பாற்பசு வளர்ப்பு
- கன்றுகளை வளர்த்தல்
பாற்பசு முகாமைத்துவத்தில் கன்றுகளை வளர்த்தல் மிகவும் முக்கியமானதொரு அங்கமாகும். கற்பப் பசுக்களிற்கு உணவுகளை வழங்கல், ஒழுங்காக முகாமைத்துவம் செய்வது கன்றுகளின் பிறப்பு நிறையை (வளர்ந்த பசுக்களின் நிறையில் 6 – 8 %) சிறந்த நிலைமையில் பராமரிப்பதற்கு உதவும்.
புதிதாக பிறந்த குட்டிகளை பிறப்பின் போது பராமரித்தல்
- கன்றின் மூக்கு, கண், காது என்னபனவற்றைச் சூழ ஒட்டியுள்ள சளியத்தையும், மென்சவ்வுகளையும் அகற்றவும்.
- குட்டியின் பின்னங்கால்களை உயாத்துவதன் மூலம் சுவாசத் தொகுதியில் அடைபட்டுள்ள அனைத்து பொருட்களையும் அகற்ற முடியும். இதனால் குட்டி இலகுவாக சுவாசிக்க முடியும்.
- குட்டியின் தொப்புளில் வயிற்றிலிருந்து ஒரு அங்குல தூரத்தில் முடிச்சொன்றை இட்டு, அயடின் கரைசல் (நோய்க் கிருமிகளை அழிக்கும்), வேப்பெண்ணெய் (ஈக்களை விரட்ட) என்பனவற்றை பூசவும்
- பசு கன்றினை நக்குவதற்கு இடமளிக்கவும்.
- கடம்புப் பாலை வழங்கல் (சீம்பால்)
பிரசவத்திலிருந்து முதல் நான்கு நாட்களிற்குள் பசுவினால் சுரக்கப்படும் பால் கடம்புப் பால் எனப்படும். இது நோய் எதிர்ப்புத் தன்மையை அதிகரிக்கும். அதிகளவான போசணைகளைக் கொண்டுள்ளதோடு, உணவுக் கால்வாயைச் சுத்தம் செய்யும்.
இயற்கையான பாலை வழங்கல்
இது குட்டிக்கு போசணைகளை வழங்குவதற்கான இலகுவானதொரு வழியாகும். எந்தவொரு வினைத்திறனான தூண்டலின் கீழும் பாலைக் கறப்பவரினால்75 – 80 % மான பாலை மாத்திரமே கறக்க முடியும். உற்பத்தி செய்யப்படும் மீதிப் பாலை குட்டியினால் மாத்திரம் பெறமுடியும். பொதுவான முறையில் கன்றைப் பராமரிக்கும் போது அதற்கு குறிப்பிட்ட சில நாட்களிற்கு மாத்திரமே தாய்ப்பால் வழங்கப்படும். இது மட்டுப்படுத்தப்பட்ட பால் வழங்கல் எனப்படும். இது பாலை சுரப்பதற்கும், பாலைக் கறப்பதற்கும் தூண்டப்படும். அத்துடன் குட்டியின் வளர்ச்சியைத் தூண்டுவதோடு, மடியழற்சி நோய் ஏற்படுவதைத் தடுப்பதற்கும் உதவும்.
குட்டிகளிற்கு பண்படுத்தாக உணவுகளையும், செறியுணவுகளையும் வழங்கல்
குட்டிகளிற்கு பண்படுத்தாத உணவுகளையும், செறியுணவுகளையும் வழங்குவதன் நோக்கம் வழங்கும் பாலின் அளவைக் குறைத்து, அசையூன் வயிற்றின் வளர்ச்சியை விரைவுபடுத்தி, விரைவாக பாலை மறக்கடிக்கச் செய்வதாகும். தரமான செறியுணவுகளையும், உலர் புற்களையும் 10 நாட்களிலேயே அறிமுகப்படுத்த வேண்டும். குட்டியின் மூக்கு, வாய் என்பனவற்றில் செறியுணவுகளைப் பூசி விடுவதன் மூலம் செறியுணவிற்குக் குட்டிகளைப் பழக்கப்படுத்தலாம்.
குட்டிகளிற்கு பண்படுத்தாத உணவுகளையும், செறியுணவுகளையும் வழங்குவதன் நோக்கம் வழங்கும் பாலின் அளவைக் குறைத்து, அசையூன் வயிற்றின் வளர்ச்சியை விரைவுபடுத்தி, விரைவாக பாலை மறக்கடிக்கச் செய்வதாகும். தரமான செறியுணவுகளையும், உலர் புற்களையும் 10 நாட்களிலேயே அறிமுகப்படுத்த வேண்டும். குட்டியின் மூக்கு, வாய் என்பனவற்றில் செறியுணவுகளைப் பூசி விடுவதன் மூலம் செறியுணவிற்குக் குட்டிகளைப் பழக்கப்படுத்தலாம்.
செறியுணவாக “Premix calf starter ration” அல்லது தேங்காய் பிண்ணாக்கு, அரிசித் தவிடு என்பனவற்றை 1:1 அல்லது 2:1 என்னும் விகிதத்தில் கலந்து பயன்படுத்தலாம்.
- குட்டிகள் போதியளவான வன் உணவுகளையும், செறியுணவுகளையும் உண்பதற்கு ஆர்வத்தையேற்படுத்தவும்.
- வன் தீவனங்களையும், செறியுணவுகளையும் குட்டி உண்ணத் தொடங்குமாயின் 4 வது வாரத்திலிருந்து பால் வழங்குவதைத் தடுக்கலாம். வன உணவுகளையும், செறியுணவுகளையும் எப்போதும் தொழுவத்தில் வைக்கவும்.
- கனிப்பொருள் கலவை அல்லது நீராவியில் அவித்த விதைத் தூள்களையும் உணவிற்காக வைக்கவும். எப்போதும் குடிப்பதற்கு சுத்தமான நீரை வைக்கவும்.
பாலை மறக்கடிக்கச் செய்வதற்கு உகந்த காலம்
- குட்டியின் வயது 8 வாரங்களாகியதும் பாலை மறக்கடிக்கச் செய்யலாம். குட்டிகளின் உடல் வளர்ச்சியடைந்த விலங்குகளின் நிறையில் 10 – 12 % இனை அடைந்ததும் அல்லது அவற்றின் பிறப்பு நிறையைப் போன்று இரு மடங்காகியதும் பாலை மறக்கடிக்கச் செய்யலாம்.
- குட்டிக்குப் போதியளவான செறியுணவையும் (0.5kg), உலர் புற்களையும் (0.5kg) உண்ணக் கூடிய சந்தர்ப்பத்தில்.
- இனங் காணல்: காதில் அடையாள சின்னங்களைத் தொங்க விடல், காதில் சிறு பகுதியை வெட்டல், பச்சைக் குத்தல்
- கொம்பு அகற்றல்: சூடாக்கிய இரும்பை அல்லது கோஸ்ட்றிக் பொட்டாசுவைப் (Caustic potash) பயன்படுத்தலாம்.
Caustic potash: இதனை முதலாவது வாரத்திலேயே மேற்கொள்ள வேண்டும். 2.5 சதம் மீற்றர் விட்டமுள்ள பிரதேசத்திலுள்ள மயிர்களை அகற்றிய பின்னர் கொம்பு முளைக்கும் இடத்தைச் சுற்றி கிறீசைப் பூசவும். இதனால் Caustic potash கண்ணில் படுவதைத் தடுக்கலாம். பரிகரனத்தின் பின்னர் குட்டியை ஒரு நாள் வரை தனியாக வைத்திருக்கவும்.
பெண் குட்டிகளைப்பராமரித்தல்
பெண் கன்றுக் குட்டிகள் நாரி என அழைக்கப்படும். உணவு, ஆரோக்கியம், வளர்ச்சி என்பனவற்றில் பினவரும் தேவைகளைப் பூர்த்தி செய்தல் வேண்டும்.
- உயர்ந்தளவான வினைத்திறன்.
- 12 மாதங்களில் பூப்படைதல்
- 15 – 20 மாதங்களில் கர்ப்பம் தரித்தல்.
- 24 – 30 மாதங்களில் பிரசவித்தலும், திருப்திகரமான பால் உற்பத்தியும்.
- பிரசவத்தின் பின்னர் 70 நாட்களிலிருந்து 80 நாட்களுக்கிடையில் மீண்டும் வேட்கை அறிகுறிகளைக் காட்டலு்,மீண்டும் காப்பம் தரித்தலும்.
வேட்கை அறிகுறிகள்
பாற்பசுக்களைப் பராமரிப்பில் வெற்றி பெறுவதற்கு மிகவும் முக்கியமானதும், ஒரு விவசாயி அடிக்கடி தவறவிடும் ஒரு அம்சமாக வேட்கை அறிகுறிகளையும், இனப்பெருக்கத்தையும் குறிப்பிடலாம். இதனை இனங்காண முடியாத போது முதலாவது குட்டியைப் பெறுவதற்கு அதிக காலம் எடுக்கலாம் அல்லது குட்டிகள் பிறப்பதற்கிடையிலான இடைவெளி அதிகரிக்கலாம். சராசரி பசுவொன்றின் வேட்கை அறிகுறிகள் வருமாறு:
- ஏனைய விலங்குகளை தம்மீது தாவ அனுமதித்தல்.
- ஏனைய விலங்குகளின் மீது தாவல்.
- பெண் குறி சிவப்பு நிறமாகல், வீங்கல், ஈரமாகக் காணப்படல்.
- பெண் குறியிலிருந்து எப்போதும் சளியம் வடிதல்.
- குழப்பமடைந்து காணப்படல்.
- அடிக்கடி கத்தல் (bellowing).
- அடிக்கடி சிறுநீர் கழித்தல்.
- வாலை உயர்த்தல் - நாம்பனிகளிற்குப் பொருத்தமான ஒரு அறிகுறி.
- பால் தரும் விலங்குகளின் பால் உற்பத்தி குறைதல்.
- உணவில் விருப்பமின்மை.
கன்னிக் குட்டிகளை இனப்பெருக்கம் செய்தல்
மண்டல நாடுகளில் பெண் கன்றுகளில் வேட்கை அறிகுறிகள் மிகவும் குறுகிய காலத்திற்கே அதாவது 12 மணித்தியாலங்களிற்கே காணப்படும். எனவே எப்போதும் மிகவும் அவதானமாயிருக்க வேண்டும். காலை நேரத்தில் வேட்கை அறிகுறிகளை மிகவும் இலகுவாக அவதானிக்க முடியும். இதுவே வேட்கை அறிகுறிகளை அவதானிப்பதற்குச் சிறந்த காலமாகும். காலையில் வேட்கை அறிகுறிகளை அவதானித்தால் மாலை வேளையில் அவ்விலங்கை இனச்சோக்கையில் ஈடுபடுத்த வேண்டும். வேட்கை அறிகுறிகளை அவதானித்து முதல் 8 மணித்தியாலங்களில் சினைப்படுத்த வேண்டும். மாலை நேரத்தில் வேட்கை அறிகுறிகளை அவதானித்தால் காலையில் அதனை சினைப்படுத்த வேண்டும். இயற்கையான முறையில் சினைப்படுத்தும் போது வேட்கை அறிகுறிகளை அவதானித்து சிறிது நேரத்திலேயே அதனை காளையின் அருகே கொண்டு செல்ல வேண்டும்.
உரிய உடல் பருமனை அடைய முன்னரே கன்னிப் பசுக்கள் வேட்கை அறிகுறிகளைக் காட்டத் தொடங்கும். சில சந்தர்ப்பங்களில் அவற்றின் வயது ஒரு வருடங்களாகுவதற்கு முன்னரே இனப்பெருக்கம் செய்தால் பிரசவத்தின் போது பிரச்சினைகள் ஏற்படலாம். கற்பம் தரிப்பதால் வளாச்சி குன்றும் அல்லது முற்றாகவே நின்று விடும். இல்லாவிடில் முதலாவது தடவை கறக்கும் பாலின் அளவு மிகவும் குறையலாம். எனவே நாம்பனின் வயது 18 மாதங்களாகி, போதிய உடற் பருமனை அடைந்த பின்னர், முழுமையான வளாச்சிப் பருமனில் 70 %ஐ அடைந்த பின்னர் இனப்பெருக்கம் செய்தல் மிகவும் உகந்ததாகும்.
சினைப்படுத்தப்பட்ட பசுக்களை பராமரித்தல்
சினைப்படுத்தலை அமைதியான, சுதந்திரமான இடத்தில் மேற்கொள்ள வேண்டும். விலங்கு பாய்ந்து செல்ல முடியாதவாறு அதனைக் கட்டி வைத்தல் வேண்டும். சினைப்படுத்தலிற்கு முன்னரும், பின்னரும் உணவையும், நீரையும் வழங்கி நிழல் உள்ள இடத்தில் விடவும். சிறந்த முறையில் பராமரிப்பதன் மூலம் உயர்ந்த சினைப்படுத்தலைப் பெற்றுக்கொள்ள முடியும்.
கற்பப் பசுக்கள்
பசுக்களின் காப்பக் காலம் 280 நாட்களாகும். இவை பசுக்களின் வாக்கத்திற்கேற்ப வேறுபடும். பிரசவத்திற்கு 2 மாதங்களிற்கு முன்னர் பால் கறப்பதை நிறுத்த வேண்டும். பால் கறப்பது நிறுத்தப்பட்ட காலத்தில் அதன் உடல் நிறை குறிப்பிட்டளவு அதிகரிக்கும்.
மாட்டுத் தொழுவம்
இலங்கையின் நிலைமைகளிற்கு அமைய பாற்பசுக்களிற்குப் பொருத்தமான பல்வேறு விதமான தொழுவங்கள் முதலாம், இரண்டாம் படங்களில் தரப்பட்டுள்ளன. சிறியளவில் பாற்பசுக்களை வளர்க்கும் விவசாயிகள் அவற்றிற்கு வழங்கும் தொழுவத்தின் இடவசதி போதுமானதல்ல (கூரை, காற்றோட்டம், தளம், இடவசதி, நீர் வடிந்தோடல், சாணத்தை அகற்றல்). தீவனத் தொட்டிகள் ஒழுங்காக இல்லாமையினால் தீவனங்கள் வீணாகும். இங்கு தரப்பட்டுள்ள தொழுவங்கள் ஐரோப்பிய வகையைச் சேர்ந்தனவாகும். எனவே இலங்கையின் நிலைமைக்கு ஏற்ப அவற்றைத் தெரிவுசெய்ய வேண்டும் அல்லது சிறிய மாற்றங்களைச் செய்வது அவசியமாகும். தொழுவங்களை அமைக்கும் போது மேற்கொள்ள வேண்டிய பல்வேறு அம்சங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
- விலங்குகள் நிற்பதற்குப் போதியளவான இடைவெளி
- போதியளவான சுத்தமான நீரை வழங்கல்
- தீவனத் தொட்டிகளை வைப்பதற்கு போதியளவான இடவசதி
- நிழல் போதியளவில் காப்படல் (உணவு வழங்கும் போதும் / புற்களை மேயும் போதும்)
- கட்டி வளாக்கும் தொழுவங்கள்
- திறந்த தொழுவங்கள்
விலங்குகளை கட்டி வளர்க்கும் தொழுவங்கள்
இம்முறையில் அனைத்து பசுக்களும் தூனொன்றில் கட்டி வைக்கப்படுவதோடு, தீவனங்கள் அவற்றிற்கு முன்னால் உள்ள பாத்திரத்தில் வைக்கப்படும். பாலைக் கறக்கும் போது தனித்தனியாக அவ்விடங்களிலேயே மேற்கொள்வதோடு, சாணம் கான்களின் மூலம் சேகரிக்கப்படும்.
இம்முறையில் அனைத்து பசுக்களும் தூனொன்றில் கட்டி வைக்கப்படுவதோடு, தீவனங்கள் அவற்றிற்கு முன்னால் உள்ள பாத்திரத்தில் வைக்கப்படும். பாலைக் கறக்கும் போது தனித்தனியாக அவ்விடங்களிலேயே மேற்கொள்வதோடு, சாணம் கான்களின் மூலம் சேகரிக்கப்படும்.
இம்முறையிலுள்ள பிரதிகூலங்களாவன
- விலங்குகளை நீண்ட காலம் வைத்திருக்கும் போது குழம்புகளில் பிரச்சினைகள் ஏற்படலாம். அவற்றிற்கு போதியளவான இட வசதி இன்மையால் கால்கள் வீங்கும்.
- சில நடவடிக்கைளிற்கு தடை ஏற்படலாம் (வேட்கை அறிகுறிகள்).
- மற்றைய விலங்குகளினால் முளைக் காம்புகள் மிதிபடலாம் (அருகிலுள்ள விலங்குகள் அசைவதனால் மிதிபடலாம்).
தொழுவங்களை ஒரு வரிசையில் அல்லது இரு வரிசைகளில் விலங்குகளைக் கட்டி வைக்கக் கூடியவாறு அமைக்கலாம். 2 வரிசைகளில் பசுக்களைக் கட்டும் போது (1) முகத்திற்கு முகம் பார்க்கக் கூடியவாறு (உணவை மத்தியில் வைக்கக் கூடியவாறு), (2) தொழுவத்திலிருந்து வெளியே தெரியக்கூடியவாறு (வாலிற்கு வால் முறை) பாலைக் கறப்பதற்கு மத்திய பாகமும், உணவு இரண்டு பாத்திரங்களில் இரு பக்கங்களிலும் தனித்தனியாக வழங்கப்படும்.
500 – 600 கி.கி உடல் நிறையுடைய பசுவொன்றிற்கு அவசியமான அளவுகள் அட்டவணை 1.1 இல் தரப்பட்டுள்ளன. விலங்குகளின் பருமனிற்கு அமைய வழங்கப்படும் இட வசதி வேறுபடும். தொழுவங்களைப் பிரித்து தனித்தனியான பாகங்களை பசுக்களிற்கு வழங்கலாம். பசுக்களை கட்டி வைக்காத போது ஒரு விலங்கிற்கு வழங்கப்படும் இடத்தை 50 – 100 சதம மீற்றர் வரை அதிகரித்தல் வேண்டும். இரண்டு பசுக்களிற்கு ஒரு நீர் தொட்டி வீதம் வழங்க வேண்டும். மென்மையான படுக்கைப் புற்களை இடுவது பசுக்களிற்கு வசதியாக இருக்கும். இது விலங்குகளை சுத்தம் செய்யவும், குழம்புகளில் ஏற்படும் நோயைத் தவிர்ப்பதற்கும் உதவியாக அமையும். தழுவனத் தொட்டிகளின் அகலம் 0.5 – 0.6 மீற்றர் வரை இருத்தல் வேண்டும். இதன் அடிப்பகுதி கூட்டின் உயரத்தை விட 4 – 5 சதம மீற்றர் அதிகமானதாக இருத்தல் வேண்டும்.
Gutter System
|
தொழுவத்தின் அகலம்
|
தொழுவத்தின் நீளம்
|
Gutter System
|
1.10 – 1.20
|
1.55 – 1.65
|
Stall with covered gutter
|
1.10 – 1.20
|
1.45 – 1.55
|
திறந்தவெளி கூடு
திறந்த வெளி கூட்டினுள் விலங்குகள் கட்டி வைக்கப்படவதில்லை. விலங்குகள் தொழுவத்தினுள் சுயாதீனமாக நடந்து திரியலாம். இம்முறையில் பொதுவாக விலங்குகள் நடப்பதற்கும், அவை படுத்திருப்பதற்கும் தனித்தனியான இடங்கள் வழங்கப்படும். தீவனங்களை வழங்குவதற்கு, பசுக்கள் உறங்கும் இடங்களில் தொட்டிகள் வைக்கப்படும். பரந்த இடத்தில் சாணம் தெறித்து விழுவதால் இதனை சவல் ஒன்றைப் பயன்படுத்தி சேகரித்து கான்களில் அல்லது அதற்கென உள்ள தொட்டியில் இடலாம். ஒவ்வொரு விலங்கிற்கும் தனித்தனியாக உணவுத் தொட்டிகளை வைப்பது முக்கியமாகும்.
திறந்த கூட்டின் அனுகூலங்கள்
- பாரம்பரிய முறையை விட உற்பத்திச் செலவு குறைவு.
- வேட்கை அறிகுறிகளை இலகுவாக அறியலாம்.
- விலங்குகளிற்கு உடற் பயிற்சி கிட்டும்.
- சிறப்பாக முகாமைத்துவம் செய்யலாம்.
திறந்த கூட்டினுள் காணப்பட வேண்டிய முக்கிய அம்சங்கள்
- பாலைக் கறப்பதற்கு, கன்றுகளை உற்பத்தி செய்வதற்கும், கன்றுகளைப் பராமரிப்பதற்கும் தனித்தனியான இட வசதிகள் அவசியமாகும்.
- தீவனங்களையும், நீரையும் வழங்கும் இடங்கள், உறங்கும் இடம் என்பனவற்றை ஒழுங்காகத் திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.
- சுத்தம் செய்வதற்கு வசதியாக தரையை சீமெந்தினால் பூசி விடல் வேண்டும் அல்லது செங்கற்களினால் அமைக்க வேண்டும்.
- கான் தொகுதி ஆழமற்றதாகவும், தேவையான போது அகற்றக் கூடியவாறு ஓடு அல்லது சீமெந்துக் கற்களினால் இதனை மூடி வைக்க வேண்டும்.
- 10 அடி: 1 அங்குலம் என்ற அளவில் சாய்வு இருக்கத்தக்கவாறு கான் தொகுதியை அமைத்தல் வேண்டும் (ஒவ்வொரு அடிக்கும், ஒரு அங்குல சாய்வு).
- கூரையை அஸ்பெஸ்டாஸ் அல்லது தகரத்தினால் அமைக்க வேண்டும்.
அட்டவணை 1. 2 தளமும், தீவனத் தொட்டிலின் நீளமும்
விலங்கின் வகை |
தளத்திற்கான நிலப்பரப்பு /விலங்கு
| ||
மூடப்பட்ட பிரதேசம்
(வர்க்க அடி) |
திறந்த பிரதேசம்
(வர்க்க அடி) |
ஒரு விலங்கிற்கான தொட்டியின் நீளம் (அங்குலம்)
| |
கன்றுகள்
|
20 – 30
|
80 – 100
|
20 – 24
|
இளம் விலங்குகள்
|
15 – 20
|
50 – 60
|
15 – 20
|
காப்பப் பசுக்கள்
|
100 – 120
|
180 – 200
|
24 – 30
|
காளைகள்
|
120 – 140
|
200 – 250
|
24 – 30
|
தீவன இறாக்கைகள்
உணவுத் தொட்டில்களை விலங்குகள் படுக்கும் இடத்திலிருந்து வேறுபடுத்தவதற்கு உதவும். பல்வேறு விதமான தீவன இறாக்கைகள் உள்ளன.
தொழுவங்களை அமைத்தல
அயன மண்டலத்தில் பசுக்களிற்கான தொழுவத்தில் குறைந்த வசதிகளை வழங்கினால் போதுமானதாகும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தனி ஒரு தூணின் உதவியுடன் குடை போன்று அமைத்தால் போதமானதாகும். தொழுவத்திற்கு வெளியே நடமாடல், இயற்கையான காற்றோட்டம் என்பனவற்றிற்கு விசேடமாக உலர் வலயத்திலுள்ள பசுக்கள் அதிக விருப்பம் கொண்டனவாகக் காணப்படும். தொழுவத்தின் கட்டமைப்பிற்கு மரங்கள் அல்லது இரும்புக் கம்பிகளைப் பயன்படுத்தலாம். கூரைகளிற்கு அலுமினியம் அல்லது அஸ்பெஸ்டாஸ் போன்ற ஒளித்தெறிக்கக் கூடிய பொருடகளைப் பயன்படுத்துவது உகந்ததாகும். எனினும், அதிகளவான காற்றில்லாத பிரதேசத்தில் வைக்கோல், உலர்ந்த புற்கள் என்பன உகந்தனவாகும். கதிர் வீச்சினால் எற்படக் கூடிய வெப்பத்தினைத் தவிர்ப்பதற்கு கூரைக்குக் கீழே காற்று இடைவெளி இருத்தல் முக்கியமானதாகும்.
அயன மண்டலத்தில் பசுக்களிற்கான தொழுவத்தில் குறைந்த வசதிகளை வழங்கினால் போதுமானதாகும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தனி ஒரு தூணின் உதவியுடன் குடை போன்று அமைத்தால் போதமானதாகும். தொழுவத்திற்கு வெளியே நடமாடல், இயற்கையான காற்றோட்டம் என்பனவற்றிற்கு விசேடமாக உலர் வலயத்திலுள்ள பசுக்கள் அதிக விருப்பம் கொண்டனவாகக் காணப்படும். தொழுவத்தின் கட்டமைப்பிற்கு மரங்கள் அல்லது இரும்புக் கம்பிகளைப் பயன்படுத்தலாம். கூரைகளிற்கு அலுமினியம் அல்லது அஸ்பெஸ்டாஸ் போன்ற ஒளித்தெறிக்கக் கூடிய பொருடகளைப் பயன்படுத்துவது உகந்ததாகும். எனினும், அதிகளவான காற்றில்லாத பிரதேசத்தில் வைக்கோல், உலர்ந்த புற்கள் என்பன உகந்தனவாகும். கதிர் வீச்சினால் எற்படக் கூடிய வெப்பத்தினைத் தவிர்ப்பதற்கு கூரைக்குக் கீழே காற்று இடைவெளி இருத்தல் முக்கியமானதாகும்.
பசுக்களைக் கட்டி வைக்கும் தொழுவங்களைத் திட்டமிடல்
இந்த தொழுவங்களின் கூரைகள் இரும்பினால் அமைக்கப்படும். கூரைகளிற்கு கூரைப் பொருட்கள் பயன்படுத்தப்படும். இரட்டை வரிசை தொழுவங்களின் கூரைகளின் அகலம் அதிகமானதால், அவற்றை இணைப்பதற்கான தூண்கள் அவசியமாகும். இயற்கையான காற்றோட்டத்தினை அதிகரிப்பதற்கு திறந்த மூலைகள் இருத்தல் வேண்டும்.
இந்த தொழுவங்களின் கூரைகள் இரும்பினால் அமைக்கப்படும். கூரைகளிற்கு கூரைப் பொருட்கள் பயன்படுத்தப்படும். இரட்டை வரிசை தொழுவங்களின் கூரைகளின் அகலம் அதிகமானதால், அவற்றை இணைப்பதற்கான தூண்கள் அவசியமாகும். இயற்கையான காற்றோட்டத்தினை அதிகரிப்பதற்கு திறந்த மூலைகள் இருத்தல் வேண்டும்.
அதிகளவான வெப்பநிலையைக் கொண்ட காலநிலைமையின் கீழ் மேலதிகமான ஜன்னல்களை அமைப்பதனால் காற்றோட்டத்தை அதிகரிக்கலாம்.
திறந்த தொழுவங்களிற்கான திட்டம்
திறந்த தொழுவங்களிற்கான கூரையை பல வடிவங்களில் அமைத்துக் கொள்ள முடியும். குறைவான மழைபெய்யும் பிரதேசங்களில் சமாந்திரமான கூரை போதுமானதாகும். ஆனால் அதிகளவான மழை பெய்யும் பிரதேசங்களில் கூரை சாய்வாக இருத்தல் அவசியமாகும். விலங்குகள் படுக்கும் பகுதிக்கு சூரிய ஒளி கிடைப்பதற்கும், தொழுவத்தின் உள்ளே உலர்வாக வைத்திருப்பதற்கும் ஏற்ற முறையில் தொழுவங்களை அமைக்க வேண்டுமாயின் அதனை வடக்கு – தெற்கு திசையில் அமைத்தல் வேண்டும். தொழுவத்தை திட்டமிடும் போது காற்றின் வேகத்தையும் மனதிற்கொள்ள வேண்டும்.
திறந்த தொழுவங்களிற்கான கூரையை பல வடிவங்களில் அமைத்துக் கொள்ள முடியும். குறைவான மழைபெய்யும் பிரதேசங்களில் சமாந்திரமான கூரை போதுமானதாகும். ஆனால் அதிகளவான மழை பெய்யும் பிரதேசங்களில் கூரை சாய்வாக இருத்தல் அவசியமாகும். விலங்குகள் படுக்கும் பகுதிக்கு சூரிய ஒளி கிடைப்பதற்கும், தொழுவத்தின் உள்ளே உலர்வாக வைத்திருப்பதற்கும் ஏற்ற முறையில் தொழுவங்களை அமைக்க வேண்டுமாயின் அதனை வடக்கு – தெற்கு திசையில் அமைத்தல் வேண்டும். தொழுவத்தை திட்டமிடும் போது காற்றின் வேகத்தையும் மனதிற்கொள்ள வேண்டும்.
பக்கச் சுவர்களின் சிபார்சு செய்யப்பட்ட உயரம் 3 மீற்றாகள் ஆகும். மழை, காற்றின் வேகம், வெப்பநிலை என்பனவற்றைப் பொறுத்து இதனை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ கைவிடலாம். திறந்த தொழுவங்களின் கான் சீமெந்தினால் அமைக்கப்படுவதோடு, அது சாய்வாகவும் இருத்தல் வேண்டும். சாணத்தை சுரண்டி அகற்றும் தொழுவங்களிற்கு 3 வீத சாய்வு சிபார்சு செய்யப்பட்டுள்ளது. கானின் அடிப்பகுதி ஒரு பக்கத்தினை சமதரையாக அமைக்க வேண்டும். போதியளவான நீரை வழங்கவும்.
பாற்பசுக்களைப் பராமரித்தல்
பசுக்களிற்குத் தகைப்பு ஏற்படாத சுற்றாடலில் வைத்தல் வேண்டும். தீவனம், சுற்றாடல் நிலைமைகளில் சிறு மாற்றங்களைச் செய்தல் வேண்டும். இந்நிலைமையின் கீழ் பசுவின் உடல் ஆரோக்கியம், அதிக தடவைகளிற்கு கன்றுகளை ஈணுவதற்கும் வாய்ப்பான நிலைமையை வழங்கும்.
பாற்பசுக்களிற்கு உணவளித்தல்
இது பாலின் விளைச்சல், உடல் நிறை என்பனவற்றில் தங்கியுள்ளது. வன தீவனங்கள், செறியுணவு என்னபவற்றை வழங்க வேண்டும் (இதன் விபரங்கள் பின்னால் தரப்பட்டுள்ளன).
இது பாலின் விளைச்சல், உடல் நிறை என்பனவற்றில் தங்கியுள்ளது. வன தீவனங்கள், செறியுணவு என்னபவற்றை வழங்க வேண்டும் (இதன் விபரங்கள் பின்னால் தரப்பட்டுள்ளன).
கன்று ஈனலைப் பராமரித்தல்
கன்று ஈனல், பசு, புதிதாகப் பிறக்கும் குட்டி என்பனவற்றைத் தவிர, விவசாயிக்கும் அதிக வேலையுள்ள ஒரு காலமாகும். இச்சந்தர்ப்பத்தில் ஒழுங்காக முகாமைத்துவம் செய்யாத போது குட்டிக்கும், பசுவின் உற்பத்திச் செயற்பாட்டிற்கும் பெரும் பிரச்சினைகள் எழுவதோடு, உயிரரிழப்பதற்கும் வாய்ப்பேற்படலாம். காளையும், பசுவும் இணைந்த தினத்திலிருந்து (Mating) குட்டியீனும் காலத்தை அனுமானிக்கலாம். குட்டியீனும் காலத்தை அண்மிக்கும் போது பால் மடி பெரிதாகல், பெண் குறியிலிருந்து சளியம் வடிவதையும், வீங்கியிருப்பதையும் காணலாம். குட்டியீனுவதற்கான பொதுவான அறிகுறிகள் வருமாறு:
கன்று ஈனல், பசு, புதிதாகப் பிறக்கும் குட்டி என்பனவற்றைத் தவிர, விவசாயிக்கும் அதிக வேலையுள்ள ஒரு காலமாகும். இச்சந்தர்ப்பத்தில் ஒழுங்காக முகாமைத்துவம் செய்யாத போது குட்டிக்கும், பசுவின் உற்பத்திச் செயற்பாட்டிற்கும் பெரும் பிரச்சினைகள் எழுவதோடு, உயிரரிழப்பதற்கும் வாய்ப்பேற்படலாம். காளையும், பசுவும் இணைந்த தினத்திலிருந்து (Mating) குட்டியீனும் காலத்தை அனுமானிக்கலாம். குட்டியீனும் காலத்தை அண்மிக்கும் போது பால் மடி பெரிதாகல், பெண் குறியிலிருந்து சளியம் வடிவதையும், வீங்கியிருப்பதையும் காணலாம். குட்டியீனுவதற்கான பொதுவான அறிகுறிகள் வருமாறு:
- பால்மடி வீங்குதலும், பால் காணப்படலும்
- இடுப்பு இணைங்கள் தளர்வடைதல்
- வால் உயர்ந்திருத்தல்
- பெண்குறி சிவப்பு நிறமாதலும், வீங்குதலும்
- பெண்குறியிலிருந்து சளியம் வடிதல்
- அடிக்கடி சிறுநீர் கழித்தல்
- உணவில் விருப்பமின்மை
- அசாதாரணமாக ஓய்வின்றி இருத்தல் - அடிக்கடி நிலத்தில் படுத்து எழும்புதல்
குட்டியீனும் தினத்தில் அசௌகரிமாகக் காணப்படும். உட்காரல், எழும்புதல் என்பன கடினமாக காணப்படுவதோடு, நடப்பதற்கும் சிரமப்படும். பெண்குறி வீங்கி, சளியம் வடியத் தொடங்கும். வாலை இரண்டு பக்கமும் ஆட்டிக்கொண்டே மேலே உயர்த்தும். கண்கள் அடிக்கடி பின்னோக்கிப் பார்க்கும். இந்த அறிகுறிகள் பிரசவம் நிகழப் போகின்றது என்பதை உணர்த்தும். குட்டி வெளியே வரும் பாதை வலுவலுப்பாய் இருப்பதற்கு வசதியாக குட்டி வெளியே வருவதற்கு ஒன்று அல்லது இரண்டு மணித்தியாலங்களிற்கு முன்னர் நீருடன் கூடிய பனிக்குடம் (Water bag) வெளியே வரும். கர்ப்பப் பையில் குட்டி காணப்படும் நிலை, பனிக்குடம் வெளியேறி, குட்டியீனும் நிலைகள் கீழேயுள்ள படங்களில் தரப்பட்டுள்ளன.
நீர்க்குடம் வெளியேறியதை அவதானித்து 2 மணித்தியாலங்களிற்கிடையில் குட்டியின் முன் காலிரண்டும் தோன்றல் ஒழுங்கான முறையில் குட்டியீனுவதற்கான அறிகுறியாகும் (படம் 2). இதன் பின்னர் நாசியும், முழு முகமும் ஒரு மணித்தியாலங்களிற்குள் வெளியேறும் (படம் 3). சில நிமடங்களிலேயே நெஞ்சுப் பகுதியும் முழு உடலும் வெளியேறும்.
பால் கறத்தல்
பாற்பசு வளர்ப்பில் பசுவின் பால் உற்பத்திக்கும், இலாபத்திற்கும் நேரடியான தொடர்புள்ளது. கைகளினால் பால் கறப்பதா அல்லது இயந்திரங்களினால் பால் கறப்பதா என்பது தொழிலாளர்களிற்கு ஏற்படும் செலவு, பண்ணையின் அளவு என்பனவற்றினால் தீர்மானிக்கப்படும். பால்மடியின் சுகாதாரம், ஆரோக்கியம், பால் உற்பத்தி என்பனவற்றைக் கருத்திற் கொள்ளும் போது நன்கு பயிற்சிபெற்ற ஒருவர் கையினால் பால் கறப்பதே முக்கியமாகும். பால் கறப்பதற்கான சில பொதுவான ஒழுங்கு விதிகள் வருமாறு:
- முறையான கால இடைவெளியில் பால் கறத்தல்
- தொழுவத்தின் உற்பத்தித் திறன், அமைதி என்பனவற்றை பராமரித்தல்
- விலங்குகளை ஒழுங்காகப் பரிகரிக்க வேண்டும்
- பால் கறப்பவர் கை சுத்தமாக இருப்பதோடு, நகத்தை கட்டையாக வைத்திருப்பது, சுத்தமான ஆடைகளை அணிந்திருப்பது என்பன அவசியமானவைகளாகும்
- மிக விரைவாகவும், அனைத்து முலைகளிலும் சம அளவாகவும் பாலை கறக்க வேண்டும்
கைகளினால் பால் கறத்தல்
மடியை ஆயத்தம் செய்தல் (தூண்டல்)
மடியை ஆயத்தம் செய்தல் (தூண்டல்)
- பால் மடியையும், முலைகளையும் சுத்தம் செய்தல் பால் அசுத்தமடைவதைத் தவிர்க்கும்.
- முதலில் கறக்கும் பாலை மடியழற்சி நோய்க்கென பரிசோதித்துப் பார்க்கவும்.
இதனால் பசு பால் கறப்பதற்குத் தூண்டப்படும். விலங்கின் வாலை சுத்தம் செய்தல் முக்கியமானதாகும். வினைத்திறனாக சுத்தம் செய்வதற்கு மடியைச் சுற்றியுள்ள மயிரையும், வாலில் ஒரு பகுதியையும் வெட்டி விடல் அவசியமாகும். மடியைக் கழுவிய பின்னர் அதனை உலர்ந்த துணியினால் துடைத்து உலர்வாக வைத்திருக்கவும்.
முதலில் பாலை பரிசோதிக்க வேண்டும். இதற்கு முதலில் பால் கோப்பை அவசியமாகும். இக்கோப்பையை கறுப்பு துணியால் மூடவும். முதலில் கறக்கும் பாலை இந்த துணியின் ஊடாக கோப்பையில் விழச் செய்யவும். இதனால் பசுவிற்கு மடியழற்சி நோய் உள்ளதா என்பதை அறிந்து கொள்ள முடியும். மடியழற்சி ஏற்பட்டிருக்குமாயின் வெண்ணிறமான பாற் கட்டிகள் துணியில் விழுந்திருப்பதை அவதானிக்கலாம். இதற்கு பரிகாரமளிக்க ஒரு மிருக வைத்தியரை நாடவும். மேற்குறிப்பிட்ட அறிகுறி காணப்படுமாயின் முழு பாலையும் கறந்த பின் அதனை பாதுகாப்பாக அகற்றுவதன் மூலம் இந்நோய் ஏனைய பசுக்களிற்குப் பரவுவதைத் தடுக்க முடியும்.
மடியைக் கழுவல், ஆரம்பப் பாலை பரிசோதித்தல் என்பன பசு பாலைக் கறக்கத் தூண்டப்படும். சத்தம் (வாளியின்), பால் கறப்பவரைக் காணல், குட்டியைக் காணல், சிறிதளவான சுடு நீரில் மடியைக் கழுவுதல் என்பனவற்றின் மூலம் பால் சுரக்கப்படுவதைத் தூண்ட முடியும். பசு தூண்டப்பட்டவுடன் ஒக்சிடொசின் ஹோமோன் (Oxytocin) விடுவிக்கப்படும். பால் கறப்பவர் 5 – 6 நிமிடங்களில் பாலைக் கறக்க வேண்டும்.
கையால் பால் கறக்கும் முறைகள்
- முழுமையான கை முறை
இங்கு முழுக் கையையும் பயன்படுத்தி பால் கறக்கப்படுவதோடு, காம்பின் மேல் பக்கத்தில் ஆட்காட்டி விரலால் நசிப்பதோடு, ஏனைய விரல்களால் முலையின் மேலிருந்து கீழாக நசிக்கப்படும. - Stripping
ஆட்காட்டி விரலையும், பெரு விரலையும் பயன்படுத்தி மேலிருந்து, கீழாக நசித்தல் - Pinching
இதுவும் மேற்குறிப்பிட்டவாறே மேற்கொள்ளப்படுவதோடு, இரண்டாவது, மூன்றாவது விரல்கள் இதற்குப் பயன்படும். - Knuckling
இதில் பெருவிரலை மடித்துக் கொண்டு, ஏனைய விரல்களை பெருவிரலின் மீது வைத்து நசிப்பதாகும்.
மிகவும் சிறப்பானது முழுக்கையையும் பயன்படுத்தி, ஒழுங்கு முறையாக பால் கறப்பதாகும். இதனால் அதிகளவான பால் சுரக்கப்படும். மிகக் குறுகிய காலத்திலேயே பால் கறப்பதைப் பூர்த்தி செய்ய முடியும். இங்கு முலைகள் மெதுவாகவே இழுக்கப்படும். கைகளினால் நன்றாகக் கறக்கும் போது பால் சுரக்கும் வேகம் உகந்ததாகக் காணப்படும். மோசமாகப் பால் கறக்கும் போது பால் விடுவிக்கப்படல் தடைப்படும். குறுகிய நீளமுள்ள காம்புகளிற்கு முழுமையான கை முறை சற்று சிரமமானதாகும்.
கையால் பால் கறக்கும் ஒழுங்குமுறை
- பின்னங் கால்களை கட்டி வைக்கவும். இது புதிதாகக் கறக்கும் பசுக்களிற்கும், பழக்கப்படாத பசுக்களிற்கும் மிக முக்கியமாகும். இல்லாவிடில் பால் வாளியை பசு தட்டி விடும்
- சவர்க்காரத்தினால் கைகளை கழுவவும
- பால் மடியையும், வாலையும் மிகவும் கவனமாகச் சுத்தமாக கழுவவும்
- முதலில் பாலைப் பரிசோதிக்கவும்
- பசுவின் வலது பக்கமாக அமரவும
- முன்னால் உள்ள காம்புகளிற்கு கீழே வாளியை வைத்து பாலைக் கறக்கவும
- பால் கறப்பதை முதலிரண்டு காம்புகளில் ஆரம்பிக்வும். முதல் காம்பு வெறுமையாகியதும், பின்னாலுள்ள காம்புகளிலிருந்து பாலைக் கறக்கவும் (முன்னால் உள்ள காம்புகள், பின்னால் உள்ள காம்புகள் என்பனவற்றில் பால் காணப்படும் விகிதம் வருமாறு 40 : 60)
- பாலைக் கறந்து முடிந்ததும் காம்புகளை போமிக் அமிலம் அல்லது சிற்றிக் அமிலத்தில் தோய்க்கவும்
இயந்திரங்களின் மூலம் பால் கறத்தல்
இதில் பிரதானமாக இரண்டு முறைகள் உள்ளன.
பாலைப் பாத்திரத்தில் கறத்தல் (மாட்டுத் தொழுவத்திலேயே) இதில் பிரதானமாக இரண்டு முறைகள் உள்ளன.
இயந்திரங்களின் மூலம் பால் கறப்பதில் இதுவே மிகவும் எளிமையானதொரு முறையாகும். தற்போது தென் ஆசியாவில் இதுவே பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றது. பாத்திரத்தில் பாலைக் கறக்கும் இயந்திரத்தின் பிரதான பாகங்கள் கீழே உள்ள படத்தில் தரப்பட்டுள்ளன. இங்கு பெயரிடப்பட்ட பாகங்களைத் தவிர அமுக்க அகற்றி (Vacum) அலகு (மோட்டார், பம்பி, அமுக்கமகற்றும் தாங்கி), அமுக்கமிழக்கப்படுவதைக் கட்டுப்படுத்தும் பாகம், வெகும்மானி என்பன அவசியமாகும். கிளஸ்டரிலிருந்து (Cluster) நேரடியாக நீண்ட பாற்குழாயினூடாக வாளியை பால் அடையும். வாளியின் கொள்ளளவு 20 லீற்றாகள் ஆகும். பாத்திரம் நிரம்பிய பின்னர் அதிலுள்ள பாலை அகற்ற வேண்டும். அத்துடன் அமுக்கமகற்றியையும் விடுவித்தல் வேண்டும். இம்முறை சிறிய பாற் பண்ணைகளிலும், புதிதாக குட்டி ஈன்ற பண்ணைகளிலும் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றது.
பால் கறக்கும் கால இடைவெளி
இரண்டு தடவைகள் பால் கறப்பதற்கிடையே 16 மணித்தியாலங்களிற்கு மேல் இடைவெளி காணப்படும் போது பால் சுரக்கப்படுவது நிரோதிக்கப்படும். எனவே உச்ச அளவான விளைச்சலைப் பெற்றுக் கொள்வதற்கு ஒரு நாளில் இரண்டு தடவைகள் பால் கறக்க வேண்டும். நாளொன்றில் இரண்டு தடவைகள் பால் கறப்பதை விட மூன்று தடவைகள் பால் கறக்கும் போது பால் உற்பத்தி 9 – 15 வீதம் வரை அதிகரிக்கும்.
நாளொன்றில் ஒரு தடவை மாத்திரம் பால் கறக்கும் போது நாளாந்த பால் உற்பத்தியும், பாற் காலத்திலுள்ள மொத்த உற்பத்தியும குறையும். புதிதாக குட்டி ஈன்ற பசுக்களிற்கு இது அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். அரிதாக ஒரு தடவை பாலைக் கறக்கத் தவறும் போது குறைவான தாக்கமே ஏற்படும். இந்நிலை 2 – 3 நாட்களில் இல்லாமற் போய்விடும்.
பால் கறக்கும் ஒழுங்குமுறை
முதலாவதாக முதன் முறையாக பால் கறக்கும் விலங்குகள், அதனையடுத்து மடியழற்சி நோய் ஏற்படாத விலங்குகள், தொடர்ந்து ஏற்கனவே மடியழற்சியினால் பாதிக்கப்பட்டிருந்த விலங்குகள், இறுதியாக மடியழற்சியினால் பாதிக்கப்பட்டுள்ள விலங்குகள் என சந்தேகிக்கப்படும் விலங்குகள் ஆகிய ஒழுங்குகளில் பாலைக் கறக்க வேண்டும்.
முதலாவதாக முதன் முறையாக பால் கறக்கும் விலங்குகள், அதனையடுத்து மடியழற்சி நோய் ஏற்படாத விலங்குகள், தொடர்ந்து ஏற்கனவே மடியழற்சியினால் பாதிக்கப்பட்டிருந்த விலங்குகள், இறுதியாக மடியழற்சியினால் பாதிக்கப்பட்டுள்ள விலங்குகள் என சந்தேகிக்கப்படும் விலங்குகள் ஆகிய ஒழுங்குகளில் பாலைக் கறக்க வேண்டும்.
உணவும், போசாக்கும்
தீவனமொன்றில் அடங்கியுள்ள போசணை உள்ளடக்கங்களின் அளவிற்கேற்பவே அதன் போசணைப் பெறுமானம் பொதுவாகக் கணிப்பிடப்படும். பொதுவாக தீவனங்களை வன் தீவனம், செறியுணவு என வகைப்படுத்தலாம். வன் தீவனங்களாக புற்கள் (இயற்கையானவை, மேம்படுத்தப்பட்டவை), நிலத்தில் படாந்து வளரும் புற்கள் (உதா: சிராட்ரோ, சென்ரோ), அவரைத் தாவரங்கள் (உதா: கிளிறிசிடியா, இப்பில் இப்பில்), அவரை இனங்கள் அல்லாத தாவரங்கள் (உதா பலா, மா), மரங்களும், பற்றைகளும், விவசாயக் கழிவுகள் (வைக்கோல்), விவசாய கைத்தொழிலின் உப விளைவுப் பொருட்கள் (சோயா தோல், Baggase) என்பனவற்றைக் குறிப்பிடலாம். தேங்காய் பிண்ணாக்கு, அரிசித்தவிடு, தானியங்கள் என்பனவற்றை செறியுணவுகளாகப் பயன்படுத்தலாம்.
உணவுப் பங்கீடு
விலங்கொன்றின் நாளாந்த போசணைத் தேவைக்கு அமைய உணவுப் பங்கீடு வேறுபடுவதோடு, ஒரு கிலோ கிராம் உணவினால் வழங்கப்படும் போசணை அளவை, முழுமையாகத் தேவைப்படும் போசணையின் அளவினால் வகுக்கும் போது நாளொன்றிற்கு அவசியமான உணவின் அளவைத் தீர்மானிக்கலாம். பொதுவாக இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட உணவு வகைகள் ஒன்றாகக் கலக்கப்பட்டு தீவனங்கள் தயாரிக்கப்படுகின்றன. மிகவும் தரமான மூலப்பொருட்களினால் தயாரிக்கப்பட்டுள்ள தீவனமொன்றை தெரிவு செய்வது முகாமையாளரினால் மேற்கொள்ள வேண்டும். இது போசணையின் அளவு, கிடைக்கும் தன்மை, விலை, செலவு ஆகியவற்றில் தங்கியுள்ளது.
வளரும் விலங்குகளிற்கான உணவு
குட்டிகள், நாம்பன் என்பனவற்றிற்கு உணவளிப்பதற்கு அவசியமான வழிகாட்டிகள் அட்டவணை 10.5 இல் தரப்பட்டுள்ளது. எளிமையான முறையில் தீவனங்கள் வன் தீவனங்கள், செறியுணவு என வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் தமது பிரதேசத்தில் பரவலாகக் காணப்படும் பல்வேறு தீவனங்களிடையே அவசியமானவற்றை முகாமையாளரின் விருப்பிற்கமைய தெரிவு செய்து கொள்ள முடியும்.
மனதிற் கொள்ள வேண்டிய சில விடயங்கள்
- சிறிய விலங்குகள் (முதலாவது வாரத்தினுள்)
உலர் புற்கள், புற்கள், செறியுணவு என்பனவற்றின் அளவை படிப்படியாக அதிகரித்தல் வேண்டும். பொதுவாக தரமான 30 கிராம் உலர் புல் அல்லது 50 கிராம் பச்சைப் புல்லுடன் 30 கிராம் கால்வ் ஸ்ராட்டா (Calf starter) அல்லது 50 கிராம் செறியுணவை வழங்க வேண்டும். - முதலாவது இரண்டாவது மாதங்களில்
பாலை மறக்கடிக்கச் செய்யும் போது விலங்கின் நிறை பிறப்பு நிறையைப் போன்று இரண்டு மடங்காக அதிகரித்தல் வேண்டும். 3 மாதங்களாகியதும் பாலூட்டுவதை முற்றாக நிறுத்த வேண்டும். 3வது வாரம், 3வது மாதம், 6வது மாதம், 9வது மாதம், 12வது மாதம் என்பனவற்றின் போது புழுக்களிற்கு மருந்து வழங்க வேண்டும். குட்டிகளில் உண்ணிகள் காணப்படுமாயின், குட்டி, தாய்ப்பசு ஆகிய இரண்டிற்கும் பரிகாரங்களை மேற்கொள்ள வேண்டும். மருந்து வழங்கப்படும் அளவு, முறை என்பன மருந்தின் வகையில் தங்கியுள்ளது. - 7 – 9 மாதங்களிற்கிடையில்
முதல் 9 மாதங்களில் மிக உகந்த அளவிலான உடல் வளர்ச்சியைப் பெற்றுக்கொள்ள குட்டிக்கு உயர் தரமான உணவுகள், கனிப்பொருட்கள், விட்டமின், நீர் என்பனவற்றை வழங்க வேண்டும். வளர்ச்சி வேகம் அல்லது உடல் நிறை முதல் 9 மாதங்களில் விரைவுபடுத்தப்படுவதோடு, அதன் பின்னர் வளர்ச்சி வேகம் குறைவாகவே காணப்படும். - 16 – 18 மாதங்களிற்கிடையில்
இரண்டாவது உணவு பங்கீட்டிற்கு அமைய அதிகளவான நார்பொருட்களை வழங்குவதன் மூலம் செறியுணவு வழங்கப்படும் அளவு, உணவிற்கு ஏற்படும் செலவு என்பனவற்றைக் குறைக்க முடியும். எனினும், அதிகளவான நார் பொருட்களைப் பெற்றுக்கொள்வது சிரமமாயின் நிறைவான தரமான செறியுணவுகளை வழங்கவேண்டும். அட்டவணை 10.5 தரப்பட்டுள்ளவாறு உணவுகளை குட்டியிலிருந்து, குட்டியீனும் வரை வழங்க முடியுமாயின் 13 – 18 மாதங்களிற்கிடையே கன்றுகள் முதலாவது தடவையாக வேட்கை அறிகுறிகளைக் காட்டும் (உடல் நிறை வளர்ச்சியடைந்த விலங்குகளின் 60 வீதம் வரையாகும்).
பால் தரும் விலங்குகளிற்கான உணவு
பால் தரும் விலங்குகளிற்கு உணவைத் தயாரிக்கும் போது உடல் பராமரிப்பிற்கும் (உடல் நிறையில் தங்கியுள்ளது), பால் உற்பத்திக்கும் (பால் விளைச்சல், கொழுப்பின் அளவு) அவசியமான போசணை அளவைக் கவனத்திற்கொள்ள வேண்டும். இதனைத் தவிர உணவிலுள்ள விலங்குகளினால் பெறக்கூடிய போசணைப் பொருட்களையிட்டும் கவனம் செலுத்த வேண்டும். இதற்கு அட்டவணை 10.1, 10.2 என்பனவற்றிலுள்ள தகவல்கள் முக்கியமானவையாகும்.
உணவு வகைகளைத் தெரிவு செய்தல், விகிதாசாரத்திற்கேற்ப அவற்றைக் கலவை செய்தல், அந்த உணவுகளை இயலுமான வரை குறைந்தளவான செலவுடன் விலங்குகளிற்கு அவசியமான போசணைகளைப் பெறக் கூடியவாறு வழங்கல் ஆகிய காரணிகளில் உணவுகளைத் தயாரிப்பது தங்கியுள்ளது. எனவே கலவை உணவகளைத் தயாரிப்பதற்கு உணவுகள் கிடைக்கும் தன்மை, விலை, உணவுகளின் உள்ளடக்கம் என்பன தொடர்பான அறிவு அவசியமாகும்.
பால் தரும் பசுக்களிற்கான உணவுப் பங்கீட்டிற்கு ஒரு உதாரணம்
350 கிலோ கிராம் நிறையுள்ள காப்ப பசுவொன்று 3.7% பாற்கொழுப்புடன் நாளொன்றில் எட்டு லீற்றரை உற்பத்தி செய்கின்றது என்னும் எடுகோளை அடிப்படையாகக் கொள்ளவும். விவசாயி ஒருவரிடம் கினிப் புல் (ஒரு மாத வயதுடையது), தேங்காய் பிண்ணாக்கு, மேலதிகமாக யூறியா மொலாசஸ் கனிப்பொருட் கலவை என்பன காணப்படுமாயின் அவர் தனது பசுவிற்கான தீவனத்தை தயாரித்துக்கொள்ள முடியும்.
முதலாவது படி
அட்டவணை 10.3 இற்கு அமைய TDN, DCP என்பனவற்றின் தேவைகளை கணிப்பிடவும். பாற்கொழுப்பு 3.7%, பால் உற்பத்தி 8 லீற்றா, 300 கிலோ கிராம் நிறையுடைய பசுவிற்குத் தேவையான TDN, DCP என்பன முறையே 6,100, 900 ஆகும் (அட்டவணை 10.3). வளாச்சியடையும் ஒவ்வொரு 50 கிலோ கிராமிற்கும் மேலதிகமாக தேவைப்படும் TDN, DCP என்பன முறையே +300, +25 ஆகும். எனவே 350 கிலோ கிராம் நிறையுடைய பசுவிற்குத் தேவையான TDN அளவு 6400 கிராம் ஆகும். DCP இன் அளவு 925 கிராம் ஆகும்.
இரண்டாவது படி
உங்களிடமுள்ள தீவனங்களின் போசணைப் பெறுமானங்களை அட்டவணை 10.4ஐப் பயன்படுத்தி கணிப்பிடவும்.
மூன்றாவது படி உங்களிடமுள்ள தீவனங்களின் போசணைப் பெறுமானங்களை அட்டவணை 10.4ஐப் பயன்படுத்தி கணிப்பிடவும்.
தீவனப் பங்கீட்டினைத் தயாரித்தல்
TDN (கிராம்)
|
DCP(கிராம்)
| |
கினி புல்
|
116
|
19
|
கிளிறிசிடியா
|
142
|
50
|
தேங்காய் பிண்ணாக்கு
|
683
|
148
|
யூறியா மொலாசஸ் பல் போசணைக் கலவை
|
764
|
46
|
விலங்கு பெற்றுக் கொண்ட
|
TDN (கிராம்)
|
DCP (கிராம்) உலர் பொருள் நிறை
(கிலோ கிராம்) | |
மேயும் அல்லது வெட்டி வழங்கப்
படும் கினி புல் 40 கிலோ |
8.4
|
4640
|
760
|
கிளிறிசிடியா 3 கி.கி
|
0.7
|
426
|
150
|
புற்களின் மூலம் பெறப்படுவன
|
9.1
|
5066
|
910
|
- 350 கிலோ கிராம் உடல் நிறையுடைய பசுவொன்று தனது உடல் நிறையில் ஆகக் கூடியது 3%ஐ மாத்திரமே உலா உணவாக உட்கொள்ளும். அந்த அளவு 10.5 கி.கி ஆகும். கிளிறிசிடியா, புல் என்பனவற்றிலிருந்து மொத்தமாக 9.1 கிலோ கிராமை மாத்திரமே பெறுவதால், பெறக்கூடிய மீதி உலர் நிறை 1.4 கி.கி ஆகும். அசையூன் வயிற்றில் நார் உணவுகளை வழங்குவதற்கு மாத்திரமே இக்கட்டுப்பாடு உள்ளது. உயர் தரமான யூரியா மொலாசஸ் பல போசணைக் கலவையை வழங்கும் போது பசு மேற்குறிப்பிட்ட அளவைப் போன்று மூன்றில் இரண்டு மடங்கை உண்ண முடியும்.
- தேவையான 1334 கிராம் TDN (6400 – 5066)ஐ வழங்குவதற்கு மேற்குறிப்பிட்ட தீவனத்துடன் மூன்றாவது போசணை உள்ளடக்கத்தினையும் வழங்க வேண்டும். அசையூன் வயிற்றின் இடவசதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் தேங்காய் பிண்ணாக்கு அல்லது யூறியா மொலாசஸ் பல போசணைக் கலவை (UMM) போன்ற செறியுணவை வழங்க வேண்டும். இந்த அடிப்படையில் இங்கு குறிப்பிட்ட விவசாயிக்கு இரண்டு தெரிவுகள் உள்ளன.
- புற்கள், கிளிறிசிடியா என்பனவற்றினால் தேவையான DCP வழங்கப்படும்.
மூன்றாவது படி
அவசியமான 1334 கிராம் TDNஐ வழங்குவதற்கு
A. 1334/683 = தேங்காய் பிண்ணாக்கு 1.93 கிலோ கிராம் அல்லது
B. 1334/784 = யூறியா மொலாசஸ் பல போசணைக் கலவை (UMM) 1.75 கிலோ கிராம்
பசுக்களைப் பாதிக்கும் நோய்களும், ஏனைய பாதிப்புகளும்
நோய் |
நோய் அறிகுறி
|
தடுத்தல்
|
பரிகரணம்
|
வட்டப் புழு
(பெரியன) |
குட்டிகளை மாத்திரம் பாதிக்கும். வளர்ச்சி குறையும், உணவுக் கால்வாய் தடைப்படும்
|
கிரமமாகப் புழுக்களை அழித்தல்
|
கிரமமாகப் புழுக்களை அழித்தல் (உதா: பிப்பரசின்)
|
வட்டப் புழு
(பெரியன) |
இரத்தச்சோகை, உணவில் விருப்பமின்மை, வயிறு வீங்கல்
|
கிரமமாகப் புழுக்களை அழித்தல், தீவனங்கள் மிதிபடுவதைத் தவிர்த்தல், சுத்தம்
|
கிரமமாகப் புழுக்களை அழித்தல் (உதா: நில்வோம்)
|
பெபிசியாவ (சிவப்பு நிறமான சிறுநீர் வெளியேறல்)
|
அதிகளவான காய்ச்சல், குருதி கலந்த சிறுநீர் வெளியேறல், உண்ணாதிருத்தல்
|
ஈக்கள், உன்னிகளைக் கட்டுப்படுத்தல்
|
முற் காப்பு
(உதா: பெரனில், டெடராசைக்ளின் |
கால், வாய் நோய் (FMD)
|
வாய், குழம்பு, முலைக் காம்பு என்பனவற்றில் காயமேற்படல், உண்ணாதிருத்தல்
|
தொடர்ச்சியாக ஆறு மாதங்களிற்கொரு தடவை தடுப்பூசியை வழங்கல்
|
பரிகரணம் இல்லை. காயங்களிற்கும், காய்ச்சலிற்கும் நுண்ணுயிர் கொல்லிகளைப் பயன்படுத்தலாம்.
|
குருதிப்போக்கு
haemomorrhagic Septicaemia (HS) |
அதிக வெப்பம், சுவாசித்தல் கடினம், எச்சில் வடியும்
|
தொடர்ச்சியாக ஆறு மாதங்களிற்கொரு தடவை தடுப்பூசியை வழங்கல். ஆரோக்கியமான விலங்குகளிடமிருந்து தனிமைப்படுத்தல்
|
உதா: டெட்ராசைக்ளின் ஐப் பயன்படுத்தவும்
|
சயரோகம்
|
பல்வேறு விதமானது. இருமல் அல்லது மூச்சிழுப்பு, வயிற்றோட்டம்
|
நோயுற்ற விலங்குகளை அழித்தல்
|
இல்லை
|
நிவ்மோனியா
|
HS ஐ ஒத்தது.
|
குளிர் காற்றிலிருந்து பாதுகாக்கவும்
|
டெட்ராசைக்ளின் ஐப் பயன்படுத்தவும்
|
அந்ரக்ஸ்
|
அதிகளவான காய்ச்சல், சுவாசித்தல் கடினம், சடுதியான இறப்புகள், வாயிலிருந்தும், குதத்திலிருந்தும் குருதி வெளியேறல்
|
வருடாந்தம் தடுப்பு மருந்துகளை வழங்கல், தொழுவத்திலுள்ள ஏனைய விலங்குகளிற்கு அதிக செறிவில் பெனிசிலின் அல்லது டெடராசைக்கிளினை வழங்கல், இறந்த பின்னர் விலங்கை வெட்டிப்பார்க்க வேண்டாம்
|
முன்னரே அறியா விடில் பரிகரணம் இல்லை.
|
அந்ரக்ஸ்
|
அதிகளவான காய்ச்சல், பாதங்கள் வீங்கல, தோலிற்கு கீழ் வளி நிரம்பல், சுவாசித்தல் கடினம்
|
வருடாந்தம் தடுப்பு மருந்துகளை வழங்கல், தொழுவத்திலுள்ள ஏனைய விலங்குகளிற்கு அதிக செறிவில் பெனிசிலின் அல்லது டெடராசைக்கிளினை வழங்கல், இறந்த பின்னர் விலங்கை வெட்டிப்பார்க்க வேண்டாம்
|
முன்னரே அறியா விடில் பரிகரணம் இல்லை.
|
வலிப்பு
|
தாடைகள் கடினமாதல், வாயைத் திறத்தல், வாலை ஆட்டல் என்பன சிரமமாகக் காணப்படும்
|
புதிதாகப் பிறந்த குட்டிகளின் தொப்புள் கொடியை தொற்றுநீக்கம் செய்தல், சிறந்த ஆரோக்கியத்தைப் பேணல், இறந்த விலங்குகளை உடனடியாக புதைக்கவும்
|
பெனிசிலின் வழங்கவும்
|
Rinderpest
|
காய்ச்சல், வாயிலிருந்தும், மூக்கிலிருந்தும் சளியம் வடிதல், உண்ணாதிருத்தல், இருமல், வயிற்றோட்டம், வாய், மூக்கு, நாக்கு என்பனவற்றில் காயம்
|
6 மாதங்களிலும், வளாந்த பின்னரும் தடுப்பூசி வழங்கல்
|
பரிகரணங்களிற்கு தூண்டற்பேறில்லை
|
காப்பச் சிதைவு (Brucellosis)
|
5 -6 மாதங்களில் கருச்சிதைவு, கொப்புள் நாண் தடைப்படல், அல்லது அறிகுறி இல்லை.
|
6 மாதங்களில் தடுப்பூசி வழங்கல், முளையத்தைப் புதைத்தல், நோயுற்ற விலங்கை அழித்தல் பாலைத் தொற்றுநீக்கம் செய்தல்
|
பரிகரணம் இல்லை. அதிகளவான செறிவில் டெட்டராசைக்ளினை வழங்கல்
|
சூல்வித்தகம் தங்கி நிற்றல்
Retained Placenta (Retained after birth) |
கொப்புள் நாண் மீதமாக இருத்தல், குட்டி ஈன்ற பின்னர் துர்நாற்றம் வீசல்
|
குட்டியீனும் போது போதியளவான போசணைகளை வழங்கல், ஆரோக்கியம், குட்டியீனும் போது உதவல், குட்டிக்கு தாய்ப்பாலை வழங்கல்
|
நுண்ணுயிர்க் கொல்லிகளினால் பரிகரித்தல்
உதா: சல்பா, டெட்ராசைக்ளின் அவசியமாயின் கொப்புள் நாணை அகற்றல் |
பாற் காய்ச்சல்
|
நடத்தல் கடினமானதாயிருக்கும் 3 சந்தர்ப்பங்களில்
1. தள்ளாடி, தள்ளாடி அமர்தல் 2. நெஞ்சு நிலத்தில் படக் கூடியவாறு அமர்தல் 3. ஒரு பக்கமாகவும், எவ்விதமான அசைவும் இல்லாதிருத்தல் காரணம் : குருதியில் Ca இன் அளவு குறைவாக இருத்தல் |
மீண்டும் பழைய நிலைமைக்கு வர முன்னர் பால் கறத்தலை நிறுத்தல்,
அறிகுறிகளை அவதானித்தவுடன் Ca தடுப்பூசியை வழங்கல் பொதுவான ஒன்று போதுமானதாகும். |
கல்சியம் குளுகோனேட் தடுப்பூசி
உலா காலத்தில் அதிகளவான கல்சியத்தினை வழங்குவதைத் தவிர்த்தல் |
Ketosis
|
காபோவைதரேற்று அனுசேபத்தில் பிரச்சினைகள், குட்டி ஈன்ற பின்னர் பசு பலவீனமடைதல், பொதுவாக அதிக உற்பத்தியைக் கொண்ட அல்லது பருத்த பசுவில் காணப்படும்
|
குட்டி ஈனும் சந்தர்ப்பத்தில் அதிகளவு பருக்கவிட வேண்டாம்
|
சாதாரண நிலையை அடையும் வரை குளுக்கோசு வழங்கல் தேவையாயின் செறியுணவகளை வழங்கல்
|
மடியழற்சி
|
மடி வீங்கல், மங்கிய நிறமுள்ள பால், பாற் கட்டிகள் காணப்படல், உண்ணாதிருத்தல்
|
சுத்தமான தொழுவம், முறையாகப் பால் கறத்தல், முழுமையாகப் பால் கறத்தல், குட்டிக்கு பாலை வழங்கல், தொற்று நீக்கியினால் காம்புகளை கழுவுதல்
|
மடியை சுத்தம் செய்து நோயுள்ள காம்பிலிருந்து 2 – 3 தடவைகள் பால் கறத்தல், உப்பு, சுடுநீர் என்பனவற்றினால் மடியைக் கழுவுதல், தடுப்பூசி வழங்கல்
|
Naval ui
|
உண்ணாதிருத்தல், சிறுநீர் வெளியேறும் போது வலி, இடுப்புப்பகுதி வீங்கல்
|
பிறக்கும் போது இடுப்புப் பகுதியை தொற்றுநீக்கம் செய்தல்
|
கிருமிநாசினிகளினால் சுத்தம் செய்தல், புழுக்களை அகற்றல், மருந்து பூசல்
|
வட்டப் புழு
Ring worm |
தோலில் உலர்ந்த வளையமான பிரதேசங்கள்
|
சுத்தமான தொழுவம், நோயுற்ற விலங்குகளைத் தனிமைப்படுத்தல்
|
அயடின் அல்லது வேறு கிருமிநாசினிகளினால் தொற்றுநீக்கம் செய்தல்
|
வயிறூதல்
|
உண்ணாதிருத்தல், அசையூன் வயிறு தடிப்படைந்து, வீங்கல், அசைபோடல் நிறுத்தல், கீழே விழுவதோடு, சடுதியான இறப்பு
|
இளம் தாவரங்களை அதிகளவில் வழங்கக் கூடாது, (பசுமையான அவரைத் தாவரங்கள் ஆபத்ததானவையாகும்), பச்சை உணவை வழங்க முன்னர் உலர் உணவை வழங்கல்
|
ஓட விடல், கத்தியால் அல்லது “ட்றோகா” மூலம் அசையூன் வயிற்றில் துளையிடல்
|
ஜோன் நோய்
|
துர்மணம் வீசும் வயிற்றோட்டம், பரிகரணங்களிற்கு தூண்டற்பேறில்லை. பசு மெலியும்
|
நோயுற்ற விலங்குகளைத் தனிமைப்படுத்தல். நோயால் பாதிக்கப்பட்ட பண்ணையில் தடுப்புக் காப்பினை மேற்கொள்ளல், நோயுற்ற விலங்குகளை அழித்தல்
|
பரிகரணம் இல்லை
|
பசு விசர் நோய்
|
கட்டுப்படுத்துவது கடினமானதாகும். ஆக்கிரமிப்பத் தன்மை, படிப்படியாக பாரிசவாதம், இறப்பு
|
காவிகளைக் கட்டுப்படுத்தல், தடுப்பூசி வழங்கல்
|
பரிகரணம் இல்லை
|
அறிக்கைகளைப் பேணலும், பொருளாதார மதிப்பீடும்
பொருளாதார மதிப்பீடு என்றால் என்ன?
வர்த்தகத்தில் அல்லது தொழில் முயற்சியில் நிதி முகாமைத்துவம் மிக முக்கியமானதொரு அம்சமாகும். இது தொழிலின் எதிர்கால நடவடிக்கைகளைத் திட்டமிட்டுக் கொள்ளவும், காலத்திற்குக் காலம் மாற்றங்களைச் செய்வதற்கும், அவற்றை எக்காலப் பகுதியில் மேற்கொள்ள வேண்டும் என்பது பற்றிய ஒரு தெளிவினையும் வழங்கும். முன்மொழியப்பட்ட முதலீட்டின் வெற்றி, தோல்வி என்பன தொடர்பாக அம் முதலீட்டினை மேற்கொள்வதற்கு முன்னர் தத்துவங்களின் (கருதுகோள்களின்) அடிப்படையில் தரவுகளைச் சேகரித்து, அதன் மூலம் எதிர்பார்க்கப்பட்ட இலக்கை அடைவதற்கு இலகுவான, வினைத்திறனான உபாய மார்க்கமொன்று தெரிவு செய்யப்படும். தொழிலை ஆரம்பித்த பின்னரும் காலத்திற்குக் காலம் பொருளாதார மதிப்பீட்டை மேற்கொள்ள முடியும். பொதுவான ஆண்டறிக்கைகளை பரிசோதித்து மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
வர்த்தகத்தில் அல்லது தொழில் முயற்சியில் நிதி முகாமைத்துவம் மிக முக்கியமானதொரு அம்சமாகும். இது தொழிலின் எதிர்கால நடவடிக்கைகளைத் திட்டமிட்டுக் கொள்ளவும், காலத்திற்குக் காலம் மாற்றங்களைச் செய்வதற்கும், அவற்றை எக்காலப் பகுதியில் மேற்கொள்ள வேண்டும் என்பது பற்றிய ஒரு தெளிவினையும் வழங்கும். முன்மொழியப்பட்ட முதலீட்டின் வெற்றி, தோல்வி என்பன தொடர்பாக அம் முதலீட்டினை மேற்கொள்வதற்கு முன்னர் தத்துவங்களின் (கருதுகோள்களின்) அடிப்படையில் தரவுகளைச் சேகரித்து, அதன் மூலம் எதிர்பார்க்கப்பட்ட இலக்கை அடைவதற்கு இலகுவான, வினைத்திறனான உபாய மார்க்கமொன்று தெரிவு செய்யப்படும். தொழிலை ஆரம்பித்த பின்னரும் காலத்திற்குக் காலம் பொருளாதார மதிப்பீட்டை மேற்கொள்ள முடியும். பொதுவான ஆண்டறிக்கைகளை பரிசோதித்து மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
பொருளாதார மதிப்பீட்டிற்குப் பயன்படுத்தப்படும் அறிக்கைகளின் பயன்கள்
- தேவையான போது தொழில் எத்திசையை நோக்கிச் செல்கின்றது என்பதை அறிந்து கொள்ள முடியும்.
- தொழிலில் இலாபம் கிடைக்கின்றதா அல்லது நட்டமடைகின்றதா என்பதை அறிந்து கொள்ள முடியும்.
- எதிர்காலத்திற்கு அவசியமான முக்கிய தீர்வுகளை மேற்கொள்ள உதவும்.
- தேவையான சந்தர்ப்பங்களில் வருமான வரி, ஏனைய வரிகளைச் செலுத்த உதவும்.
- வங்கிக் கடனைப் பெற்றுக்கொள்ளும் போது தேவையான தரவுகளை வழங்குவதற்கு.
- இலகுவாகத் தீத்மானங்களை மேற்கொள்வதற்கு.
பொருளாதார மதிப்பீட்டிற்குப் பயன்படுத்தக் கூடிய அறிக்கைகள்
- சொத்துகளும், பொறுப்புகளும்
- கடன் கணக்கு
- உற்பத்திப் பதிவு
- மூலதனக் கணக்கு
- விற்பனை அறிக்கையும், கணக்கும்
- பண்ணையிலுள்ள பொருட்களின் பட்டியல்
இலாபத்தை மதிப்பிடல்
ஒரு தொழில் முயற்சியிலிருந்து பெறப்படும் அனைத்து செலவுகளையும், மொத்த வருமானத்திலிருந்து கழிக்கும் போது பெறப்படும் பெறுமானமே இலாபம் ஆகும். பொதுவாக தொழிலை ஆரம்பிக்கும் போது இலாபத்தை மதிப்பிடல் இடம்பெறும். இதனால் தொழிலை மேற்கொள்வதற்கான பருமட்டான சில விளக்கங்களைப் பெற்றுக்கொள்ள உதவும். இதற்கமைய சந்தையில் தற்போது நிலவும் விலைகளை அடிப்படையாகக் கொண்டும், சந்தைக் கட்டமைப்பில் பெரும் வேறுபாடுகள் எதுவும் எற்படாது என்னும் எடுகோளில், எதிர்காலத்தில் தமது தொழில் முயற்சியிலிருந்து பெறப்படும் இலாபம் கணிப்பிடப்படும். இதன் மூலம் சம்பந்தப்பட்ட தொழிலிற்கு அவசியமான உள்ளீடுகள் எவை? அவற்றை எக்காலப் பகுதியில் பெற்றுக்கொள்ள வேண்டும், விளைபொருட்களை எவ்வாறு சந்தைக்கு அனுப்பவேண்டும், எக்காலப் பகுதியில் சந்தைக்கு விநியோகிக்க வேண்டும் என்பன தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்ள முடியும்.
- ஒரு ஏக்கரிலிருந்து பெறப்படும் விளைவு
பொதுவாக விளைச்சல் காலநிலைமைகளில் பெருமளவில் தங்கியுள்ளதால், வருடாந்தம் அது வேறுபடலாம். இதனால், விவசாயி தனது விளைச்சலை நாட்டின் சராசரி விளைச்சலுடன் ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ள முடியும். அதாவது தனது தோட்டத்திலிருந்து பெறப்பட்ட விளைச்சல், தேசிய சராசரி விளைச்சலுடன் ஒப்பிடக் கூடியதாக உள்ளதா அல்லது அதனை விடக் குறைவா அல்லது கூடவா என்பதை தீர்மானித்தக் கொள்ள முடியும். - ஒரு ஏக்கரிலிருந்து பெறப்படும் சராசரி பெறுமானம் (பயிர்களிலிருந்து)
இது பயிர்களிலிருந்து பெறப்படும் விளைச்சல், விலை என்னபவற்றிற்கிடையேயான தொடர்பாகும். இதன் மூலம் இலாபகரமான பயிர் எது என்பதைத் தீர்மானிக்கலாம். அப்பயிரை செய்கைபண்ணி விவசாயிகள் தாம் எதிர்பார்க்கும் விளைச்சலைப் பெற்றுக்கொள்ள முடியும். - இயந்திரங்கள், சக்திவலு செலவு
தேவையான போது அவசியமான இயந்திரங்களைப் பயன்படுத்தவதன் மூலம் வினைத்திறனான உற்பத்தியைப் பெற்றுக்கொள்ள முடியும். - ஒரு ஏக்கரில் உரத்திற்கு ஏற்படும் செலவு
- ஒரு அலகிற்கான உற்பத்திச் செலவு
பண்ணை இயந்திரங்கள், உபகரணங்கள் என்பனவற்றைப் பயன்படுத்தல்
தொழில்நுட்ப அபிவிருத்தியுடன் இன்று விவசாயத்தில் இயந்திரங்களின் பாவனை பெருமளவில் அதிகரித்துள்ளதைக் காணக்கூடியதாக உள்ளது. இதற்கான பிரதான காரணங்களாக தொழிலாளர்களிற்கான தட்டுப்பாடு, தொழிலாளர்களிற்கான செலவு அதிகரித்தமை போன்ற காரணிகளைக் குறிப்பிடலாம். இயந்திரமயமாக்கப்பட்ட உபகரணங்களைப் பயன்படுத்துவதன் மூலம் செலவினைக் குறைத்து, வினைத்திறனை அதிகரிப்பதோடு, மேலும் பல நன்மைகளை விவசாயிகள் பெற்றுக்கொள்ள முடியும். ஆரம்ப நிலப்பண்படுத்தல் தொடங்கி அனைத்து பயிர்ச்செய்கை நடவடிக்கைகளிற்குமான இயந்திரங்கள் தற்போது உற்பத்தி செய்யப்படுகின்றன.
இயந்திரங்களைப் பயன்படுத்துவதிலுள்ள நன்மைகள்
பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பின்வரும் நன்மைகளைப் பெறுவதற்காகவே இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பின்வரும் நன்மைகளைப் பெறுவதற்காகவே இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
- தொழிலாளர்களிற்கான செலவைக் குறைத்தல்
- வினைத்திறனை அதிகரிப்பதற்கு
- காலத்தை மீதப்படுத்த
- விளைச்சலின் தரத்தை உயர்த்த
இயந்திரங்களைப் பயன்படுத்த முன்னர் பொருத்தமான தன்மையை பரிசோதிப்பதன் முக்கியத்துவம்
இயந்திரங்களைப் பயன்படுத்தும் போது தம்மிடமுள்ள நிலத்தின் அளவு, பொருளாதார நிலை, சுற்றாடலிற்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் போன்ற நிலைமைகளிற்கு இயந்திரங்கள் பொருத்தமானதாக உள்ளதா என்பதை அறிந்து கொள்வதே பொருத்தமான தன்மையைப் பரிசோதித்தல் ஆகும். உதாரணமாக சிறிய நிலத் துண்டத்தில் குறிப்பிட்ட சில இயந்திரங்களைப் பயன்படுத்தும் போது பிரச்சினைகள் ஏற்படலாம். சில இயந்திரங்களை கொள்வனவு செய்வதற்கு அதிகளவான செலவு ஏற்படலாம்.
இயந்திரங்களைப் பயன்படுத்துவதிலுள்ள வெற்றியைத் தீர்மானிக்கும் காரணிகள்
இயந்திரங்களைப் பயன்படுத்தவதிலுள்ள வெற்றி பெரும்பாலும் பின்வரும் காரணிகளில் தங்கியுள்ளது.
- மூலதனச் செலவு
- தொழிலாளர்களின் தொழிற்திறன்
- எரிபொருட் செலவு
- நிலத்தின் பரப்பளவு
- சுற்றாடலிற்கு ஏற்படும் பாதிப்புகள்
ஆரம்ப நிலப்பண்படுத்தல் முதல் அனைத்து பயிர்ச்செய்கை நடவடிக்கைகளின் போதும்
பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் கீழே தரப்பட்டுள்ளன. இவ்வியந்திரங்களின் படங்களைப் பார்த்து அவற்றின் கட்டமைப்புகளை இனங்கண்டு கொள்ள முடியும்.
பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் கீழே தரப்பட்டுள்ளன. இவ்வியந்திரங்களின் படங்களைப் பார்த்து அவற்றின் கட்டமைப்புகளை இனங்கண்டு கொள்ள முடியும்.
தயவுசெய்து பின்வருவனவற்றிற்கான படங்களை சிங்களத்திலிருந்து copy பண்ணி போடவும். நிலத்தைப் பண்படுத்தும் இயந்திரங்கள்
- சட்டிக் கலப்பை – Disc plough ஹரோ கலப்பை – Disc harrow
- முட் கலப்பை – Spring loaded tiller மட்டப்படுத்தி – Land leveller
நாற்றுமேடை இயந்திரங்கள்
விதையிடும் கருவி – Drum seeder
விதையிடும் கருவி – Drum seeder
நாற்று நடும் இயந்திரங்கள்
நெல் நாற்று நடுகை இயந்திரம் – Rice planter
நெல் நாற்று நடுகை இயந்திரம் – Rice planter
நோய், பீடைகளைக் கட்டுப்படுத்தும் இயந்திரங்கள்
தெளிகருவிகள் – Sprayers
தெளிகருவிகள் – Sprayers
பயிற்றுவிக்கும் போதும், கத்தரிக்கும் போதும் பயன்படுத்தப்படும் இயந்திரங்கள்
புல் வெட்டி – Grass cutter கத்தரிக்கும் செகட்டியர் – Pruning secuteur
புல் வெட்டி – Grass cutter கத்தரிக்கும் செகட்டியர் – Pruning secuteur
வேலி வெட்டி – hedge shear
தோட்ட அரிவாள் – Garden saw கவ்வாத்துக் கத்தி – Pruning Knife
ஒட்டுவதற்கான கத்தி – Budding and grafting knife
அறுவடைக்குப் பின்னர் பயன்படுத்தப்படும் இயந்திரங்கள்
இணைந்த அருவி வெட்டி – combined harvester
இணைந்த அருவி வெட்டி – combined harvester
அறுவடைக்குப் பின்னர் பதனிடும் போதும் பயன்படுத்தப்படும் இயந்திரங்கள்
சூடடிக்கும் இயந்திரம் – Paddy thresher
சூடடிக்கும் இயந்திரம் – Paddy thresher
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக