அசோலா
அசோலா பெரணி வகையைச் சேர்ந்த தாவரம். நமது சீதோஷ்ண நிலையில் வளரக்கூடியது. அதிக வெப்பமும் அதிகக் குளிரும் இதன் வளர்ச்சியைப் பாதிக்கும். கோழி மற்றும் வான்கோழிகளுக்குத் தீவனமாகப் பயன்படுத்தப் படுகிறது.
- அசோலாவை சாகுபடி செய்ய வயலை உழுது சமன் செய்யவேண்டும்.
- பிறகு ஒரு செண்டு (20க்கு 2 மீட்டர்) பாத்திகளாகப் பிரித்து நான்கு புறமும் வரப்பு எழுப்பவும்
- ஆங்காங்கே வாய்க்கால்கள் இருப்பது அவசியம்.
- எப்பொழுதும் தண்ணீர் 10 செண்டி மீட்டர் அளவில் பாத்திகளில் இருக்க வேண்டும்
- 10 கிலோ மாட்டு சாணத்தை 20 லிட்டர் தண்ணீரில் கலந்து ஒவ்வொரு பாத்தியிலும் தெளிக்கவேண்டும்
- பின்னர் 8 கிலோ அசோலாவை ஒவ்வொரு பாத்திகளிலும் இட வேண்டும்.
- 100 கிராம் சூப்பர் பாஸ்பேட்டை 3 பங்காகப் பிரித்து 4 நாட்களுக்கு ஒரு முறை ஒவ்வொரு பாத்தியிலும் இட வேண்டும்
ஒவ்வொரு பாத்தியிலிருந்தும் 80 முதல் 100 கிலோ அசோலா கிடைக்கும்
எளிதில் ஜீரணிக்கவல்ல அசோலா கால்நடைகள், கோழிகள், பன்றிகள், ஆடுகள் மற்றும் மீன் ஆகியவற்றிற்கு சிறந்த உணவாக அமைகிறது .
அசோலாவை உணவாகக் கொடுக்க பரிந்துரைக்கப்படும் அளவு (நாள் ஒன்றுக்கு)
எடை
இனம் | அளவு |
---|---|
கறவைப் பசு, எருது | 1.5 ~2 கிலோ |
முட்டைக்கோழி, கறிக்கோழி | 20~30 கிராம் |
ஆடுகள் | 300~500 கிராம் |
வென்பனறி | 1.5~2.0 கிலோ |
முயல் | 100 கிராம் |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக