யா அல்லாஹ்!!!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன்.என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக.

வெள்ளி, 28 பிப்ரவரி, 2014

தீவன தட்டைப்பயறு

பருவம் : இறவை ஜூன் – ஜூலை

உழவு : நிலத்தை இரும்புக்கலப்பை கொண்டு இருமுறையும் நாட்டுக்கலப்பை கொண்டு மூன்று அல்லது நான்கு முறையும் உழவேண்டும்.
தொழு உரமிடுதல்  : எக்டருக்கு 12.5 டன் தொழு உரம் அல்லது கம்போஸ்ட் இடவேண்டும்.
பார் பிடித்தல்  : 30 செ.மீ. இடைவெளியில் 6 மீ நீளத்திற்கு பார்பிடிக்க வேண்டும். பார் பிடிக்காவிட்டால், பாசன நீரின் அளவைப் பொறுத்து 20 சதுர மீட்டருக்கு பாத்திகள் பிடிக்கவேண்டும்.
உரமிடுதல் : மண் பரிசோதனைக்கேற்ப உரங்களை இடவேண்டும். மண் பரிசோதனை செய்யாவிடில் எக்டருக்கு 25:40:20 கிலோ தழை, மணி மற்றும் சாம்பல்சத்து இடவேண்டும். இதனை 55:250:33 கிலோ, யூரியா, சூப்பர் பொட்டாஷ் உரங்கள் மூலமாக இடலாம்.
விதைப்பு : 3 பாக்கெட்டுகள் [600 கி] ரைசோபியம் உயிர் உரத்தை அரிசிக் கஞ்சியில் கலந்து விதை நேர்த்தி செய்யவும்.
விதை அளவு : எக்டருக்கு 40 கிலோ இடைவெளி 30 X 15 செ.மீ.
நீர் மேலாண்மை  : விதைத்தவுடன் பாசனம் செய்ய வேண்டும் மற்றும் மூன்றாவது நாளில் உயிர்ப்பு நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். பின்பு 10 நாட்களுக்கு ஒரு முறை பாசனம் அளிப்பது சிறந்தது.
களை நிர்வாகம்  : தேவைப்படும் போது களை எடுக்கவும்.
பயிர் பாதுகாப்பு  : பொதுவாகத் தேவையில்லை
அறுவடை : விதைத்த 50-55 நாட்களில் அறுவடை செய்ய வேண்டும். [50 சதம் பூக்கும் தருவாயில்]
தகவல் : இணைப்பேராசிரியர் மற்றும் தலைவர் உழவியல் துறை, அடிப்படை அறிவியல் புலம், சென்னை கால்நடை மருத்துவக்கல்லூரி, சென்னை- 600 007, தொலைபேசி: 044-25304000.
தகவல் அனுப்பியவர் : முருகன், சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம், திருவையாறு

நீர்ப்பாசனத்திற்கு ஏற்ற பயறு வகைத் தீவனப்பயிர்கள்

பால் மற்றும் இறைச்சி உற்பத்திக்கு புரதச் சத்து அதிகம் உள்ள பயறுவகைத்தீவனங்கள் மிகவும் அவசியமானவை. பயறு வகைத் தீவனங்களில் புரதச் சத்தும், தாது உப்புக்களும், அதிக அளவில் உள்ளன. புல்வகைத்தீவனங்களுடன், பயறு வகைப் பசுந்தீவனப் பயிர்களைக் கலந்து கொடுப்பது நல்ல பயனுள்ள அடர்த்தீவனப்பொருட்களை கொடுப்பதற்கு சமமாகும்.

பயறு வகைத் தீவனப்பயிர்களின் குணாதிசியங்கள்:
  1. அதிகப் புரதச் சத்து உடையது
  2. அதிக தாது உப்புக்களைக் கொண்டது
  3. மிக எளிதில் சீரணிக்கக்கூடியது
  4. பயிரிடப்படும் நிலத்தின் மண் வளத்தை அதிகரிக்கக்கூடியது
மானாவாரியில் பயிர் செய்யவதர்ல்கு ஏற்ற சிறந்த பயறு வ்காஇத் தீவனப்பயிர்களான வேலி மசால், குதிரை மசால் மற்றும் தட்டைப்பயிறு போன்றவைகள் ஆகும். இவற்றில் புரதம் மற்றும் கால்சியம் சத்துக்கள் மற்ற தீவனப்பயிர்களில் இருப்பதை விட மிக அதிக அளவில் உள்ளன.
தகவல்: முனைவர் க.இராமகிருஷ்ணன், முனைவர் க.சிவக்குமர், முனைவர் வே.இரமேஷ் சரவணகுமார், கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், நாமக்கல் – 637 002.