யா அல்லாஹ்!!!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன்.என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக.
ஆதாயம் தரும் ஆடு வளர்ப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆதாயம் தரும் ஆடு வளர்ப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 6 மே, 2013

முன்னுரை

உலக அளவில் வெள்ளாடு வளர்ப்பு ஒரு சிறப்பான தொழிலாக உள்ளது. எஃப்.எ.ஓ புள்ளி விவரப்படி 1985-ல் 485 மில்லியனாக இருந்த வெள்ளாடுகளின் எண்ணிக்கை 165% அதிகமாகி 2005-ல் 800 மில்லியனாக உள்ளது. இது ஆண்டுதோறும் 8% முதல் 10% வெள்ளாடுகளின் வளர்ச்சியை காட்டுகிறது. உலகிலுள்ள ஆடுகளில் பெரும்பாலான ஆடுகள் ஆசிய கண்டத்திலும் அதற்கு அடுத்தப்படியாக ஆப்பிரிக்கா கண்டத்திலும் உள்ளது.

உலகில் அதிக வெள்ளாடு உற்பத்தி செய்யும் நாடுகளில் சீனா (24.2%), இந்தியா (15%) மற்றும் பாகிஸ்தான் (7%) ஆகியவை முதல் மூன்று இடங்களில் உள்ளது. ஆனால் உலக அளவில் வெள்ளாடு இறைச்சி ஏற்றுமதியில் ஆஸ்திரேலியா  (50%) முன்னிலை வகிக்கிறது. அதற்கு அடுத்த படியாக சீனா (12.1%), பிரான்ஸ் (8%) மற்றும் நியுசிலாந்து (3.6%) நாடுகள் உள்ளது. இந்தியா உலக அளவில் வெள்ளாடு எண்ணிக்கையில் இரண்டாவது இடத்தில் இருந்தாலும் ஏற்றுமதி பட்டியலில் இல்லை. இந்த விவரம் வெள்ளாட்டு இறைச்சியின் உள் நாட்டு தேவையையும் பிரகாசமான எதிர்கால சந்தை வாய்ப்பையும் உணர்த்துகிறது.

சந்தை வாய்ப்பு

இந்தியாவில் 124 மில்லியனுக்கு மேற்பட்ட எண்ணிக்கையில் வெள்ளாடுகள் உள்ளன. அவை மொத்த கால் நடைகளில் 25% மாக உள்ளது. அதிகரித்து வரும் தனி நபர் வருமானம், நகரங்களின் எண்ணிக்கையில் ஏற்படும் வளர்ச்சி பரந்து விரியும் சந்தை வாய்ப்பு ஆகியவை வெள்ளாடு இறைச்சி தேவையை அதிகரித்துள்ளதோடு ஏற்றுமதி வாய்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து வெள்ளாட்டு இறைச்சி ஏற்றுமதிக்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

நமது பாரம்பரிய உற்பத்தி முறைகளால் நமது வெள்ளாடுகளின் உற்பத்தி திறன் குறைவாக இருந்த போதிலும் அதிகரித்துவரும் சந்தை வாய்ப்பு, வெள்ளாடு உற்பத்தி முறையிலும் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. மேய்ச்சல் மூலம் மட்டுமே வளர்க்கப்பட்ட முறை சிறிது சிறிதாக மாறி கொட்டில் முறை வெள்ளாடு வளர்ப்பாக உருவெடுத்துள்ளதோடு வியாபார நோக்கோடு முதலீடு செய்யும் ஒரு தொழிலாகவும் உள்ளது.

ஆட்டுப் பண்ணை ஆரம்பிப்பதற்கு முன்பு பண்ணை ஆரம்பிப்பதன் நோக்கத்தையும் அதற்கு தேவையான அடிப்படை ஆலோசணைகளையும் தொழில் நுட்ப வல்லுநர்களின் அறிவுரையாகப் பெற்று ஆரம்பிக்க வேண்டும். இலாபம் தரும் தொழிலாக இருந்தாலும் சரியான மேலாண்மையில்லாமல் அதிக தீவன் செலவாலும் பி.பி.ஆர், கழிச்சல், நிமோனியா மற்றும் டெட்டனஸ் நோயால் ஆடுகள் இறப்பு ஏற்பட்டும் பண்ணையை நஷ்ட்டத்தில் மூடியவர்கள் உண்டு. எனவே வெள்ளாடு வளர்ச்சி விரும்புகிறவர்கள் சரியான வழிமுறையை பின்பற்றினால் அதிக லாபம் பெறலாம்.