யா அல்லாஹ்!!!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன்.என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக.

செவ்வாய், 22 அக்டோபர், 2013

தஞ்சையில் தொடங்கியது நாட்டுக்கோழி வளர்ப்பு பயனாளிகளுக்கு 5 நாள் பயிற்சி

தஞ்சையில் தொடங்கியது நாட்டுக்கோழி வளர்ப்பு பயனாளிகளுக்கு 5 நாள் பயிற்சி 120 பேர் பங்கேற்பு

தஞ்சாவூர்,
தஞ்சையில் நாட்டுக்கோழி வளர்ப்பு பயனாளிகளுக்கு 5 நாள் பயிற்சி நேற்று தொடங்கியது. இதில் 120 பேர் கலந்து கொண்டனர்.
5 நாள் பயிற்சி
தஞ்சை கோட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தமிழக அரசின் நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2013–14–ம் ஆண்டிற்கு நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ் 120 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த பயனாளிகளுக்கு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 5 நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சி தஞ்சை தலைமை தபால் நிலையம் எதிரே உள்ள கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் நேற்று தொடங்கியது. இந்த பயிற்சிக்கு கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் செல்வவிநாயகம் தலைமை தாங்கினார். உதவி இயக்குனர் இளங்கோவன் வரவேற்றுப்பேசினார்.
120 பேர் பங்கேற்பு
இதில் தஞ்சை கால்நடை பல்கலைக்கழக ஆராய்ச்சி மைய பேராசிரியர் புண்ணியமூர்த்தி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கோழி வளர்ப்புக்கு கொட்டகை அமைப்பது, எவ்வாறு பராமரிப்பது, நோய்களில் இருந்து எவ்வாறு காப்பது என்பது குறித்து விளக்கம் அளித்தார். இதில் 120 பயனாளிகள் கலந்து கொண்டனர்.
இந்த திட்டத்தில் ஒரு பயனாளிக்கு ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் திட்ட மதிப்பட்டில் ரூ.64 ஆயிரத்து 250 மானியம் ஆகும். இதில் ஒரு பயனாளிகளுக்கு தலா 250 கோழிக்குஞ்சுகள் வீதம் 3 தவணைகளில் கோழிக்குஞ்சுகள் வழங்கப்படும். மேலும் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் வாரம் ஒருமுறை ஆய்வு செய்யப்பட்டு கோழிகளுக்கு தடுப்பூசிகளும் போடப்படும். இந்த பயிற்சிக்கான ஏற்பாடுகளை கால்நடை மருத்துவர் முகமதுசெரீப் செய்திருந்தார்.

கருத்துகள் இல்லை: