யா அல்லாஹ்!!!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன்.என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக.

வெள்ளி, 14 பிப்ரவரி, 2014

திருச்சி தொடக்க விழா வேளாண் கண்காட்சி நாள்

இடம் : திருச்சிCovai-Speakers
தொடக்க விழா:Date & Time : 21/02/2014
விருந்தினர்கள் : ராமசாமி, முதல்வர், வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், குமுலூர்
முதல்நாள் தலைப்புகள்Date & Time : 21/02/2014
1. வேளாண் பயிர் உற்பத்தி தொழில் நுட்பங்கள்
a) திருந்திய நெல் சாகுபடி
டாக்டர் ராஜேந்திரன், இயக்குநர், நெல் ஆராய்ச்சி நிலையம், ஆடுதுறை
b) செம்மை கரும்பு சாகுபடி:
டாக்டர் பன்னீர்செல்வம், கரும்பு ஆராய்ச்சி நிலையம், திருச்சி
c) பருத்தி சாகுபடி:
டாக்டர் கவிமணி, பருத்தி ஆராய்ச்சி நிலையம், வேப்பந்தட்டை (பெரம்பலூர்)
d) தேங்காய் சாகுபடி தொழில்நுட்பம்:
டாக்டர் ராஜமாணிக்கம், தேங்காய் ஆராய்ச்சி நிலையம், வேப்பங்குளம்
e) வேளாண் கருவிகள்:
டாக்டர் சுதாகரன், வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், குமுலூர்
f) தெளிப்பு நீர்பாசனம், சொட்டு நீர்பாசனம்
டாக்டர் ராஜேந்திரன், வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், குமுலூர்
g) அறுவடைக்கு பின் நேர்த்தி
டாக்டர் ராஜ்குமார்,
இரண்டாம் நாள் தலைப்புகள்Date & Time : 22/02/14
1. தோட்டக்கலை பயிர் சாகுபடி தொழில்நுட்பம் , பதனம் செய்தல் மற்றும் சந்தை படுத்துதல்
a) அடர் நடவு முறை
டாக்டர் நித்யா தேவி, தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருச்சி
b) மலர்கள் சாகுபடி
டாக்டர் அசோக், தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருச்சி
c) காய்கறிகள் சாகுபடியில் துல்லியப் பண்ணைத்திட்டம், பசுமைக்குடில்
டாக்டர் ஈஸ்வரன், தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருச்சி
d) வாழை உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்துதல்
திரு. கருப்பையா, தேனி
e) வாழை மதிப்பு கூட்டுதல்
f) உணவு பதப்படுத்துதல் மற்றும் மதிப்புக் கூட்டுதல்
டாக்டர் ஹேமா, இந்திய பயிர் பதன தொழில்நுட்ப நிறுவனம், தஞ்சாவூர்
மூன்றாம் நாள் தலைப்புகள்Date & Time : 23/02/14
1. கால்நடை மற்றும் மீன் வளர்ப்பு தொழில் நுட்பங்கள்
a) கால்நடை வளர்ப்பு
வீரபாண்டியன், முதல்வர், கால்நடை மருத்துவக்கல்லூரி, ஒரத்நாடு
b) கறவை மாடுகள் வளர்ப்பு
சிவக்குமார், கால்நடை மருத்துவக்கல்லூரி, ஒரத்நாடு
c) ஆடுகள் வளர்ப்பு
சங்கிலி மாடன், கால்நடை மருத்துவக்கல்லூரி, ஒரத்நாடு
d) கோழிகள் வளர்ப்பு
லூர்து ரீத்தா, கால்நடை மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சி நிலையம், திருச்சி
e) நன்னீர் இறால்
திரு. சீனிவாசன், விவசாயி, திருச்சி
f) மீன் பண்ணை
நிக்சன், விவசாயி, லால்குடி

வியாழன், 13 பிப்ரவரி, 2014

ஆடு மேய்த்து கொண்டிருக்கும் நபர்!!!

ஆடு மேய்த்து கொண்டிருக்கும் நபர்!!!

இரண்டு மனிதர்கள் வந்து கேட்டார்கள்!!!

உன் மந்தையில் இருக்கும் ஓர் ஆட்டை 200 ரியாலுக்கு கொடுத்து விட்டு உன் எஜமானரிடம் ஆடு தொலைத்து போய்விட்டது என்று கூறி அந்த பணத்தை நீ வைத்து கொள் என்று கூறினார்கள்!!!

அந்த ஆடு மேய்க்கும் மனிதர் கூறினார் 200000 ரியாலை கொடுத்தாலும் நான் இந்த ஆட்டை கொடுக்க மாட்டேன்!!நான் கொடுக்க வேண்டும் என்றால்!!! வானமும் பூமியும் ஒன்றாக வேண்டும்!! அது நடக்கதல்லவா??அப்படி என்றால் கொடுக்க மாட்டேன்!!

ஏன்!! யாரும் தான் உன்னை பார்க்கவில்லையே ??

அந்த ஆடு மேய்க்கும் அந்த மனிதர் கூறினார் ஏன் யாரும் பார்க்கவில்லை ??அல்லாஹ் பார்த்து கொண்டிருகின்றான் என்று!!!

---------------------
இது போன்றே ஓர் நிகழ்வு 1400 ஆண்டுகளுக்கு முன்னதாக ஓர் நபி தோழருடைய வாழ்விலும்!!!
---------------------

இப்னு உமர்(ரலி) அவர்கள் ஒரு முறை இது போன்று ஆடு மேய்க்கும் ஓர் சிறுவனை சோதித்தார்கள்!!!

ஒரு ஆட்டை கொடுத்து விடு உன் எஜமானரிடம் ஆட்டை ஓநாய் தின்று விட்டது!!!என்று கூறி விடு என்று கூறினார்கள்!!!

அந்த சிறுவன் கூறினார்: எஜமானரிடம் ஆட்டை ஓநாய் தின்று விட்டது என்று கூறுகின்றேன் ஆனால் அல்லாஹ்விடத்தில் என்ன கூறுவது????

இந்த வார்த்தையை கேட்ட உடன் இப்னு உமர் (ரலி) அவர்கள் அழுதார்கள்!!!

____________________

இந்த வார்த்தையை உச்சரிக்கும் மனிதர்கள் இந்த பூமியில் வாழும் வரை அல்லாஹ்வின் அருள் இந்த பூமியில் நிலைத்திருக்கும்!!!

செல்வம்,வசதியான வாழ்க்கை இருந்தும் அல்லாஹ்வை மறந்து வாழும் நம்மை போன்ற மனிதர்களுக்கு இவர்களின் வாழ்க்கையில் படிப்பினைகள் இருக்கின்றது!!!
_________________________

இதோ உலகத்தில் ஏழையாக இருந்தாலும் இன்ஷா அல்லாஹ் அல்லாஹ்விடத்தில் இந்த மனிதர் தான் ஈமானை சுமக்கும் செல்வந்தர்!!!

http://www.youtube.com/watch?v=4q3NfD7_OdU