தென்னை போன்ற தோட்டங்கள் வைத்திருப்பவர்களுக்கு ஆடு வளர்ப்பு தொழில் அதிகஅளவில் லாபம் தருகிறது. தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்த போயர் ரக ஆடுகளுடன், கேரள மாநிலம் தலச்சேரி ஆடுகளை கலப்பினம் செய்து இனவிருத்திக்காக விற்பனை செய்து பலர் லாபம் ஈட்டி வருகின்றனர்.
இந்த வகை ஆட்டுகளுக்கு தேவையான பசுந்தீவனம் வளர்க்க சுமார் 4 ஏக்கர் நிலம் இருக்க வேண்டும். தென்னந்தோப்பு இருந்தால் ஊடு பயிராக வளர்க்கலாம்.
மொத்தம் 100 ஆடுகள் வளர்ப்பதாக இருந்தால் மலபார் தலச்சேரி ஆடுகள் 95ம், தென் ஆப்ரிக்காவின் போயர் ஆண் ஆடுகள் 5ம் தேவை. ஆடுகள் வாங்க சுமார் 6 லட்சம் ரூபாய் தேவையாக இருக்கும். சிறந்த முறையில் ஆட்டுப் பண்ணை அமைக்க 5 லட்சம் ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். இது தவிர ஆடுகளுக்கு தீவனச்செலவு மற்றும் பராமரிப்புச் செலவு ஆண்டுக்கு 4 லட்சம் ரூபாய் வரை ஆகும்.
ஒரு ஆடு ஆண்டுக்கு 4 குட்டிகள் ஈனுகின்றன. குட்டிகள் வளர்ந்து ஆடுகளாகும் நிலையில் ஒன்றின் விலை 25 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யலாம். ஆட்டுக் கழிவு ஆண்டுக்கு 60 டன் கிடைக்கும். கழிவுகளை 2 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்ய முடியும். இந்த வகை ஆடுகள் இறைச்சிக்காக வளர்க்கப்பட வில்லை.
மாறாக பண்ணைகள் மற்றும் ஆடுகள் வளர்ப்பவர்களுக்கு தேவையான முதல் ரக ஆடுகளை இன விருத்தி செய்து உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த ரக ஆடுகள் உயிருடன் கிலோ ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்ய முடியும் என இந்த தொழிலில் ஈடுபட்டு லாபம் ஈட்டி வரும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக