மருத்துவ குணம் கொண்ட வெள்ளாட்டுப்பால்
குழந்தைகள் மற்றும் முதியவர்களின் உடல்நிலையை பராமரிக்கவும் உதவுகிறது. பசுவின்பால் ஒவ்வாமை ஏற்படுத்தும்போது வெள்ளாட்டுப்பால் அதற்கு சிறந்த மாற்றுப்பொருள். வெள்ளாட்டுப்பாலில் கொழுப்புச்சத்து முக்கிய பகுதிப்பொருளாக கருதப்படுகிறது. பாலாடைக்கட்டி தயாரிக்க பயன்படுகிறது. வயிற்று எரிச்சல், ஆஸ்துமா, ஒற்றைத்தலைவலி, பெருங்குடல் அழற்சி, வயிற்றுப்புண், செரிமான கோளாறு, கல்லீரல் மற்றும் பித்தப்பை நோய்கள் மற்றும் மன அழுத்தம் காரணமாக ஏற்படும் தூக்கமின்மை, மலச்சிக்கல் போன்றவற்றால் அவதிப்படுபவர்களுக்கு வெள்ளாட்டுப்பால் சிறந்த ஒன்று. மேலும் வெள்ளாட்டுப்பாலில் உள்ள கேப்ரோரிக், கேப்ரைலிக், கேப்ரிக் மற்றும் இதர கொழுப்பு அமிலங்கள், செரிமான உபாதைகள், சிறுகுடல் நோய்கள், இதயக்குழாய் நோய்கள், பித்தப்பை கற்கள், சிஸ்டிக் பைப்ரோசிஸ் ஆகியவற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஆற்றல் அளிப்பதோடு மட்டுமல்லாமல் கொழுப்புகளின் சேமிப்புகளையும் உடலில் தடுத்து நிறுத்தி குறைப்பதாக சில ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
-நன்றி -டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.