7 மாதம் 40 ஆயிரம் கொட்டிக் கொடுக்கும் கொடி ஆடுகள்
|
கொடி ஆடுகளை பற்றி சரோஜா கூறுவதுதாவது ஆடு வளர்த்தே வீடு கட்டியிரக்கேன். பொண்ணுங்களைப் படிக்க வெச்சு, கட்டிக் கொடுத்திருக்கேன். ஒரு கஷ்டமும் இல்லாம குடும்பத்தை ஒட்டிக்கிட்டிருக்கேன். இந்த ஆடுகளுக்காக நான் எந்தச் செலவையும் செய்யுறதில்ல என்று சரோஜா அவர்கள் பேசத் தொடங்கினார்.
நம்பிக்கையான கொடி ஆடுகள் :
“நம்ம பாரம்பர்ய ரசமான கொடி ஆடுகளையும், கன்னி ஆடுகளையும்தான் நான் வளர்த்துகிட்டிருக்கென். கொடி ஆட்டுக்குக்காலும், கொம்பும் நல்ல நீளமா இருக்கும். 15 மாச வயசுல மூணடி உயரத்துக்கு வளர்ந்து, பார்க்கவே கம்பீரமா இருக்கும். அதுல கரும்போறை, செம்போறைனு ரெண்டு வகை இருக்கு. கருப்பு உடம்புல வெள்ளைப் புள்ளிகளும், வெள்ளை உடம்புல கருப்புப் புள்ளிகளும் இருந்தா கரும்போறை. சிவப்பு உடம்புல வெள்ளைப் புள்ளிகளும், வெள்ளை உடம்புல, சிவப்புப் புள்ளிகளும் இருந்தா செம்போறை. இப்ப என்கிட்ட கரும்போறை மட்டும்தான் இருக்குது.

ஏழு மாதத்துக்கு ஒரு ஈத்து : கொடி ஆடுகள் முதல் தடவை சினை பிடிக்க 10-12 மாசம் ஆகும். அதுக்குப் பிறகு, ஏழு மாசத்துக்கு ஒரு தடவை குட்டி ஈனும். அஞ்சு மாசம் சினைக்காலம். குட்டி போட்ட ரெண்டு மாசத்துலயே திரும்பவும் சினை பிடிச்சுடும். ஒரு ஈத்துக்கு ரெண்டுல இருந்து, நாலு குட்டி வரை போடும். சராசரியா ஒரு ஈத்துக்கு ரெண்டு குட்டிங்க கிடைச்சுக்கிட்டே இருக்கும். மூணு மாசம் வரைக்கும் குட்டிகளுக்கு தாராமா பால் கொடுத்து அதுவே பராமரிச்சுடும். அதனால புட்டிப்பால் எல்லாம் தர வேண்டியதில்ல, போதுமான அளவுக்கு தாய்ப்பால் குடிக்கறதால குட்டிக நல்ல ஆரோக்கியத் தோட வளரும்.
ஏழு மாதத்தில் விற்பனை : கொடி ஆட்டுல ஏழு மாசத்துலயே ஒரு பெட்டை ஆடு பதினஞ்சு கிலோ எடை வரைக்கும் வந்துடும். கிடா, இருபது கிலோ எடைக்கு வந்துடும். அந்த சமயத்துல விற்பனை செய்தா ஒரு பெட்டை அடு 2,250 ரூபாய், கிடா 3,000 ரூபாய்னு விலை (குறைந்தபட்சம்) போகும்”
கைகொடுக்கும் கன்னி ஆடு : “ கன்னி ஆடு கொஞ்சம் குட்டையா, உடம்பு குறுகலா, திகாத்திரமா இருக்கும். கொம்பு நடுத்தரமா இருக்கும். கொம்பு நடுத்தரமா இருக்கும். இதுல பால்கன்னி, செங்கன்னினு ரெண்டு வகை இருக்குது. கண் ஒரத்துலயும் கொம்பிலிருந்து வாய் வரைக்கும் ரெண்டு சிவப்பு கோடு இருக்கும். அதேபோல, காது ஒரத்துலயும், கால்கள்லயும் சிவப்பு கோடுக இருக்கும். இது, செங்கன்னி. இந்தக் கோடெல்லாம் வெள்ளையா இருந்தா பால் கன்னி.
கன்னி ஆடுக முதல் தடவை மட்டும் 8-10 மாச வயசுல சினை பிடிக்கும். அதுக்குப் பிறகு ஏழு மாசத்துக்கு ஒரு தடவை குட்டி போடும். ஒரு ஈத்துக்கு ரெண்டு குட்டி வரை போடும். இந்த இனத்துலயும் தாயே மூணு மாசம் வரைக்கும் பால் கொடுத்துப் பரமாரிச்சுடும். அதனால் புட்டிப்பால் தேவையே இருக்காது. கன்னி ஆடுகளைப் பொறுத்தவரை ஏழு மாச வயசுல ஒரு பெட்டை 10 கிலோ எடையும், கிடா 15 கிலோஎடையும் இருக்கும். பெட்டை 1,500 ரூபாய், கிடா 2,250 ரூபாய்னு விலை போகம்.
ஏழு மாசத்துக்கொரு தடவை 40 ஆயிரம் : ரெண்டு வகையிலயும் கலந்துகட்டி மொத்தம் 10 பெரிய ஆடுங்க என்கிட்ட இருக்குது கணக்குப் பாத்தா ஏழு மாசத்துக்கு ஒரு தடவை இதுங்கல்லாம் குட்டி போட்டுக்கிட்டே இருக்கும். ஈத்துக்கு 10 பெரிய ஆடுங்க மூலமா, 20 குட்டிங்க கிடைச்சுடும். அந்தக் குட்டிகளையெல்லாம் ஏழு மாசம் வரைக்கும் வளர்த்து, அதுக்குப் பிறகு விலைக்குக் கொடுத்துடுவேன். இதன் மூலமா எப்படிப் பார்த்தாலும் 40 ஆயிரம் ரூபாய்க்குக் குறையா வருமானம் கிடைச்சுக்கிட்டே இருக்கும். இப்படி நான் விலைக்குக் கொடுக்குற சமயத்துல, புதுசா 20 குட்டி ஆடுங்க வந்துடும் மொத்தத்தையும் சேர்த்து பராமரிக்க ஆரம்பிச்சா ஒரு தடவை ஆடுகளை வித்துக்கிட்டே இருக்கறதை ஒரு வழக்கமாகவே வெச்சுருக்கேன். இது எனக்கு ரொம்பவே வசதியா இருக்கு.
எப்பவுமே 10 தாய் ஆடுகளும், 20 இளம் ஆடுகளும் இருக்குற மாதிரி வெச்சுகிடடு, மத்ததைக் கழிச்சுடுவேன், 10 தாய் ஆட்டுக்கு ஒரு பெரிய கிடா போதும்.
பராமரிப்பு என்பதே இல்லை : பராமரிப்புனு பார்த்தா பெருசா எதுவுமே இல்ல. பகல்ல பக்கத்துல ஆத்தோரத்துல மேய்ச்சுகிட்டு வந்து ராத்திரியில கட்டிப்போட்டுடுவேன். பனிக் காலத்துலகூட எந்தப்பிரச்னையும் வந்ததில்ல. பரண் இல்ல தரையிலதான் படுத்துக் கிடக்குது. பேன், உண்ணி தொந்தரவுகள் இல்ல. ஒருமுறைக் கூட ஒட்டுண்ணி நீக்கம் செஞ்சதில்ல. குடற்புழு நீக்கம்கூட செஞ்சத்தில்ல. மேய்ச்சலுக்கு போகும்போது குட்டைகள்ல தேங்கி கிடக்குற தண்ணீரைதான் இந்த ஆடுகள் குடிக்குது. இதுக்குனு தனியா காட்டகைக்குள்ள தண்ணீர் தொட்டி வைக்கல
தீவன சாகுபடி முக்கியம்
30 அடி நீளம், 10 அடி அகலத்துல கொட்டகை அமைச்சு நாலு பக்கமும். வலை அமைச்சு அதை ரெண்டு பகதியா பிரிச்சு, ஒரு பகுதியா பிரிச்சு, ஒரு பகுதியில பெரிய ஆடுகளையும், இன்னொர பகுதியில குட்டி ஆடுகளையும் வெச்சுக்கலாம். கொட்டகையில் தண்ணீர்த் தொட்டி கண்டிப்பா இருக்கணும். பத்து பெட்டை ஆடுகளுக்கு ஒரு கிடா போதும். கிடாக்களை அதிகளவுல வெச்சுக்கக் கூடாது. ஒண்ணோட ஒண்ணு முடடிக்கும். அதைவிட தீவன உற்பத்தி ரொம்ப முக்கியம். அதை ஏக்கர் அளவுல சூபதபுல், அகத்தி, கிளரிசீடியா, மலர்பேரி, சங்குப் புஷ்பம், முயல்மசால், வேலிமசால், வேம்பு, கொருக்காப்புளி மாதிரியான பசுந்தீவனங்களை சாகுபடி செஞ்சுக்கணும். வேற அடர்தீவனம், கலப்புத் தீவனமெல்லாம் தேவையேயில்லை.
குட்டிகள் பிறந்து மூணாவது மாசத்துல, தாய்ப்பால் குடிக்குற காலத்துலயே அரை கிலோ பசுந்தீவனம் கொடுக்க அரம்பிச்சுடணும். நாலாவது மாசம் தினம் ஒன்றரைக் கிலோவும், அஞ்சாவது மாசத்தல 3 கிலோவும் கொடுக்கணும். அதுக்கப்பறம் வளர்ச்சியைப் பொறுத்து அளவைக் கூட்டிக்கலாம். எட்டு மாச வயசுல ஒவ்வொரு ஆட்டுக்கும் தினம் 5 கிலோ தீவனமும், அதுக்கப்பறம் 7 கிலோவும் கிடைக்குற மாதிரி பாத்துக்கணும். ரெண்டு வகையான ஆடுகளுமே, உயிர் எடைக்கு ஒரு கிலோ 150 ரூபாய்னு விலை போகுது.
கொடி ஆடுகளைக் காப்பாற்றுங்கள்
“இந்த மாதிரியான ஆடுகதான் ஏழை விவசாயிகளுக்கு வருமானத்தைத் தரக்கூடியது நம்ம சூழலுக்கு ஏத்ததும்கூட ஆனா, இந்த வகை ஆடெல்லாம் இப்போ குறைஞ்சுகிட்டே வருதுங்கறதுதான் வேதனையான விஷயம். இதையெல்லாம் பாதுகாக்குறதுக்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கணும். இதன் மூலமா நம்ம மக்களளோட பொருளாதார நிலைமையையும் சரிஞ்சுடாம காப்பாத்த முடியும்”
தொடர்புக்கு
சரோஜா
(உறவினரின் அலைபேசி) 98376-63517
ஆதிநாராயணன் 98656-13616
செளந்தரபாண்டியன் 94431-84974