகி நாசித் துவாரங்களை அடைத்துவிடுவதால் ஆடுகள் மூச்சுவிட சிரமப்படும். வாயின் உட்பகுதி, ஈறுகள், நாக்கு, நாசித் துவாரங்களின் உட்பகுதிகளில் புண்கள் காணப்படும். நாளடைவில் நாக்கு வீக்கம் கண்டு வாயின் வெளிப்பகுதியில் நீண்டு ""நீலநிறமாக'' மாறிவிடும். காதுமடல், கழுத்து, தாடை மற்றும் உதட்டுப்பகுதியில் வீக்கம் காணப்படும். கால்களில் குளம்புகளுக்கு சற்று மேல் கரோனட்டின் உட்பகுதியில் வீக்கம் ஏற்படுவதால் ஆடுகள் வலியுடன் நொண்டி நடக்கும். கழுத்துப்பகுதி பாதிக்கப் படுவதால் ஆடுகள் கழுத்தினை வளைத்து ஒரு பக்கமாக இழுத்து காணப்படும். பாதிக்கப்பட்ட ஆடுகளில் ரத்தக்கழிச்சலும் காணப்படும்.
நோயினால் ஏற்படும் இழப்பு: செம்மறி ஆடுகளில் பெரும் இழப்பை உண்டுபண்ணும் நோய்களில் நீலநாக்கு நோய் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. இதில் 20-70 சதவீதம் வரை இறப்பு நேரிட வாய்ப்பு உண்டு. நோய் கண்ட ஆடுகளில் தசைகள் பாதிக்கப்படுவதால் தசைகளின் தரம் முற்றிலுமாக குறைந்து ஆட்டு இறைச்சியின் எடை பெரிதும் குறைந்துவிடும். சினை ஆடுகளில் கருச்சிதைவு ஏற்படும். சில சமயம் பிறவி குறைபாடுகளு டன் குட்டி பிறப்பதால் அதுவே மறைமுக மாக பெரும் இழப்பை உண்டாக்கிவிடும்.
தடுப்பு முறைகள்: இந்நோய்க்கு தற்சமயம் ""தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்'' தடுப்பூசி மருந்தினை தயாரித்துள்ளது. முறையாக அணுகினால் தடுப்பூசியினை நாமும் பெற்று பயனடையலாம். மேலும், நோயைத் தவிர்க்க கீழ்க்கண்ட பராமரிப்பு முறைகளை பின்பற்ற வேண்டும்.
* நோய் கண்ட ஆட்டினை தனியே பிரித்து நன்கு பராமரிக்க வேண்டும். மேய்ச்சலுக்கு விடக்கூடாது.
* நோய்கண்ட ஆடுகள் தீவனம் உண்ணமுடியாமல் இருப்பதால் அவைகளுக்கு அரிசி, கம்பு, கேழ்வரகு ஆகியவற்றின் கஞ்சியினை நீர்ஆகாரம் போன்று கொடுக்க வேண்டும்.
* வாய், நாக்கு மற்றும் கால்களில் ஏற்பட்டுள்ள புண்களை பொட்டாசியம் பெர்மாங்கனேட் கரைசல் அல்லது சாதாரண உப்பு கரைசல் கொண்டு நன்றாக கழுவ வேண்டும்.
* 100 மி.லி. கிளிசரினில் 10 கிராம் போரிக் ஆசிட் பவுடரை கலக்கி வாயில் உள்ள புண்களுக்கு தடவ வேண்டும். காலில் உள்ள புண்களுக்கு போரிக் ஆசிட் மருந்தினை வேப்பெண்ணெயில் கலந்து தடவ வேண்டும்.
* ஊசி மூலம் இந்நோய்க் கிருமிகள் பரவும் தன்மை கொண்டிருப்பதால்ஊசி மூலம் மருந்து அளிப்பதை தவிர்க்க வேண்டும்.
* பூச்சிகள் மூலம் இந்நோய் பரவுவதால், பூச்சி மருந்தினைப் பயன்படுத்தி தடுக்க வேண்டும்.
* கால்நடை மருத்துவரின் ஆலோசனையின்படி சல்பா, டெட்ராசைக்ளின் போன்ற மருந்தினை மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கொடுக்க வேண்டும்.
(தகவல்: ரா.தங்கதுரை, வீ. தவசியப்பன், வெ.பழனிச்சாமி, வேளாண் அறிவியல் நிலையம், குன்றக்குடி-630 206)
-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக