யா அல்லாஹ்!!!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன்.என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக.

புதன், 16 ஏப்ரல், 2014

எதிர்கால விவசாயம் பண்ணை கருவிகளின் கைகளில்!

இன்று விவசாயத்திற்கு இருக்கும் பெரும் பிரச்னைகளில் ஒன்று ஆட்கள் பற்றாக்குறை. எந்த வகையான பயிர் செய்தாலும் ஆட்கள் கிடைப்பது பெரும்பாடாக இருந்து வருகிறது. தற்போது, ஆட்கள் பற்றாக்குறையை சமாளிப்பதில் பண்ணைக் கருவிகளுக்கு முக்கிய பங்கு உண்டு. எதிர்காலத்தில் கருவிகள் இல்லையென்றால் விவசாயம் செய்வது கேள்விகுறியாகிவிடும் என்ற நிலை வந்தாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை.
இப்படியொரு நிலையில் விவசாயத்தில் கருவிகளின் முக்கியத்துவத்தை பற்றி ‘பண்ணை இயந்திரமயமாக்குதல்’ என்ற தலைப்பில் மகராஷ்டிரா மாநிலம் புனேவில் கடந்த மாதம் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
இந்த கலந்துரையாடலில் உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு, பஞ்சாப் என பல மாநிலங்களிலிருந்து வேளாண் இயந்திரவியல் துறை பேராசிரியர்கள், விஞ்ஞானிகள், வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர்கள், விவசாயிகள் என 60க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கலந்துரையாடலின் துவக்க விழாவில் பேசிய லெம்கென் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆன்டனி வான்டெர் லே, ''இந்தியாவில் சிறு விவசாயிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அவர்களின் மூலமாக ஆண்டுக்கு 120 மில்லியன் டன் விளைபொருட்களின் உற்பத்தி நடந்து வருகிறது. சிறு விவசாயிகளும் இயந்திரங்களை பயன்படுத்தினால் இதைவிட கூடுதலான விளைச்சலை பெற முடியும். இதுகுறித்து வேளாண் அமைச்சரிடமும் விவாதித்துள்ளோம்" என்றார்.

மணிப்பூர், மத்திய வேளாண் பல்லைகக்கழக துணைவேந்தர் எஸ்.என்.பூரி பேசும்போது, "1947 ஆம் ஆண்டு இந்தியாவின் உணவு உற்பத்தி 50 மில்லியன் மெட்ரிக் டன்னிலிருந்து 2013 ஆம் ஆண்டு 263 மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது. 2050 ஆம் ஆண்டில் இப்போது இருக்கும் மக்கள் தொகையைவிட 50 கோடி மக்கள் கூடுதலாக இருப்பார்கள். அதற்கு அதிக உணவு உற்பத்தி இருந்தால்தான் சமாளிக்க முடியும். வேளாண்மையில் ஆண்டுக்கு 6 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்படுகிறது. அதை விவசாயிகள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
 மணிப்பூரில் நெல் விளைச்சலுக்காக நடத்திய போட்டியில் 1 ஹெக்டேருக்கு 6.5 டன் நெல்லை உற்பத்தி செய்திருக்கிறார்கள் அந்த மாநில விவசாயிகள். சரியான முறைகளை விவசாயிகளுக்கு கற்றுக் கொடுத்தால் உற்பத்தியும் கூடுதலாக இருக்கும். விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் பிற தொழில்களுக்கு சென்றுவிட்டார்கள். அவர்களை திரும்பவும் விவசாயத்தின் பக்கம் திருப்ப வேண்டும். கிராமங்களில் வேலை வாய்ப்பின்மை அதிகமாக உள்ளது. அதற்கு தகுந்த உள்கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.

மேலும், வடகிழக்கு மாநிலங்களில் பெட்ரோலியம் இருப்பதாக டி.வி. செய்திகளில் சொல்கிறார்கள். மாற்று எரிசக்திக்கு பல வழிகள் இருக்க, ஏன் விவசாய நிலங்களை தெரிவு செய்ய வேண்டும். பெரும்பான்மையான மாநிலங்களில் டிராக்டர்கள் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனா, டிராக்டர்களில் இணைக்கப்படும் கருவிகளை பெரும்பான்மையோர் வாங்குவதில்லை. அவ்வப்போது அறிமுகப்படுத்தப்படும் தேவையான கருவிகளை வாங்கி விளைச்சலை பெருக்க விவசாயிகள் முன்வர வேண்டும். கருவிகளை விற்கும் நிறுவனங்கள் அந்தக் கருவிகளை கையாள்வதற்கான பயிற்சிகளையும் வழங்க வேண்டும்" என்று வேண்டுகோள் வைத்தார்.
இந்திய வேளாண் பொறியாளர்கள் கூட்டுறவு சங்கத் தலைவர் மாயண்டே பேசும்போது, "மொத்தமுள்ள 60 மண் வகைகளில், இந்தியாவில் 46 மண் வகைகள் உள்ளது. பகுதி வாரியாக 50 வகையான சீதோஷ்ண நிலை (Climates) காணப்படுகிறது. இவ்வளவு இயற்கையான வளங்கள் இருந்தும் விவசாயத்தில் பல பிரச்னைகள் இருக்கு. இந்த பிரச்னைகளை தீர்க்கும்பொருட்டு மாற்றங்களை கொண்டு வரவேண்டும்" என்றார்.

பெங்களூர், இந்திய வேளாண் அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தர் நாராயண கவுடா பேசும்போது, "இந்தியாவில் 124 கோடி மக்கள் இருக்கிறார்கள். அதில் 70 கோடி மக்கள் விவசாயம் சார்ந்த தொழிலில் இருக்கிறார்கள். விவசாயத்தில் இளைஞர்களுக்கு வாய்ப்பளித்தால் எதிர்கால விவசாயம் இன்னும் சிறப்பாக இருக்கும். 1950களில் உணவை இறக்குமதி செய்தோம். இப்போது ஏற்றுமதி செய்யும் அளவுக்கு உயர்ந்துள்ளோம். விவசாயத்தை கணவன்&மனைவி என்ற குடும்ப அமைப்பு தொடர்ந்து வழி நடத்தி வருகிறது. விவசாயிகளுக்கு சரியான வழிகாட்டுதல் இருந்தால் மட்டுமே அவர்கள் பண்ணையை வழி நடத்துவார்கள்.
இந்தியாவில் இன்னும் சாலையோரங்களில்தான் அறுவடை செய்த பயிர்களிலிருந்து தானியங்களை பிரித்தெடுக்கிறார்கள். சிறு விவசாயிகள் குழுவாக செயல்பட்டால் அறுவடை செய்யும் கருவிகளை பயன்படுத்திகொள்ள வாய்ப்புகள் இருக்கு. இந்த தலைமுறை இளைஞர்கள் விவசாயத்தைவிட்டு இடம்பெயர்ந்து விட்டார்கள். இருப்பவர்களையாவது விவசாயத்தில் தக்கவைக்க வேண்டுமானால் பண்ணை சார்ந்த வேளாண் தொழில்நுட்ப பயிற்சிகளை வழங்க வேண்டும்" என்றார்.

மகராஷ்டிரா மாநிலம், மகாத்மா பூலே வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் டி.எ. மூரே பேசும்போது, "விவசாயத்தின் அடுத்தக்கட்டம் இயந்திரமாக்கப்பட்ட பண்ணை விவசாயமாகத்தான் இருக்கும். தற்போது பெரும் பயிர்களை (மேஜர் கிராப்ஸ்) தவிர்த்து குறைந்தகால பயிர்களை (மைனர் கிராப்ஸ்) பயிர் செய்கிறார்கள். அதில் உற்பத்தியும் நிலையான அளவில் வளர்ந்து வருகிறது. ஆனால் குறைந்த ஆட்களை வைத்துக்கொண்டு செய்தால் குறைவான உற்பத்திதான் கிடைக்கும்.
இதற்கு ஆட்கள் கிடைக்கவில்லை என்று குறை சொல்ல முடியாது. கரும்பு அறுவடைக்கு ஆட்களை வைத்து செய்யும்போது செலவு அதிகமாகிறது. வாடகைக்கு கருவிகளை வைத்து அறுவடை செய்யும்போது தேவையான அளவு வேலையும் செய்துகொள்ள முடிகிறது. செலவும் குறைகிறது. 90களில் டிராக்டர் பரவலானபோது விவசாயம் முதற்கட்டமாக இயந்திரமயமாக்கப்பட்டது. இப்போது 16 எச்.பியிலிருந்து 60 எச்.பி. வரையான டிராக்டர்கள் கிடைக்கிறது. இயந்திரங்களுக்கு ஏற்ற பயிர்களை செய்யும் முறை தற்போது பரவலாகி வருகிறது.

இன்னும் பருத்தியை பறிப்பதற்கான சிறிய அளவிலான இயந்திரங்கள் வரவில்லை. கரும்பு அறுவடை முழுமையாக இயந்திரமாக்கப்படவில்லை. பல்கலைக்கழகம் இயந்திரங்களை உற்பத்தி செய்ய முடியாது. ஆனால் நிறுவனங்கள் உருவாக்கும் அதிக பயனுள்ள இயந்திரங்களை விற்க ஊக்கப்படுத்த வேண்டும். எதிர்காலத்தில் அறுவடை என்பது இயந்திரங்களால் மட்டுமே நடைபெறக் கூடிய ஒன்றாக இருக்கும்" என்றார்.

த. ஜெயகுமார்

தண்ணீர் கிடைக்காத போர்வெல்லிலும் தண்ணீர் எடுக்கலாம் !

தண்ணீர் கிடைக்காத போர்வெல்லிலும் தண்ணீர் எடுக்கலாம் !
ஆர். குமரேசன்
ஆலோசனை
கடுமையான வறட்சி காரணமாக, தமிழகத்தின் பல பகுதிகளில் கிணறுகளிலும், ஆழ்துளைக் கிணறுகளிலும் தண்ணீர் மட்டம் வெகுவாகக் குறைந்து விட்டது. பல தோட்டங்களில், அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேர பாசனத்திலேயே கிணறு வற்றி விடுகிறது. அதனால், 'புதிதாக ஆழ்துளைக் கிணறு அமைக்கலாமா?, கிணற்றைத் தூர் வாரலாமா?’ என்று குழம்பித் தவிக்கும் விவசாயிகளுக்காக... கோடை காலத்தில் கிணறு மற்றும் ஆழ்துளைக் கிணறுகளைப் பராமரிக்கும் முறைகள் பற்றி ஆலோசனை சொல்கிறார், திண்டுக்கல் நீர் வடிப்பகுதி முகமையின் விரிவாக்க அலுவலரும், வேளாண் பொறியாளருமான பிரிட்டோ ராஜ்.
''கோடை காலங்களில் கிணறுகள், போர்வெல்களில் தண்ணீர் மட்டம் குறைந்துதான் காணப்படும். நீர் நிலைகளுக்கு தண்ணீர் கொடுக்கும் நிலத்தடி ஓடைகள் வறண்டு போயிருப்பதுதான் தண்ணீர் குறைவுக்குக் காரணம். கோடையில் உங்கள் கிணறுகளில் அரை மணி நேரம் மட்டுமே தண்ணீர் கிடைத்தாலும்... 'இன்னமும் உங்கள் நிலத்தடி நீர்வளம் நன்றாக இருக்கிறது’ என்றுதான் அர்த்தம். அதனால், கவலைகொள்ளத் தேவையில்லை. கிடைக்கும் தண்ணீரைக் கொண்டு எவ்வளவு பரப்பில் பாசனம் செய்ய முடியுமோ... அந்த அளவுக்கு மட்டும் பாசனம் செய்ய வேண்டும். குறிப்பாக, வாய்க்கால் பாசனத்தைத் தவிர்க்க வேண்டும். சொட்டு நீர்ப்பாசனம் மூலமாக, குறைந்த தண்ணீரில் அதிக பரப்பில் பாசனம் செய்யலாம். அதனால், புது போர்வெல் பற்றி யோசிக்கத் தேவையில்லை'' என்ற பிரிட்டோ ராஜ் தொடர்ந்தார்.
போர்வெல் போடாதீர்கள்!
''பொதுவாக, கோடை காலத்தில் போர்வெல் அமைக்கக் கூடாது. நிலத்தடியில் உள்ள பாறை இடுக்குகளுக்கு தண்ணீர் கொடுக்கும் ஏரி, குளம், குட்டைகள் வறண்டு இருப்பதால், பாறை இடுக்குகளில் கோடை காலங்களில் தண்ணீர் இருக்காது. 80 அடி, 150 அடி,
320 அடி, 500 அடி என ஆங்காங்கே கிடைக்கும் ஊற்றுக் கண்களில் ஈரம் இருக்காது என்பதால்,தண்ணீரைத் தேடி அதிக ஆழத்துக்கு போர்வெல் அமைக்க வேண்டி வரும். அதிக ஆழத்துக்கு ஊடுருவி, 700, 800 அடி ஆழத்தில் தண்ணீர் வந்தாலும்... போர்வெல் டிரில்லர் சுழலும்போது, கீழே கிடைக்கும் தண்ணீருடன், மேல்பகுதியில் உள்ள மண் கலந்து, சிமெண்ட் போல மாறி, மேலே சில நூறு அடிகள் ஆழத்திலேயே உள்ள வறண்ட ஊற்றுக்கண்களின் வாய்ப்பகுதியை அடைத்துவிடும். அதனால், கோடையில் அதிக ஆழத்துக்கு போர்வெல் அமைப்பதைத் தவிர்ப்பது நல்லது.
இதையும் தாண்டி போர்வெல் அமைப்பவர்கள், ஒன்றை கவனத்தில் கொள்ள வேண்டும். பொதுவாக, 'பணம் செலவாகும்’ என நினைத்து, கேசிங் பைப்பை அதிக ஆழத்துக்கு இறக்க மாட்டார்கள். ஆனால், பாறை மட்டம் வரை கேசிங் பைப் இறக்க வேண்டும். அப்போதுதான் போர்வெல்லுக்குள் மண் சரிவு ஏற்படுவதைத் தவிர்க்க முடியும். இல்லாவிடில், மண் சரிந்து 'நீர் மூழ்கி மோட்டார்’களை குறிப்பிட்ட ஆழத்துக்கு கீழ் இறக்க முடியாமலோ... அல்லது எடுக்க முடியாமலோ போய்விடும்.  
இறந்து போன போர்வெல்லிலும் தண்ணீர்!
'புது போர்வெல் அமைச்சு, தண்ணிக்குப் பதிலா வெறும் புகைதான் வந்தது’ என வேதனைப்படும் விவசாயிகள் அனேகம் பேர். ஆனால், எவ்வளவு வறண்ட பகுதியானாலும் அப்படி புகை வந்த போர்வெல்களிலும், தண்ணீரைக் கொண்டு வந்துவிட முடியும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது மழைநீர்ச் சேமிப்பு அமைப்பை உருவாக்குவதுதான். அதற்கு, இந்தக் கோடைதான் சரியான நேரம். கோடையில் நிச்சயம் ஒரு மழை கிடைக்கும். அந்த மழை நீரை முழுமையாக அறுவடை செய்து, போர்வெல் குழாயில் செலுத்தி, 'நீர்ச் செறிவூட்டல்’ செய்தால், தண்ணீர் ஊறி விடும்.
கிணறு அல்லது போர்வெல்லில் இருந்து மூன்றடி தூரத்தில்... 6 அடி நீளம், 6 அடி அகலம், 4 அடி ஆழம் என்ற அளவில் குழி எடுத்துக் கொள்ள வேண்டும். அந்தக் குழியின் அடிப்பாகத்தில் இருந்து அரையடி உயரத்தில் 2 அங்குல பைப் ஒன்றைப் பொருத்தி, அதன் இன்னொரு முனையை கிணறு அல்லது போர்வெல்லுக்குள் இருக்குமாறு செய்ய வேண்டும். பிறகு, குழியில் 3 அடி உயரத்துக்கு கூழாங்கற்கள் அல்லது அருகில் கிடக்கும் சிறிய கற்களை நிரப்பி வைத்தால்... மழைநீர், கற்களில் வடிகட்டப் பட்டு கிணறுகளில் சேகரமாகும். இப்படி தண்ணீர் போர்வெல்லுக்குள் செல்லும்போது, ஏற்கெனவே ஊற்றுக்கண்களை அடைத் திருக்கும் சிமெண்ட் போன்ற பூச்சுகள் கரைந்து, புது ஊற்றுகள் திறந்து... 'இனி தண்ணீரே கிடைக்காது’ என நீங்கள் நினைத்த... இறந்துபோன போர்வெல்லிலும் தண்ணீர் கிடைக்கும். மழை கிடைத்த நான்காவது நாளே, உங்கள் போர்வெல் குழாயில் சிறிய கல்லை கயிற்றில் கட்டி இறக்கி... தண்ணீர் ஊறி இருப்பதை அனுபவப்பூர்வமாக உணர முடியும்.
மானாவாரி விவசாயம் செய்பவர்கள், தங்கள் நிலங்களில் தாழ்வான பகுதிகளில், வரப்பு ஓரங்களில் ஆங்காங்கே 20 அடி நீளம், ஒரு அடி ஆழம் உள்ள வாய்க்கால்களை எடுக்க வேண்டும். குழியில் எடுக்கும் மண்ணை குழியின் மேல் பகுதியில் அணைபோட வேண்டும். இப்படிச் செய்தால், மழைக் காலத்தில் கிடைக்கும் தண்ணீர், குழிகளில் சேகரமாகி, நிலங்களில் படுக்கை வசத்தில் நீர் பரவி, மண்ணின் ஈரப்பதம் குறையாமல் இருக்கும்'' என்ற பிரிட்டோ ராஜ் நிறைவாக,
உயிர் உரங்களை உடனே போடுங்க!
''கோடை காலங்களில் முக்கியமாக செய்ய வேண்டிய விஷயம் ஒன்றுள்ளது. செடிகளின் வேர்களில் இருந்து அரையடி தூரத்தில் மண்வெட்டியால் மண்ணைக் கிளறி, அசோஸ்பைரில்லம், அசோட்டா ஃபேக்டர், சூடோமோனஸ் போன்ற உயிர் உரங்களை மண்ணுடன் கலந்து மூட வேண்டும். பெரிய மரப்பயிர்களுக்கு 3 கிலோ வரையும், சிறிய பயிர்களுக்கு அரை கிலோ வரையும் கொடுக்கலாம். வேளாண்மைத்துறை கிடங்குகளில் மானிய விலையில் இவை கிடைக்கின்றன. இந்த உயிர் உரங்கள், மண்ணைப் பொலபொலப்பாக்கி, வேர்களுக்கு காற்றோட்டம் கிடைக்கச் செய்கின்றன. அத்துடன் நீரையும், மண்ணையும் பிணைக்கும் வேலையைச் செய்கின்றன. மண்துகள்கள், சல்லிவேர்களுக்கிடையே ஒரு இணைப்பு உண்டாவதால், சல்லிவேர்கள் சத்துக்களை எளிதில் எடுத்துக் கொள்ள ஏதுவாகும்'' என்றார்.
தொடர்புக்கு,  பிரிட்டோ ராஜ்,
செல்போன்: 99444-50552

சனி, 12 ஏப்ரல், 2014

காடை வளர்ப்பு

காடை வளர்ப்பு தமிழ்நாட்டில் பிரபலமாகிக் கொண்டு வருகின்றது. காடைகள் பெரும்பாலும் இறைச்சிக்காக வளர்க்கப்படுகின்றன. டெல்லி, சென்னை, பெங்களூரு, திருச்சி, மதுரை மற்றும் கோவை போன்ற மாநகரங்களிலும் தமிழகத்தின் ஏனைய நகரங்களிலும் காடை வளர்ப்புப் பண்ணைகள் பெருமளவில் நடத்தப்படுகின்றன.
இறைச்சிக் காடை வளர்ப்பின் முக்கிய அம்சங்கள்
மிகக் குறைந்த இடத்தில் அதிக எண்ணிக்கையில் ஜப்பானிய காடையை வளர்க்கலாம். கோழிவளர்ப்பினைப் போன்று, அதிக அளவில் முதலீடு தேவையில்லை. இத்தொழிலில் குறைந்த மூலதனத்துடன் சிறிது பயிற்சி பெற்ற யாரேனும் ஈடுபடலாம். ஜப்பானிய காடைகளுக்கு நோய் எதிர்ப்புத் திறன் அதிகம். இதனால் எந்த ஒரு தட்பவெப்ப நிலையிலும் காடைகள் நன்கு வளர்கின்றன. கோழிகளைப் போல் பல தடுப்பூசிகள் அளிக்கவேண்டிய அவசியம் இல்லை. ஜப்பானியக் காடைகள் ஐந்து முதல் ஆறு வாரத்திற்குள் விற்பனைக்குத் தயாராகி விடுகின்றன. இதனால் முதலீடு செய்த குறைந்த நாட்களிலேயே லாபத்தைப் பெற முடியும். ஜப்பானியக் காடை ஆறுவார காலத்தில் அதிகபட்சமாக 500 கிராம் அளவே தீவனம் உட்கோள்வதால் தீவனச் செலவு அதிகமின்றி குறைந்த முதலீட்டில் காடை வளர்ப்பை மேற்கொள்ள முடிகின்றது.
ஜப்பானியக் காடை இறைச்சி
சுத்தம் செய்யப்பட்ட காடை இறைச்சியின் எடை உயிருள்ள காடை எடையில் சுமார் 65 முதல் 70 சதவிகிதம் வரை இருக்கும். சுமார் 140 கிராம் எடை உள்ள காடையைச் சுத்தம் செய்தால் 100 கிராம் எடையுள்ள இறைச்சி கிடைக்கும். காடை இறைச்சி மிகவும் சுவையாக இருப்பதால் நல்ல விற்பனை விலை கிடைக்கின்றது. காடை இறைச்சியில் அதிகப் புரதமும் (20.5 சதவிகிதம்) குறைந்த அளவு கொழுப்பும் (5.8 சதவிகிதம்) இருப்பதால் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் ஏற்ற உணவாய் கருதப்படுகின்றது.
ஜப்பானியக் காடை விற்பனை
ஒரு காடை வளர்ப்புக்கு ரூ. 7 வீதம் செலவாகும். ஒரு நாள் காடை குஞ்சு ரூ. 2 ஆகும். தீவனம் அதிகபட்சமாக 450 கிராம் கொடுக்க வேண்டியிருப்பதால் ரூ. 5 ஆகும். மற்றைய செலவு 50 காசு ஆக மொத்தம் ரூ. 7.50 ஒரு காடையை உற்பத்தி செய்து ரூ. 9க்கு விற்கலாம். ஆகவே ஒரு காடை வளர்ப்பு மூலம் ரூ. 1.50 கிடைக்க வாய்ப்புள்ளது. காடையை இறைச்சிக்காக விற்பனை செய்தால் அதிக இலாபம் கிடைக்கும்.

காடை இனங்கள்
நியூசிலாந்து காடை
பாப் வெள்ளைக் காடை
சைனாக் காடை
மடகாஸ்கர் காடை
கலிபோர்னியா காடை
நியூகினியா காடை
ஜப்பானிய காடை
Quail 002 Quail 004
ஜப்பானிய காடை
Quail 002 Quail 004

நம்மாழ்வார்

ஆரம்பத்தில்
எல்லா
முயற்சிகளும்
வீண் போலத்
தோன்றும்
ஒன்றுமே
நடக்காதோ
என்று தோன்றும்
ஆனால்,
சட்டென ஓர் நாள்
காத்திருத்தல்
முடிவுக்கு
வந்துவிடும்,
யதார்த்த நிலை
தோன்றிவிடும்
வித்து பிளந்து கொண்டு
மேலே வரும்,
செடியாகும்,
ஆனால் ஒன்றை
மறந்துவிடக்
கூடாது
ஒன்றுமே நடக்கவில்லை
என்று நினைத்திருந்த போது
பூமிக்கடியில் வித்து
தன் வேலையைச்
செய்து கொண்டுதான்
இருந்தது.
-நம்மாழ்வார்

வியாழன், 10 ஏப்ரல், 2014

COOLING PAD SYSTEMS

COOLING PAD SYSTEMS - WET PAD SYSTEMS
GREENHOUSE COOLING PAD SYSTEMS -
ANIMAL EVAPORATIVE COOLING SYSTEMS -
INDUSTRIAL EVAPORATIVE COOLING
GREENHOUSE AIR CONDITIONING SYSTEMS OF ALL TYPES



Poultry House Concept
Cooling pads/evaporative cooling systems are used wherever air conditioning is required where there are higher than desirable temperatures. Our evaporative cooling air conditioning systems have been offered since they were invented and patented in 1956. We have delivered fan and cooling pad systems to over 70 countries in all climates of the world, covering a multitude of horticultural, agricultural and warehouse cooling is required. In using these air conditioning systems proper engineering and design is required as the system has to be integrated with ventilation, exhaust and special air conditioning fans. The Acme/Aerotech and Munters, serve specialty markets and our evaporative air conditioning system is simple and provides cooling, efficient, low maintenance operation.
In connection with our cooling systems for greenhouse, agriculture and warehouse, we offer special vents for protection in the winter or when the system is not in operation. That includes rack and pinion vents and roll-up sidewall and endwall systems. When considering cooling your structure, you may also to wish to consider these various off-season non-use periods of the year.
USGR provides complete evaporative cooling systems from the two premier companies in this field:
USGR can provide a complete evaporative cooling system for your needs.
Following information is available with order upon request:  
  • Maintenance Guide
  • Approved products and chemicals for use with pads
  • Edge Coating Treatment
  • Mineral Buildup Prevention Guide
  • Particulate Removal Capabilities
Contact Supplier:   

Mr.Fahad.

Email:fahadpec@gmail.com
Mob:+917200003594
         +918870511608
whatsapp+971507272189

COOLING PADS Greenhouses and Animal houses


COOLING PADS

FOR GREENHOUSE, HOG AND POULTRY AND
OTHER ANIMAL CONFINEMENT BUILDINGS

MUNTERS PADS - CELDEK PADS - ACME KOOLCEL PADS
KUUL PADS - HUMICOOL PADS
WET PADS MADE FROM CELLULOSE
PAPER WITH HONEYCOMB CONFIGURATION

EVAPORATIVE COOLING PADS AND COOLING PAD SYSTEMS
FOR GREENHOUSE AND ANIMAL ENVIRONMENTS.



A PROVEN PERFORMER
Pads are cellulose cooling cells 4" (10 cm) and 6" (15 cm) deep, 12"(30 cm) and 24" (60 cm) wide and available in 12" (30 cm) increments from 24"(60 cm) to 72" tall with two pieces of 4"(10 cm) deep combined to make 84"(214 cm) and 96"(244 cm) tall pads. Al they are available 78" (198 cm) tall. The cooling cells are made from a specially formulated cellulose paper impregnated with insoluble anti-rot salts. It is designed with an exclusive cross-fluted configuration which induces highly turbulent mixing inside the pad between the water and the air, and contributes to the evaporative efficiency. The cross-fluted design makes pads a strong self-supporting pad with high evaporative efficiency and low pressure drop (resistance to air flow).
A face velocity of 250 feet(75 m) per minute for 4"(10 cm) and 400 feet(120 m) per minute for 6"(15 cm) is recommended for the most economical cost and operation.
Besides the cooling pads, other components of interest in a complete evaporative cooling system include water distribution and return systems.

SIZING PAD

Determine Total Summer Cooling Required in CFM, then divide by velocity to obtain pad area in square feet. The pad area divided by the length will determine the height in feet.

4" AND 6" ACME KOOL-CEL COOLING PAD

The 4" Acme Kool-Cel pad is constructed with air flow at equal 45- angles which allows air flow to enter from either side of the pad.

4"AND 6" MUNTERS CELDEK COOLING PAD

Munters has different configurations for different industries. The 6" CELdek pad contains flutes organized in two angles, one with steep pitch and the other less pitched. The air must enter the pad from the side with the steep pitch.

GLACIER-COR COOLING PADS

Evaporative cooling with Glacier-Cor - utilizes and perfects the time-proven, energy-efficient method of cooling air by evaporating water. Glacier-Cor Cooling Pads are composed of layers of mechanically corrugated, saturating-quality, kraft paper (with high water retention properties) that has been impregnated with thermo-setting resins. The corrugation forms channels at precisely engineered angles. Air passes through the channels, evaporating the water that is constantly present. The result is highly effective and efficient cooling. 

HIGH EFFICIENCY

Higher cooling efficiencies with lower volumes of air allows use of smaller fans in R&D greenhouse, institutional greenhouses, etc.

LONGER LIFE

Kool-Cel, Munters CELdek offer longest life of any pads. Munters has warehouses around the world.

CONSISTENT PERFORMANCE

Throughout its life, our pad efficiency does not change because its cross-corrugated structure resists clogging, sagging, gapping and fouling. With simple procedures, it's literally self-cleaning!

CUSTOMIZED COOLING

We offer a variety of pad depths and angles, allowing you to choose the perfect cooling system for you specific application. Greenhouse pads come in many different sizes. We have cooling pads for every type of greenhouse.

COMPATIBILITY

All of our pads are compatible with our air-conditioning components.

APPLICATION VERSATILITY

  • Comfort cooling for poultry or livestock.
  • Space cooling of agricultural buildings.
  • Humidifying and cooling of greenhouses.
  • Various industrial applications.

MI-T-CoolDIMENSIONING A GREENHOUSE

Solar radiation accounts for most of the heat load in the greenhouse. The table below shows the air flow that will be required, depending on the type of shading equipment and the amount of solar radiation entering the greenhouse. The air flow figures quoted below are approximations.
The table below expresses the relationship between solar radiation, shading and the required air flow per m2 of greenhouse surface.
Shading %Solar radiation W/m2Airflow m3/m2
greenhouse surface, h
10
810
254
20
720
225
30
630
189
40
540
169
External solar radiation: 900 W/m2
  • Cheaper Effective Cooling
  • Easy to Install
  • Long Lasting
  • Suitable for Cooling all types of Glasshouses and Growing Sheds
  • Cool and Humidify your Plants
  • Seedlings
  • Ferns
  • Flowers
  • Vegetables
  • Shrubs
Following information is available with order upon request:  
  • Maintenance Guide
  • Approved products and chemicals for use with pads
  • Edge Coating Treatment
  • Mineral Buildup Prevention Guide
  • Particulate Removal Capabilities
Contact Supplier:   

Mr.Fahad.

Email:fahadpec@gmail.com
Mob:+917200003594
         +918870511608
whatsapp+971507272189

cooling pad cooling system

cooling pad cooling system

Exhaust fan and cooling pad  cooling system
Oil-Fired Hot-Air Heater for Greenhouse,Poultry and IndustrialOil-Fired Hot-Air Heater for Greenhouse,Poultry and Industrial
                                               setting
   
Oil-Fired Hot-Air Heater for Greenhouse,Poultry and Industrial industrial/greenhouse/poultry farm fibre cooling pad

Contact Supplier:   

Mr.Fahad.

Email:fahadpec@gmail.com
Mob:+917200003594
         +918870511608
whatsapp+971507272189

புதன், 9 ஏப்ரல், 2014

ஆடு வளர்ப்பு – பரண் மேல் வளர்க்கும் முறை


goatfarm1மிகக்குறைந்த செலவில் பசு, எருமை போன்ற கால்நடைகளில் வளர்க்க முடியாத சூழலில் கூட வெள்ளாடுகளை வளர்க்கலாம். இதற்கு முதலீடு மிகவும் குறைவு. மேலும் வெள்ளாடுகள் மழை அளவு குறைவாக உள்ள வறண்ட நிலங்களில் கூட வளர்த்தல் எளிது. எனவே தான் வெள்ளாடுகளை “ஏழைகளின் பசு” என்று அழைக்கின்றனர்.
வெள்ளாடுகள் (மாமிசம்) இறைச்சி மற்றும் பால் தேவைக்காக வளர்க்கப்படுகின்றன. நிலமற்ற மற்றும் குறுநில ஏழை விவசாயிகளுக்கு வாழ்வுக்கு சிறந்த வழிகாட்டியான ஆடுகள் அதிக ஊட்டச்சத்துள்ள பாலை வழங்குகின்றன.
வெள்ளாடு வளர்ப்பின் நன்மைகள்
வெள்ளாடு வளர்ப்பில் முதலீடு மிகவும் குறைவு.
இவை அளவில் சிறியதாக உள்ளதால் கொட்டகைப் பராமரிப்புச் செலவு குறைவு.
ஆடுகள் மிக்குறைந்த காலத்தில் 10-12 மாதங்களில் பருவ வயதை அடைந்து விடும்.
இவை 16-17 மாதங்களில் குட்டி ஈன்று விடும்.
பொதுவாக ஆடுகள் ஒரு தருணத்தில் 2 குட்டிகள் மட்டுமே போடும். 3 அல்லது நான்கு குட்டிகள் போடுவது மிகவும் அரிது.
பரண் மேல் வளர்க்கும் முறை : (காணொளி- http://youtu.be/KnY3OjwXwz4?t=5m44s)
வெள்ளாடுகளை அதிக எண்ணிக்கையில் வளர்க்க சிறந்த முறை பரண் மேல் வளர்க்கும் முறையாகும்.
பரண் மேல் ஆடு வளர்ப்பில் ஆடுகள் மரத்தினால் ஆன பரண் போன்ற அமைப்பின் மேல் வளர்க்கப்படுகிறது.
பரண் மேல் ஆடு வளர்ப்பு கொட்டகை தரையிலிருந்து உயரமான இடத்தில் குறைந்த்து 4 – 5 அடி உயரத்தில் இருப்பதால் ஆட்டு சாணி மற்றும் சிறுநீர் போன்றவை கீழே சேகரமாகிறது. ஆதலால் தினமும் சுத்தம் செய்யும் பணி மிகவும் குறைவாக இருக்கிறது.
பரண் மேல் ஆடு வளர்ப்பு முறையில் வளர்ப்பதால் ஆடுகள் சுகாதரமாகவும் நோய் பரவும் தன்மை குறைவாகவும் இருக்கும்.
வெள்ளாடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பாமல் கொட்டகையிலே பசுந்தீவனம் மற்றும் அடர்தீவனம் அளிக்கப்படுகிறது.
இலவச மின்சாரம்:
பரண் மேல் ஆடு வளர்க்கும் போது அதற்கு தேவையான தண்ணீரினை இலவச மின்சாரத்தில் எடுத்துக்கொள்ளலாம். ஆடு வளர்ப்பு மட்டும் அல்ல… வேளாண்மை சார்ந்த அனைத்து பண்ணைத் தொழில்களுக்குமே .. விவசாய கிணறுகளில் இருந்து இலவச மின்சாரம் மூலம் எடுக்கப்படும் நீரினை பயன்படுத்திடலாம் என தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கடந்த ஆண்டு மார்ச் 30 – 2012 இல் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளது.
எனவே எந்த வித பயமும் இன்றி விவசாயிகள் இலவச மின்சாரம் பயன்படுத்தி விவசாய கிணறுகளில் இருந்து எடுக்கும் நீரினை பட்டு வளர்ப்பு , கோழி பண்ணை , ஆடு மற்றும் மாட்டுப் பண்ணை உட்பட அனைத்து விதமான வேளாண் பண்ணைத் தொழில்களுக்கும் பயன்படுத்திடலாம்.

விவசாய கண்காட்சி

கோவையில் உள்ள கொடிசியா அரங்கத்தில் நடைபெறும் விவசாய கண்காட்சி (18-21 July 2014) பற்றிய மற்ற விவரங்களுக்கு

Agri Intex

Codissia Trade Fair Complex, Coimbatore, Tamil Nadu, India,

18 - 21 JULY 2014




http://agriintex.codissia.com/

தண்டோரா

தண்டோரா பசுமைக் குழு வான்கோழி! சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தில் ஏப்ரல் 23-ம் தேதி வான்கோழி வளர்ப்பும், 24-ம் தேதி மானாவாரி மக்காச்சோளத்தில் ஒருங்கிணைந்தப் பூச்சி நிர்வாகம் ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும். தொடர்புக்கு, தொலைபேசி: 04577-264288 கறவை மாடு! சேலம், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், ஏப்ரல் 29-ம் தேதி கறவை மாடு வளர்ப்பும், நோய் பராமரித்தலும் பற்றிய பயிற்சி நடைபெற உள்ளது. முன்பதிவு செய்துகொள்ளவும். தொடர்புக்கு, தொலைபேசி: 0427-2410408 நாட்டுக் கோழி! திருப்பூர், கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் மே 13-ம் தேதி வெள்ளாடு வளர்ப்பு,14-ம் தேதி நாட்டுக் கோழி வளர்ப்பு ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும். தொடர்புக்கு, தொலைபேசி: 0421-2248524 இயற்கைக் கருத்தரங்கு! திருவாரூர் மாவட்டம், குடவாசல் அடுத்த இலையூரில் ஏப்ரல் 27-ம் தேதி 'ரசாயனம் இல்லாமலும் விவசாயம். . .

செவ்வாய், 8 ஏப்ரல், 2014

Anatomy

Anatomy



Dairy Goat:
Dairy Goat

DEHORNING BEST PRACTICE

A guide to best practice husbandry in beef cattle – branding, castrating and dehorning.” It is authored by Ross Newman and is very well put together with appropriate photos and diagrams.

WHAT IS DEHORNING?

Dehorning is the removal of the horns from cattle. It is a labour-intensive, skilled operation with important animal welfare implications.
Cattle can have horns of different length, shape and size, but all horns are detrimental to cattle from a welfare and production perspective, and pose a potential safety risk to cattle handlers.
Tipping (removal of the insensitive sharp end of the horn) is not dehorning. It does little to reduce the disadvantages of having horned cattle, for example it does not reduce bruising, and tipped cattle can still be a danger to other cattle and handlers.

WHEN TO DEHORN

The younger that cattle are dehorned, the better both for the calf and for the operator. Young calves suffer less pain and stress, have less risk of infection and have better growth rates. They are also much easier to handle and to restrain.

DEHORNING AND ‘THE CATTLE CODE’

Sect 5.8.1. To minimise pain and injury all horned cattle should be dehorned as young as possible, preferably prior to weaning, and at a suitable time to reduce fly worry.
After dehorning, cattle should be inspected regularly for the first 10 days, and any infected wounds treated. In those situations where flies are a problem, a suitable fly repellent should be applied at the time of dehorning.

FACILITIES AND EQUIPMENT

Dehorning is best done in a calf cradle that allows good access to each horn site. Good restraint minimises the duration of the procedure and pain to the calf, reduces the risk of wound contamination and makes it easier for the operator.

WHICH DEHORNING INSTRUMENT?

The dehorning instrument used will depend on the age of the calf:
  • hot iron – under two months old
  • dehorning knife – 2–3 months old
  • scoop dehorners – 2–6 months old
  • cup dehorners – 2–6 months old
Animals over six months old*
  • guillotine dehorners – horn tipping only
  • surgical wire – horn tipping only
  • tippers – horn tipping only
  • horn saw – horn tipping only
*Horn tipping only unless under the direction of a veterinarian.
Caustic dehorning chemicals must not be used. They can spread into the eyes if the skin gets wet.

ANATOMY OF A GROWING HORN


YOUNG CALF

The horn grows from the skin around its base – at different rates with different breeds. The horn bud is usually free-floating in the skin over the skull base in calves less than about two months old.
As the calf gets older, this horn bud attaches to the skull bone and a small horn forms.

OLDER CALF

After the horn bud attaches to the skull, the horn grows out from under the skin. It becomes a bony extension of the skull with the hollow centre of the horn opening into the frontal sinus. The brain lies directly under the frontal sinus covered by a thin layer of bone.
Dehorning after the horn attaches increases the risk of entering the frontal sinus and subsequent infection.

THE KEY TO SUCCESSFUL DEHORNING

Applies to all methods. Because the horn grows from the skin around its base, you must remove or destroy a complete ring of hair (1cm wide) around the horn base. Check that the excised ring is wide enough because some horn will grow if the ring is not complete. A 1cm wide ring of hair is enough – any more will make a larger wound, cause avoidable pain, and delay healing.

The whole booklet is worthy of a place on any cattle property
கொம்பு நீக்கம் செய்தல்
          கொம்பு நீக்கம் செய்வதால் ஆடுகள் ஒன்றை ஒன்று முட்டிக் காயப்படுத்திக் கொள்வதைத் தடுக்க இயலும். கொம்பு உடைதல், கொம்புகளினால் ஏற்படும் புற்றுநோய் போன்ற நோய்களைத் தடுக்க இயலும்.கிடாக்குட்டிகள் பிறந்து 2-5 நாட்களுக்குள்ளும், பெட்டைக்குட்டிகளுக்கு 12 நாட்களுக்குள்ளும் கொம்பு நீக்கம் செய்தல் வேண்டும். நீக்கம் செய்யப்படவேண்டிய பகுதியைச் சுற்றியு்ள முடிகளை நீக்கிவிட்டு பெட்ரோலியம் ஜெல்லியைத் தடவவேண்டும். காஸ்டிக் சோடா அல்லது பொட்டாஷ் கொண்டு கொம்பு வளரும் பகுதி புண்ணாகும் வரை நன்கு தேய்க்கவேண்டும். எக்காரணம் கொண்டும் காஸ்டிக் சோடா அல்லது பொட்டாஸ் கண்களில் படக்கூடாது. மின்சார கொம்பு நீக்கியைப் பயன்படுத்துதல் சிறந்தது. குட்டியின் வாயை அடைக்கும் போது, அது மூச்சு விட ஏற்றவாறு அடைக்கவேண்டும். அல்லது மூச்சுத் திணறல் ஏற்படலாம். வயது முதிர்ந்த ஆடுகளில் செய்யும் போது வளர்ந்து விட்ட கொம்புகளை இரம்பம் கொண்டு அறுத்துவிடவேண்டும். இவ்வாறு செய்யும் போதே ஈக்கள் போன்றவற்றால் பாதிப்பு ஏற்படாமலிருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்.

goat shed plans

பரண் மேல் வெள்ளாடு வளர்ப்பு:- 

வெள்ளாடுகளை தரையில் வளர்க்காமல் தரையிலிருந்து அடி உயரத்தில் கிடைமட்டமாக மரச்சட்டங்களை க்கு அடி இஞ்ச் அளவில் விரல் இடைவெளியில் வரிசையாக அடுக்கி கட்டி அமைப்பது தான் பரண் அமைப்பு. 

இதன் இடைவெளி அதிகமானாலோகுறைந்தாலோ ஆடுகள் நடப்பதில் சிரமம் ஏற்படும். கால்களில் காயங்கள் ஏற்படலாம். 

மேலும் இதற்காக தேர்ந்தெடுக்கப்படும் மரமும் முக்கியம். சுமார் 100 ஆடுகள் வளர்க்க 50அடிநீளம், 22 அடி அகலம் உடைய ஒரு கொட்டகை அவசியம். 

இந்த கொட்டகையில் ஆடு ஈனும் இளங்குட்டிகளை அடைக்கவும் அதனில் ஒரு பகுதி 22 க்கு 15 இஞ்ச் அளவில் அமைத்தல் வேண்டும். 

குட்டிகள் மாதங்கள் வரை தாயிடம் பால்குடிப்பதால் அவை தாயின் பார்வைக்கு அப்பால் இருக்க கொட்டில் முழுவதும் அடைத்து இருத்தல் வேண்டும். 
Goat Shed