யா அல்லாஹ்!!!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன்.என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக.

ஞாயிறு, 16 மார்ச், 2014

பசுந்தீவன உற்பத்தி

பசுந்தீவனத்தை உற்பத்தி செய்தால் கால்நடை வளர்ப்பில் ஏற்படும் செலவை கணிசமாக குறைக்கலாம். 


நன்மைகள்:
பால் உற்பத்தி செலவில் 70 சதவீதம் தீவனத்திற்கே செலவாகிறது.எனவே பால் உற்பத்தியில் அடர் தீவனத்தை குறைத்து பசுந்தீவனத்தை கொடுத்து தீவனச் செலவை 40 - 50 சதவீதமாக குறைக்கலாம்.

உலர் தீவனங்களை விட இதில் புரதம் மற்றும் தாது உப்புகளின் அளவு அதிகமாக இருக்கிறது. 

பசுந்தீவனத்தை உலர் தீவனங்களுடன் சேர்த்து தரும்போது உலர்தீவனங்களின் உட்கொள்ளும் அளவு மற்றும் அவற்றின் செரிமானத் தனமை அதிகரிக்கிறது. வகைகள் -- தானிய வகை, புல் வகை, பயறுவகை, மர வகை.


தானிய வகை:

சோளம், கம்பு மற்றும் மக்காசோளம்
அதிக மாவு சத்தும் , ஒரளவு புரதமும் கொண்டவை

புல் வகை:

கினியாப் புல், கம்பு நெப்பியர் ஒட்டுப்புல் ( கோ-1,கோ-2,
கோ-3 மற்றும் கோ-4), நீர்ப்புல் ( எருமைப் புல்), கொழுக்கட்டைபுல்,
ஈட்டிப்புல், மற்றும் மயில் கொண்டைப்புல்.

அதிக மாவு சத்தும் , ஒரளவு புரதமும் கொண்டவை
பயறு வகை:

வேலிமசால், குதிரை மசால், முயல் மசால், தட்டைப் பயறு.

அதிக புரதமும் சுண்ணாம்பு சத்தும் கொண்டவை.

மர வகை:

அகத்தி, சூபாபுல் ( சவுண்டல் ), கிளிரிச்சிடியா, கருவேல், வெல்வேல்,
ஆச்சா மற்றும் வேம்பு

நடுத்தரமான புரதம் மற்றும் தாது உப்புகள் கொண்டவை.

அளிக்கும் முறை:

பசும் புல் மற்றும் தானிய வகை தீவனப் பயிர்களை 3 பங்கும் பயறுவகை தீவனங்களை 1 பங்கும் கொடுக்க வேண்டும் .

இவ்வாறு அளிக்கும்போது கால்நடைகளுக்கு புரதம் மற்றும் மாவு சத்துகள்
சரியான விகிதத்தில் கிடைக்கும்.,

கருத்துகள் இல்லை: