யா அல்லாஹ்!!!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன்.என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக.
பாற்பண்ணை வளர்ப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாற்பண்ணை வளர்ப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2013

பாற்பண்ணை வளர்ப்பு

சனத்தொகை வளர்ச்சி, கொள்வனவு சக்தி என்பனவற்றினால் கடந்த மூன்று தசாப்தங்களில் இலங்கையில் கோழி வளா்ப்புத்துறை பெருமளவில் வளா்ச்சியடைந்துள்ளது. முட்டை, இறைச்சி என்பன சிறந்த புரத உணவுகளாகக் கருதப்படுகின்றன. இதில் சிறந்த போசணைகள் அடங்கியுள்ளதால் பெரும்பாலானோரைத் திருப்திப்படுத்தக் கூடிய வல்லமையும் இதற்குண்டு.
முட்டை உற்பத்தி
குஞ்சுகளை வளா்த்தல்

குஞ்சுகளை விலைக்கு வாங்க முன்னா் கூடுகளை அமைப்பதற்கான இடத்தை தெரிவு செய்தல் வேண்டும். அனைத்து உபகரணங்கள், கோழிக் கூடு, குஞ்சு வளா்க்கும் பெட்டிகள், கட்டிடத்தின் உட்புற சுவா்கள் என்பன உட்பட அனைத்தையும் குஞ்சுகளை அறிமுகப்படுத்த முன்னா் மிகச் சிறப்பாகச் சுத்தம் செய்து, தொற்றுநீக்கம் செய்தல் வேண்டும்.
குஞ்சுகளிற்கு செயற்கையாக வெப்பம் வழங்கல்
குஞ்சுகளின் வெப்பக்கட்டுப்பாட்டுத் தொகுதி நன்கு வளா்ச்சியடையும் வரை அவற்றிற்குத் தேவையான வெப்பத்தை வழங்குவதே குஞ்சுகளிற்குச் செயற்கையாக வெப்பத்தை வழங்குவதாகும். வெப்ப கட்டுப்பாட்டுத்தொகுதி வளா்ச்சியடையும் அதேவேளை அவற்றின் ஆரம்ப இறகுகள், துணை சிறகுகளினால் பிரதியீடு செய்யப்படும். 3 – 4 வாரங்களில் இவை முற்றாகப் பிரதியீடு செய்யப்படுவதோடு, இச்சமயத்தில் செயற்கையாக வெப்பம் வழங்குவதை நிறுத்த வேண்டும். குஞ்சுகளிற்கு குறைவான வெப்பம் கிடைக்கும் போது அவை குளிரால் பாதிக்கப்படுவதோடு, வயிற்றோட்டம், நியுமோனியா என்பனவும் ஏற்படலாம்.
ஒரு நாள் வயதுடைய, ஆரோக்கியமான குஞ்சுகளை சிறந்த குஞ்சு உற்பத்தியாளா்களிடம் பெற்றுக்கொள்ள வேண்டும். குஞ்சுகளிற்கு செயற்கையாக வெப்பம் வழங்கும் காலம் சுற்றாடல் வெப்பநிலைக்கு அமைய தீர்மானிக்கப்படும்.
பொருத்தமான வெப்பநிலையை வழங்கல்
குஞ்சுகளை அறிமுகப்படுத்துவதற்கு 24 மணித்தியாலங்களிற்கு முன்னா் வெப்பமேற்றும் உபகரணங்களை இயக்க வேண்டும்.
குஞ்சுகள் வளா்ச்சியடையும் போது அவற்றிற்குத் தேவையான வெப்பத்தின் அளவு படிப்படியாகக் குறையும்.
முதலாவது வாரத்தில் -950 F (350 C)
மூன்றாவது வாரத்தில் - 850 F (300 C)
ஒவ்வொரு வாரத்திலும் 50 F வீதம் வெப்பநிலையைக் குறைக்க முடியும்.
முகாமைத்துவம் செய்வதற்கான அறிவுறுத்தல்களாக கோழிக் குஞ்சுகள் வெப்பநிலைக்கு ஏற்ப எவ்வாறு நடந்து கொள்ளும் முறைகளைப் பயன்படுத்தவும் - வீடியோ அல்லது ?
குஞ்சுகள் வெப்பத்தை வழங்கும் உபகரணத்திலிருந்து விலகிச் சென்று களைப்புறுமாயின் வெப்பநிலை அதிகமானதாகும்.

படம் 1
குஞ்சுகள் வெப்பத்தை வழங்கும் உபகரணத்திற்கு அருகே மிகவும் நெருக்கமாகக் காணப்படுமாயின் வெப்பநிலை குறைவாகும்.
படம் 2
குஞ்சுகள் குஞ்சு வளர்ப்புப் பெட்டியில் பரவலாகக் காணப்படுமாயின் போதியளவான வெப்பநிலை உள்ளது.
படம் 3
வெப்பத்தை வழங்குவதற்கு (வெப்பமேற்றி) நீங்கள் பயன்படுத்தக் கூடியவை
மின்குமிழ், இலாந்தா், மரத்தூள் தகனமாக்கி

100 வாற்று மின் குமிழ் ஒன்றை நில மட்டத்திலிருந்து 2 அடி உயரத்தில் தொங்க விடுவது 900 குஞ்சுகளிற்குப் போதுமானதாகும். ஏனைய முறைகளுடன் ஒப்பிடும் போது இதில் புகை வெளியேறாது. எனவே மின்குமிழ்களைத் தொங்க விடுவதே சிறந்த முறையாகக் கருதலாம்.

  • குஞ்சுகள் வெப்பமேற்றிகளிலிருந்து (மின்குமிழ், இலாந்தா் போன்றன) அப்பால் விலகிச் செல்வதைத் தவிர்ப்பதற்கு, குஞ்சுப் பாதுகாப்பு வளையம் ஒன்றை (சிக் கார்ட்) அமைத்தல் வேண்டும். இதனால் குஞ்சுகள் மயங்குவதைத் தவிர்த்துக்கொள்ள முடியும். இதனை (அட்டைக் கடதாசி) கார்ட் போர்ட் ஒன்றைப் பயன்படுத்தித் தயாரித்துக் கொள்ள முடியும். 4 – 5அடி (1.2 மீற்றா் - 1.5 மீற்றா்) விட்டம் உள்ள ஒரு பாதுகாப்பு வளையம் 100 குஞ்சுகளிற்குப் போதுமானதாகும். இந்த பாதுகாப்பு வளையத்தின் உயரம் சுமார் 0.6 மீற்றராகக் காணப்படல் வேண்டும். இந்த பாதுகாப்பு வளையத்தை நாளாந்தம் 3 - 5 சதம மீற்றா் வீதம் பின்னால் நகா்த்த வேண்டும். இதனால் வளரும் குஞ்சுகளிற்குத் தேவையான இட வசதியை வழங்க முடியும். ஏழு நாட்களின் பின்னா் பாதுகாப்பு வளையத்தை முற்றாக அகற்ற வேண்டும்.
  • காற்றோட்டம் 
    குஞ்சுகளிற்கு வெப்பத்தை வழங்குவதற்காக எவ்வகையிலும் காற்றோட்டத்தை நிறுத்தக் கூடாது. CO2 வாயுவை வெளியேற்றுவதற்கும், கனகூழத்தை உலர்வானதாக வைத்திருக்கவும் சுத்தமான காற்றோட்டம் அவசியமாகும். ஆனால் குளிர் காற்றிலிருந்து குஞ்சுகளைப் பாதுகாக்க வேண்டும்.
    இலங்கையின் சுற்றாடல் நிலைமைகளின் கீழ் சிறந்த காற்றோட்டம் காணப்படுமாயின் சாரீரப்பதனைக் கட்டுப்படுத்த வேண்டிய அவசியமில்லை. அதிகளவான ஈரப்பதன் கனகூளத்தை ஈரமாக்குவதோடு, அமோனியா வாயு வெளியேறுவதற்கும் காரணமாக அமையும். ஈரப்பதன் குறையும் போது பலவீனமான சிறகுகள் உருவாக ஏதுவாக அமையும்.
தேவையான இடத்தை வழங்கல்

சரியான இடைவெளி 
நிலத்தின் அளவு: அதிகளவான அடா்த்தியில் குஞ்சுகளை வளா்ப்பதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். குஞ்சு வளா்க்கும் பெட்டியில் வெப்பமேற்றியின் கீழ் ஒவ்வொரு குஞ்சிற்கும் 45 சதுர சதம மீற்றா (45cm2) இடைவெளியும், கனகூளத்தின் மீது 460 cm2 இடைவெளியும் வழங்க வேண்டும். இதனை முதல் 4 வாரங்களிற்கு வழங்க வேண்டும்.
  • 4 – 8 வாரங்கள் - 920cm2/குஞ்சு
  • 8 – 16 வாரங்கள் - 1800cm2/குஞ்ச
உணவுப் பாத்திரங்களிற்கான அளவுகள

உணவுப் பாத்திரம் (நீளம்)
நீர் பாத்திரம் (நீளம்)
வளரும் குஞ்சுகள்
6.5 cm / குஞ்சு
2 cm / குஞ்சு
முட்டையிடும் பறவைகள்
8.75 cm / பறவை
2.5 cm / பறவை


உணவுப் பாத்திரம் (வட்டமானது) விட்டம் 30cm
நீர் பாத்திரம் (வட்டமானது) விட்டம் 25 cm
வளரும் குஞ்சுகள்
ஒரு அலகு / 14 குஞ்சுகளிற்கு
ஒரு அலகு / 40 குஞ்சுகளிற்கு
முட்டையிடும் பறவைகள்
ஒரு அலகு / 14 பறவைகளிற்கு
ஒரு அலகு / 24 பறவைகளிற்கு
உணவூட்டல்
உற்பத்திச் செலவில் குறிப்பிடத்தக்களவு (சுமார் 65 – 70%) பிரதானமான தீவனத்தை வழங்குவதற்கே செலவிடப்படுகின்றது. எனவே தீவனத்தின் தரம், அவற்றிற்கேற்படும் செலவுகள் (விலை) என்பனவற்றில் கவனம் செலுத்த வேண்டும். எப்போதும் குடிப்பதற்கு சுத்தமான நீரை போதியளவில் வழங்க வேண்டும்.
குஞ்சு வளர்ப்புப் பெட்டியில் நீர் பாத்திரங்களையும், உணவு பாத்திரங்களையும் அடுத்தடுத்து வைக்க வேண்டும். முதல் மூன்று நாட்களிற்கும் குளுக்கோசு (1 1/2 மேசைக் கரண்டி குளுக்கோசை ஒரு போத்தல் நீருடன் கலக்க வேண்டும்), விட்டமின் பி என்பன கலந்த நீரை வழங்க வேண்டும்.
குஞ்சுகளிற்கு: சிக் ஸ்டாடா (Chich starter) ஐ ( பண்படுத்தாத புரதம் 18%, அனுசேப சக்தி 2.6 kcal/g, பண்படுத்தாத நார் 5% இலும் குறைவு, Ca 1%, P 0.6%, இவற்றோடு சிறிதளவு அத்தியாவசியமான அமினோ அமிலங்கள் விசேடமாக லைசினையும், சல்பரையும் கொண்ட அமினோ அமிலங்கள்) வழங்கவேண்டும். கொக்சிடியோசிஸ் செயற்பாட்டு மூலகம் இத்தீவனத்தில் அடங்கியிருக்க வேண்டும். தீவனங்களை வழங்குவதற்கு 2 – 3 மணித்தியாலங்களிற்கு முன்னர் போதியளவான நீரை வழங்கவேண்டும். குஞ்சுகளைத் தீவனங்களை உண்பதற்குப் பழக்கப்படுத்த வேண்டும். முதல் சில நாட்களிற்கு பத்திரிகை தாளின் மீது தீவனங்களைத் தூவி விடல் வேண்டும். இதனால் எழும் ஓசையினால் குஞ்சுகள் கவரப்பட்டு தீவனத்தை நாடி வரும். ஒவ்வொரு நாளும் இக்கடதாசித்தாளை மாற்றவேண்டும். 3 நாட்களின் பின்னர் உணவுப்பாத்திரங்களில் தீவனத்தை வழங்க வேண்டும். வழங்க வேண்டிய தீவனங்களின் அளவுகள் அட்டவணை 1 இல் தரப்பட்டுள்ளது.
சுகாதாரம்
நீர் பாத்திரங்களையும், உணவு பாத்திரங்களையும் நாளாந்தம் சுத்தம் செய்யவும். ஆரம்ப பருவத்தில் தீவனங்களைப் பழக்கப்படுத்துவதற்கு உணவுப் பாத்திரங்களை எப்போதும் நிரப்பி வைக்கவும். இரண்டாவது கிழமைகளிலிருந்து இப்பாத்திரங்களை அரைவாசியாக நிரப்பவும். இதனால் தீவனங்கள் வீணாவதைத் தடுக்கமுடியும். இதேபோன்று குஞ்சுகள் வளரத் தொடங்கியதும் தீவனப்பாத்திரங்களின் உயரத்தை அதிகரிக்க வேண்டும். முதல் இரண்டு வாரங்களிற்கு நுண்ணுயிர் கொல்லிகளை நீருடன் கலந்து வழங்கும் போது நோய்களிலிருந்து குஞ்சுகளைப் பாதுகாக்கலாம்.
குஞ்சு வளர்க்கும் பெட்டிகளைப் பயன்படுத்த முன்னா் நன்றாக சுத்தம் செய்து தொற்று நீக்கம் செய்து கொள்ள வேண்டும். எப்போதும் மரணமடையும், நோய்களினால் பாதிக்கப்படும் குஞ்சுகள் தொடா்பான அறிக்கைகளை எழுதி பராமரிக்கவும்.
கனகூளத்தைப் பராமரித்தல்
குஞ்சுகளின் கால்கள் குளிரான தளத்தின் மீது நேரடியாக படுவதைத் தடுப்பதற்கு கனகூளத்தை அதாவது ஒரு மூடுபடையைப் பயன்படுத்த வேண்டும். இது தொடா்பாக பின்னா் தெளிவாக விபரிக்கப்படும்.
தன்னினம் உண்ணும் தன்மை 
இறகுகள் உதிர்தல் குஞ்சு வளா்க்கும் இடங்களில் ஏற்படும் ஒரு முக்கியமான பிரச்சினையாகும். இது தன்னினம் உண்ணும் தன்மைக்கு வழிவகுக்கும்.
  1. புரதக் குறைபாடு: விசேடமாக சல்பா அடங்கிய அமினோ அமிலங்கள் (மெதியொனின், சிஸ்டின்).
  2. குஞ்சுகள் அதிக எண்ணிக்கையில் காணப்படல்.
  3. உப்பு அதிகரித்தல் அல்லது குறைதல்.
  4. வெப்பம் அதிகரித்தல்.
  5. ஒளியின் செறிவு அதிகரித்தல்.
  6. சில வர்க்கங்களிற்கே உரிய பண்புகளாகக் காணப்படல்.
  7. ஆக்கிரமிப்புக் குணம்.
மூன்றாவது அல்லது நான்காவது வாரங்களில் ரெனிகட், கோழி கொள்ளை நோய் (Fowl Pox) என்பனவற்றிற்கு தடுப்பூசி ஏற்றவேண்டும். குஞ்சுகளின் மொத்த இறப்பு வீதம் (Mortality) 5%ஐ விடக்குறைவாக இருக்கத்தக்கவாறு சிறந்த முறையில் குஞ்சுகளைப் பராமரித்தல் வேண்டும். குஞ்சுப் பருவத்தின் இறுதியில் சுறுசுறுப்பற்ற குஞ்சுகளை கழிக்க வேண்டும். ஒரு நாள் வயதுடைய, ஒரு மாத வயதுடைய குஞ்சுகளைக் கழிக்க வேண்டும். 
வைத்திருக்க வேண்டிய பறவைகள்: அதிக வளா்ச்சி வேகத்தைக் கொண்ட, சீரான உடலைக் கொண்டவை. 
கழிக்க வேண்டிய பறவைகள்: சுறுசுறுப்பற்ற, விகாரமடைந்த, சிறிய, சோம்பலான, நோயுற்ற, குறைவான வேகத்தில் இறகுகள் வளரும் பறவைகள் .

வளரும் கோழிகளைப் பராமரித்தல்
பொதுவாக 8வது வாரம் தொடக்கம் 20வது வாரம் வரையான 12 வாரங்கள் வளரும் பருவமாகக் கருதப்படுகின்றது. வளரும் பறவைகள் எதிர்கால முட்டை உற்பத்தியாளா்கள் ஆகும். அவற்றின் வளாச்சிப் போக்குகள் எதிர்கால முட்டை உற்பத்தியைத் தீர்மானிக்கும். வளா்ச்சிப் பருவத்தில் செயற்கையாக வெப்பம் வழங்க வேண்டிய அவசியமில்லை.
கழித்தல்: வளரும் பருவத்தில் கிரமமான இடைவெளியில் பறவைகளைக கழித்தல் வேண்டும்.
கூடு: சிறந்த வசதியான கூடுகளை வழங்க வேண்டும். குஞ்சுகளை கூட்டினுள் அறிமுகப்படுத்த முன்னா், அதனை நன்கு சுத்தம் செய்து தொற்றுநீக்கம் செய்தல் வேண்டும். அத்துடன் புதிய 
கனகூளத்தையும் இட வேண்டும்.

இட வசதி1400 – 1800 cm2 / பறவை
தீவனம்
வளர்ச்சியடையும் பறவைகளிற்கு “குறோவா தீவனத்தை” 8 வது வாரத்திலிருந்து படிப்படியாக கிரமமான முறையில் வழங்க வேண்டும். இத்தீவனத்தில் 13% புரதம் அடங்கியிருப்பதோடு, தீவனத்தை வழங்க வேண்டிய முறைகள் அட்டவணை 1 இல் தரப்பட்டுள்ளன. இந்த வளரும் பருவ தீவனத்தின் முக்கிய செயல் பறவைகளின் பாலியல் முதிர்ச்சிக் காலத்தை 20 வாரங்கள் வரை பிற்போடுவதாகும்.
உணவு பாத்திரங்களிற்கான இடவசதி :7.5 cm /பறவை
நீர் பாத்திரங்களிற்கான இட வசதி2.5 cm / பறவை குடிப்பதற்கு சுத்தமான நீரை வழங்க வேண்டும்.
பால் முதிர்ச்சி14 வாரங்களின் பின்னர் முட்டையிடக் கூடியவாறு பறவைகளின் பாலியல் அங்கங்கள் முதிர்ச்சியடையும். இதனை துணை பாலியல் இயல்புகள் விருத்தியடைவதுடன் இனங் காண முடியும். கொண்டையின் அளவு பெரிதாகி, சிவப்பு நிறமாவதுடன் இதனை இனங் காண முடியும். வயிறு பெரிதாகும். பாலியல் முதிர்ச்சியை விரைபடுத்தக் கூடாது. விரைவாக பாலியல் முதிர்ச்சியடையும் போது முட்டையின் அளவு சிறிதாகும். முட்டை உற்பத்தி செய்யும் காலப்பகுதி குறையும். மொத்த உற்பத்தி அளவும் குறையும். பேடுகள் நோய்களினால் அதிகளவில் பாதிக்கப்படுவது அதிகரிக்கும். பாலியல் முதிர்ச்சிக்கான அறிகுறிகள் விரைவாகத் தோன்றுமாயின் அதனை காலம் தாழ்த்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கு 20 – 25%ஐ விடக் குறைவான லைசின் ஐக் கொண்ட தீவனத்தை வழங்கல், ஒரு நாள் விட்டு ஒரு நாள் தீவனத்தை வழங்க வேண்டும்.
வளர்ச்சியடையும் பறவைகளைப் பராமரிப்பதற்கான முக்கிய அம்சங்கள்
உடல் பருமன் சீராக இல்லாதிருத்தல்
உணவு, நீர் பாத்திரங்கள் என்பனவற்றிற்கான இடவசதி போதாமை, நோய்கள், அல்லது குறைவான வெளிச்சம் என்பன காரணமாக அமையலாம்.
நீர் பாத்திரங்கள், உணவு பாத்திரங்கள் என்பனவற்றிற்கு அருகே கோழிகள் நெருக்கமாக காணப்படல்
உணவு, நீர் தொட்டிகள் போதாமை
சிறிய குழுக்களாகக் காணப்படல்
மிகக் குறைவான அல்லது கூடிய வெப்பநிலை அல்லது நோய் நிலைமைகள்
மயக்கம்
அதிகளவான வெப்பநிலை, சுவாச நோய்கள், காற்றோட்டம் போதாமை
முட்டையிடும் கோழிகளைப் பராமரித்தல

பொதுவாக 5 மாத வயதிலிருந்து முட்டையிடத் தொடங்கும்.
  • நோக்கம்
    அதிகளவான உணவு பரிமாற்ற வினைத்திறனுடன் கூடிய முட்டைகளைப் பெறல்.
  • கூடு 
    ஆழமான கனகூள முறை இலங்கையின் நிலைமைக்கு மிகவும் பொருத்தமானதாகும். முடடையிடும் பருவத்தில் ஒளியை தூண்டியாகப் பயன்படுத்தலாம். நாளொன்றிற்கு 16 மணித்தியாலங்கள் ஒளியை வழங்க வேண்டும்.
  • தீவனம் வழங்கல் 
    முட்டையிடும் கோழிகளிற்கென விசேடமாகத் தயாரிக்கப்பட்ட “லேயா பீட்” (Layer Feed) இனை வழங்க வேண்டும். இதில் பண்படுத்தாத புரதம் 16% உம், Ca 3.25% உம் உள்ளது. இதனை துண்டங்களாகவோ அல்லது குறுனல்களாகவோ வழங்கலாம். முட்டை உற்பத்தி 5% இனை அடையும் போது வளர்ச்சிப் பருவத்திற்கான தீவனத்தை படிப்படியாக குறைத்து, முட்டையிடும் கோழிக்கான தீவனத்திற்கு அறிமுகப்படுத்தவும்.
    முட்டையிடும் கோழிகளிற்கு இயலுமான வரை பசுமையான பச்சை இலைகளை வழங்கவும். இதற்கு கூடுகளில் பச்சை இலைகளைக் கட்டித் தொங்கவிடலாம்.
    சுத்தமான குளிர் நீரை வழங்குவதும் தீவனங்களை வழங்குவதைப் போன்றே முக்கியமானதாகும். ஒரு வகையான தீவனத்திலிருந்து, இன்னொரு வகையான தீவனத்திற்கு மாற்றும் போது அதனை படிப்படியாக மேற்கொள்ள வேண்டும். முட்டையிடும் கோழிகளிற்கு சிப்பித் தூளை வழங்குவதும் (Shell grit) முக்கியமானதாகும். இதனை உணவுடன் கலந்தோ அல்லது தனியாகவோ வழங்கலாம்.
  • இடவசதி 
    தீவனத் தொட்டி : 10 cm / பேடு 
    நீர் தொட்டி : 5 cm / பேடு 
    நிலப்பரப்பு : ஒரு சதுர மீற்றருக்கு ஆறு பேடுகள் வீதம்

  • கழித்தல் 
    கோழிக் கூட்டமொன்றின் வினைத்திற்னை அதிகரிப்பதற்கும், உணவு, இடவசதி என்பனவற்றை மீதப்படுத்தவும் கோழிகளைக் கிரமமாக கழித்தல் வேண்டும்.
அங்கம்
கழிப்பன
வைத்திருக்க வேண்டிய
தலை
சிறிய நாகம் அல்லது காகத்தின் தலையை ஒத்திருக்குமாயின்
அகன்ற தலையுடன் வலுவான சொண்டு என்பன நன்கு ஒன்றோடொன்று இயைந்திருக்க வேண்டும்
உடல்
ஆழமற்ற, சமசீரற்ற, பேட்டின் வர்க்கத்தை ஒத்திராத சிறிய உடல்
ஆழமான, நன்கு வளாச்சியடைந்த சமச்சீரானது
இறகு
சிறிய, தொங்கிக் கொண்டிருக்கும், கரடுமுரடான, பிரகாசமற்ற, இறகுகள் மெதுவாக வளரும் பறவைகள்
நன்கு தடிப்பாக, மினுங்கும் தன்மை கொண்ட இறகுகள், விரைவாக இறகுகள் வளரும் பறவைகள்
முட்டைகளைச் சேகரித்தல்
முட்டைகளை அடிக்கடிச் சேகரித்தல் வேண்டும் (வயது குறைவாக உள்ள போது ஒரு நாளில் இரண்டு தடவைகள்). இதனால் முடடைகளிற்கு ஏற்படக் கூடிய பொறிமுறைச் சேதங்களைத் தவிர்த்துக்கொள்ள முடியும். முட்டைகளை சுத்தம் செய்வதற்கு சுத்தமான உலர்ந்த பொருட்களைப் பயன்படுத்தவும். உதாரணம்: மணற் கடதாசி, உலாந்த துணி. முட்டைகளைச் சுத்தம் செய்வதற்கு எவ்வேளையிலும் நீரைப் பயன்படுத்த வேண்டாம். நீரினால் சுத்தம் செய்யும் போது முட்டையைச் சூழவுள்ள மெல்லிய படை அகற்றப்படுவதால் நுண்ணுயிர்களின் தாக்கம் அதிகரிக்கும்.

இலங்கையில் கோழிப்பண்ணைகளிற்குச் சிபார்சு செய்யப்பட்டுள்ள தடுப்பூசித் திட்டம்
முதலாவது தினம்
மார்க்ஸ் நோய்க்கான (Markes) தடுப்பூசி
1 – 5 நாட்களில்
குளுகோஸ் (2 மேசைக் கரண்டியை இரண்டு லீற்றர் நீரில்) குறிப்பாக குஞ்சுகளை கொண்டு வந்த பின்னர்
1 – 5 நாட்களில்
விட்டமின் டீ தொகுதி (3 – 4 குளிசைகளை ஒரு லீற்றா நீரில்: தகைப்பைப் போக்குவதற்கு வினைத்திறனான, இலாபகரமான ஒரு முறையாகும்)
1 – 2 வாரங்களில்
டெடராமைசின் (1 தேக்கரண்டியை 4 லீற்றர் நீரிற் கலந்து வழங்கல்)
மூன்றாவது வாரம்
ரெனிகட் நோய்க்கான தடுப்பூசி
நான்காவது வாரம்
கோழி கொள்ளை (Foul pox) நோய்க்கான தடுப்பூசி
ஆறாவது வாரம்
முதலாவது தடவை பூச்சி மருந்து (25 கிராம் / 30 பேடுகளிற்கு)
3½ மாதங்கள்
ரெனிக்கட் நோய்க்கான இரண்டாவது தடுப்பூசி
4 மாதங்கள்
இரண்டாவது தடவை கோழி கொள்ளை (Foul pox) நோய்க்கான தடுப்பூசி
4 ½ மாதங்கள்
இரண்டாவது தடவை பூச்சி (25 கிராம் / 30 பேடுகளிற்கு)
6 ½ மாதங்கள்
மூன்றாவது தடவை பூச்சி (25 கிராம் / 30 பேடுகளிற்கு)
கோழிகளிற்கான கூடுகள்
தனிக் கூடுகள் முறை: மிகவும் நவீன, உயர்ந்த முறையாகும். தனித்தனியான கூடுகள் வழங்கப்படும். இதற்கு தேவைப்படும் கூலியாட்களின் எண்ணிக்கை குறைவாகும். ஆனால் ஆரம்பச் செலவு மிக அதிகமானதாகும்.
கனகூள முறை : இலங்கையின் நிலைமைகளிற்குப் பொருத்தமான இரண்டு முறைகள் உள்ளன.
1. கனகூளத்தைக் குவிக்கும் முறை 
2. ஆழமான கனகூள முறை
குவிக்கும் கனகூள முறை
7.5 ச.மீ தொடக்கம் அல்லது 15 ச.மீ இல் ஆரம்பிக்கலாம். படிப்படியாக கனகூளத்தின் உயரத்தை 30 ச.மீ வரை அதிகரித்து 1 ½ வருடங்களின் பின்னர் கூளத்தை முற்றாக அகற்ற வேண்டும்.
ஆமமான கனகூள முறை
மிகவும் சுத்தமானதொரு முறையாகும். கோழிகளைக் கூட்டமாக அகற்ற வேண்டும். மரத்தூள், உமி போன்றவற்றைப் பயனபடுத்தலாம். கனகூளத்தின் தடிப்பு பிரதேசத்தின் காலநிலைமைகள், நிலத்தின் தன்மை என்பனவற்றில் தங்கியுள்ளது. முறையாக முகாமைத்துவம் செய்யப்பட்ட கனகூளம் அதிகளவான உற்பத்திக்கு வழிகோலுவதோடு, நோய் ஏற்படுவதையும் தடுக்கும். சிறந்த பலாபலன்களைப் பெற்றுக்கொள்வதற்கு கனகூளத்தை ஒப்பீட்டளவில் உலாவானதாகவும், தளர்வாகவும் வைத்திருத்தல் வேண்டும். ஈரமாகும் அல்லது பூஞ்சணங்கள் வளருமாயின் அல்லது கடினமான படை உருவாகுமாயின் அவ்விடங்களில் உள்ள கூளத்தை அகற்றி விட்டு அங்கு புதிய கூளத்தினை இடல் வேண்டும்.
கனகூளம் அதிகளவில் உலர்ந்தாலோ அல்லது அதிகளவில் ஈரமாகும் போது தகைப்பு உருவாகுவதற்கும், உற்பத்தித் திறன் குறைவதற்கும் காரணமாக அமையும். போதியளவான காற்றோட்டத்தினை வழங்கும் போது அது உலர்ந்த, தளர்வான கனகூளத்தைப் பராமரிப்பதற்கு வழிவகுக்கும். கனகூளத்தை கோழிகள் தின்னுவதைத் தவிர்த்துக் கொள்ளவும். முதலாவது 3 வாரங்களில் தீனியை வழங்குவதற்கு பத்திரிகைத்தாளைப் பயன்படுத்தவும். கனகூளத்தை எப்போதும் உலாவானதாகப் பராமரிக்கவும். கனகூளத்தை குறைந்தது கிழமைக்கு இரண்டு தடவைகளாவது கிளறி விட்டு, தளர்வாக்கவும்.
கூடுகளை அமைத்தல்
இலங்கையின் நிலைமைக்கு திறந்த கூடுகள் மிகவும் பொருத்தமானவையாகும் (அதிகளவான சுவர் கம்பி வலைகளினால் மூடப்பட்டிருக்கும்).
கூரை : தென்னோலை / வைக்கோல் / தீந்தை பூசப்பட்ட கூரைத் தகடு.
சுவர் : 1½ - 2 அடி உயரத்திற்கு கொங்றீட் / செங்கற் சுவர், ஏனையவற்றை கம்பி வலைகளினால் மூட வேண்டும் (செங்கற் சுவரின் உயரம் குறைந்தது ஒரு அடியாவது இருத்தல் வேண்டும்).சுற்றாடலின் வெப்பநிலைக்கு அமைய இது மாறுபடும்.
உதாரணம்: உலர் வலயத்தில் ஒரு படையாக கொங்றீட்டையும், மீதியை கம்பி வலைகளினாலும் அமைக்க வேண்டும். மலைநாட்டிற்கு: சுவரில் 1/3 பாகம் கொங்றீட் / செங்கற்களினால் அமைத்தல்.
கூரையின் வகை : சமச்சீரானவை, மொனிட்டா (அதிக வெப்பமான பிரதேசத்திற்கு பொருத்தமற்றது), செமி மொனிட்டர், சமமற்ற இரண்டு பக்கங்கள்.
படம் 1
கூட்டின் நீளமும், அகலமும் 

அகலம் : ஆகக் கூடியது 40 அடி (அகலம் அதிகமாகும் போது காற்றோட்டம் சிறப்பாகக் காணப்படாது) 

நீளம் : பராமரிப்பிற்கு அமைய வேறுபடும். (ஒரு கூட்டிற்கு 350 – 500 பறவைகள் உகந்ததாகும்).
முட்டையிடும் கூடுகள்

வட்ட வடிவானதாக இருத்தல் வேண்டும். இருளான, சிறந்த காற்றோட்டத்தினை வழங்கும், இலகுவில் அணுகக் கூடிய இடத்தில் வைத்தல் வேண்டும். கூட்டின் உள்ளே சுத்தமான, உலர்ந்த கனகூளத்தை இடல் வேண்டும்.

சுவரில் இணைத்து விடுவதன் மூலம் கோழிக் கூட்டின் வெளியிலிருந்தே முட்டைகளைச் சேகரித்துக்கொள்ள முடியும்.
தனியான கூடுகள் : (0.3 x 0.23 x 0.3 மீற்றா) ஒரு கூடு 5 பறவைகளிற்குப் போதுமானதாகும். பறவைகளின் வயது 18 வாரங்களாகும் போது கூடுகளை அமைக்க வேண்டும்.
இறைச்சி உற்பத்தி
  1. கழிக்கப்படும் முட்டையிடும் கோழிகள் : கோழிகள் உற்பத்தித்திறனற்றதாகக் காணப்படும் போது அவை கழிக்கப்பட்டு, இறைச்சிக்காகப் பயன்படுத்தப்படும்.
  2. இறைச்சிக் கோழி: விசேடமாக இறைச்சிக்காக வளர்க்கப்படுவனவாகும். மிகவும் குறைந்த காலத்தில் இலாபத்தினைப் பெற்றுக்கொள்ளலாம். கோழிகளை 35 – 42 நாட்களில் சந்தைக்கு அனுப்பலாம்.
இறைச்சிக் (புறோயிலாஸ்) கோழி வளர்ப்பு
இறைச்சிக் கோழி வளர்ப்பு, முடடைக் கோழிகளை விட குறுகிய காலத்தில் இலாபம் தரும்.
இறைச்சிக் கோழி (புறோயிலாஸ்) என்பது இரண்டு கோழி வர்க்கங்களை இனக்கலப்பச் செய்து பெறப்படும் ஒரு வர்க்கமாகும். இக்கலப்பின வர்க்கங்களில் பின்வரும் இயல்புகள் காணப்படும்.
  1. உயர்ந்தளவான வினைத்திறன்
  2. விரைவாக இறகுகள் உருவாகும
  3. விரைவான வளர்ச்சி (உயிர் நிறை 1.8 – 2 kg / 6-7 வாரங்களில்)
  4. வினைத்திறனான உணவு பரிமாற்ற விகிதம் (1.7 – 1.8 kg/kg உயிர் நிறை அதிகரிப்பு – FCR = 1.2 -1.8)
  5. உடல் சிறப்பாக அமைந்திருக்கும்
புறோயிலர் உற்பத்தி முறை

இறைச்சிக் கோழியை வளர்ப்பதற்கு சிபார்சு முறை All in all out (குழு) முறையாகும். இதில் அனைத்து கோழிகளையும் ஒரே நேரத்தில் கூட்டில் விடப்பட்டு அவை அனைத்தையும் ஒரே நேரத்தில் சந்தைப்படுத்த வேண்டும். கோழிகளை வெளியேற்றி பின்னர் கூடுகளை நன்கு சுத்தம் செய்து 1 – 2 வாரங்கள் வரை வெறுமையாக விடல் வேண்டும். இதனால் நோய்கள் தொற்றும் சக்கரம் முறிந்து போகும். இறைச்சிக் கோழிகளிற்கு சிறந்த முகாமைத்துவத்தின் கீழ் உடல் நிறை இலக்கு, உணவு பறிமாற்ற வினைத்திறன், உணவு உள்ளெடுப்பு என்பன அட்டவணை 2 இல் தரப்பட்டுள்ளது. (FCR எனப்படும் உயிர் நிறையில் 1 கிலோகிராமை அதிகரிப்பதற்கு வழங்க வேண்டிய உணவின் அளவு).
கூடு
பறவைகளிற்கு வசதியான, தகைப்பு ஏற்படாத சுற்றாடலை வழங்குவதற்கு சிறந்த கூடமைப்பு அவசியமாகும். போதியளவான காற்றோட்டம் உள்ளதை உறுதிசெய்துகொள்ள வேண்டும். எனினும், குளிர் காற்று கோழிகளின் மீது படுவதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
இலங்கையில் பொதுவாக ஆழமான கனகூளம் பயன்படுத்தப்படுகின்றது. இம்முறையில் கூட்டின் தளத்தினை சீமெந்தினால் அமைக்கும் போது அதனை சுத்தம் செய்வதற்கும், தொற்று நீக்கம் செய்வதற்கும் இலகுவாக அமையும். அதிக அடர்த்தியாக கோழிகளை வளர்க்கக் கூடாது. பருமட்டாக ஒரு பறவைக்கு 1000 சதுர சதம மீற்றர் போதுமானதாகும். சாதரணமாக ஒரு சதுர மீற்றர் பரப்பளவில் 8 – 10 கோழிகளை வளர்க்கலாம். தேவைக்கதிமாக இடத்தை வழங்கும் போது பறவைகளின் சக்தி வீணடிக்கப்படும். இதனால் கோழிகளின் வளர்ச்சி குறையும்.
இறைச்சிக் கோழிகளை சிறிய அலகுகளாக வளர்ப்பதன் மூலம் அவற்றின் உடல் வளர்ச்சி அதிகரிப்பதற்கு ஏதுவாக அமைவதால், கூடுகளை பல பாகங்களாகப் பிரிப்பது முக்கியமானதாகும். இதனை தேவைக்கேற்ப காலத்திற்கக் காலம் மாற்றக் கூடியவாறு அமைத்தல் மிகவும் பொருத்தமானதாகும் (இதன் பருமட்டான உயரம் 1.2 மீற்றர் ஆகும்).
இறைச்சிக் கோழி கூடுகளிலுள்ள உபகரணங்கள் 
தீவன பாத்திரத்திற்கான இடம் - 500 – 900 சதம மீற்றர் /100 பறவைகளிற்கு 
நீர் பாத்திரத்திற்கான இடம் - 120 – 250 சதம மீற்றர் /100 பறவைகளிற்கு
இறைச்சிக் கோழிக்கானவை
வயது
உணவுப் பாத்திரம் (நீளம்)
நீர் பாத்திரம் (நீளம்)
0 – 6 வாரங்கள்
5.7 cm / பறவை
1.2 cm / பறவை
6 வாரங்களிற்கு மேல்
9 cm / பறவை
2.5 cm / பறவை
0 – 6 வாரங்கள்
இரண்டு அலகு /100 பறவைகளிற்கு
இரண்டு அலகு / 150 பறவைகளிற்கு
6 வாரங்களிற்கு மேல்
இரண்டு அலகு / 100 பறவைகளிற்கு
இரண்டு அலகு / 125 பறவைகளிற்கு
உணவுப் பாத்திரம், நீர் பாத்திரம் என்பனவற்றை இடுப்பின் உயரத்திற்கு வைப்பதன் மூலம் தீவனம் வீணாவதையும், விசிறப்படுவதையும் தவிர்த்துக்கொள்ள முடியும். 

பறவைகளை கூட்டினுள் அறிமுகப்படுத்தவதற்கு 2 வாரங்களிற்கு முன்னர் கூடுகளைச் சுத்தம் செய்து தொற்று நீக்கம் செய்யவேண்டும்.
குஞ்சுகளை வளர்த்தல் 

இது முட்டையிடும் பறவைகளைப் போன்றதாகும். ஆனால் விரைவாக இறகுகள் உருவாகுவதால் 2 வாரங்களின் பின்னர் குஞ்சு வளர்த்தலை நிறுத்த வேண்டும். இக் காலப்பகுதியில் முதலாவது வாரத்தில் குடிக்கும் நீருடன் இலெக்ட்ரோலயிட்ஸ், குளுகோஸ், விட்டமின் பி, நோய் நுண்ணுயிர்க் கொல்லி என்பனவற்றை கலந்து வழங்க வேண்டும்.
தீவனங்களை வழங்கல் 

இறைச்சிக் கோழிகளிற்கு குறுகிய வாழ்க்கைக் காலம் மாத்திரமே உள்ளமையால் எப்போதும் நிறையுணவை வழங்க வேண்டும். இவை நிறையுணவை வழங்காத போது அவற்றிற்கு மிகவும் தூண்டற்பேறுடையனவாகும். 

புறோயிலர் ஸ்டாடர் - குறுனல் (பண்படுத்தாத புரதம் 21% - 0 – 21 அல்லது 28 நாட்கள் வரையாகும்). 

புறோயிலர் பினிசர் - தூள்/பெலட் (பண்படுத்தாத புரதம் 18 % - (29 நாட்கள் முதல் சந்தைக்கு அனுப்பும் வரை). 

தீவனங்களை 4 நாட்களிற்குள் கிரமமாக மாற்ற வேண்டும்.

நோய்களைக் கட்டுப்படுத்தல்

முட்டைகளை அடைகாக்கும் போதே மரெக்ஸ், கம்பொரோ ஆகிய நோய்களிற்கெதிராக தடுப்பூசியை வழங்கவேண்டும். தீவனத்துடன் கொக்சிடியோ ஸ்டெட இனை கலந்து கொக்சிடியோசிஸ் நோய் ஏற்படுவதைத் தடுக்கவேண்டும்.
  • ஒளி 
    வளர்ச்சியின் முதல் சில வாரங்களிற்கு செயற்கையாக ஒளியை வழங்குவது (கட்டுப்பாடற்ற தீவனத்துடன்) நன்மையானதாகும். 200 சதுர அடிக்கு 15 வாற்று மின் குமிழ் போதுமானதாகும். 35 – 42 நாட்களில் சந்தைக்கு அனுப்பலாம்.
பறவைகளைப் பிடித்து சந்தைக்கு அனுப்புதல்

இறைச்சிக் கோழிகளைக் காலை வேளையில் பிடிக்க வேண்டும் (மங்கலான ஒளியில் இலகுவாகப் பிடிக்கலாம்). உணவு வழங்குவதை 8 மணித்தியாலங்களிற்கு முன்னர் நிறுத்தவேண்டும். பறவைகளைப் பிடிக்கும் அடிபடுவதைத் தவிர்ப்பதற்கு உணவுப் பாத்திரம், நீர் பாத்திரம் என்பனவற்றை அகற்ற வேண்டும். ஒரே தடவையில் 4 கோழிகளிற்கு மேல் பிடிக்கக்கூடாது. பிடித்த பறவைகளை மிகவும் கவனமாக கூட்டினுள் இட வேண்டும். கொண்டு செல்லப்படவுள்ள கோழிகளை ஈரமான காலநிலையிலிருந்து பாதுகாத்தல் வேண்டும்.
கோழிகளைப் பாதிக்கும் பிரதான நோய்கள்
பக்றீரீயா நோய் புல்லோரம் நோய் / சல்மொனெல்லா முட்டைகள், அடைவைக்கும் பொறிகள் என்பனவற்றின் ஊடாக இந்நோய் பரவும். பொதுவாக முதல் சில தினங்களிலும், அவற்றின் வயது 2 – 3 வாரங்களாகும் வரையும் அதிகளவான இறப்பு வீதத்தை அவதானிக்கலாம். நோயால் பாதிக்கப்பட்ட பறவைகள் வெப்பமேற்றிகளின் அருகே சேர்ந்து காணப்படல், உணவில் விருப்பம் காட்டாமை, தூக்க கலைப்பு, வெண்ணிறமான மலம் குதத்தைச் சூழ ஒட்டிக் கொண்டிருக்கலாம். கட்டுப்படுத்தல்: பல்வேறு வகையான நோய் நுண்ணுயிர்க் கொல்லிகளைப் பயன்படுத்தலாம். இவை இறப்பு வீதத்தைக் கட்டுப்படுத்த உதவும். ஆனால் நோயை முற்றாகத் தவிர்ப்பதில்லை. Furazolidone 0.022%இனை உணவுடன் கலந்து வழங்குவதானல் திருப்திகரமான பலாபலன்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.
பறவை தைபொயிட் 
இது புல்லோரம் நோயை ஒத்ததாகும். எல்லா வயதிலும் இறப்பு வீதம் அதிகமானதாகக் காணப்படும். 
கட்டுப்பாடு : தடுப்பூசியின் மூலம் இறப்பையைக் கட்டுப்படுத்தலாம்.
பறவை கொலரா 

மிக விரைவாகத் தொற்றிக் கொள்ளும் (Contagious), அதிகளவில் பரவியுள்ள நோயாகும். இறந்த கோழிகள் காணப்படல் இந்நோயின் முதல் அறிகுறியாகும். காய்ச்சல், குறைவான அமுக்கம், வாயிலிருந்து சளி வடிதல், இறகுகள் விசிறப்பட்டுக் காணப்படல், வயிற்றோட்டம், சுவாச வேகம் அதிகரித்தல் என்பன இந்நோயின் ஏனைய அறிகுறிகள் ஆகும். 

கட்டுப்பாடு: தடுப்பூசிகளை வழங்கல் உணவு, நீர் என்பனவற்றிலுள்ள சல்போ மருந்து இறப்பையைக் கட்டுப்படுத்தும். டெட்ராசைக்கிளினை அதிகளவில் வழங்குவது சிறந்த பயனைத் தரும் (உணவுடன் 0.04 %). பெனிசிலினையும் வழங்கலாம்.
கொரயிசா நோய் 

இது கோழிகளைத் தாக்கும் ஒரு ஆரம்ப நோயாகும். வயது 4 வாரங்களாகும் போது இந்நோய் ஆரம்பிப்பதோடு, வயது அதிகரித்துச் செல்லும் போது நோயால் பாதிக்கப்படுவது அதிகரிக்கும். வளியிலுள்ள நோய்க்காரணி நேரடியாகப்படுவதன் மூலமும், நோய்க்காரணியைக் கொண்ட நீரை அருந்துவதனாலும் இந்நோய் பரவும்.

கட்டுப்படுத்தல்: கட்டுப்பாட்டிற்கான அடிப்படை தடுப்பூசிகளை வளர்ப்பதாகும். எனினும் கடுமையாக சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் நோய்க் காரணியால் நேரடியாக தொற்று ஏற்படுவது தடுக்கப்படலாம் அல்லது நோய் பிந்தி ஏற்படலாம். இந்நோய்க்கு எதிர்ப்புத் தன்மை கொண்ட மரபணுக்கள் உருவாகுவதைத் தவிர்த்துக் கொள்ள முடியும். அத்துடன் தடுப்பூசிகளின் வினைத்திறனையும் அதிகரிக்கலாம்.
கொக்சிடியோசிஸ் 

கொக்சிடியன் என்னும் புரோட்டோசோவா ஒட்டுண்ணி இனத்தினால் அல்லது இனங்களினால் ஏற்படும் ஒரு ஒட்டுண்ணி நோயாகும். நோயால் பாதிக்கப்பட்ட கோழிகளில் பல்வேறு விதமான நோய் அறிகுறிகள் காணப்படும். இவ்வறிகுறிகள் வளாச்சி குறைவது தொடக்கம் கழிச்சலுடன் குருதி வெளியேறுதல், அதிகளவான இறப்பு வீதம் என்பது வரை பல்வேறு வீச்சில் காணப்படும்.

கட்டுப்பாடு: நடைமுறையில் நோயை முற்றாகத் தவிர்த்தல் சாத்தியமற்றதாகும். நோயைக் கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி வழங்கல் அல்லது மருந்துகளை வழங்கல் என்னபனவற்றின் மூலம் நோய்த் தொற்றலைக் குறைக்கலாம். தொற்றலைத் தவிர்ப்பதற்கு கொக்சிடியஸ் நுண் எதிரிகள் பல உள்ளன.
வைரசு நோய் 

IBD / கம்போறோ நோய் 

கோழிக் குஞ்சுகளைப் பாதிக்கும் மிகவும் தீவிரமான, மிக அதிகளவில் தொற்றும் ஒரு நோயாகும். நோய்க்காரணியான வைரசு பறவைகளின் மலத்துடன் வெளியேறும். சடுதியாக இந்நோய் ஏற்படுவதுடன் தொற்றும் கால அளவு 3 – 4 நாட்களாகும். மோசமான ஒருங்கிணைப்பின்மை, நீர் போன்ற கழிச்சல், குதத்தைச் சூழ தடிப்படைந்த இறகுகளைக் காணலாம். குத பகுதியை பறவைகள் கொத்தல், குதத்தில் தொற்று ஏற்படல் போன்ற நோய் அறிகுறிகளைக் காணலாம். இறப்பு வீதம் 20 %ஐ விட அதிகமானதாகக் காணப்படும்.
கட்டுப்படுத்தல் 

இந்நோயைக் கட்டுப்படுத்த எவ்விதமான வழிகளும் இல்லை. தொற்றல் ஏற்பட்ட பண்ணைகளை நன்றாகத் தொற்றுநீக்கம் செய்தல் வேண்டும். இதனால் திருப்திகரமான பலாபலன்களைப் பெற முடியும். இனப்பெருக்கம் செய்யப்படவுள்ள பறவைகளிற்கு தடுப்பூசிகளை வழங்க வேண்டும். இதனால் சிறிய பறவைகளிற்கு பெற்றோரின் எதிர்ப்புத் தன்மை கிடைப்பதற்கான வாய்ப்பு கிட்டும்.
நியுகாசல் நோய் / ரெனிகட்
மிகவும் விரைவாகப் பரவும் வைரசு நோயாகும். இறகு உதிர்தல், காலை இழுத்து செல்லல், தலையும், கழுத்தும் முறுகிக் காணப்படல், நீரை அருந்திய பின்னர் பின்னோக்கி அல்லது வட்டமாக செல்லுதல், முழுமையாக பக்க வாதம் ஏற்படல் போன்ற நரம்புத் தொகுதியுடன் தொடர்பான நோய் அறிகுறிகளைக் காட்டும். வைரசின் வலிமை, சுற்றாடற் காரணிகள், பறவைகளின் நிலைமை என்பனவற்றில் இறப்பு வீதம் தங்கியுள்ளது. முதிர்ச்சியடையாத கோழிகளில் இறப்பு வீதம் அதிகளவானதாகக் காணப்படும் (சில சந்தாப்பங்களில் 100% மாகக் கூடக் காணப்படும்).
மரெக்ஸ் நோய் 

இத்தொற்று நோய் உலகம் பூராவிலும் கோழிகளிற்கு ஏற்படும் ஒரு நோயாகும். இந்நோய் மிக அதிகளவில் தொற்றும் தன்மை கொண்டதாகும். இதனால் கோழிகளிடையே மிக விரைவாகப் பரவும். இவ்வைரசுவிற்கு கோழிக் கூட்டிலும், கனகூளத்திலும் சில மாதங்களிற்கோ அல்லது பல வருடங்களிற்கோ வாழக் கூடியதாகும். தொற்றல் ஏற்பட்ட பறவைகள் இறப்பதற்கு முன்னர் இவை சில மன அழுத்தங்களை வெளிப்படுத்தும். சில சந்தாப்பங்களில் பாரிச வாதமும் ஏற்படலாம். இறைச்சிக் கோழிகளைச் சுத்தம் செய்யும் போது இறகுகள் தடிப்படைந்திருப்பதைக் காணலாம்.
கோழி கொள்ளை நோய் 

இதுவும் பரவலாகக் காணப்படும் ஒரு நோயாகும். கோழிக் கொள்ளை நோய் பெருமளவான எதிர்ப்புத் தன்மையைக் கொண்டுள்ளதோடு, உலர்ந்த காயங்கள், பொருக்குகள் என்பனவற்றில் பல வருடங்களிற்கு உயிர்வாழக் கூடியனவாகும். வைரசு தொற்றல் ஏற்பட்ட சில பறவைகள் இந்நோயின் காவிகளாகத் தொழிற்படும். இறகுகள் உதிரும் சந்தர்ப்பங்களில் கூட வைரசு மீளவும் செயற்படத் தொடங்கும். வளர்ச்சியடைந்த தலைப் பாகத்திலும், குஞ்சுகளின் கால்களிலும், அடிப்பாதங்களிலும் பொதுவாக காயங்கள் ஏற்படும். இக்காயங்கள் படிப்படியாக பெரிதாகும் போது மஞ்சள் நிறமாகி பின்னர் மங்கிய நிறமுள்ள பொருக்குகளாக மாறும். மூக்குத் துவாரத்திலும், கண்ககட்டுப்பாடு ளைச் சுற்றியும் உருவாகும் இவ்வாறான காயங்களினால் மூக்கிலிருந்து திரவம் வடியும்.
கட்டுப்பாடு 

தடுப்பூசிகளை ஏற்றுவதே மிகவும் வினைத்திறனான ஒரு முறையாகும். தடுப்பூசி வழங்கப்பட்ட பறவைகளை ஒரு வாரத்தின் பின்னர் அவதானித்தால், தடுப்பூசி ஏற்றப்பட்ட இடங்களில் வீக்கங்களை அல்லது பொருக்குகளைக் காணலாம். முறையாக தடுப்பூசி ஏற்றப்படாத பறவைகள், இதற்கு முன்னர் வழங்கிய தடுப்பூசியின் சக்தி குறைந்துள்ள பறவைகள் என்பன இவ்வாறான அறிகுறிகளைக் காட்டுவதில்லை.
பறவை இன்புளுவன்சா 

பறவை இன்புளுவன்சா aviral நோயாகும். இது சுவாசத் தொகுதி, உணவு சமிபாட்டுத் தொகுதி, நரம்புத் தொகுதி என்பனவற்றைப் பாதிக்கும். நோயின் தீவிரம் மத்திய அளவு தொடக்கம் இறப்புவரையான பரந்த வீச்சில் காணப்படும். இவ்வைரசுவின் சில வடிவங்களிற்கு மிகக் குறுகிய காலத்திலேயே நிலைபெறக் கூடிய வல்லமை உண்டு. சிறிய குஞ்சுகளில் நோய் அறிகுறி எதுவும் ஏற்படாமலே அவை சடுதியாக இறக்கும். நோய் அறிகுறிகள் தோன்றல் பல்வேறு காரணிகளில் தங்கியுள்ளது. அதாவது பறவைகளின் வயது, தொற்றலேற்பட்ட பறவை இனம், கட்டுப்பாட்டு முறை, இன்புளுவன்சா வைரசு வாக்கம் என்பனவற்றில் தங்கியுள்ளது. ஒழுங்கற்ற முறையில் அமைந்துள்ள இறகுகள், மென்மையான ஓட்டினைக் கொண்ட முட்டைகளை இடல், அழுத்தம், பறவைகள் மயங்கிக் காணப்படல், உற்பத்தி சடுதியாக குறைதல், உணவிற்கு வெறுப்பு ஏற்படல், வயிற்றோட்டம், மூக்கிலிருந்து குருதி கலந்த திரவம் வடிவதல் என்பனவற்றை இந்நோய்க்கான காரணிகளாக இனங் காணலாம்.
கட்டுப்படுத்தல்
பறவைக் காய்ச்சலைக் கட்டுப்படுத்த மிகவும் வினைத்திறனான முறை எதுவும் இல்லை. எனினும், முறையான பயிர்ச்செய்கை முறைகளைப் பின்பற்றல், ஒழுங்கான போசணை, பரந்து வீச்சுள்ள நோய்க் காரணிகளைக் அழிக்கும் நுண்ணுயிர் கொல்லிகளைப் பயன்படுத்தல் என்பனவற்றின் மூலம் துணைத் தொற்றல்கள் ஏற்படுவதைத் தவிர்த்துக்கொள்ள முடியும். தடுப்புக் காப்பு நடவடிக்கைகளை மிகக் கடுமையாகப் பின்பற்றும் போது வாத்தக ரீதியிலான கோழி வளர்ப்பில் ஏற்படக்கூடிய ஆபத்து குறைவான நோய்களைக் கட்டுப்படுத்த உதவும். எனினும், தடுப்புக்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலும், தொற்றல் ஏற்பட்ட பறவைகளை அழித்தல் என்பன நோயைக் கட்டுப்படுத்துவதற்கான வினைத்திறனான முறையாகும்.
இறக்கைகளை உதிர்த்தல் என்றால் என்ன ?
குறுகிய கால இடைவெளியில் ஏராளமான கோழிகள் இறகுகளை உதிர்ப்பதாகும். இதனை வெப்பமான காலத்தில் அவதானிக்கலாம். உதாரணமாக ஜுன், ஜுலை மாதங்களில் இதனை அவதானிக்கலாம்.
கட்டுப்படுத்தல் 

நோயின் ஆரம்ப கட்டத்திலேயே கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வது முக்கியமாகும். எரித்திரோமைசின், சல்பொமனயிட் என்பனவற்றை குடிநீருடன் வழங்குவதற்கு சிபார்சு செய்யப்பட்டுள்ளது. தொற்றல் ஏற்பட்டுள்ள பிரதேசங்களில் வளர்க்கப்படும் கோழிகளிற்கு சிறு வயதிலேயே தடுப்பூசிகளை ஏற்றுவது நோயைத் தவிர்ப்பதற்கு உதவும்.