யா அல்லாஹ்!!!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன்.என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக.

ஞாயிறு, 16 மார்ச், 2014

மருத்துவ குணம் கொண்ட வெள்ளாட்டுப்பால்

மருத்துவ குணம் கொண்ட வெள்ளாட்டுப்பால்

குழந்தைகள் மற்றும் முதியவர்களின் உடல்நிலையை பராமரிக்கவும் உதவுகிறது. பசுவின்பால் ஒவ்வாமை ஏற்படுத்தும்போது வெள்ளாட்டுப்பால் அதற்கு சிறந்த மாற்றுப்பொருள். வெள்ளாட்டுப்பாலில் கொழுப்புச்சத்து முக்கிய பகுதிப்பொருளாக கருதப்படுகிறது. பாலாடைக்கட்டி தயாரிக்க பயன்படுகிறது. வயிற்று எரிச்சல், ஆஸ்துமா, ஒற்றைத்தலைவலி, பெருங்குடல் அழற்சி, வயிற்றுப்புண், செரிமான கோளாறு, கல்லீரல் மற்றும் பித்தப்பை நோய்கள் மற்றும் மன அழுத்தம் காரணமாக ஏற்படும் தூக்கமின்மை, மலச்சிக்கல் போன்றவற்றால் அவதிப்படுபவர்களுக்கு வெள்ளாட்டுப்பால் சிறந்த ஒன்று. மேலும் வெள்ளாட்டுப்பாலில் உள்ள கேப்ரோரிக், கேப்ரைலிக், கேப்ரிக் மற்றும் இதர கொழுப்பு அமிலங்கள், செரிமான உபாதைகள், சிறுகுடல் நோய்கள், இதயக்குழாய் நோய்கள், பித்தப்பை கற்கள், சிஸ்டிக் பைப்ரோசிஸ் ஆகியவற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஆற்றல் அளிப்பதோடு மட்டுமல்லாமல் கொழுப்புகளின் சேமிப்புகளையும் உடலில் தடுத்து நிறுத்தி குறைப்பதாக சில ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
-நன்றி -டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.

பசுந்தீவன உற்பத்தி

பசுந்தீவனத்தை உற்பத்தி செய்தால் கால்நடை வளர்ப்பில் ஏற்படும் செலவை கணிசமாக குறைக்கலாம். 


நன்மைகள்:
பால் உற்பத்தி செலவில் 70 சதவீதம் தீவனத்திற்கே செலவாகிறது.எனவே பால் உற்பத்தியில் அடர் தீவனத்தை குறைத்து பசுந்தீவனத்தை கொடுத்து தீவனச் செலவை 40 - 50 சதவீதமாக குறைக்கலாம்.

உலர் தீவனங்களை விட இதில் புரதம் மற்றும் தாது உப்புகளின் அளவு அதிகமாக இருக்கிறது. 

பசுந்தீவனத்தை உலர் தீவனங்களுடன் சேர்த்து தரும்போது உலர்தீவனங்களின் உட்கொள்ளும் அளவு மற்றும் அவற்றின் செரிமானத் தனமை அதிகரிக்கிறது. வகைகள் -- தானிய வகை, புல் வகை, பயறுவகை, மர வகை.


தானிய வகை:

சோளம், கம்பு மற்றும் மக்காசோளம்
அதிக மாவு சத்தும் , ஒரளவு புரதமும் கொண்டவை

புல் வகை:

கினியாப் புல், கம்பு நெப்பியர் ஒட்டுப்புல் ( கோ-1,கோ-2,
கோ-3 மற்றும் கோ-4), நீர்ப்புல் ( எருமைப் புல்), கொழுக்கட்டைபுல்,
ஈட்டிப்புல், மற்றும் மயில் கொண்டைப்புல்.

அதிக மாவு சத்தும் , ஒரளவு புரதமும் கொண்டவை
பயறு வகை:

வேலிமசால், குதிரை மசால், முயல் மசால், தட்டைப் பயறு.

அதிக புரதமும் சுண்ணாம்பு சத்தும் கொண்டவை.

மர வகை:

அகத்தி, சூபாபுல் ( சவுண்டல் ), கிளிரிச்சிடியா, கருவேல், வெல்வேல்,
ஆச்சா மற்றும் வேம்பு

நடுத்தரமான புரதம் மற்றும் தாது உப்புகள் கொண்டவை.

அளிக்கும் முறை:

பசும் புல் மற்றும் தானிய வகை தீவனப் பயிர்களை 3 பங்கும் பயறுவகை தீவனங்களை 1 பங்கும் கொடுக்க வேண்டும் .

இவ்வாறு அளிக்கும்போது கால்நடைகளுக்கு புரதம் மற்றும் மாவு சத்துகள்
சரியான விகிதத்தில் கிடைக்கும்.,