யா அல்லாஹ்!!!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன்.என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக.

செவ்வாய், 13 ஆகஸ்ட், 2013

கறிக்கோழி வளர்ப்பு


கோழிக்கறி வகைகளில் அதிகம் விரும்பப்படுவது கறிக்கோறி (ப்ராய்லர்) வகையாகும். பல தனியார் நிறுவனங்கள் விவசாயிகளுடன் இணைந்து ஒப்பந்த முறையில் கறிக்கோழி உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர். விற்பனையில் எந்தவித சிரமமும் இல்லை. மிருதுவான, மென்மையான சதையை உடைய 1.5-2.0 கிலோ எடையுள்ள 8 வார வயதிற்கு கீழ் உள்ள கோழிகளை ப்ராய்லர் என்கிறோம்.
சிறந்த பராமரிப்பு முறைகள்கோழிக் கொட்டகையின் வெப்பநிலை: முதல் வாரத்தில் 950 சி இருக்க வேண்டும். பின்பு ஒவ்வொரு வாரமும் 50 சி வெப்பத்தை குறைக்க வேண்டும். 6-ஆவது வாரம் 700 சி வெப்பம் வரும் வரை குறைக்க வேண்டும்.காற்றோட்ட வசதி : கோழிக் கழிவிலிருந்து வெளிப்படும் அமோனியாவை நீக்கி மூச்சுத்திணறல் வராமல் தடுக்க நல்ல காற்றோட்டத்தைப் பராமரிக்க வேண்டும்.மின்விளக்கின் மூலம் வெப்பம் அளித்தல்: 200 சதுர அடி தரையளவிற்கு 60 வாட் விளக்குகள் போட வேண்டும்.தரை இடஅளவு : ஒரு கோழிக்கு 1 சதுர அடிமூக்கு வெட்டுதல்:1 நாள் வயதுடைய குஞ்சுகளுக்கு மூக்கை வெட்ட வேண்டும்.கறிக்கோழி (ப்ராய்லர்) சுகாதாரப் பராமரிப்பு· நோயற்ற குஞ்சுகளைக் கொண்டு தொடங்க வேண்டும்· மேரக் நோயைத் தடுக்க குஞ்சு பொறிப்பகத்திலேயே தடுப்பூசி போட வேண்டும்.· 4-5 நாட்களில் ஆர்.டி.வி.எப். 1 போட வேண்டும்.· கழிச்சல் (காக்கிடியாசிஸ்) நோயினைத் தடுக்க தீவனத்துடன் மருந்துகளைக் கலந்து கொடுக்க வேண்டும்.· பூஞ்சாண நச்சுகளிலிருந்து தீவனத்தைப் பாதுகாக்க வேண்டும்.· தரையில் 3 இஞ்ச் ஆழத்திற்கு நிலக்கடலை கழிவு அல்லது நெல் உமி கொண்டு நிரப்ப வேண்டும்.விற்பனை செய்தல்· 6-8 வாரங்கள் வயதுடைய கோழிகளை விற்பனை செய்ய வேண்டும்.· கோழிகளைப் பிடிக்கும் போது, காயங்கள் ஏற்படாமல் இருக்க, தீவனத் தட்டுகளையும், தண்ணீர் தட்டுகளையும் அகற்ற வேண்டும்.· திடீர் வானிலை மாற்றங்களிலிருந்து கோழிகளைக் காக்க வேண்டும்.
சுகுணா (கோயமுத்தூர்), வெங்கடேஸ்வரா (பூனா), பயனியர், ப்ரோமார்க் போன்ற தனியார் நிறுவனங்கள், ஒப்பந்த முறையில் விவசாயிகளுடன் இணைந்து கறிக்கோழி உற்பத்தி செய்கின்றன. மேலும்,· சிறந்த இனங்கள் கிடைக்குமிடம்· கோழிக் கொட்டகை அமைத்தல்· தீவனம் அளித்தல்· நல்ல வளமான கோழிகளை உருவாக்குதல்போன்றவற்றில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் அருகில் உள்ள கால்நடை பராமரிப்பகத்தையோ அல்லது வேளாண் அலுவலகத்தையோ அணுகவும்.
தகவல் ஆதாரம் --இந்திய முன்னேற்ற நுழைவாயில்
ஐ.சி.ஏ.ஆர்.கோழி ஆராய்ச்சித் திட்ட மையத்தின் இனங்கள்வனராஜா
  • கிராமம் மற்றும் பழங்குடியினர் பகுதிகளில், வீட்டுப் பண்ணைகளில்
  • வளர்ப்பதற்கு ஏற்றது.  ஐதராபாத்-தில் உள்ள ஐ.சி.ஏ.ஆர்.-கோழி
  • ஆராய்ச்சி திட்டம், இதனை வெளியிட்டுள்ளது.
  • பல வண்ணங்களில், கவர்ச்சியான இறகுகளைக் கொண்ட இது ஒரு பயனுள்ள
  • பறவையாகும்.
  • அனைத்து வகையான நோய்களுக்கும் எதிர்ப்பு திறன் கொண்டதாகும். 
  • வீட்டில் வளர்ப்பதற்கு ஏற்றதாகும்.
  • வனராஜா ஆண் இனங்கள், முறையாக தீவன முறைதில் 8 வாரத்தில் நல்ல எடையை
  • அடைகின்றன.
  • ஒரு பருவ சுழற்சியில், ஒரு கோழி 160-180 முட்டைகள் இடுகின்றது.
  • குறைவான எடையும், நீண்ட கால்களும் பெற்றிருப்பதால், இவை மற்ற இரைக்
  • கொல்லிகளிடம் இருந்து தப்பி ஓடிவிடும். வீட்டில் வளர்ப்பதற்கு ஏற்றவையாக
  • உள்ளன.

கிரிஷிப்ரோ
  • ஐதராபாத்-தில் உள்ள ஐ.சி.ஏ.ஆர்.-கோழி ஆராய்ச்சி திட்டம் இதனை
  • உருவாக்கியுள்ளது.
  • பல வகை நிறங்கொண்ட கறிக் கோழியாகும்
  • 6 வாரத்தில் உடல் எடையை அடைகிறது.  இதன் தீவன மாற்று விகிதம் 2.2
  • ஆகும்
  • 97% கோழிகள் 6 வாரம் வரை உயிருடன் இருக்கின்றன
  • பறவைகள் கவர்ச்சியான இறகுகளுடன் உள்ளன.  வெப்ப மண்டல
  • பகுதிகளுக்கு ஏற்றதாகும்
  • வணிக ரீதியாக வளர்க்கப்படும் கிரிஷிப்ரோ ரகம் ராணிக்கெட் மற்றும் பிற
  • தோற்று  நோய்களுக்கு எதிர்ப்பு திறன் கொண்டவை ஆகும்
  • நன்மைகள்    : கடினமான, சூழலுக்கு ஏற்று வாழக்கூடிய,
  • அதிக உயிர்வாழ் திறன் கொண்டவையாக இருக்கின்றன.

மேற்கண்ட இன கோழிகளைப் பெற கீழ்க்கண்ட முகவரியை அணுகவும்.DirectorProject Directorate on PoultryRajendra Nagar, Hyderabad - 500030Andhra Pradesh,INDIAINDIA.Phone :- 91-40-24017000/24015651Fax : - 91-40-24017002E-mail: pdpoult@ap.nic.inகர்நாடகாகால்நடை மற்றும் மீன்வள அறிவியல் பல்கலைக் கழகம், வெளியிட்டுள்ளஇரகங்கள்.கிரிராஜா
பெங்களுரில் உள்ள வேளாண் அறிவியல் பல்கலைக்கழகத்தின் கோழிஆராய்ச்சித்துறை இதனை வெளியிட்டுள்ளது.
சுவர்ணதாராஇவ்வினம் கிரிராஜா வகையைவிட ஆண்டுக்கு 15-20 முட்டைகள் அதிகமாகஇடுகின்றன.  இதனை கர்நாடகா கால்நடை மற்றும் மீன்வளப் பல்கலைக்கழகம்2005ஆம் ஆண்டில் வெளியிட்டுள்ளது.  சுவர்ணதாரா கோழிகள் அதிக முட்டைஉற்பத்தி செய்வதுடன், உள்ளுர் ரகங்களைவிட நன்றாக வளர்கிறது.  இதுகலப்பு பண்ணையத்திற்கும், வீட்டில் வளர்ப்பதற்கும் ஏற்றதாகும்.
  • கிரிராஜா இனத்தைவிட சிறிதாகவும், எடை குறைவாகவும் இருப்பதால்,
  • காட்டுப் பூனைகள், நரிகளிடம் இருந்து எளிதில் தப்பி விடுகின்றன.
  • முட்டை, இறைச்சி ஆகிய இரண்டிற்காகவும் வளர்க்கலாம்.
  • பொரித்த 22-23 வாரத்தில் பருவமடைகிறது.
  • கோழி 3 கிலோ எடையையும், சேவல் 4 கிலோ எடையையும் அடைகின்றன.
  • கோழிகள், ஒரு வருடத்திற்கு 180-190 முட்டைகள் ஈடுகின்றன.

மேற்கண்ட இன கோழிகளைப்பெற கீழ்க்கண்ட முகவரியை அணுகவும்Prof and Head,Department of Avian Production and Management,Karnataka Veterinary Animal Fishery Sciences University,Hebbal, Bangalore: 560024,Phone: (080) 23414384 or 23411483 (ext)201.பிற உள்நாட்டுஇனங்கள்


இனம்- இடம்அங்களேஷ்வர்- குஜராத்அசீல்- ஆந்திரபிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம்பர்சா- குஜராத் மற்றும் மஹாராஷ்ட்ராசிட்டாகாங்- மேகாலயா மற்றும் திரிபுராடங்கி- ஆந்திரபிரதேசம்தவோதிகிர்- அசாம்காகஸ்- ஆந்திரபிரதேசம் மற்றும் கர்நாடகாஹர்ரிங்காடா கருப்பு- மேற்கு வங்காளம்கதக்நாத்- மத்தியபிரதேசம்காலஸ்தி- ஆந்திரபிரதேசம்காஷ்மீர் பவிரோலா- ஜம்மு மற்றும் காஷ்மீர்மிரி- அசாம்நிக்கோபாரி- அந்தமான் மற்றும் நிக்கோபார்பஞ்சாப் பிரெளன்- பஞ்சாப் மற்றும் அரியானாதெள்ளிச்சேரி- கேரளா

தகவல் ஆதாரம் --இந்திய முன்னேற்ற நுழைவாயில்