யா அல்லாஹ்!!!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன்.என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக.

ஞாயிறு, 21 ஏப்ரல், 2013


 சிறந்த கால்நடை தீவனம்


yarasool Goat Farm
Breeder and Supplier of Quality Goats
Email.yarasoolgoatfarm.gmail.com

அசோலா –

அசோலா நீர் நிலைகளில் மிதவைத் தாவரமாக வளரும் பெரணி வகையினைச் சார்ந்தது. இது நெற்பயிருக்கு ஒரு சிறந்த இயற்கை உரமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனைக் கால்நடை மற்றும் கோழிகளுக்கு புரதச் சத்து மிகுந்த தீவனமாக பயன்படுத்தி உற்பத்திச் செலவினைக் கணிசமாக குறைக்க முடியும் என்பதை உழவர் பெருமக்கள் சமீப காலமாக உணர்ந்து வருகின்றனர்.

அசோலாவிலுள்ள சத்துக்கள் :
அசோலாவில் 25- 30 விழுக்காடு புரதச்சத்து, 14-15 விழுக்காடு நார்ச்சத்து, சுமார் 3 விழுக்காடு கொழுப்புச் சத்து, 45- 50 விழுக்காடு மாவுச்சத்து, பல்வேறுபட்ட கால்நடை மற்றும் கோழி தீவனத்திற்கு அவசியமான தாது உப்புக்கள் (கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், மெக்னீசியம்) மற்றும் பல நுண்ணூட்டச் சத்துக்களும் காணப்படுகின்றன. பொதுவாக தாவர இலைகளில் மிகுந்து காணப்படும் டானின் என்ற நச்சு அசோலாவில் மிகவும் குறைவாக காணப்படுவதால் இது ஒரு சிறந்த கால்நடை தீவனமாக திகழ்கிறது.

அசோலா வளர்க்கும் முறை
அசோலாவைத் தொட்டிகளிலும் மற்றும் வயல்களிலும் வளர்க்கலாம். சிமெண்ட் தொட்டிகளில் கொள்ளளவில் மூன்றில் ஒரு பங்கு அளவிற்கு வயல் மண்ணை இட்டு நிரப்பி 10 செ.மீ அளவு நீர் நிரப்பி சதுர அடிக்கு 5 கிராம் சூப்பர் பாஸ்பேட், 250 கிராம் பசுஞ்சாணம் ஆகியவைகளை இட்ட பிறகு 200 கிராம் அசோலாவை தொட்டியில் இட வேண்டும். இரு வார காலத்திற்குள் தொட்டியில் இட்ட அசோலா நன்றாக வளர்ச்சி அடைந்து இரண்டு முறை மூன்று கிலோ வரை விளைச்சல் கொடுக்கின்றது. அசோலா வளர வளர தொட்டிகளிலிருந்து தினசரி இயன்ற அளவு ஒரு பகுதி அசோலாவை எடுத்து தீவனமாக பயன்படுத்தலாம்.
இவ்வாறு உற்பத்தி செய்த அசோலாவை பச்சைத் தாவரமாகவோ அல்லது சூரிய ஒளியில் உலர்த்தியோ கால்நடை மற்றும் கோழிகளுக்குத் தீவனமாகப் பயன்படுத்தலாம். அசோலாவை கால்நடைகளுக்குத் தீவனமாக அளிக்கும் முறையும் அதன் பயன்களும்

கால்நடை தீவனம்:
பசுமையான அசோலாவை நாள் ஒன்றுக்கு ஆடு, மாடு மற்றும் பன்றிகளுக்கு 1 -1/2 முதல் 2 கிலோ வரை கொடுக்கலாம்.
1. பால் உற்பத்தி அதிகரிப்பதுடன் பாலின் தரமும் மேம்படுகிறது.
2. பால் உற்பத்தி 15 முதல் 20 விழுக்காடு அதிகரிக்கிறது.
3. பாலின் கொழுப்புச் சத்து 10 விழுக்காடு வரை உயருகிறது.
கொழுப்புச் சத்து அல்லாத திடப்பொருள்களின் (SNF) அளவு 3 விழுக்காடு வரை கூடுகிறது.
தமிழ்நாட்டில் விவசாயிகள் விவசாயத்துடன் கால்நடையையும் தொன்றுத்தொட்டு வளர்த்து வருகின்றனர். அதில் ” ஏழைகளின் பசு” என்று அழைக்கப்படும் வெள்ளாடு வளர்ப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. தற்போது தமிழ்நாட்டில் 6.5 மில்லியன் வெள்ளாடுகள் உள்ளது. பல்வேறு வகையான நம் நாட்டு இன ஆடுகளும், வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஆடுகளும் தற்போதைய வெள்ளாடு வளர்ப்பில் ஈடுபட போகும் தொழில் அதிபர்களுக்கு சிறந்ததொரு வழிகாட்டியாக இருக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

குதிரை மசால்

குதிரை மசால் [மெடிக்காகோ சைட்டைவா] [ஏக்கருக்கு]
‘தீவனங்களின் அரசி’ என்று அழைக்கப்படுகின்ற இதில் 20 சதவீதம் புரதச்சத்தும், 2.30 சதவீதம் சுண்ணாம்பு சத்து 0.23 சதவீதம் பாஸ்பரஸ் சத்தும் உள்ளது. இதனை தினமும் கால்நடைகளுக்கு ஒரு குறிப்பிட்ட அளவுதான் கொடுக்கவேண்டும். இதன் அளவு அதிகமானால் “வயிறு உப்பல்” ஏற்பட வாய்ப்புள்ளது. இது குளிர்கால இறவைப் பயிராகும்.
பருவம் : புரட்டாசி மாதம் ஏற்ற தருணம்
நிலம் : வடிகால் வசதியுள்ள மணற்பாங்கான நிலம்
விதை : 8 கிலோ
இடைவெளி : வரிசைக்கு வரிசை 30 செ.மீ. வரிசையில் நெருக்கமாக விதைக்கவேண்டும்.
இரகம் : கோ-1
உரஅளவு அடியுரம் : தொழு உரம் – 10 டன்கள், தழைச்சத்து – 10 கிலோ மணிச்சத்து – 48 கிலோ, சாம்பல் சத்து -16 கிலோ
மேலுரம் : 50 சதவீதம் பூக்கும் தருணத்தில் அறுவடை செய்ய வேண்டும்
மகசூல் : 28-32 டன்கள் பசுந்தீவனம் கொடுக்கவேண்டும்
குறிப்பு : மூன்றாவதாண்டுப் பயிரின் மகசூல், முதலாண்டுப் பயிரின் மகசூலில் 60 சதவீதம் இருப்பதால், இப்பயிரை இரண்டாண்டுக்குப் பின் அழித்துவிட்டு புதிதாகப் பயிர் செய்ய வேண்டும்.

நீர்ப்பாசனத்திற்கு ஏற்ற பயறு வகைத் தீவனப்பயிர்கள்

பால் மற்றும் இறைச்சி உற்பத்திக்கு புரதச் சத்து அதிகம் உள்ள பயறுவகைத்தீவனங்கள் மிகவும் அவசியமானவை. பயறு வகைத் தீவனங்களில் புரதச் சத்தும், தாது உப்புக்களும், அதிக அளவில் உள்ளன. புல்வகைத்தீவனங்களுடன், பயறு வகைப் பசுந்தீவனப் பயிர்களைக் கலந்து கொடுப்பது நல்ல பயனுள்ள அடர்த்தீவனப்பொருட்களை கொடுப்பதற்கு சமமாகும்.
பயறு வகைத் தீவனப்பயிர்களின் குணாதிசியங்கள்:
  1. அதிகப் புரதச் சத்து உடையது
  2. அதிக தாது உப்புக்களைக் கொண்டது
  3. மிக எளிதில் சீரணிக்கக்கூடியது
  4. பயிரிடப்படும் நிலத்தின் மண் வளத்தை அதிகரிக்கக்கூடியது
மானாவாரியில் பயிர் செய்யவதர்ல்கு ஏற்ற சிறந்த பயறு வ்காஇத் தீவனப்பயிர்களான வேலி மசால், குதிரை மசால் மற்றும் தட்டைப்பயிறு போன்றவைகள் ஆகும். இவற்றில் புரதம் மற்றும் கால்சியம் சத்துக்கள் மற்ற தீவனப்பயிர்களில் இருப்பதை விட மிக அதிக அளவில் உள்ளன.

தீவன தட்டைப்பயறு

பருவம் : இறவை ஜூன் – ஜூலை
உழவு : நிலத்தை இரும்புக்கலப்பை கொண்டு இருமுறையும் நாட்டுக்கலப்பை கொண்டு மூன்று அல்லது நான்கு முறையும் உழவேண்டும்.
தொழு உரமிடுதல்  : எக்டருக்கு 12.5 டன் தொழு உரம் அல்லது கம்போஸ்ட் இடவேண்டும்.
பார் பிடித்தல்  : 30 செ.மீ. இடைவெளியில் 6 மீ நீளத்திற்கு பார்பிடிக்க வேண்டும். பார் பிடிக்காவிட்டால், பாசன நீரின் அளவைப் பொறுத்து 20 சதுர மீட்டருக்கு பாத்திகள் பிடிக்கவேண்டும்.
உரமிடுதல் : மண் பரிசோதனைக்கேற்ப உரங்களை இடவேண்டும். மண் பரிசோதனை செய்யாவிடில் எக்டருக்கு 25:40:20 கிலோ தழை, மணி மற்றும் சாம்பல்சத்து இடவேண்டும். இதனை 55:250:33 கிலோ, யூரியா, சூப்பர் பொட்டாஷ் உரங்கள் மூலமாக இடலாம்.
விதைப்பு : 3 பாக்கெட்டுகள் [600 கி] ரைசோபியம் உயிர் உரத்தை அரிசிக் கஞ்சியில் கலந்து விதை நேர்த்தி செய்யவும்.
விதை அளவு : எக்டருக்கு 40 கிலோ இடைவெளி 30 X 15 செ.மீ.
நீர் மேலாண்மை  : விதைத்தவுடன் பாசனம் செய்ய வேண்டும் மற்றும் மூன்றாவது நாளில் உயிர்ப்பு நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். பின்பு 10 நாட்களுக்கு ஒரு முறை பாசனம் அளிப்பது சிறந்தது.
களை நிர்வாகம்  : தேவைப்படும் போது களை எடுக்கவும்.
பயிர் பாதுகாப்பு  : பொதுவாகத் தேவையில்லை
அறுவடை : விதைத்த 50-55 நாட்களில் அறுவடை செய்ய வேண்டும். [50 சதம் பூக்கும் தருவாயில்]

கருத்துகள் இல்லை: