யா அல்லாஹ்!!!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன்.என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக.

ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

மாதூர் வேளாண் மையத்தில் முயல் வளர்ப்பு பயிற்சி



காரைக்கால்: காரைக்கால் மாதூர் வேளாண் அறிவியல் நிலையத்தில், வான்கோழி, முயல் வளர்ப்பு பயிற்சி தொடங்கியது. நிலைய தலைவர் சுரேஷ் பயிற்சி முகாமை தொடங்கி வைத்து பேசும்போது, மாதூர் வேளாண் அறிவியல் நிலையத்தில், கால்நடை வளர்ப்பு பயிற்சியோடு, வான்கோழி, நாட்டுக்கோழி, முயல், மீன் உள்ளிட்ட பல்வேறு வளர்ப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. அத்துடன் முயல் விற்பனையும் தொடங்கியுள்ளோம். ஒரு ஜோடி ரூ.300க்கு விற்பனை செய்யப்படுகிறது. முயல் மற்றும் வான்கோழி வளர்க்க ஆர்வமுள்ளவர்கள் நிலையத்தை அணுகலாம். மேலும், விவசாயிகளுக்கு தேவையான நெல் ரகங்கள் உற்பத்தி செய்து விதையாக வழங்கி வருகிறோம். இது தவிர வீட்டிலிருந்தபடியே பல்வேறு உணவு மற்றும் கைவினைப் பொருட்களை தயாரித்தல் போன்ற பயிற்சிகளும் நிலையத்தில் அளிக்கப்படுகிறது. ஆர்வமுள்ள சுய உதவிக்குழுவினர் நிலையத்திற்கு வருகை தந்து பயிற்சி பெற்று பயன் பெறலாம் என்றார். நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் விஜயக்குமார், கால்நடை தொழில்நுட்ப வல்லுனர் கோபு, விரிவாக்க தொழில் நுட்ப வல்லுநர் வேணுகோபால், பண்ணை மேலாளர் பாலசண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை: