யா அல்லாஹ்!!!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன்.என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக.

திங்கள், 20 ஜனவரி, 2014

தோட்டக்கலை மூலம் குடும்ப வருமானம் பெருகும்: வீரேந்திர கட்டாரியா

காரைக்கால்:  தோட்டக்கலை மூலம் குடும்ப வருமானம் பெகும் என்பதால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் இதற்கான ஆர்வத்தை வேளாண் கல்லூரி ஏற்படுத்த வேண்டும் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் வீரேந்திர கட்டாரியா அறிவுறுத்தியுள்ளார்.
கார்னிவெல் திருவிழாவை தொடங்கி வைக்க நேற்று முன்தினம் காரைக்கால் வந்த புதுச்சேரி துணைநிலை ஆளுநர் வீரேந்திர கட்டாரியா, காரைக்கால் கடற்கரை சாலையில் உள்ள விருந்தினர் மாளிகையில் இரவு ஓய்வெடுத்தார். நேற்று காலை, காரைக்கால் பேருந்து நிலையம், பிள்ளைத்தெருவாசல் சாலை அருகில், காரைக்கால் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டுவதற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தை துணைநிலை ஆளுநர் ஆய்வு செய்தார். இடத்தின் அளவு, மருத்துவமனை மற்றும் நர்சிங் கல்லூரிக்காக ஒதுக்கப்பட்டுள்ள இடம் குறித்து, ஆட்சியர் முத்தம்மா துணைநிலை ஆளுநரிடம் விளக்கி கூறினார்.
பின்னர், காரைக்கால் நெடுங்காடு செருமாவிளங்கை பகுதியில் உள்ள பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை துணைநிலை ஆளுநர் ஆய்வு செய்தார். அப்போது, துணைநிலை ஆளுநரை வரவேற்ற கல்லூரி முதல்வர் செல்லமுத்து, கல்லூரி கட்டிடம் மற்றும் மாணவர்கள் விடுதிகள் கட்டி 25 ஆண்டுகள் பழமையாகி விட்டதால், கட்டிடத்தை புதுப்பிக்க வேண்டும். கல்லூரி பேராசிரியர்கள், ஊழியர்களுக்கு சம்பளம் போடவும், பல ஊழியர்கள் நிரந்தரம் செய்யவும் வேண்டியுள்ளதால், கல்லூரிக்கு தேவையான நிதி பற்றாக்குறையை தீர்க்க வழிவகை செய்யவேண்டும். சி.ஆர் 1009 நெல்லுக்கு மாற்றாக புதிய நெல் ரகத்தை கண்டுபிடித்து, விவசாயிகள் மத்தியில் நல்ல வரவேற்பையும், மகச்சூலையும் பெற்றுள்ளது. கல்லூரியில் ஆராய்ச்சி வல்லுநர்கள் குறைவாக உள்ளனர். இருக்கின்ற பேராசிரியர்களை கொண்டு ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு வருகிறோம். எனவே தேவையான வல்லுநர்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக்கொண்டார்.
அதற்கு பதில் அளித்த துணை நிலை ஆளுநர், கல்லூரி நிதி பற்றாக்குறையை தீர்க்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். தோட்டக்கலை மூலம் குடும்ப வருமானம் பெருகும் என்பதால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் இதற்கான ஆர்வத்தை வேளாண் கல்லூரி தீவிரமாக ஏற்படுத்தவேண்டும். மிக விரைவில் கல்லூரி வேளாண் பல்கலைக்கழமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். பின்னர், அங்கிருந்து புதுச்சேரி புறப்பட்டு சென்றார். மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர் மோனிகா பரத்வாஜ் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தார்.

கருத்துகள் இல்லை: