உலகில் காணப்படும் பல்வேறு பசு இனங்களில் தலைசிறந்த இனமாகவும் அதிக கறவை மற்றும் அனைத்து விதமான சுற்றுச் சூழலையும் சமாளித்து வாழக்கூடிய சக்தி கொண்ட இனமாக அடையாளம் காணப்பட்டது தான் ஜெர்சி பசு. உலகின் பெருவாரியான நாடுகளில் இன்று ஜெர்சி கலப்பின பசுவே பண்ணையாளர்களின் சிறந்த தேர்வாக இருக்கிறது. பால் பண்ணை அமைக்க திட்டமிடுபவர்கள் கலப்பின ஜெர்சி இன பசுக்களை வளர்க்கலாம்.
உடலமைப்பு மற்றும் பொது குணங்கள்
நேர்கோடான முதுகு, நேர்த்தியான தலை அமைப்பும் உறுதியான சிறந்த மடியுடன் அழகிய தோற்றம் கொண்டது ஜெர்சி. உடல் எடை 400 முதல் 820 கிலோ வரை எடை கொண்டது. இளஞ்சிவலை அல்லது தேன்சிவலை நிறத்தில் காணப்படும் இந்த பசுவினம் சில நேரங்களில் உடலில் வெள்ளை நிறப்பட்டைகளையும் கொண்டிருக்கும்.
கால் குளம்புகள் கருப்பு நிறத்தில் உறுதியுடன் காணப்படுகிறது. உறுதியான குளம்புகள் உள்ளதால் கால் மற்றும் குளம்பு தொடர்புடைய நோய்கள் ஜெர்சி பசுவினத்திற்கு குறைவாகவே ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. ஜெர்சியின் வால் முடி கருப்பு நிறத்தில் இருக்கும். வெப்ப மண்டல பகுதிகள் மற்றும் குளிர்மண்டல பகுதிகள் இரண்டிலும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு வாழும். அமைதியான குணமுள்ளது.
இந்த பசு சிறந்த மேய்ச்சல் திறன் கொண்டது. குறைந்த பராமரிப்பு செலவில் அதிக அளவு பால் தரும் இனமாகும். இனவிருத்தி திறனும் அதிகமுள்ளது. கன்று ஈனும் போது ஏற்படும் பிரச்சினைகளும் குறைவு. ஜெர்சி பசுவின் முதல் கன்று பிறப்பு 26 முதல் 30 மாதத்தில் ஏற்படுகிறது. இரண்டு கன்றுகளுக்கு இடைப்பட்ட கன்று இடைவெளி காலம் 12 முதல் 13 மாதமாக உள்ளது. சிறந்த சத்துக்களை கொண்ட பாலை இது தருவதால் பன்னீர், ஜஸ்கிரீம், தயிர் போன்ற மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களை தயாரிக்கலாம்.
அடையாளம் காணுதல்
அதிக கறவை தரும் பசுக்களை சில அடையாளங்களை வைத்து அறிந்து வாங்கி விடலாம்.
ஜெர்சி பசுக்களுக்கு எடுத்துரைக்கப்பட்ட உடலின் நிறம், வெளிப்புற தோற்ற அமைப்பு போன்றவற்றை கவனித்து வாங்க வேண்டும்.
நாள் முழுவதும் தீவனம் தின்று நன்கு செரிமானமாகும் தன்மை கொண்ட கலப்பின ஜெர்சி பசுக்களை தேர்வு செய்ய வேண்டும். பண்ணையில் வளர்க்கப்படும் மாடுகளை வாங்கும் போது அந்த பண்ணையில் சராசரி பால் உற்பத்தியை விட அதிகம் பால் உற்பத்தி செய்யும் தலை ஈத்து, இரண்டாம் ஈத்து பசுக்களையே தேர்வு செய்ய வேண்டும்.
ஆந்த்ராக்ஸ் நோய், ரத்தநீர் நோய், தைலேரியா நோய், காய்ச்சல் நோய் அதிகம் ஏற்படும் பகுதிகளில் இருந்து பால் மாடுகளை வாங்க கூடாது.
கானை நோயினால் அதிகம் பாதிக்கப்பட்டு, உடல் முழுவதும் அதிக ரோமம் வளர்ச்சியுள்ள பசுக்களை தேர்வு செய்யக் கூடாது.
அடிக்கடி மாடுகளில் குறைப்பிரசவம், இளங்கன்று இறப்பு ஏற்படும் பகுதியில் கருச்சிதைவு நோய் பாதிப்பு இருக்கலாம். எனவே இத்தகைய பாதிப்புகள் இல்லாத கலப்பின ஜெர்சி பசுக்களை தேர்வு செய்ய வேண்டும். பால் மாட்டின் தலை ஒரு பங்காகவும், உடல் ஒரு பகுதி ஒன்பது பங்காகவும் கொண்ட உடல் அமைப்பில் உள்ள பால் மாட்டினை தேர்வு செய்ய வேண்டும்.
பால் மாட்டின் முதுகுப் பகுதி தலை முதல் வால் வரை ஒரே நேர்கோடாக இருக்க வேண்டும். முதுகுப் பகுதியில் அதிக வளைவுகள் உள்ள கலப்பின ஜெர்சி பசுக்களை தேர்வு செய்ய கூடாது.
கால்கள் திடகாத்திரமாக நன்கு பொருந்திய நிலையில் ஒரே நேர்கோட்டில் இருக்குமாறு உள்ள மாடுகளை தேர்வு செய்ய வேண்டும்.
பால் மாட்டின் குளம்பு இறுகிய தன்மையுடன் குளம்பின் உட்பகுதி தேய்மானமின்றி பள்ளம் மேடுகள் இல்லாமல் இருக்க வேண்டும்.
பால்மடி முழுவதும் ஒரே சீரான பஞ்சு போன்று தடவி பார்க்கும் போது காணப்பட வேண்டும். பால் காம்பு ஒவ்வொன்றும் ஒரு கைப்பிடிக்குள் அடங்கும் அளவுடன் நான்கு காம்புகளும் இடைவெளியில் இருக்க வேண்டும்.
பால் கறந்து பரிசோதனை செய்யும் போது பால் மாடு அமைதியாக இருக்க வேண்டும். பால்காம்புகள் நான்கிலும் ஒரே சீரான வேகத்துடன் ஒரே திசையில் பால் வெளியேற வேண்டும். தினமும் பசுவின் பால் உற்பத்தியை நோட்டில் பதிந்து வைத்திருந்தால் கடந்த ஈற்றில் உற்பத்தி செய்த பாலின் அளவை பால் நோட்டை பார்த்து அறிந்து கொள்ள வேண்டும்.
டாக்டர்.எம்.எஸ்.சரவணன், அரசு உதவி கால்நடை மருத்துவர், மதுரை

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக