சம்பங்கி மலர் சாகுபடி
பெங்களூரு அசர்கட்டா தேசிய தோட்டக்கலை ஆராய்ச்சி மையத்தின் ரகங்கள் ஸ்ரீகாசி, சுகாஷினி, பிராஜ்வால், வைபோவ். பட்டம்- மே, ஜூன், ஜூலை மாதங் கள்.
ஒரு ஏக்கருக்கு 300 கிலோ விதை தேவைப் படும். எல்லா வகை மண் ணிலும் பொதுவாக வடிகால் வசதி உள்ள மண் ணில் வளரக் கூடியது. தொழு உரம்ஏக்கருக்கு20 டிப்பர் இட்டால் போதும். மேல் உரமாக 20,20:0:13 அல்லது இயற்கை வழி உரமானதழை, மணி சத்துக்கள் கொண்ட உர வகைகளை இடவேண்டும். நிலத் தின் தன்மைக்கு ஏற்பவும், நல்ல வடிகால் வசதி உள்ள வாறும் பார்த்துக் கொள்ள வேண்டும்.
பொதுவாக சம்பங்கி ஒரு கிழங்கு வகை பயிராக இருப்பதால் மழைக் காலங்களில் கிழங்கு அழுகல் வரும். இதற்குசூடோமோனாஸ், டிரைகோ டெர்மா விரிடி ஆகிய உயிர் உரங்களை இட்டு பாதுகாக்க வேண்டும். நட்ட 3 மாதங்களில் ஒரு சில இடங் களில் அங்கொன்றும் இங் கொன்றும் வரும். 9 மாதத் தில் மகசூல் குறையும். ஏக்கருக்கு சுமார் 5 முதல் 6 டன் பூ மகசூல் வரும்.
வீரிய சம்பங்கி:
விதை கிழங்கு பெரியது. பூக்கள் பெரியது. பூ எடை அதி கம். பூ மொட்டு பெரியது. கிளைக்கும் தன்மை அதிகம். நீண்டநாள் சாகுபடி. மகசூல் அதிகம்.
நாட்டு சம்பங்கி: விதை கிழங்கு சிறியது. பூக்கள் சிறியது. எடை குறைவு. பூ மொட்டு சிறியது. கிளைக்கும் தன்மை குறைவு. குறைவு நாட்கள். மகசூல் சுமார். பூக்களின் எண்ணிக்கை குறைவு. நோய் எதிர்ப்பு சக்தி குறைவு. மேலும் விபரங்களுக்கு: எஸ்.பரசுராமன், த/பெ.மதுரை, களியபேட்டை கிராமம், ஓரக்காட்டுபேட்டை போஸ்ட், உத்திரமேரூர் தாலுகா, காஞ்சிபுரம். 97874 77958.
பண்ணைக்குட்டையில் மீன் வளர்ப்பு: மீன்வளர்ப்பு மேம்பட தமிழக அரசும் மைய அரசும் செயல்படுத்தும் திட்டங்கள்:
திட்டங்கள் - மானியம்
மீன் குஞ்சு நிலையங்கள் அமைக்க - ரூ.60,000 வரை
கூண்டுகள் அமைத்து மீன் வளர்க்க - ரூ.5,000 வரை
மீன்குஞ்சுகள் மற்றும் தீவனத்திற்காக - ரூ.6,000 வரை
மாநில அரசு திட்டம்:
* புதிய குளம், குட்டைகளை அமைக்க ரூ.60,000 வரை. * குளங்கள், தொட்டிகளை சீரமைக்க ரூ.15,000 வரை. * கெண்டை மீன் வளர்க்க உள்ளீட்டு செலவு(குஞ்சுகளுக்கும் உணவிற்கும்) ரூ.10,000 வரை. * நன்னீர் மீன் குஞ்சு பொரிப்பகம் அமைக்க ரூ.1,20,000. * மீன் தீவன நிலையம் அமைக்க - ரூ.1,50,000 * அலங்கார மீன் வளர்ப்புக்கு ரூ.1,50,000.
இத்திட்டங்களுக்கான மானியம் 20 சதவீதம் பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இன்னும் 5 சதவீதம் அதிகம்(25 சதம்) உவர் நீர் மேம்பாட்டு முகமை மூலம் வழங்கப்படும்
உதவிகள் (மத்திய, மாநில அரசுகளின் திட்டம்): இறால் பண்ணை நிறுவவும் புதுப்பிக்கவும் ரூ.60,000.
தேசிய வேளாண்மை அபிவிருத்தித் திட்டம்:
நுண்மீன் குஞ்சு உற்பத்தி நிலையம் அமைக்க ரூ.5,00,000.
தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம்:
நோய் தடுப்பு வசதிகளுடன் இறால் வளர்க்க ரூ.3,75,000. நீர்நிலைகளை புதுப்பித்து மீன் வளர்க்க ரூ.15,000. புதிய குளங்களை அமைத்து மீன் வளர்க்க ரூ.60,000. நுண்மீன் குஞ்சு உற்பத்தி நிலையம் அமைக்க ரூ.2,40,000.
தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டம் (சம்பந்தப்பட்ட உபவடி நிலப்பகுதிகளுக்கு மட்டும்):
பண்ணைக் குட்டைகள் அமைத்து மீன் வளர்க்க ரூ.50,000. (தகவல்: டாக்டர் வி.சுந்தரராஜன், அக்வா கல்சர் பவுண்டேஷன், சென்னை-600 073. போன்: 90030 13634).