யா அல்லாஹ்!!!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன்.என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக.

வெள்ளி, 7 பிப்ரவரி, 2014

புதியதலைமுறையின் வேளாண்கண்காட்சி தொடங்கிய

புதியதலைமுறையின் வேளாண்கண்காட்சி தொடங்கியது
 
பதிவு செய்த நாள் - பெப்ரவரி 07, 2014, 2:02:09 PM
மாற்றம் செய்த நாள் - பெப்ரவரி 08, 2014, 9:32:36 AM
உழவுக்கு உயிரூட்டு... உழவர்க்கு வாழ்வூட்டு... என்ற முழக்கத்துடன் புதிய தலைமுறையின் வேளாண் கண்காட்சி கோவையில் நடைபெற்று வருகிறது.
புதிய தலைமுறை சார்பில் இரண்டாம் ஆண்டாக நடத்தப்படும் இந்த கண்காட்சி, கோவையில் உள்ள வ.உ.சி. பூங்கா மைதானத்தில் பிப்ரவரி 7ந்தேதி(இன்று) தொடங்கி 9-ந்தேதி வரையிலும் நடைபெறுகிறது.
கண்காட்சியில், விவசாயப்பிரச்னைகளுக்கு தீர்வுகள், அதிக விளைச்சல் பெற ஆலோசனைகள், நிதி உதவிகள் குறித்த வழிகாட்டுதல்கள், மானியங்கள் பற்றிய தகவல்கள், மதிப்பு கூட்டுதல், விளைபொருட்களை சந்தைப்படுத்துதல், இயற்கை விவசாயம், குறைந்த செலவில் அதிக வருவாய் ஈட்டும் வழிமுறைகள் ஆகியவற்றுக்கு விளக்கம் அளிக்கப்படுகிறது.
அரங்குகளில் நவீன வேளாண் கருவிகள், வேளாண் சார்ந்த புதிய கண்டுபிடிப்புகள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
விவசாயிகளுக்கு மட்டுமின்றி, இளைஞர்களுக்கு வேளாண்மையில் ஆர்வத்தை ஏற்படுத்துவது, கால்நடைகள் வளர்ப்பவர்கள், இயற்கை ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் வல்லுநர்கள் என அனைத்து தரப்பினருக்கும் பயனளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
UU
இதேப்போன்று, திருச்சியில் வரும் பிப்ரவரி மாதம் 21ந்தேதி தொடங்கி 23ந்தேதி வரையில் வேளாண் கண்காட்சி நடைபெறுகிறது.
கண்காட்சி தொடர்பான தகவலுக்கு: www.puthiyathalaimurai.tv/events/2014/index.htm
00:1703:21
spaceplay / pause
 
escstop
 
ffullscreen
shift + slower / faster (latest Chrome and Safari)
volume
 
mmute
seek
 
 . seek to previous
126 seek to 10%, 20%, …60%

வியாழன், 6 பிப்ரவரி, 2014

கோழி வளர்ப்பும் பயிற்சி

நாட்டுக்கோழி! சேலம், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், பிப்ரவரி 11-ம் தேதி நாட்டுக்கோழி வளர்ப்பும், நோய் கட்டுப்பாட்டு முறைகளும் என்ற தலைப்பில் பயிற்சி நடைபெற உள்ளது. முன்பதிவு செய்து கொள்ளவும். தொடர்புக்கு, தொலைபேசி: 0427-2410408 கெண்டை மீன்! காஞ்சிபுரம், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையத்தில் ஜனவரி 28-ம் தேதி கெண்டை மீன் வளர்ப்பு பயிற்சி நடைபெற உள்ளது. முன்பதிவு செய்துகொள்ளவும். தொடர்புக்கு, தொலைபேசி: 044-27452371 சிறுதானியம்! ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம், வேளாண் அறிவியல் நிலையத்தில் ஜனவரி 28-ம் தேதி சிறுதானியங்களில் மதிப்புக் கூட்டுதல் பயிற்சி நடைபெற உள்ளது. முன்பதிவு செய்துகொள்ளவும்.   தொடர்புக்கு, தொலைபேசி: 04285-241626 நோய் பராமரிப்பு! தேனி மாவட்டம், அல்லிநகரம், உழவர் பயிற்சி நிலையத்தில் ஜனவரி 30 மற்றும் 31-ம் தேதிகளில் கால்நடைக்கான நோய் பராமரிப்புப் பயிற்சி நடைபெற உள்ளது. முன்பதிவு செய்துகொள்ளவும். தொடர்புக்கு, தொலைபேசி: 04546-260047   '