பதிவு செய்த நாள் - பெப்ரவரி 07, 2014, 2:02:09 PM
மாற்றம் செய்த நாள் - பெப்ரவரி 08, 2014, 9:32:36 AM
உழவுக்கு உயிரூட்டு... உழவர்க்கு வாழ்வூட்டு... என்ற முழக்கத்துடன் புதிய தலைமுறையின் வேளாண் கண்காட்சி கோவையில் நடைபெற்று வருகிறது.
புதிய தலைமுறை சார்பில் இரண்டாம் ஆண்டாக நடத்தப்படும் இந்த கண்காட்சி, கோவையில் உள்ள வ.உ.சி. பூங்கா மைதானத்தில் பிப்ரவரி 7ந்தேதி(இன்று) தொடங்கி 9-ந்தேதி வரையிலும் நடைபெறுகிறது.
கண்காட்சியில், விவசாயப்பிரச்னைகளுக்கு தீர்வுகள், அதிக விளைச்சல் பெற ஆலோசனைகள், நிதி உதவிகள் குறித்த வழிகாட்டுதல்கள், மானியங்கள் பற்றிய தகவல்கள், மதிப்பு கூட்டுதல், விளைபொருட்களை சந்தைப்படுத்துதல், இயற்கை விவசாயம், குறைந்த செலவில் அதிக வருவாய் ஈட்டும் வழிமுறைகள் ஆகியவற்றுக்கு விளக்கம் அளிக்கப்படுகிறது.
அரங்குகளில் நவீன வேளாண் கருவிகள், வேளாண் சார்ந்த புதிய கண்டுபிடிப்புகள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
விவசாயிகளுக்கு மட்டுமின்றி, இளைஞர்களுக்கு வேளாண்மையில் ஆர்வத்தை ஏற்படுத்துவது, கால்நடைகள் வளர்ப்பவர்கள், இயற்கை ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் வல்லுநர்கள் என அனைத்து தரப்பினருக்கும் பயனளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேப்போன்று, திருச்சியில் வரும் பிப்ரவரி மாதம் 21ந்தேதி தொடங்கி 23ந்தேதி வரையில் வேளாண் கண்காட்சி நடைபெறுகிறது.
கண்காட்சி தொடர்பான தகவலுக்கு: www.puthiyathalaimurai.tv/events/2014/index.htm
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக