யா அல்லாஹ்!!!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன்.என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக.

சனி, 12 அக்டோபர், 2013

முட்டைகளை அடைகாத்து பொரிக்கும் கருவி

முட்டைகளை அடைகாத்து பொரிக்கும் கருவி

அடைகாத்தல்: வெப்பநிலை, ஈரப்பதம், வாயுச்சூழ்நிலை மற்றும் முட்டைகளை த் திருப்பிவிடுதல் போன்ற இயற்கைக் காரணிகள் ஒரு வெற்றிகரமான குஞ்சு பொரிப்ப தற்கு அவசியம். அடைக்காப் பானின் உள்வெப்பநிலையானது அதை த் தயாரிப்பவர் கூறும் அளவு வைத்துக் கொள்ளலாம். பொதுவாக மிதமான வெ ப்ப நிலையே விரும்பப்படுகிறது. இது பொதுவாக 99.5 – 100.5 டிகிரி பாரன் ஹீட் (37.2 டிகிரி செ – 37.8 டிகிரி செ) வ ரை. குறைந்த வெப்பநிலை கரு வளர்ச் சியைக் குறைக்கும். (சாதகமற்ற) அசா தாரண அதாவது அதிக வெப்பநிலை நிலவும்போது வளர்ச் சியைப் பாதித்து கோழிகளில் இறப்பு வீதத்தை அதிகப்படுத்து கிறது.
கருமுட்டைகள் அகலமான பக்கம் மேல்நோக்கியவாறு வைத்தல் வேண்டும். நவீன அடைகாப்பான்களில் முட்டைகள் தன்னிச்சை யாகவே ஒரு நாளைக்கு 8 அல்லது அதற்கு மேற்பட்ட முறைகள்திருப்பிக்கொள்ளுமாறு வடிவ மைக்கப்பட்டுள்ளது.
5 அல்லது 7வது நாளிலிருந்து ஒளியில் கரு வளர்நிலை கா ண வேண்டும். அப்போது கருவு றாத முட்டைகளையும், 18வது நாளில் சிதைந்த அல்லது இற ந்த முட்டைகளையும் நீக்கிவி டலாம். ஆட் கூலியைக் குறைக் க பெரும்பாலும் 17 அல்லது 18ம் நாளில்தான் ஒளியில் கருவளர்நிலை காணப்படுகிறது. ஒளி யை உட்செலுத் தும்போது அது முட்டையினுள் ஒளி ஊடுருவிச் செல்ல இயலாமல் இருட்டாக இருந்தால் கரு நன்றாக வளர்ந்து ள்ளது என்றும் சிறிதளவு ஒளி கசியக்கூடியதாக இருந்தால் கரு இறந்துவிட்டது என்றும் ஒளி எளிதில் ஊடுருவக்கூடியதாக இருந் தால் அது கருவுறாத முட் டை என்றும் அறிந்து கொள் ளலாம். கரு வளர்ந்துள்ள முட்டைகளை மட்டுமே பொரிப்பகத்திற்கு மாற் றம் செய்ய வேண்டும். கோழியி ன் வம்சாவளியைப் பாதுகா க்க ஒரு கோழியின் முட் டைகளை ஆண் பெண் தனி த்தனிப் பிரிவுகளாகப் பிரித் து அடுக்கி வைக்க வேண்டும்.
அடைகாப்பான் மற்றும் குஞ்சு பொரிப்பகத்தை முற்றிலும் முட் டையை அதில் வைப்பதற்கு முன்னரே ஒரு முறை சோதனை செ ய்து, ஏதேனும் குறையிருந்தால் சரிசெய்ய வேண்டும். நன்கு கழு வி, கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தி வைக்க வேண்டும். இது நோய் பரவலின் தன்மையைக் குறைக்கும்.
தொடர்புக்கு: