தீவனப் பயிர்கள் விதை நேர்த்தி
- வேலிமசால், முயல்மசால் மற்றும் சூபாபுல் விதைகளை 80 செ.கி. வெந்நீரில் 5 நிமிடம் இட்டு பின்னர் விதைப்பு செய்தால் முளைப்புத்திறன் அதிகமாக இருக்கும்.
- புதிய கொழுக்கட்டைப் புல் விதைகள் விதை உறக்கத்தில் இருப்பதால் விதைகளை 1 % பொட்டாசியம் நைட்ரேட் கரைசலில் 2 நாட்களுக்கு ஊற வைத்து பின் விதைக்கவும்
தீவன தட்டை பயிறு - Fodder Cowpea
- புரத சத்து அதிகமுள்ள தீவன பயிர்
- 30 - 60 நாட்களில் அறுவடை செய்யலாம்.
- இலைகள் உதிரும் அளவு மிகவும் குறைவு.
- உலர் தீவனம் தயாரிக்க உகந்தது.
- ஏக்கருக்கு 4 கிலோ விதை போதுமானது
தீவனப் பயிர்கள் - மண்ணின் தன்மைக்கு ஏற்ற வகைகள்
களர் மற்றும் உவர் நிலம்
- கினியா புல்
- வேலி மசால்
- நீர்ப்புல்
- தட்டைப் பயறு
அமில நிலம்
- முயல் மசால்
- தட்டைப் பயறு
- கினியாப் புல்
தரிசு நிலம் மற்றும் வரப்பு ஒரங்கள்
- சூபாபுல்
- அகத்தி
- கிளைரிசிடியா
தண்ணீர் தேங்கிய நிலம்
- நீர்ப் புல்
நிழலில் வளரக்கூடியவை
- கினியாப் புல்
- டெஸ்மோடியம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக