பால் பண்ணை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பால் பண்ணை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திங்கள், 19 மே, 2014
வெள்ளி, 21 மார்ச், 2014
மாட்டுப் பண்ணை
மாட்டுப் பண்ணை -- பால் பண்ணை -- பால் மற்றும் மாட்டுப் பண்ணை -- புதிதாக இந்தத் தறைக்கு வருபவர்களுக்கான தகவல்கள்.
"நகரங்களில் பால் ஒரு லிட்டர் நாற்பது முதல் அறுபது ரூபாய்கள் என்று விற்கப் படுகிறது!"
"ஒரு நல்ல கறவை மாடு சுமாராக 5 லிட்டர் முதல் 10 லிட்டர் வரையும் வீரியக் கலப்பினப் பால் மாடுகள் சுமார் 25 லிட்டர் வரையும் கன்று ஈன்றதிலிருந்து குறைந்தது ஆறு மாதங்களுக்குப் பால் தரும்!"
"உயர் உற்பத்தித் திறனுள்ள வீரியக் கலப்பின மாடுகள் கன்று ஈன்றதிலிருந்து எட்டு மாதங்கள் வரை அதாவது அது அடுத்தகன்று ஈனுவதற்கு 50 நாட்கள் உள்ள காலம் வரை கூட
நமக்குக் குறையாமல் பால் தரும் திறன் உள்ளவை!"
நமக்குக் குறையாமல் பால் தரும் திறன் உள்ளவை!"
"மிகவும் செறிவு மிக்கதும் ஒரு உயர் உற்பத்தித் திறனுள்ள வீரியக் கலப்பினப் பால் மாட்டின் அன்றாடத் தேவைக்கும் மேல் சக்தி தருவதுமான மிகச்சிறந்த கலப்புத் தீவனங்கள் இன்று எளிதாகக் கடைகளில் கிடைக்கின்றன!"
"இன்றுள்ள அதி நவீனத் தீவன உற்பத்தித் தொழில் நுட்பங்களைப் பயன் படுத்தி நாம் மிக எளிதாக மிகக் குறைந்த நிலப்பரப்பில் வழக்கமான முறையை விடப் பத்து மடங்கு அதிகப் பசுந்தீவனத்தை உற்பத்தி செய்யலாம்!"
"சினைப் பிடிக்காத மாடுகளைக் கூட இன்று கரு மாற்று முறையில் கன்று ஈன வைக்கலாம்!"
"மூலைக்கு மூலை அரசினர் கால்நடை மருத்துவ மையங்களும் தனியார் கால்நடை மருத்துவ மையங்களும் நிறைந்துள்ளன. ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் போதும்; வெட் பைக்கில் ஓடோடி வந்து கவனிப்பார்! கால்நடைக்கு நோய் வந்தாலும் கவலைப் படத் தேவை இல்லை!"
"கொட்டில் முறைப் பண்ணையில் ஒரு கணவன் மனைவி இருவரே சுமார் 30 மாடுகளைப் பராமரிக்கலாம்!"
"பெண்கள் கூடக் கையாளும் விதமாக எளிய பால் கறவை இயந்திரங்கள் இப்போது குறைந்த விலையில் கிடைக்கின்றன!"
"ஒரு ஆள் ஒரு மணி நேரத்தில் இரண்டு டன் பசுந்தீனியைப் பொடியாக வெட்டும் அளவில் இயந்திரங்கள் கிடைக்கின்றன!"
"பாலை நாம் பண்ணையிலிருந்து நேரடியாக நுகர்வோருக்கு விற்கலாம்!"
"பண்ணையின் முழுமையான பாலை விட நிலைப் படுத்தப் பட்ட பாலும் பதப்படுத்தப் பட்ட பாலும் பண்ணையாளருக்கு அதிக லாபம் தரக் கூடியவை!"
"பண்ணையிலிருந்து பாலை முழுமையாக அப்படியே விற்பதை விட அதை முழுவதுமாக "மதிப்பூட்டப் பட்ட பால் பொருட்களாக மாற்றி " விற்பதால் பண்ணையாளருக்கு ஏழு மடங்கு லாபம் கிடைக்கும்!"
"நகரங்களில் மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே உள்ளதாலும் பால் உற்பத்தியாளர்கள் மிகவும் குறைவாகவே உள்ளதாலும் பாலின் உற்பத்தி : தேவை விகிதம் மிகவும் அதிகம்! அது 28 : 72 என்ற் அளவில் உள்ளது!"
"ஒரு நடுத்தர அளவிலான 30 மாடுகளைக் கொண்ட மாட்டுப் பண்ணையில் இருந்து எட்டு மாத காலத்தில் 2 வேளை x 20 லிட்டர் x 30 மாடுகள் x 45 ரூபாய் ஒரு லிட்டர் x 240 நாட்கள் கறவை ====1,29,60,000 - 00 ரூபாய்கள் மொத்த வுருமானம் கிடைக்கும்!"
------------------ இவை எல்லாம் என்ன?
"வேளாண்மைக்கு நாம் திரும்பச் செல்லலாம்; தரமான பாலே கிடைக்காமல் நாம் நகரத்தில் எவ்வளவு கஷ்டப் பட்டோம்! நுகர்வோருக்குத் தரமான பால் தவறாமல் கிடைப்பதற்காக நாமும் ஏதாவது செய்யலாம். இந்த வேலையை விட்டு விட்டு, இதிலிருந்து நமக்குக் கிடைக்கும் பணத்தை வைத்து ஒரு பால் பண்ணை ஆரம்பிக்கலாம்! எட்டு மாதங்களில் ஒன்றே கால் கோடியா! ஒரு கோடி ரூபாய் கடன் வாங்கிப் பண்ணையைத் துவக்கினால் கூட லாபம் தான்!"
--------- என்ற சாதனை வெறியுடன் வரும் புதிய இளைய தலை முறை விவசாயிகளின் கண்களில் படும் (பட வைக்கப் படும்!) வெற்றிக் கதைத் தகவல்கள்தான் இவை அனைத்தும்!
அப்படியா?
இவ்வளவு சுலபமானதுதானா ஒரு மாட்டுப் பண்ணை நடத்துவது?
இவ்வளவு சுலபமானதுதானா ஒரு மாட்டுப் பண்ணை நடத்துவது?
நம் அப்பா என்னவோ "மகனே! காட்டில் இருக்காதே! நகரத்தில் ஏதாவது வேலை வாங்கித் தருகிறேன்; இப்போதே புறப்படு; பால் பண்ணையாவது; மாட்டுப் பண்ணையாவது; அதெல்லாம் உன்னைப் பிழைக்க வைக்காது; நான் காட்டில் இருந்து பட்ட கஷ்டம் போதும்; ஓடிவிடு!" என்று பயமுறுத்தினாரே!
--------- என்ற குழப்பத்தில் இருக்கும் பணம் வைத்திருக்கும் புதிய இளம் விவசாயிகளின் கண்களில் படும் (பட வைக்கப் படும்!) வெற்றிக் கதைத் தகவல்கள்தான் இவை அனைத்தும்!
இதில் எந்தத் தகவலும் பொய் இல்லவே இல்லை!
பிறகு என்ன?
பிறகு என்ன?
இந்தத் தகவல்கள் அனைத்தும் மாட்டுப் பண்ணை -- பால் பண்ணை -- பால் மற்றும் மாட்டுப் பண்ணை பற்றிய ஒரு பக்கத்தை மட்டும் பற்றிய தகவல்கள்!
இவற்றின் மறுபக்கத் தகவல்கள் இந்தப் பண்ணையத்தின் யதார்த்த நிலையைக்காட்டும் தகவல்கள்!
அவை பெரும்பாலும் யாராலும் சொல்லப் படுவதில்லை!
ஏன் இப்படி?
ஏனென்றால், மேற்குறித்த எல்லாத் தகவ்கல்களையும் ஆராய்ந்து அவற்றின் மறுபக்கத்தைப் பார்க்கும் பொறுமை புதியவர்களுக்கு இல்லை!
"கையில் உள்ள பணம் கரைவதற்குள் நாம் நிலைப் பட்டு விட வேண்டும்!"
"வேளாண்மைத் துறையில் ஒரு மறுமலர்ச்சி தெரிகிறது; நாம் முந்திக் கொள்ள வேண்டும்!"
"நம் பரம்பரைத் தொழிலில் நம் தாத்தாவைப் போல நம் முப்பாட்டனைப் போல நாமும் "ஏதாவது" சாதிக்க வேண்டும்!" -
---------என்ற சாதனை வெறி இவர்களுக்குள் பொங்கிப் பிரவகிக்கிறது!
அத்துடன் இவர்கள் இருந்து இருபது ஆண்டுக் காலம் அனுபவப்பட்ட துறையில்
"எதைச் செய்தாலும் அதன் விளைவும் முடிவும் "உடனடியாக"த் தெரிந்து விடும்;
ஒன்றைத் தீர்மானித்து அதை ஒரு "பிட்" கூடத் தவறில்லாமல் செயல் படுத்த முடியும்;
அதில் வரக் கூடிய தவறுகளை முன் கூட்டியே கணித்து ஒரு தவறில்லாத திட்டத்தை "வடிவமைக்க" முடியும்;
அப்படி "வடிவமைத்த" அந்தத் திட்டம் மிகத் துல்லியமாக இயங்கும்!"
-------------- இப்படியேதான் இவர்களுக்குள் ஒரு செயல் முறை பதிவாகி உள்ளது!
"எதைச் செய்தாலும் அதன் விளைவும் முடிவும் "உடனடியாக"த் தெரிந்து விடும்;
ஒன்றைத் தீர்மானித்து அதை ஒரு "பிட்" கூடத் தவறில்லாமல் செயல் படுத்த முடியும்;
அதில் வரக் கூடிய தவறுகளை முன் கூட்டியே கணித்து ஒரு தவறில்லாத திட்டத்தை "வடிவமைக்க" முடியும்;
அப்படி "வடிவமைத்த" அந்தத் திட்டம் மிகத் துல்லியமாக இயங்கும்!"
-------------- இப்படியேதான் இவர்களுக்குள் ஒரு செயல் முறை பதிவாகி உள்ளது!
வேளாண்மை என்பதும் அதிலும் உயிரின வேளாணமை என்பதும் பஞ்ச பூதங்களின் முழு ஆளுமைக்கு அடிமை என்பதும்;
அதில் நமது திட்ட வடிவமைப்புப் படி பெரும்பாலும் நடக்காது என்பதும்;
அனைத்தும் ஒன்றை ஒன்று பிணைந்து சார்ந்த "ஃபஸ்ஸி லாஜிக்" போன்றது என்பதும்;
உற்பத்தியைத் தவிர மற்ற வேலைகளான இருப்பு வைத்தல், விலை நிர்ணயம், மொத்த விற்பனை, சில்லறை விற்பனை, நேரடி விற்பனை ஆகிய எதுவும் நம் கட்டுப் பாட்டில் இல்லை என்பதும் இவர்களுக்குச் சொல்லப் படுவது இல்லை!
அதில் நமது திட்ட வடிவமைப்புப் படி பெரும்பாலும் நடக்காது என்பதும்;
அனைத்தும் ஒன்றை ஒன்று பிணைந்து சார்ந்த "ஃபஸ்ஸி லாஜிக்" போன்றது என்பதும்;
உற்பத்தியைத் தவிர மற்ற வேலைகளான இருப்பு வைத்தல், விலை நிர்ணயம், மொத்த விற்பனை, சில்லறை விற்பனை, நேரடி விற்பனை ஆகிய எதுவும் நம் கட்டுப் பாட்டில் இல்லை என்பதும் இவர்களுக்குச் சொல்லப் படுவது இல்லை!
அத்துடன் மேற்குறித்த தகவல்களைப் புதியவர்களுக்குத் தருபவர்கள், பெரும்பாலும் இந்த ஒவ்வொரு தகவலுக்கும் தொடர்புடைய ஒரு வியாபாரத்தைச் செய்து கொண்டிருப்பார்கள் என்பது மிகவும் கசப்பான உண்மை!
இப்பொழுது மறுபடியும் ஒவ்வொன்றாகப் படித்துப் பாருங்கள்!
அந்தந்த வியாபாரிகளின் உருவம் உங்களுடைய கண்களுக்குத் தெரியும்!
*********************************************************************************************
"ஆக நீங்கள் சொல்வது என்ன?
மாட்டுப் பண்ணை -- பால் பண்ணை -- பால் மற்றும் மாட்டுப் பண்ணை. இவற்றில் எதையும் செய்யாதீர்கள் என்னும் தகவலா?"----- இவை உங்கள் கேள்விகள் அல்லவா?
மாட்டுப் பண்ணை -- பால் பண்ணை -- பால் மற்றும் மாட்டுப் பண்ணை. இவற்றில் எதையும் செய்யாதீர்கள் என்னும் தகவலா?"----- இவை உங்கள் கேள்விகள் அல்லவா?
இல்லவே இல்லை!
செய்யாதீர்கள் என்று சொல்லவில்லை. பண்ணையைத்துவக்கும் "முன்னதாக" - கவனியுங்கள் "முன்னதாக" - தயவு செய்து மூன்று நாங்கு மாதங்களுகு உங்களது பணத்தை ஒரு நல்ல வங்கியில் இருப்பு வைத்து விடுங்கள்.
நீங்கள் இறங்க முடிவு செய்த பண்ணை முறையில் நேரடி அனுபவம் பெறுங்கள்;
எல்லாவற்றிற்கும் முன்னதாக அந்தப் பண்ணையில் வரக் கூடிய நஷ்டங்கள் எவை என்பதைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்;
எல்லாவற்றிற்கும் முன்னதாக அந்தப் பண்ணையில் வரக் கூடிய நஷ்டங்கள் எவை என்பதைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்;
மாட்டுப் பண்ணை -- பால் பண்ணை -- பால் மற்றும் மாட்டுப் பண்ணை மூன்றுமே நீண்ட காலப் பண்ணைகள் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்;
பாதியில் விட்டுச்செல்ல் நேர்ந்தால் நீங்கள் செய்த முதலீட்டில் கால்வாசி கூடத் திரும்ப வராது என்பதை உணருங்கள்;
உள்ளூர்ச் சந்தைக்கு அடிக்கடி சென்று வாராவரம் நிகழும் மாற்றங்களைப் பதிவு செய்யுங்கள்;
உள்ளூர் "சின்ன ஏவாரி"யிடமிருந்து அயல் மாநிலப் "பெரிய முதலாளி" வரை தொடர்பு வைத்துக் கொள்ளுங்கள்;
உள்ளூர் கால்நடை உதவியாளர் முதல் கால்நடை மருத்துவப் பல்கலைக் கழகம் வரை தொடர்பு வைத்துக் கொள்ளுங்கள்;
உங்களுடைய மாட்டுப் பண்ணை -- பால் பண்ணை -- பால் மற்றும் மாட்டுப் பண்ணை எதிலும் நேரம் காலம் பார்க்காது வேலை செய்ய வேண்டிய உங்கள் குடும்பத்தை முழுவதுமாக ஈடுபடுத்துங்கள்;
இவை எல்லாவற்றிற்கும் மிக மிக முன்னதாகக் கால்நடை மருத்துவத்தின் அடிப்படை முறைகளையும் சிறு சிறு சிகிச்சை முறைகளையும் இள்ம கன்றுகள் வளர்ப்பு முறைகளையும் கற்றுக் கொள்ளுங்கள்.
இந்த மூன்று நான்கு மாத காலத்தில் இன்னொரு முக்கியமான வேலையை நீங்கள் செய்து முடித்திருக்க வேண்டும்.
அது ஆண்டு முழுவதும் 50 கால்நடைகளுக்குத் தேவையான பாதுகாப்பான குடிநீர் ஆதாரத்தை உருவாக்கி இருக்க வேண்டும்!
ஆண்டு முழுவதும் 50 கால்நடைகளுக்குத் தேவையான பலவகைப் பசுந்தீனிகளை வளர்த்திருக்க வேண்டும்! அதே அளவில் உலர் தீனியும் கையிருப்பில் இருக்க வேண்டும்!
ஆண்டு முழுவதும் 50 கால்நடைகளுக்குத் தேவையான பலவகைப் பசுந்தீனிகளை வளர்த்திருக்க வேண்டும்! அதே அளவில் உலர் தீனியும் கையிருப்பில் இருக்க வேண்டும்!
இவற்றை எல்லாம் நீங்கள் முடித்த "பிறகும்" உங்களுக்கு "இந்தப் பண்ணையைத் தொடங்கலாம்; தொடர்ந்து நடத்தலாம்;
இதில் நமக்குத் தேவையான முன்னறிவு வந்துள்ளது; இதில் வரும் எதிர்பாராத விளைவுகளை நம்மால் எதிர் கொள்ள முடியும்!"
என்று உண்மையாகவே (உங்களுக்கும் உங்களுடைய குடும்பத்தினருக்கும்) தீர்மானமாகத் தெரிந்தது என்று வையுங்கள்;
இதில் நமக்குத் தேவையான முன்னறிவு வந்துள்ளது; இதில் வரும் எதிர்பாராத விளைவுகளை நம்மால் எதிர் கொள்ள முடியும்!"
என்று உண்மையாகவே (உங்களுக்கும் உங்களுடைய குடும்பத்தினருக்கும்) தீர்மானமாகத் தெரிந்தது என்று வையுங்கள்;
நீங்கள் நிச்சயமாக மாட்டுப் பண்ணையையோ பால் பண்ணையையோ பால் மற்றும் மாட்டுப் பண்ணையையோ ஐந்தாவது மாதத் துவக்கத்தில் துவக்கி இருப்பீர்கள்!
அதை நல்ல முறையில் உங்களால் நிச்சயமாக நடத்த முடியும்!
அதை நல்ல முறையில் உங்களால் நிச்சயமாக நடத்த முடியும்!
வெள்ளி, 14 மார்ச், 2014
கறவை மாட்டுப் பண்ணையில் தரமான பால் உற்பத்தி முறைகள்
கறவை மாட்டுப் பண்ணையில் தரமான பால் உற்பத்தி முறைகள்
பால் ஓர் இன்றியமையாத சமச்சீர் உணவாகும். இது, பச்சிளம் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற உணவாகும். பாலில் அசுத்தம் சேராதவாறு சேகரித்து நன்கு காய்ச்சி உட்கொள்வது மிக முக்கியம்.
பாலில் கொழுப்புச் சத்து, புரதச் சத்து, வைட்டமின்கள் போன்ற பல இன்றியமையாத சத்துப் பொருள்கள் உள்ளன. சாதாரணமாக விற்பனைக்கு வரும் பசும்பாலில் 3.5 சதம் கொழுப்பு சத்தும், 8.5 சதம் கொழுப்பில்லாத மற்ற திடப்பொருளும் இருத்தல் வேண்டும்.
பாலில் நமது உடலுக்குத் தேவையான எல்லா ஊட்டச் சத்துகளும் சரியான விகிதத்தில் உள்ளன.
இதுகுறித்து, தேனி உழவர் பயிற்சி மையப் பேராசிரியர்கள் இரா. உமாராணி, நா.ஸ்ரீ. பாலாஜி மற்றும் அ. செந்தில்குமார் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
அசுத்தமான சூழ்நிலையில் பால் உற்பத்தி செய்தால், பாலின் மூலம் காசநோய், தொண்டை அடைப்பான், டிப்தீரியா, டைபாய்டு, வயிற்றுப்போக்கு முதலிய நோய்கள் வரக்கூடும். மேலும், பாலில் சேரும் கிருமிகள் பன்மடங்கு பெருகி, அதன் தரத்தையும் கெடுத்துவிடும்.
பாலை வெளியே வெதுவெதுப்பாக நம் சுற்றுச் சூழ்நிலையில் நீண்ட நேரம் வைத்திருக்க முடியாது. கிருமிகள் வெகுவாக வளர்ந்து பால் கெட்டு விடும். எனவே, கறவை மாடுகள் வைத்திருப்போர், சுத்தமாக பால் உற்பத்தி செய்வது பற்றி அறிந்து, கடைப்பிடிப்பது மிகவும் அவசியம்.
பால் கறக்கும் முறைகள்
முழு விரல்களை உபயோகித்தல்: இம் முறையில் ஒரு கையின் விரல்களால் காம்பினைப் பிடித்து, உள்ளங்கையில் அழுத்துவதால் பால் கறக்க முடியும். இம் முறையில் காம்பின் எல்லா பாகங்களிலும் ஒரே அளவான அழுத்தம் கிடைக்கும். பெரிய காம்புகள் உள்ள பசுக்களிலும், எருமைகளிலும் இம் முறையைக் கையாள்வது சிறந்தது.
இரு விரல்களை உபயோகித்தல்: கட்டை விரலுக்கும், ஆள்காட்டி விரலுக்கும் இடையில் காம்புகளைப் பிடித்து, சிறிய அழுத்தம் கொடுப்பதன் மூலம் பால் கறக்க முடியும். இம் முறையில் காம்புகளுக்கு ஒரே சீரான அழுத்தம் கிடைக்காது.
மேலும், காம்பின் மேல் பாகம் இதனால் பாதிக்கப்பட்டு, சிறு காயங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. இம் முறையைக் காட்டிலும் முழு விரல்களை உபயோகிப்பது சிறந்தது.
பால் கறத்தல்: மாடுகளில் பால் கறத்தல் என்பது தனிக் கலையாகும். இதற்கு, முதிர்ந்த நல்ல அனுபவமும், திறமையும் தேவை. பால் கறக்கும்போது கவனமாகவும், அமைதியாகவும், விரைவாகவும், அதே சமயம் பாலை முழுமையாகவும் கறக்க வேண்டும்.
சுத்தமாக பால் கறக்கும் முறைகள்: பால்காரர் தனது கையை சுத்தமாகக் கழுவ வேண்டும் மற்றும் மாட்டின் மடியை சுத்தமாகத் துடைக்க வேண்டும். காம்பிலிருந்து வரும் முதல் பீச்சில் திரி மற்றும் சீழ் இருக்கிறதா என்று பரிசோதித்து, அவ்வாறு இருந்தால் கீழே ஊற்றி விட வேண்டும்.
பாலில் சேரும் அசுத்தத்தைக் கட்டுப்படுத்தும் முறைகள்: கறவை மாடுகளின் மடியிலேயே சில கிருமிகள் இருப்பதற்கு வாய்ப்புண்டு. ஆரோக்கியமான மாடுகளில் இவ் வகையான கிருமிகள் எவ்விதமான கெடுதலும் செய்வதில்லை. எனவே, பால் கறக்கும்போது முதலில் வரும் பாலை நீக்கி விட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் காம்பினுள் உள்ள கிருமிகளை நீக்கி விடலாம்.
மாடுகளை அடிக்கடி நன்கு தேய்த்து, கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். மடியின் மீதும், பக்கத்திலுள்ள இடங்களிலும் நீண்ட உரோமம் காணப்பட்டால், அவற்றை கத்தரித்து நீக்கலாம். கறப்பதற்கு முன் மடி, பக்கத் தொடை ஆகிய பாகங்களை பொட்டாசியம் பெர்மாங்கனேட் கலந்த நீரினால் கழுவி, சுத்தமான துணியால் துடைக்க வேண்டும். கொட்டகையில் கிருமி நாசினி தெளித்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
சுத்தமான பாத்திரங்களை உபயோகப்படுத்த வேண்டும். பால் பாத்திரங்களை சுத்தம் செய்தபின், தண்ணீர் அல்லது சுடுதண்ணீராலோ சுத்தம் செய்ய வேண்டும். சூரிய ஒளியில் நன்கு உலர்த்திட வேண்டும். ஈரத்தைப் போக்க துணியைக் கொண்டு துடைப்பது நல்லதல்ல. சோப்பு உபயோகிக்கக் கூடாது. ஏனென்றால், இவை பாலில் ஒவ்வாத வாசனையை ஏற்படுத்திவிடும். பால் கறப்பதற்கும், சேகரிப்பதற்கும் அதற்கென தயாரிக்கப்பட்ட பாத்திரங்களை உபயோகிக்க வேண்டும்.
பாலை பாதுகாத்தல்: பாலை கறந்தவுடன் கொட்டகையில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும். இல்லையென்றால், மாட்டுத் தொழுவத்தில் உள்ள நாற்றம் பாலில் சேர்ந்து விடும்.
பாலை கறந்தவுடன் வடிகட்ட வேண்டும். பாலை 5 டிகிரி செல்சியஸூக்கு குளிர்ப்படுத்த வேண்டும். குளிர் சாதனம் இல்லையெனில், குளிர்ந்த நீரில் பாத்திரத்தை வைக்க வேண்டும். பாலை கறந்த 4 மணி நேரத்துக்குள் விற்பனை நிலையத்துக்கு அனுப்ப வேண்டும் என்றனர்.
மேலும் இது குறித்து தகவல் பெற விரும்புவோர், உழவர் பயிற்சி மையம், தேனி என்ற முகவரியிலோ அல்லது 04546-260047 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என்றனர்.
வெள்ளி, 18 அக்டோபர், 2013
சனி, 4 மே, 2013
பண்ணை சார் தொழில்கள் |
|
தவேப வேளாண் இணைய தளம் ::முக்கிய பகுதிகள் :: பண்ணை சார் தொழில்கள் |
|
விவசாயிகள்:
பால் பண்ணையின் அதிகப்படியான பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த நாகரிக மற்றும் சிறந்த அறிவியல் கொள்கைகள் மற்றும் பயிற்சிகளை பயன்படுத்த வேண்டும். பெரும்பாரும் பயன்படுத்தப்படும் வேறு சில பயிற்சிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
வீட்டமைப்பு :
வீட்டமைப்பு :
- கால்நடை வளர்ப்பிற்கான கூடாரம் ஈரப்பதம் இன்றி வறட்சியாக அமைக்க வேண்டும்.
- அடைமழை போன்ற பெரு மழையின் போது நீர் தேங்கி நிற்கும் பகுதிகளை கூடாரம் அமைக்க தவிர்க்க வேண்டும்.
- இதனுடைய சுவர்கள் 1.5 வழ 2 மீ உயரம் இருக்க வேண்டும்.
- இந்த கூடாரத்தின் சுவர்கள் ஈரம் கசியாத வண்ணம் பூசியிருக்க வேண்டும்.
- இதன் கூரை 3-4 மீட்டர் உயரம் இருக்க வேண்டும்.
- இந்த மாட்டு தொழுவம் சிறந்த காற்றோட்ட வசதியுடன் இருக்க வேண்டும்.
- இந்த தரை சரியான /கடினமான, வழுக்காத, சிறந்த முறையாக (3 செ.மீ) நீர் வடிய கூடிய முறையில் எளிதில் உலரும் படியாகவும் சரிவாக அமைக்க வேண்டும்.
- வளர்க்கப்படும் கால்நடைகள் நிற்கும் இடமானது 0.25மீ அளவில் சரியான அகன்ற வடிகால் வசதியுடன் இருக்க வேண்டும்.
- ஒவ்வொரு கால்நடைக்கும்மான இடைவெளி 2x1.05 மீ ஆகும்.
- கால்நடைகளுக்கான தீனி தொட்டி 1.05 மீட்டர் இடத்திலும் அதன் முன் உயரம் 0.5 மீ மற்றும் அதன் ஆழம் 0.25 மீட்டர் அளவிலும் இருக்க வேண்டும்.
- தீவனத் தொட்டி , தண்ணீர் தொட்டி, வடிகால் வசதி மற்றும் சுவர்கள் இவைகள் யாவும் எளிதில் தூய்மை படுத்தும் வண்ணம் அமைக்க வேண்டும்.
- ஒவ்வொரு கால்நடைக்கும்மான இடைவெளி 5- 10 ச.மீட்டர் அளவில் ஒதுக்கீட செய்ய வேண்டும்.
- வெயில் காலங்களில் முறையான நிழல் மற்றும் குளிர்ந்த நீரை கால்நடைகளுக்கு அளிக்க வேண்டும்.
- குளிர்காலத்தில் இரவு நேரத்திலும், மழையிலும் கால்நடைகளை வீட்டிற்குள் பராமரிக்க வேண்டும்.
- நாள்தோறும் கால்நடைகளுக்கு தனித்தனி கிடைப்படி ஓதுக்க வேண்டும்.
- கூடாரம் சுகாதார முறையில் பராமரிக்க வேண்டும்.
- வெளிப்புற ஒட்டுண்ணிகளான (பேன், ஈக்கள் ) இவற்றிலிருந்து காக்க சுவர்களுக்கு மாலத்தியான அல்லது காப்பர் சல்பேட் தெளிக்க வேண்டும்.
- கால்நடைகளின் சிறுநீர் சிறு குழிகளில் சேகரிக்கப்பட்டு பின் அதை பாசனக் கால்வாயில் சேர்க்க வேண்டும்.
- கால்நடைகளின் சாணம் மற்றும் சிறுநீரை முறையாக அப்புறப்படுத்த வேண்டும். சாண எரிவாயு கலனை சிறந்த முறையில் அமைக்க வேண்டும். சாண எரிவாயு கலன் என்பது சாணத்துடன் பண்ணை கழிவுகள் கால்நடை கழிவுகளை சேர்த்து தயாரிப்பதாகும்.
- கால்நடைகளுக்குத் தேவையான இடைவெளி ஒதுக்க வேண்டும்.
- வங்கி கடன் கிடைத்தவுடன் தகுந்த கால்நடை வளர்ப்பவரிடமிருந்தோ அல்லது அருகிலுள்ள கால்நடை சந்தையிலோ கால்நடைகளை கொள்முதல் செய்ய வேண்டும்.
- வங்கியின் தொழில்நுட்ப அலுவலரின் உதவியால் ஆரோக்யமான மற்றும் அதிகபடியான பால் தரும் கால்நடைகளை தேர்ந்தெடுக்க வேண்டும். கால்நடை மருத்துவர்/ கால்நடை வளர்ப்பு பராமரிப்பவர் மாநில அரசு/வட்டார.
- புதிதாக இரண்டாவது/மூன்றாவது கன்றுகுட்டி ஈன்ற பசுவை தேர்ந்தெடுத்து வாங்க வேண்டும்.
- வாங்குவதற்கு முன் கறவை மாட்டின் பால் வளம் மற்றும் மூன்று முறை பால் கறக்கும் திறன் உடையதா என நன்கு ஆராய்ந்தறிந்து வாங்க வேண்டும்.
- புதிதாக வாங்கிய கறவை மாட்டை அடையாளம் காண்பதற்கு தகுந்த அடையாளக் குறியிட வேண்டம். (காது குத்தல் (அ) பச்சை குத்துதல்)
- புதிதாக வாங்கப்பட்ட கறவை மாட்டுக்கு நோய் தடுப்பு மருந்து வழங்க வேண்டும்.
- புதிதாக வாங்கப்பட்ட கறவை மாட்டை முதல் இரண்டு வாரத்திற்கு தனி கவனம் செலுத்தி பார்க்க வேண்டும். பிறகு அதை மற்ற மாடுகளுடன் ஒன்றாக சேர்க்கலாம்.
- குறைந்த பட்ச பொருளாதால வளத்திலேயே இரண்டு பால் தரும் கறவை மாடுகளை வாங்க வேண்டும்.
- வாங்கக்கூடிய இரண்டாவது கறவை மாடு/ கறவை மாடு தொகுப்பு முதலில் வாங்கிய கால்நடைகளுக்கு 5-6 மாதம் கழித்து வாங்க வேண்டும்.
- பருவகாலத்திற்கேற்ப வளாப்பவரிடமிருந்து எருமை மாடுகளை ஜீலை-பிப்ரவரி மாதங்களில் வாங்க வேண்டும்
- இரண்டாவதாக வாங்கப்படும் கால்நடையானது ஏற்கனவே உள்ள கால்நடையின் பால் வளம் வற்றும் போது அல்லது குறையும் போது வாங்கினால் தொடர்ந்து பாலின் உற்பத்தி சீராக இருக்கும். மேலும் இது தொடர் வருமானத்திற்கும், பால் வற்றிய மாட்டினை பராமரிப்பதற்கும் உதவியாக இருக்கும்.
- பால் வளம் குன்றிய கால்நடையை ஆராய்ந்து அதற்கு பதிலான கால்நடையை வாங்க வேண்டும்.
- தரம் குறைந்த மாட்டை அது 6-7 முறை கன்று ஈன்ற பிறகு நீக்கி விட வேண்டும்.
- கறவை மாடுகளுக்கான தீவனம் சிறந்ததாக இருக்க வேண்டும். (தீவன பட்டியல் அட்டவணை vIII தரப்பட்டுள்ளது)
- ஒரு நாளிற்கு போதுமான அளவில் பசுந் தீவனம் வழங்க வேண்டும்.
- கூடுமானவரை நம் நிலத்தில் வளரக்கூடிய பசுந்தீவனம் அல்லது எங்கு கிடைக்குமோ அங்கிருந்து பெற்று தரவேண்டும்.
- பசுந்தீவனத்தை அதனுடைய சரியான வளர்ச்சியில் வெட்ட வேண்டும்.
- மேய்ச்சல் தீனி வழங்குவதற்கு முன் நார் உணவான நெல் பதர்களை வழங்க வேண்டும்.
- தானியங்களை நொறுக்கி அடர் தீவனமாக வழங்க வேண்டும்.
- எண்ணெய் புண்ணாக்கு கரகப்பாகவும், மொறு மொறுப்பாகவும் இருக்க வேண்டும்.
- ஈரமாக்கப்பட்ட அடர் தீவனத்தை உணவளித்தலுக்கு முன் வழங்க வேண்டும்.
- போதுமான வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள் தரவேண்டும் கனிம கலவையுடன் போதுமான அடர் உணவுகள் தாது உப்புகளையும் தரவேண்டும்.
- போதுமான மற்றும் சுத்தமான நீர் வழங்க வேண்டும்.
- ஒரு நாளைக்கு 2-3 முறை பால் கறக்க வேண்டும்.
- பால் கறக்க குறிப்பிட்ட நேரத்தை தேர்பு செய்ய வேண்டும்.
- ஒரு முறை பால் கறப்பதற்கு எட்டு நிமிடங்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.
- கூடுமானவரை வழக்கமாக பால் கறப்பவரே பால் கறக்க வேண்டும்.
- பால் கறக்க சுத்தமான இடத்தை பயன்படுத்த வேண்டும்.
- மாட்டின் மடி மற்றும் காம்புகளை கிருமிகளை தடுக்கும் மருந்து கொண்டு சுத்தப்படுத்த வேண்டும். பால் கறப்பதற்கு முன் மிதமான சூடான தண்ணீர் கொண்டு சுத்தப்படுத்த வேண்டும்.
- பால் கறப்பவருக்கு ஏதேனும் தொற்று நோய் இருந்தால், நோய் கிருமிகளை தடுக்கும் மருந்துகளை கொண்டு அவருடைய கைகளை ஒவ்வொருமுறை பால் கறக்கும் போதும் சுத்தப்படுத்த வேண்டும்.
- பால் கறப்பதற்கு முழுகைகளை பயன்படுத்தி வேகமாகவும், முழுமையாகவும் காம்புகளை உருவி கறக்க வேண்டும்.
- நோய் வாய்ப்பட்ட பசு / எருதுவின் பால் கறப்பதற்கு முன் நோய் பரவாமல் இருக்க தடுப்பு மருந்து அளித்த பிறகே பால் கறக்க வேண்டும்.
- கால்நடைகள் நோய்வாய்ப்பட்ட அறிகுறியாகவோ, உணவு உட்கொள்ளுதல் குறைவாக, காய்ச்சல், வழக்கத்திற்கு மாறான கலைப்புடன், வழகத்திற்குமாறான நடவடிக்கையுடன் காணப்பட்டால் நாம் கவனமுடன் செயல்பட வேண்டும்.
- நோய்வாய்ப்பாட்டிருப்பதாக எண்ணினால் அருகில் உள்ள கால்நடை மருத்துவ உதவி மையத்தை அணுகி உதவி கோரலாம்.
- பொதுவாக கால்நடைகளுக்கு ஏற்படும் தொற்று நோய்களுக்கு எதிராக கால்நடைகளை பாதுகாக்க வேண்டும்.
- ஒரு வேளை எதிர்பாராமல் ஏதேனும் தொற்று நோய் ஏற்பட்டால், உடனடியாக நோய் தாக்கப்பட்ட கால்நடையை மற்ற ஆரோக்யமாக உள்ள கால்நடைகளிடமிருந்து தள்ளி ஒதுக்கி வைக்க வேண்டும். மற்றும் தேவையான நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். (நோய் தடுப்பு முறை பட்டியல்கள் அட்டவணை IX ல் தரப்பட்டுள்ளது)
- புரூசெல்லா நோய், எலும்புருக்கி நோய், மடியழற்சி நோய் போன்ற நோய்களுக்கு சரியான கால இடைவெளியில் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
- குடற்புழு நீங்க மருந்துகளை தவறாமல் வழங்க வேண்டும்.
- கால்
- கால்நடைகளை ஒவ்வொரு நேரமும் சுத்தப்படுத்தி ஆரோக்கியமான சூழ்நிலையில் பராமரிக்க வேண்டும்.
- கறவை மாடுகளின் சினைப் பருவ அறிகுறிகள், கருவூட்டல், கருத்தரித்தல் மற்றும் கன்றுகள் பற்றிய முழு விபரம் கூர்ந்து கவனித்து தனிப்பட்ட ஏடுகளில் பதிவு செய்து வைக்க வேண்டும்.
- சரியான சினைப்பருவத்தில் கருவூட்டம் செய்திடல் வேண்டும்.
- கன்று ஈன்ற 60-80 நாட்களுக்குள் ரத்தக்கசிவு நிற்க வேண்டும்.
- கன்று ஈன்ற 2-3 மாதங்களுக்கு பிறகு மீண்டும் கருவூட்டம் செய்யலாம்.
- சினைப்பருவ அறிகுறிகள் தெரிந்த 12லிருந்து 24 மணி நேரத்திற்குள்ளாக கருவூட்டம் செய்யப்பட வேண்டும்.
- தரமான உயர்ரக காளைகளின் உறை விந்துக்களை கருவூட்டம் செய்ய பயன்படுத்த வேண்டும்.
VIII. பால் விற்பனை செய்தல்
VIII. பால் விற்பனை செய்தல்
- பால் கறந்த உடனடியாக அதை விற்பனை செய்ய வேண்டும். பால் கறப்பதற்கும் அதை விறபனை செய்யவதற்கும் இடையே மிக குறைந்தபட்ச நேரமே இருக்க வேண்டும்.
- பால் கறப்பதற்காக பயன்படுத்தப்படும் பாத்திரங்கள் மிகவும் தூய்மையானதாக பயன்படுத்த வேண்டும்.
- பால் கறப்பதற்காக பயன்படுத்தப்படும் வாளி/கேன் / பாத்திரங்கள் நன்றாக சலவைத்தூள் கொண்டு தேய்த்து மற்றும் இறுதியாக குளோரைடு நீர்மம் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
- பாலை எடுத்துச் செல்லும்போது அதிகப்படியான குலுங்கலை தவிர்க்க வேண்டும்.
- பாலை மற்றொரு ஊருக்கு விற்பனைக்காக எடுத்துச் செல்லும் போது அதை ஒரு நாள் முழுவதும் குளிரூட்டியில் பதப்படுத்த வேண்டும்.
- புதிதாக பிறந்த கன்றை மிகவும் கவனமுடன் பாதுகாக்க வேண்டும்.
- தொப்புள் கொடியை கூர்மையான கத்தி கொண்டு வெட்ட வேண்டும். அதே சமயத்தில் நோய் தொற்று தாக்காமல் இருக்க அயேடின் சாராயக் கரைசல் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
- கன்றிற்கு சீம்பாலை கண்டிப்பாக தரவேண்டும்.
- கன்று பிறந்த 30 நமிடத்தில் முலைப்பாலூட்ட வேண்டும். கன்று மிகவும் தளர்ந்த நிலையில் இருந்தால் பால் குடிக்க உதவ வேண்டும்.
- கன்று பிறந்த உடனே முலைப்பால் குடிக்க மறுத்தால் பிறகு அதை குடிக்க வைப்பதற்காக முலைப்பாலை பக்கெட்டில் சேமிக்க வேண்டும்.
- கன்று பிறந்த 2 மாதத்திற்கு அதை தனியாக வறண்ட சுத்தமான மற்றும் நல்ல காற்றோட்டம் உள்ள பகுதியில் பராமரிக்க வேண்டும்.
- அதிகபடியான சீதோஷ்ண நிலையிலிருந்து கன்றை பாதுகாப்பாக பராமரிக்க வேண்டும். அதுவும் முதல் 2மாத கன்றை நன்கு பராமரிக்க வேண்டும்.
- கன்றுகளை அதன் பரிமாண அடிப்படையில் வகைப்படுத்த வேண்டும்.
- கன்றுகளுக்கு தடுப்பு மருந்துகளை தர வெண்டும்.
- கன்று பிறந்த 4-5 நாட்களுக்குள் அதற்கு கொம்பு வெட்டி சீர் செய்ய வேண்டும். வளர வளர அதை கையாளுவது சுலபமாக இருக்கும்.
- தேவைக்கு அதிகமாக வளர்க்க முடியாத கன்றுகளை அப்புறப்படுத்தி விட வேண்டும். /ஏதேனும் தனிப்பட்ட காரணத்திற்காக பராமரிக்க வேண்டியிருந்தால் பராமரிக்கவும்,குறிப்பாக காளை கன்றுகளை.
- பசு கன்றுகளை தகுந்த முறையில் வளர்க்க வேண்டும்.
பால் பண்ணை என்பது சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் மற்றும் வேளாண் தொழிலாளர்களுக்கு வருமானம் ஈட்டக்கூடிய ஒரு முக்கிய உப தொழிலாகும். கால்நடைகளினால் கிடைக்கும் எரு உரம் மூலம் இயற்கை உரம் தயாரிக்கவும், மண்ணை வளப்படுத்தவும், பயிர்கள் நன்கு வளரவும் உதவுகிறது. கால்நடைகளின் சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் சாண எரிவாயு வீட்டு உபயோகத்திற்கு எரிபொருளாக மட்டுமின்றி கிணற்றிலிருந்து நீர் இறைக்க தேவைப்படும் இன்ஜீன்களுக்கும் எரிபொருளாக பயன்படுகிறது. வேளாண்மையின் உபரி பொருள்களான உப பொருள்களே கால்நடைகளுக்கான இலாபகரமான தீவனமாக அமைகிறது. பெரும்பாலும் பண்ணை செயல்பாடுகளுக்கும், போக்குவரத்துக்கும், அதிக அளவில் எருதுகள் பயன்படுகின்றன. ஆரம்பத்திலிருந்தே வேளாண்மை சார் தொழில்களில் , பெரும்பாலான வேலைவாய்ப்பும், இலாபம் ஈட்டக்கூடிய தொழிலாக பால் பண்ணை அமைகிறது. பால் பண்ணை வருடம் முழுவதும் வேலைவாய்ப்பை வழங்குகிறது. பால் பண்ணை மூலம் முக்கியமாக சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள், நிலமற்ற தொழிலாளர்களும் பயனடைகின்றனர். இரண்டு கறவை மாடுகளினால் ஒரு விவசாயிக்கு ஒரு வருடத்திற்கு கிடைக்கும் மொத்த உபரி தொகை 12,000 ரூபாய். இரண்டு கறவை மாடுகளை வாங்குவதற்கு தேவைப்படும் முதலீடு தொகை ரூ.18,223/- அதன் பிறகு வருடத்திற்கு திருப்பி செலுத்த வேண்டிய வட்டியுடன் கூடிய கடன் தொகை ரூ.4,294/- ஆனால் விவசாயிக்கு கிடைக்கும் நிகர லாபம் தோராயமாக ரூ.6000 – 9000. (இதற்கு தேவையான மாதிரி திட்டம் இணைக்கப்பட்டுள்ளது). கால்நடைகளின் தரம், பராமரிக்கப்படும் முறை, விற்பனை திறன் இவற்றைப் பொருத்தே கிடைக்கக்கூடிய வருமானம் அதிகரிக்கும்.
உலக வங்கி கணக்கின்படி இந்தியாவில் 75% 940 மில்லியன் மக்களில் 5.87 மில்லியன் கிராமம், 145 மில்லியன் ஹெக்டேரில் விவசாய நிலம். சராசரியாக பண்ணை அளவு 1.66 ஹெக்டேர். அதில் 70 மில்லியன் கிராம வீடு, 42% 2 ஹெக்டேர் வரையிலும் மற்றும் 37% நிலமற்ற வீட்டார். இந்த நிலமற்ற சிறு விவசாயி தங்களுடைய உடைமையில் 53% கால்நடை வளர்ப்பு மற்றும் 51% அதனுடைய பால் உற்பத்தியாகும். பால் உற்பத்தியில் இந்த சிறு / நடுத்தர விவசாயி மற்றும் நிலமற்ற வேளாண் தொழிலாளர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். பால் தேவை அதிகமாக உள்ள நகர பகுதிகளிலும் பால் பண்ணை ஒரு முக்கிய லாபகரமான தொழிலாக மேற்கொள்ளப்படுகிறது.
2001-02.ம் வருடத்தின் மொத்த பால் உற்பத்தி 84.6 மில்லியன் மெட்ரிக் டன்ஸ். ஒரு நாளைக்கு 226 கிராம் இந்த உற்பத்தி, ஒரு நாளைக்கு ஒரு நபருக்கான பால் தேவையின் அளவு 226 கிராம், ஆனால் இந்திய மருத்துவ ஆராய்ச்சி அமைப்பால் பரிந்துரைக்கப்படும்அளவு ஒரு நாளைக்கு ஒரு நபருக்கான அளவு 250 கிராம். பேராற்றல் வாய்ந்த நோக்கம்/செயலாற்றலின் மூலம் பால் உற்பத்தயை அதிகரிக்க வேண்டும். 3 வருட காலத்தில் கறவை மாடுகள் மற்றும் எருதுகளின் எண்ணிக்கை முறையே 62.6 மில்லியன் மற்றும் 42.4 மில்லியன் (1992 census) .
மத்திய மற்றும் மாநில அரசு பால் உற்பத்தியை பெருக்குவதற்கு நிதி உதவிகளை செய்து வருகிறது. 9வது ஐந்தாண்டு திட்டத்தில் கால்நடை வளர்ப்பு மற்றும் பால் உற்பத்தி துறைக்காக ஒதுக்கப்பட்ட நிதி ரூ.2345 கோடி.
II. கால்நடைகளை தேர்ந்தெடுக்கும் முறை
III கறவை மாடுகளுக்கான உணவளித்தல்
IV. கால்நடைகளிடம் பால் கறத்தல்
V. நோய்க்கு எதிரான தடுப்பு முறைகள்
VI. இனப்பெருக்க கால பராமரிப்பு
VII. கறவை மாடுகளின் கருவுற்றகால பராமரிப்பு
IX. கன்று குட்டிகளை பராமரித்தல்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)