யா அல்லாஹ்!!!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன்.என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக.
கால்நடை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கால்நடை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2013

கால்நடைபயிர்கள் ஒருங்கிணைந்த முறை
அறிமுகம்
பயிர்ச்செய்கை, விலங்கு வேளாண்மை, சக்திவலு உற்பத்தி போன்ற அனைத்து செயற்பாடுகளையும் ஓரே நிலத்தில் மேற்கொள்ளும் ஒரு பண்ணை முறையே “ஒருங்கிணைந்த பண்ணை முறை” எனப்படும்.
இங்கு ஒரே நிலத்திலேயே விவசாயப் பயிர்ச்செய்கை, விலங்கு வேளாண்மைக்கு அவசியமான தீவனங்களைச் செய்கைபண்ணல், புற்கள், அவரைப் பயிர்களைச் செய்கைபண்ணல், பண்ணை விலங்குகளை வளர்த்தல் என்பனவற்றை ஒன்றிற்கொன்று தொடர்புகள் ஏற்படக் கூடியவாறு மேற்கொள்ளல் ஆகும். விவசாயப் பயிர்களிலிருந்து அகற்றப்படும் பாகங்கள் (பயிர் மீதிகள்) விலங்குகளின் தீவனமாகப் பயன்படுத்தப்படும். பண்ணை விலங்குகளின் மலம், சலம் என்பனவற்றைப் பயன்படுத்தி உயிர் வாயு உற்பத்தி செய்யப்படும். இதனால் சக்திவலு உற்பத்தி செய்யப்படுவதோடு, உயிர் வாயு உற்பத்தியின் பின்னா வெளியேறும் கழிவுகளை (ஸ்லரி) மிகச் சிறந்த உரமாகவும், மீன்கள், தாராக்கள் என்பனவற்றிற்கான உணவாகவும் பயன்படுத்தப்படும்.
ஒருங்கிணைந்த பண்ணை முறையின் மூலம் விவசாயத்தின் உற்பத்தித்திறனைப் போலவே இலாபத்தையும் அதிகரிக்க முடியும். இது விசேடமாக அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளிற்கு மிகவும் முக்கியமானதாகும். இதேபோன்ற இம்முறை எதிர்காலத்திற்கும் மிகவும் உகந்ததாகும். இதற்கான காரணம் அதிகரித்து வரும் சனத்தொகையின் காரணமாக நிலப்பரப்பின் அளவு மட்டுப்படுத்தப்படல், உணவில் தன்னிறைவடைதற்கு முயற்சித்தல் என்பனவாகும்.
அனுகூலங்கள் :-
  1. பயிர்கள், விலங்குகள், மீன்கள் என்பனவற்றைக் கொண்ட ஒரங்கிணைந்த பண்ணைகளினால் உற்பத்தியை அதிகரிக்கலாம். இம்மூன்று துறைகளிலுமே உற்பத்தி அதிகரிக்கும். .
  2. இம்முறையின் மூலம் பண்ணையின் வினைத்திறன் அதிகரிப்பதோடு, இயற்கை வளங்கள் முறையாக முகாமைத்துவம் செய்யப்படும்.
  3. முறையான இயற்கை வளங்களைப் பயன்படுத்துவதன் மூலம் ஒருங்கிணைந்த உற்பத்தி செயன்முறை போசணை மீள்சுழற்சி, உணவுப் பாதுகாப்பு, வறுமையை ஒழித்தல், சுற்றாடல் பாதுகாப்பினை நிலைபேறாகப் பராமரித்தல் என்பனவற்றிற்கு உதவும்.


விலங்குகள், ஆண்டுப் பயிர்களின் ஒருங்கிணைந்த பண்ணை 

இங்கு ஆண்டுப்பயிர்களாக நெற்செய்கை, மரக்கறிச் செய்கை, புற் செய்கை, குறிப்பிட்ட சில பழங்கள் என்பன பயன்படுத்தப்படும்
(01) நெல் - புற்கள் - பசு ஒன்றிணைந்த பண்ணை 

வயல்களில் நெல்லையும், கைவிடப்பட்ட வயற் துண்டங்களிலும், எல்லைகளில் புற்களையும் பயிரிடலாம். பசுக்களிற்குத் தீவனமாக இப்புற்களை வழங்கலாம். நெல்லை அறுவடை செய்த பின்னர் வயலில் மேச்சலிற்கு விடலாம். நெல்லிற்கும் புற்களிற்கும் உரங்களை இடுவதற்கு சாணத்தைப் பயன்படுத்தலாம். உரங்களை புற்களுடன் கலந்து வயலிற்கு உரமாக இடலாம். இதனை நெல் நாற்றுக்களை இடுவதற்கு இரண்டு கிழமைகளிற்கு முன்னர் இட வேண்டும். இதன் மூலம் பிரதான பயிரான நெல்லின் விளைச்சலையும் அதிகரிக்கலாம்.
இப்பண்ணை உலர் வலயத்தில் அல்லது இடை உலர் வலயத்தில் அமைந்திருக்குமாயின் புற் செய்கைக்கு சிராட்ரோவைப் (Siratro) பயன்படுத்தலாம். இதற்கான காரணம் சிராட்ரோவை நீர் நன்கு வடிந்து செல்லக் கூடிய நீர் தேங்கி நிற்காத இடங்களிலேயே செய்கை பண்ணலாம்.
இந்த ஒருங்கிணைந்த பண்ணையிலிருந்து கிடைக்கும் அனுகூலங்கள்
  1. நெல் விளைச்சல் அதிகரிப்பதோடு, அதன் மூலம் பண்ணையின் வருமானம் உயரும். 
  2. உரங்களிற்கு ஏற்படும் செலவில் சுமார் 50 – 70% வரை குறையும்.
  3. பண்ணை தாவரங்களின் உயிர் நிறை (Forage Biomass) அதிகரிப்பதனால் வளர்க்கக் கூடிய பசுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். 
  4. அதிகளவான உலர் வரட்சியான காலங்களில் சிராட்ரோ வெற்றிகரமாக வளர்வதனால், அதனை பெறுமதியான விலங்கு தீவனமாக வழங்கல் 
  5. வருடம் முழுவதும் ஒரே மாதிரியான உணவு முறை வளாச்சியடைவதால், விலங்குகளின் உற்பத்தியும் அதிகரிக்கும்.

(02) நெல் - மீன்கள் ஒன்றிணைந்த பண்ணை

விவசாய நாடாக இலங்கையில் பிரதானமாக நெல் செய்கைபண்ணப்படுவதோடு, அது நீரை அடிப்படையாகக் கொண்டு பயிரிடப்படுகின்றது. இதனால் நெல், மீன்கள் ஒன்றிணைந்த பண்ணை மிகவும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அனுகூலங்களි
  1. நெல் விளைச்சலுடன், பெறுமதியான விலங்குப் புரதத்தையும் பெற்றுக்கொள்ள முடியும். 
  2. நெற்செய்கையில் பாதிப்பை எற்படுத்தும் பூச்சிகள், புழுக்கள், அல்காக்கள், களைகள் என்பன மீன்களினால் உண்ணப்படல். 
  3. மண்ணில் காற்றூட்டம் அதிகரிக்கும். 
  4. மீன்களின் கழிவுகள் உரமாக நெல்லிற்கு இடுவதனால் நெல்லிற்கு அதிகளவான போசணைகள் கிடைக்கும்.
  5. மீன்கள் உணவைப் பெறுவதற்கு அங்குமிங்கும் அசைவதனால் நீர் குழப்பப்படும். இதனால் அங்கும், இங்கும் அசைவதால் கனிப்பொருளாதல் அதிகரிப்பதோடு, போசணை வயல் முழுவதும் சீராகப் பரவும்.
  6. நெல்லை மாத்திரம் செய்கைபண்ணும் போது விளைச்சல் குறையும் ஆபத்து இந்த ஒருங்கிணைந்த பண்ணையில் குறைக்கப்படும்.

பொருத்தமான மீன் இனத்தைத் தெரிவு செய்யும் முறை
  1. அதிக வளர்ச்சி வேகத்தைக் கொண்ட மீன் இனங்களைத் தெரிவு செய்தல் 
  2. ஆழமற்ற நீரில் வாழ்வதற்கு இசைவாக்கமடைவதற்கான வல்லமை
  3. அதிகளவான வெப்பநிலை, குறைவான ஒட்சிசன் என்பனவற்றைத் தாங்கிக் கொள்ளும் வல்லமை
  4. நெல்லைப் பாதிக்காத வாக்கமாயிருத்தல்
  5. சந்தையில் கிராக்கி நிலவும் இனமாகக் காணப்படல
  6. அம்மீன்கள் கிடைக்கும் தன்மை
    நன்னீர் மீன்களை விட கடனீரேரிகளில் வாழும் மீன்களிற்கு வெப்பத்தை தாங்கிக் கொள்ளும் வல்லமை உள்ளது. இங்கு முக்கியமானது பொருத்தமான நெல் வர்க்கத்துடன் பொருத்தமான மீனை ஒருங்கிணைப்பது ஆகும். இதே போன்று இந்த ஒருங்கிணைந்த முறையில் நெல்லைச் செய்கைபண்ணும் போது அதற்கு பீடைநாசினிகள், களைநாசினிகள் என்பனவற்றை தவிர்த்துக் கொள்ள வேண்டும். பீடைகளையும், களைகளையும், அழிப்பதற்கு பாரம்பரிய முறைகளை மேற்கொள்வது மிகவும் உகந்ததாகும். இதன் மூலம் சுற்றாடல் மாசடைவதையும் தவிர்த்துக் கொள்ள முடியும்.
முதலாவது முறை (The Captural System)

நெல் வயலிற்கு நீர் வரும் பாதையின் வழியே, அப்பாதையில் உள்ள மீன்களை (Wild fish) வயலிற்கு வரச் செய்வதாகும். இது நெல்லைச் செய்கைபண்ணும் அனைத்து பிரதேசங்களிற்கும் பொருத்தமானதாகும். இதற்கு ஏற்படும் தொழிலாளர்களிற்கு குறைந்தளவான செலவே ஏற்படும். மீன்களை பிடிப்பதற்கு முன்னர் வயலில் சிறு சிறு குழிகளை வெட்டி அவற்றிற்கு மீன்கள் செல்வதற்கு வழியேற்படுத்தப்பட்டு, அக்குழிகளிலிருந்து மீன்கள் பிடிக்கப்படும். நெல்லை அறுவடைசெய்வதற்கு சில நாட்களிற்கு முன்னர் மீனை அறுவடை செய்தல் வேண்டும்.

இரண்டாவது முறை (The Cocurrent system) 

இங்கு வயலில் ஆரம்பித்திலிருந்தே நெல்லைச் செய்கைபண்ணுவதற்கும், மீனை வளர்ப்பதற்கும் ஆயத்தங்களைச் செய்தல் வேண்டும். இதற்கு அதிகளவான செலவும், தொழிலாளர்களும் அவசியமாகும். 500 சதுர மீற்றர் பரப்பளவைக் கொண்ட வயல்களிற்கே இது மிகவும் உகந்த ஒரு முறையாகும்.
வரம்பின் உயரம் 60 சதம மீற்றரை விட அதிகமானதாக இருத்தல் வேண்டும். இதன் மூலம் நீர் பொசிந்து செல்வது தடுக்கப்படுவதோடு, மண்ணரிப்பும், இரைகௌவிகள் வயலிற்கு வருவதும் தடுக்கப்படும். நீர் மெதுவாக ஓடக் கூடியவாறு ஆயத்தம் செய்ய வேண்டும். அத்துடன் உள்ளே வரும் நீர் தொடர்பாக கூடிய கவனம் செலுத்த வேண்டும். இங்கு பீடைநாசினிகள் போன்றன கலந்துள்ளதா என்பதையிட்டும், அந்நிய மீன்கள் (Wild fish) வருகின்றனவா என்பதையிட்டும் கவனம் செலுத்த வேண்டும். கடுமையான மழைக் காலத்தின் போது நீர் வரும் பாதையை மூடி விடல் வேண்டும். இதேபோன்று மழை வெள்ளத்துடன் மீன் வெளியேறாதவாறு பாதுகாத்துக் கொள்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வயலில் நீர் மட்டம் மிகவும் குறையுமாயின் இரைகௌவிகள் மீனைப் பிடித்து உண்பதோடு, வெப்பநிலையும் உயரலாம். இதனைத் தவிர்த்துக் கொள்வதற்கு வயலின் எல்லையைச் சுற்றி அல்லது வயலிற்கு ஊடாக சிறிய கானொன்றை வெட்ட வேண்டும்.
ஒரு வயலில் இட வேண்டிய மீன்களின் எண்ணிக்கை வயலின் பரப்பளவிற்கு ஏற்ப வேறுபடும். நீரின் ஆழம் 5 – 7.5 சதம் மீற்றராக உள்ள ஒரு வயலில் சுமார் 3500 மீன்கள் வரை வளர்க்க முடியும். நெல்லைச் செய்கைபண்ணும் காலப் பகுதியில் அவை 10 ச.மீ நீளமானவையாக வளர்ச்சியடையும்.
பொருத்தமான மீன் இனங்கள்
  • Caprinus carpio
  • Tilapia spp
  • Trichogaster pectoralis
  • Cat Fishes
  • Haplochromis mellandi
  • Ophicephalus
  • Astatoreochromis
  • Labyrinth Fishes
  • Catla catla
இதற்கு மிகவும் பொருத்தமானது பொதுவான கார்ப் மீன்களாகும். இவற்றின் வாழ்தகவு மிகவும் அதிகமாகும். திலாப்பியா வர்க்கங்களும் திருப்திகரமான விளைச்சலைத் தரும். இவை அதிகளவான வெப்பநிலைகளைத் தாங்கிக் கொள்ளும்.
உரங்களை இடல் 

நெல், மீன்கள் ஆகிய இரண்டும் வளர்ச்சியடைவது உரங்களை இடுவதிலேயே தங்கியுள்ளது. இட வேண்டிய உரங்கள், அவற்றின் அளவு, இடப்படும் முறை, வயலின் மண்ணின் வகை என்பன விவசாயிகளின் பழக்கம். மண்ணின் வகை என்பனவற்றிற்கு ஏற்ப வேறுபடும்.

(03) ெல் - மீன்கள் - அசோலா – தாரா என்பன ஒருங்கிணைந்த முறை

நெல் - மீன்கள் ஒருங்கிணைந்த பண்ணை சிறு அளவிலான விவசாயிகளிற்கு மிகவும் வெற்றிகரமான ஒரு முறையாகக் காணப்பட்டாலும் கூட, சில சந்தர்ப்பங்களில் வயலில் மீன்களிற்குப் போதியளவான உணவிற்குத் தட்டுப்பாடு ஏற்படுவதோடு, நெல் பற்றையாக வளர்வதால், எதிர்பார்க்கப்படும் இலக்கை அடைய முடியாமலிருக்கும்.
இப்பிரச்சினையைத் தவிர்த்துக் கொள்வதற்கு இவ்வயலிற்கு அசோலா எனப்படும் நிர் தாவரத்தையும், தாராவையும் அறிமுகப்படுத்த முடியும். இதன் மூலம் அதிகளவான போசணைகள் வயலில் தேங்கி நிற்பதால் அதிகளவான மீன் விளைச்சலைப் பெற்றுக்கொள்ள முடியும்.
அனுகூலங்கள் :-
  • பண்ணையின் போசணை நிலைமையை மேம்படுத்தல்
  • போசணை நிலைமை அதிகரிப்பதால் விளைச்சல் அதிகரிப்பதோடு, அதன் விளைவாக இலாபமும் அதிகரிக்கும்.
  • பீடைகளைக் கட்டுப்படுத்தல்
  • உணவு கிடைப்பது அதிகரிக்கும
அசோலா என்பது நீரில் வாழும் ஒரு பன்னமாகும். நீரில் மிதக்கும் தாவரமான இதனை மீண்டும் நெல் நாற்றுக்களை நடும் போது விவசாயிகள் வயலில் அறிமுகப்படுத்துவர். அசோலா இலைகளின் மீது நீலப் பச்சை அல்காக்கள் வாழக் கூடியவாறு மத்தியில் துளை ஒன்று உள்ளது. உலர் காலங்களில் இந்த அசோலா தாவரங்கள் இறந்து போவதோடு, அதன் போசணைகள் எதிர்காலத்தில் நெல்லைச் செய்கைபண்ணுவதற்காக மண்ணுடன் ஒன்று சேர்க்கப்படும்.
(04) மரக்கறி – புற்கள் - பசு ஒன்றிணைந்த பண்ணை 

சிறியளவிலான விவசாயிகள் உண்பதற்கும், வருமானம் பெறவும் ஒரு வழியாக மரக்கறிகளைச் செய்கைபண்ணிய போதிலும் எதிர்பார்க்கப்படும் இலக்கை அடைய முடியாதுள்ளது, ஆனால் ஒருங்கிணைந்த பண்ணை முறையின் மூலம் திருப்திகரமான பயன்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

அனுகூலங்கள் ි :-
  • பிரதான பயிரான மரக்கறிகளின் விளைச்சலை அதிகரிக்க முடியும்.
  • புற்களைச் செய்கைபண்ணுவதன் மூலம் மண் வளமடைவதோடு, மண்ணரிப்பு ஏற்படுவதும் தடுக்கப்படும். 
  • புற்களை பசுக்களிற்கு உணவாக வழங்க முடியும்.
  • உரங்களிற்கு ஏற்படும் செலவைக் குறைக்க முடியும் 
  • உயிரியல் வாயுவை உற்பத்தி செய்து கொள்ள முடியும்.
மரக்கறிகள் செறிவாகச் செய்கைபண்ணப்படுவதால் (Intensive cultivation) ஏற்படும் மண்ணரிப்பை தடுப்பதற்கு புல் வேலிகளை நட முடியும். இதற்கு நேப்பியா முளைவகை 13 போன்ற புற்களைப் பயன்படுத்தலாம். நிலத்தின் சரிவான இடங்களில் புல் வேலிகளை சமவுயரக் கோட்டின் வழியே நடுகை செய்தல் வேண்டும்.
பசுவின் கோமயத்துடன் (சிறுநீர்) பண்ணைகளிலுள்ள ஏனைய கழிவுகளைப் பயன்படுத்தி உயிரியல் வாயுவை உற்பத்தி செய்துகொள்ள முடியும். அத்துடன் அதிலிருந்து வெளியேறும் உரங்களை (Slurry) மரக்கறி, புற்கள் என்பனவற்றிற்கு இடுவதற்கப் பயன்படுத்தலாம்.
(05) மரக்கறி - மீன் ஒருங்கிணைந்த பண்ணை

நில வசதி குறைந்த விவசாயிகளிற்கு இது மிகவும் உகந்த ஒரு முறையாகும். இங்கு மீன்களை வளர்க்கும் குளங்களின் கரைகள் மிகவும் பலமானதாக அமைத்தல் வேண்டும். புற்களை நட்டு கரைகளைப் பாதுகாக்க வேண்டும் அல்லது சீமெந்தினால் பூசி கரைகளைப் பலப்படுத்த வேண்டும். இதன் பின்னர் குளங்களின் கரைகளைச் சுற்றி (கரைகளிலிருந்து மூன்று அடி தூரத்தில்) மரக்கறிகளைச் செய்கைபண்ணலாம்.
மண்ணைத் தளர்வாக்க அவசியமில்லாத வெண்டி, சாக்கரைப் பூசணி, தக்காளி, மிளகாய், கத்தரி போன்ற பயிர்களைக் குளத்தைச் சற்றி நடலாம். பூசணி நிலத்தில் படர்ந்து வளர்வதால் மண் பாதுகாக்கப்படும். மரக்கறிச் செய்கையில் மண் வளத்தை அதிகரிப்பதற்கு குளத்தின் பொருக்குகள் (குளத்தின் அடியிலுள்ள மண் போன்ற பொருட்கள்), குளத்திலுள்ள நீர் என்பனவற்றையும் வழங்கலாம். மேலும் மீன்கள் உண்பதற்குத் தேவையான லெமா போன்ற தாவரங்களை குளத்தில் செய்கைபண்ணலாம்.

(06) மரக்கறி – மீன் - தாரா – பன்றி ஒருங்கிணைந்த முறை 

இந்த ஒருங்கிணைந்த முறையில் நிலத்திலுள்ள வளம் மிகவும் சிறப்பாகப் பயன்படுத்தப் படுவதோடு, சுற்றாடல் மாசடைவதைக் குறைத்து அதிகளவான விளைச்சலையும் பெற்றுக்கொள்ள முடியும். குளத்தில் மீனையும், குளத்தின் மண்ணால் தயாரிக்கப்பட்ட தாரா கூட்டில் தாராவை வளர்க்கவும் பயன்படுத்திக்கொள்ள முடியும். பன்றிக் கூட்டையும் குளத்திற்கருகே அமைப்பதனால், அவற்றின் கழிவுகளையும் குளத்திற்கு செலுத்தலாம்.
இங்கு கருத்திற்கொள்ள வேண்டிய ஒரு அம்சம் குளத்தின் அளவிற்கேற்றவாறு உரங்களை இடுவதாகும். தேவைக்கு அதிகமாக உரமிடும் போது மீன்களிற்கு ஆபத்தானதாக மாறலாம். பொதுவாக அயன மண்டல நாடுகளில் மீன்களின் குளங்களிற்கு சிபார்சு செய்யப்பட்ட பன்றி உரத்தின் அளவு ஹெக்டயருக்கு நாளொன்றிற்கு சுமார் 100 -200 கிலோ கிராம்கள் ஆகும். சிபார்சு செய்யப்பட்ட தாரா உரத்தின் அளவு 100 – 120 கிலோ ஆகும்.
குளத்தின் விஸ்தீரணத்திற்கு அமைய குளத்திற்கு இட வேண்டிய உரங்களின் அளவைத் தீர்மானித்துக்கொள்ள முடியும். மரக்கறிகளின் கழிவுகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் பசுந்தாட் பசளைகளும் இவற்றோடு சோவதனால், அந்த விகிதத்திற்கு ஏற்ப பன்றி, தாரா என்பனவற்றின் கழிவுகளைக் குறைத்து இடல் வேண்டும். பன்றி, தாரா என்பனவற்றின் உரங்களின் மூலம் குளத்திலுள்ள மிதக்கும் நுண் தாவரங்கள், மிதக்கும் நுண் விலங்குகள் (பிளாங்டன் Plankton), மீன் என்பனவற்றின் வளர்ச்சியை அதிகரிக்கலாம். குளத்திலிருந்து கிடைக்கும் அடையல்களை உரமாக மரக்கறிகளிற்கு இடலாம். பயிர்களிற்குத் தேவையான நீரை குளத்திலிருந்து பெற்றுக்கொள்ள முடியும். மரக்கறிகளின் மீதிகள், கழிவுகள், பண்ணையிலுள்ள ஏனைய கழிவுகள் என்பனவற்றை பன்றிகளின் உணவுடன் கலந்து வழங்கலாம்.
அனுகூலங்கள் :-
  • நிலத்தை முறையாகப் பயன்படுத்துவதால், இயற்கை வளங்களை முறையாக முகாமைத்துவம் செய்யலாம்.
  • சுற்றாடல் மாசடைவதைக் குறைத்துக்கொள்ள முடியும். இந்த ஒருங்கிணைந்த பண்ணையிலுள்ள அனைத்து அங்கங்களினதும் உற்பத்தியை அதிகரித்துக்கொள்ள முடியும். 
  • மீன்களிற்கான செலவைக் குறைத்துக்கொள்ள முடியும்.
  • மரக்கறிகளிற்கு ஏற்படும் உரச் செலவைக் குறைத்துக்கொள்ள முடியும்.
  • ஒரு உற்பத்தியினால் உருவாகும் கழிவுப் பொருட்களின் அளவைக் குறைத்துக்கொள்ள முடியும.
  • பண்ணையின் கழிவுப் பொருட்களை ஒவ்வொரு உற்பத்திக்கும் சுழற்சி முறையில் பயன்படுத்தலாம்.
(07) வாழை – புற்கள் - ஆடு ஒருங்கிணைந்த முறை 

பழப்பயிர்களில் வாழைக்குச் சிறந்த கிராக்கி நிலவுகின்றது. விவசாயிகள் வாழையிலிருந்து விரைவாக வருமானத்தைப் பெறுவதற்கும், ஏனைய பழப்பயிர்களைப் போல்லாது பயிர்ச்செய்கைக் காலம் முழுவதிலும் இதில் கவனம் செலுத்த வேண்டிய அவசியமில்லை என்பதாலும், பெரும்பாலான விவசாயிகள் வாழையைச் செய்கைபண்ணுவதில் கவனம் செலுத்தி வருகின்றனர். இதேபோன்று வாழையை எந்தவொரு பிரதேசத்திலும் வெற்றிகரமாக மேற்கொள்ள முடியும். எனவே இந்த ஒருங்கிணைந்த பண்ணையிலிருந்து அதிக வருமானத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.
இங்கு வாழையை 4X4 மீற்றா இடைவெளியில் நடுவதன் மூலம் அதிகளவான சூர்pய வெளிச்சத்தின் கீழ் புற்களையும் வெற்றிகரமாகச் செய்கைபண்ண முடியும். சிபார்சு செய்யப்பட்ட ஏனைய இடைவெளியான 2 x 2.7 மீற்றர் இடைவெளியிலும் புற்களைச் செய்கைபண்ண முடியும்.
ஆடுகளை இரண்டு முறைகளில் வளாக்க முடியும். அதாவது செறிவாக (Intensive) வளர்த்தல் மற்றையது ஓரளவு செறிவாக (Sem intensive) என்பனவாகும். செறிவான முறையில் ஆடுகளை ஆட்டுர் தொழுவங்களில் வளர்ப்பதோடு, அவற்றிற்குத் தீவனமாக அறுவடை செய்யப்பட்ட வாழைகளின் இலைகளையும், தண்டுகளையும் சிறு துண்டகளாக வெட்டி வழங்குவதாகும். ஆடுகளின் கழிவுகளை பசளையாக வாழைக்கு இடலாம்
ஓரளவான செறிவான முறையின் கீழ் புற்றரைகளில் (மேச்சல் தரை) ஆடுகள் மேய விடப்படும். இங்கு ஆடுகள் வாழைகளைச் சேதப்படுத்தாதவாறு அவற்றைக் கட்டி வைத்தல் வேண்டும். இதன் மூலம் உரங்கள் நேரடியாக வாழைத் தோட்டத்திற்குக் கிடைப்பதோடு, தொழிலாளர்களிற்கான செலவும் குறையும்.
(08) பழங்கள் – புற்கள் - மீன் ஒருங்கிணைந்த முறை 

சிறியளவான நிலமுள்ள விவசாயிகளிற்கு இம்முறை உகந்ததாகும். இங்கு மீன்களின் குளத்தைச் சுற்றியுள்ள வரம்புகளில் சிறிய பழ மரங்கள் செய்கைபண்ணப்படும். கொய்யா, அன்னாசி, ஜம்பு, கொடித்தோடை போன்ற சிறிய பழ மரங்கள் இதற்கப் பொருத்தமானவையாகும்.
குளத்தின் கரையைச் சுற்றி புற்களைச் செய்கைபண்ணலாம். இதன் மூலம் கரைகள் அரித்துச் செல்லப்படுவதைத் தவிர்த்தக்கொள்ள முடியும். மீன்களின் குளத்திலுள்ள அடையல்களை பழங்களிற்கும், புற்றரைகளிற்கும் உரமாக இடலாம். பண்ணையிலும், வீட்டிலும் மீதமாகும் கழிவுகளை குளத்திலுள்ள மீன்கள் உண்பதற்கு வழங்கலாம். சிறிய இடப்பரப்பாயினும் வீட்டின் எல்லையில் ஒரு பசுவைவை வளர்ப்பதன் மூலம் குளத்தைச் சுற்றியுள்ள கரையில் புற்களை வெட்டி அதற்கு வழங்கி அதனையும் பராமரிக்கலாம்.
(09) பழங்கள் – புற்கள் - பசு ஒருங்கிணைந்த முறை

பல்லாண்டு பழப்பயிர்களைச் செய்கைபண்ணும் நிலத்தில் மிக இலகுவாக ஒருங்கிணைந்த பண்ணை முறையை மேற்கொள்ள முடியும். இங்கு தோடை, மா, ரம்புட்டான், மங்குஸ்தீன், ஆனைக்கொய்யா போன்றவற்றின் கீழ் புற்களை நடலாம். புற்களிற்கு பிரக்கேறியா பிரசாந்தாவைப் பயன்படுத்தலாம்.
இப் புற்செய்கையின் பயனாக பழத்தோட்டத்திலுள்ள மண் பாதுகாக்கப்படுவதோடு, போசணைகளும் கிடைக்கும். மண்ணரிப்பைத் தடுப்பதற்கு, நேப்பியா முளை வகை 13 இனைப் பயன்படுத்தலாம். பண்ணையிலுள்ள பசுக்களிற்கு இப்புற்களை வெட்டிக் கொடுக்கலாம். பசுக்களை புற்றரைகளின் மீது சுயாதீனமாக மேய விடும் போது அவை பழ மரங்களைச் சேதப்படுத்தலாம். பசுவின் எருவை இட்டு பழச் செய்கையையும், புற்றரைகளையும் வளப்படுத்தலாம்.
விலங்குகள்பல்லாண்டுப் பயிர்கள் ஒருங்கிணைந்த பண்ணை முறை 

அனுகூலங்கள் ි :-
  1. தரமான புற்களைப் போலவே உப உற்பத்திப் பொருட்களையும் (விலங்குகளிற்குத் தேவையானவை) தேவையான போது, தேவையான அளவில் பெற்றுக்கொள்ள முடியும்.
  2. புற்களைப் போலவே, அவரைப் பயிர்களின் உற்பத்தியும் அதிகரிக்கும்.
  3. விலங்குகளிற்குப் போலவே, பயிர்களிற்கும் சாதகமான சுற்றாடல் கிடைக்கும்
  4. விலங்குகளின் உற்பத்தித்திறன் அதிகரிக்கும்.
  5. பல்லாண்டுப் பயிர்களின் உற்பத்தியும் அதிகரிக்கும்.
  6. களைகளைக் கட்டுப்படுத்துவதற்கு ஏற்படும் செலவு குறையும்.
  7. பண்ணை விலங்குகளின் (பசு, ஆடு, பன்றி, கோழி) கழிவுகளை உரமாகப் பயன்படுத்துவதனால் உரங்களிற்கான செலவு குறையும்.
  8. அவற்றின் கழிவுகளிலிருந்து உயிரியல் வாயுவை உற்பத்தி செய்து, அதனை சக்திவலுவாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
  9. ஓரு பயிரையோ அல்லது விலங்கையோ வளர்ப்பதனால் ஏற்படக் கூடிய ஆபத்துகளைத் தவிர்த்துக் கொள்ள முடியும்.
  10. இயற்கை வளங்களை உச்ச அளவில் வினைத்திறனாகப் பயன்படுத்துவதனால்,நிலைபேறான சுற்றாடல் உருவாகும்.
  11. சுற்றாடல் மாசடைதலைக் குறைக்க முடியும.
(10) தேயிலை – புற்கள் - பசுக்கள் ஒன்றிணைந்த பண்ணை முறை

தேயிலைத் தோட்டங்களில் இலகுவாக மேற்கொள்ளக் கூடியதொரு ஒருங்கிணைந்த பணணை முறையாகும். சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் இதன் மூலம் அதிகளவான உற்பத்தியைப் பெற்றுக்கொள்ள முடியும். பெரும் தேயிலைத் தோட்டங்களில் கூட தேயிலை செய்கைபண்ணப்படாத இடங்களில் புற்களைச் செய்கை பண்ணி பசுக்களை வளர்க்க முடியும். 
தோட்டங்களில் விவசாயிகளின் பசுக்களைப் பராமரிப்பதற்காக பொதுவான மாட்டுத் தொழுவங்கள் வழங்கப்பட்டுள்ளன.
தேயிலை செய்கைபண்ணப்படாத இடங்களில் நேப்பியா 13 முளைவகை போன்ற உயரமாக வளரும் புற்களை நடலாம். இதேபோன்று நிலத்தின் மண்ரிப்பைத் தடுப்பதற்கு சமவுயர வேலி முறையில் தீவனப் புற்களைச் செய்கைபண்ணுவதோடு, அவற்றை பசுக்களிற்குத் தீவனமாகவும் வழங்கலாம்.
பசுக்களின் சாணத்தை தேயிலைக்கும், புற்களிற்கும் உரமாக இடலாம். பசுவின் சாணம், அதன் சிறுநீர் என்பனவற்றிலிருந்து உயிரியல் வாயுவையும் உற்பத்தி செய்யலாம். வீட்டுத் தேவைகளிற்கு உயிரியல் வாயுவைப் பயன்படுத்திக்கொள்ள முடியும். இதிலிருந்து கழிவாக வெளியேறும் பொருட்களை உரமாகவும் பயன்படுத்தலாம்.
அனுகூலங்கள:-
  1. நிலத்தின் உற்பத்தித்திறன் அதிகரிக்கும்.
  2. தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்யயும் விவசாயிகள் தமது வருமானத்தை அதிகரித்துக்கொள்ள முடியும்.
  3. பிரதான பயிரான தேயிலைக்கு இயற்கை உரங்களை இடலாம். இதனால் உரங்களிற்கு ஏற்படும் செலவைக் குறைக்கலாம்.
  4. புற்களைப் பயிரிடுவதனால் நிலத்தின் மண் பாதுகாக்கப்படுவதோடு, மண்ணரிப்பும் தடுக்கப்படும்.
  5. சாணம், சிறுநீர் என்பனவற்றைப் பயன்படுத்தி உயிர் வாயுவை உற்பத்தி செய்வதனால், அதனை வீட்டுத் தேவைகளிற்குப் பயன்படுத்தலாம். மீதமாகும் கழிவை (Slurry) உரமாகப் பயன்படுத்தலாம். 
  6. பசுக்களிலிருந்து கிடைக்கும் பசும் பால் வீட்டின் நுகர்விற்கும், மேலதிக வருமானத்தைப் பெறவும் உதவும்.

(11) தேயிலை – புற்கள் - ஆடு வளர்ப்பு ஒருங்கிணைந்த பண்ணை முறை
மேற்குறிப்பிட்ட முறையிலேயே சிறிய தேயிலைத் தோட்டங்களிலும், பெரும் தேயிலைத் தோட்டங்களிலும் இந்த ஒருங்கிணைந்த முறையைப் பயன்படுத்த முடியும். இந்த பண்ணை முறைகளில் ஆடுகளை வளர்ப்பதால் குடும்பத்திலுள்ள பெண்களிற்கு அல்லது வளர்ந்த பிள்ளைகளிற்கு விசேட நன்மைகள் கிட்டும்.

(12) இறப்பர் - புற்கள் - பசு ஒன்றிணைந்த பண்ணை 

பல்லாண்டுப் பயிரான இறப்பருடன் ஒருங்கிணைந்த பண்ணை முறை பரவலாக மேற்கொள்ளாத போதிலும் கூட இவ்வாறான புற்கள், பசுக்கள் ஒன்றிணைந்த பண்ணை முறையை இலகுவாக மேற்கொள்ள முடியும். இங்கு புற்களாக பரந்து வளரும் பியுரேறியா, கெலபொகோனியம் போன்ற அவரைக் குடும்பத் தாவரங்களை செய்கைபண்ண முடியும். இவற்றின் மூலம் மண்ணரிப்புத் தடுக்கப்படுவதோடு, மண்ணும் பாதுகாக்கப்படும்.
ஆனால் இறப்பர் தோட்டங்களில் பசுக்களை சுயாதீனமாக மேய விட முடியாது. ஏனெனில் இவை இறப்பர் பாலை அருந்த பழகி விடும். இது பசுக்களின் ஆரோக்கியத்திற்கு தீங்கானதாக அமையும். பால் வெட்டுவதற்கு முன்னா பசுக்களை மேய விடலாம். எனினும் அவை இறப்பர் நாற்றுக்களைச் சேதப்படுத்தவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே மிகவும் உகந்த முறை புற்களை வெட்டி அவற்றிற்கு வழங்க வேண்டும்.

(13) தென்னை – அன்னாசி – புற்கள் - பசு ஒன்றிணைந்த பண்ணை

பல்லாண்டுப் பயிர்களில் தென்னையிலேயே மிகவும் வெற்றிகரமாக ஒருங்கிணைந்த பண்ணை முறையை மேற்கொள்ள முடியும். தென்னை முக்கோணத்தில் ஒருங்கிணைந்த பண்ணைச் செய்கை முறை பிரபல்யம் அடைந்துள்ளது. தென்னந் தோட்டங்களின் எல்லைகளைப் பயன்படுத்தக் கூடியவாறு அன்னாசி, புற்கள் என்பனவற்றைச் செய்கைபண்ண முடியும்.

பசுக்கள் புற்களை உண்பதற்கு மேய விடலாம். எனினும் அன்னாசி பயிர்களிற்கு சேதம் ஏற்படாத வகையில் அவதானமாக இதனை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் மேலதிக் செலவில்லாது, பசுக்களின் சிறுநீர், சாணம் என்பனவற்றை பயிர்களிற்கு வழங்கலாம். இல்லாவிடில் புற்களை வெட்டி தொழுவங்களிலுள்ள பசுக்களிற்கு வழங்கலாம். தென்னை மரங்களிலிருந்து அகற்றப்படும் உரிமட்டைகள், தென்னந்தும்புத் தூள் என்பனவற்றை பசுக்களின் சாணத்துடன் கலந்து இயற்கை உரங்களை உற்பத்தி செய்துகொள்ள முடியும். இதிலிருந்து மேலதிகமான வருமானத்தைப் பெறுவதோடு, தென்னை, அன்னாசி, புற்கள் ஆகியனவற்றிற்கு உரங்களையும் வழங்கலாம். உயிர் வாயுவை உற்பத்தி செய்வதற்கும் பயன்படுத்தலாம்.

(14) தென்னை – மரக்கறி – புற்கள் – மீன் பசுஒருங்கிணைந்த பண்ணை 


இம்முறையில் தென்னந் தோட்டங்களில் மீன் வளர்ப்புக் குளங்களையும் பராமரிக்க முடியும். மீன் குளங்களைச் சுற்றி அல்லது அதற்கண்மையில் மரக்கறிகளைச் செய்கைபண்ண முடியும். அதேபோன்று தென்னம் மரங்களிற்கிடையே புற்களைச் செய்கைபண்ண முடியும். பசுக்களை இவற்றில் மேய விடலாம். புற்கள், மரக்கறி, தென்னை மரங்கள் என்பனவற்றிலிருந்து பெறப்படும் உப விளைவுப் பொருட்களை மீன்களிற்கு உணவாக வழங்க முடியும்.
இந்தப் பண்ணையில் கழிவுப் பொருட்களைப் பயன்படுத்தி உயிர் வாயுவை உற்பத்தி செய்வதற்கும், அதிலிருந்து மீதமாகும் கழிவை கூட்டெருவாக்கி பயிர்களிற்கும் இடலாம். மரக்கறிப் பயிர்களிற்கு அவசியமான நீரை அருகிலுள்ள குளத்திலிருந்து வழங்க முடியும்.
மேலே கலந்துரையாடப்பட்ட விலங்கு, பயிர்கள் முறைகள் விவசாயிகளின் விருப்பத்திற்கு அமையவும், நிலத்தின் அளவிற்கேற்பவும், அங்குள்ள வளங்களிற்கு ஏற்பவும் வேறுபாடுகளை ஏற்படுத்தி உயர்ந்த அளவான பயன்களையும், வருமானத்தையும் பெற்றுக்கொள்ள முடியும்.