யா அல்லாஹ்!!!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன்.என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக.

வியாழன், 23 ஜனவரி, 2014

பயிற்சிகள்

1. கறவை மாட்டுப்பண்ணையம், 2.செம்மறியாடு வளர்ப்பு, 3. வெள்ளாடு வளர்ப்பு, 4. பசுந்தீவனம் மற்றும் விதை உற்பத்தி, 5. உறைமோர் மூலம் பால் பொருட்கள் தயாரித்தல், 6. கால்நடைப் பண்ணைக் கழிவினைப் பயன்படுத்துதல், 7. முயல் வளர்ப்பு, 8. வெண்பன்றி வளர்ப்பு, 9. ஜப்பானியக் காடை வளர்ப்பு, 10. நாட்டுக்கோழி வளர்ப்பு, 11. ஈமு கோழி வளர்ப்பு, 12. நன்னீர் மீன் வளர்ப்பு, 13. கடல்பாசி உற்பத்தி, 14. அலங்கார மீன் வளர்த்தல் மற்றும் இனப்பெருக்கம்.
பயிற்சி காலம்: ஒரு மாதம். பயிற்சியில் சேர விரும்புவோர் தங்கள் இருப்பிடத்திற்கு அருகிலுள்ள பல்கலைக்கழகத்தின் கல்லூரிகள்/ மையங்களில் பயிற்சியை மேற்கொள்ளலாம். செயல்திறன் மேம்பாட்டு மற்றும் சுயவேலைவாய்ப்பு பயிற்சிகளில் ஆண்டு முழுவதும் சேர்ந்து பயன்பெறலாம்.
விண்ணப்பப்படிவம் மற்றும் விவரக் குறிப்பேட்டினைப் பெற விரும்புவோர், "தொலைநிலைக் கல்வி இயக்குனர், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், மாதவரம் பால்பண்ணை வளாகம், சென்னை-600 051. போன்: 044-2555 1411, வலை:www.tanuvas.ac.in. என்ற முகவரிக்குப் பயில விரும்பும் பயிற்சியைக் குறிப்பிட்டு, வேண்டுகோள் கடிதம் அனுப்பி பெற்றுக்கொள்ளலாம். அத்துடன் ரூ.20/-க்கான அஞ்சல் தலை ஒட்டிய சுய விலாசமிட்ட (30 x 25 செ.மீ.) உறையை இணைத்து அனுப்பிவைக்க வேண்டுகிறோம் அல்லது விண்ணப்பப் படிவம் மற்றும் விவரக் குறிப்பேட்டினைப் பல்கலைக்கழக இணையதளம் www.tanuvas.ac.in. மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பயிற்சிகள் களப் பயிற்சி அடிப்படையில் வழங்கப்படும்.
எம்.ஞானசேகர், தொழில் மற்றும் விவசாய ஆலோசகர், 97503 33829.

கருத்துகள் இல்லை: