செல்லமாக வளர்க்கும் நாயின் மீது வரும் துர்நாற்றத்தைப் போக்க சில டிப்ஸ்.
நாய்கள் மீது நாற்றம் அடிப்பதாலேயே, பலர் அதனை வளர்ப்பதற்கோ அல்லது காரில் அழைத்து செல்வதற்கோ யோசிக்கின்றனர். வீட்டு நாய்கள் என்றாலும் அவைகளின் மீது ஒருவித துர்நாற்றம் வீசும். அதற்கு காரணம் சரியான பராமரிப்பு இல்லாதது தான். நாய்கள் அழகாக இருக்கின்றன என்பதால் மட்டும் அவற்றை வளர்க்க முடியாது, அவைகள் சுத்தமாக இருப்பது தான் முக்கியம். நம்முடைய சுத்தம் எவ்வளவு முக்கியமோ, அந்த அளவிற்கு நாய்களின் சுத்தமும் மிகவும் அவசியம். இல்லையென்றால் அவைகளுக்கு உண்டாகும் நோய்கள் நம்மையும் தாக்கக் கூடும். எனவே அத்தகைய செல்ல நாய்களை, குழந்தைகளை கவனித்து கொள்வதை போன்று கவனித்துக் கொள்ள வேண்டும். இங்கு செல்ல நாய் குட்டியை துர்நாற்றத்திலிருந்து காப்பதற்கான சில டிப்ஸ்களைக் கொடுத்துள்ளோம். அதைப் படித்து பின்பற்றி, நாயை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். 1. வாசனை திரவியம் அல்லது வாசனைக் கொடுக்கக்கூடிய எந்த பொருட்களையும் நாய்களின் மீது தடவவே கூடாது. இதனால் அவைகள் துர்நாற்றத்தை அதிகப்படுத்துமே தவிர, போக்க முடியாது என்பதை அனைவரும் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். 2. நாயை எப்பொழுதும் ஈரத்தன்மையுடன் இல்லாதவாறு பார்த்து கொள்ள வேண்டும். ஏனெனில் ஈரத்தன்மை அதிகமாக இருந்தால், அதுவே நாற்றத்தை ஏற்படுத்துவதுடன், தேவையில்லாத நோயையும் கொண்டு வரும் என்பதால் செல்ல நாய் குட்டியை குளிபாட்டியவுடன் நன்கு துடைத்து விட வேண்டும். 3. முக்கியமாக நாய்களின் காதுகளை நன்கு துடைத்து விட வேண்டும். அவ்வாறு துடைப்பதற்கு மெழுகாலான பட்ஸை பயன்படுத்தாமல், பருத்தி கொண்டு தயாரிக்கப்பட்ட பட்ஸை பயன்படுத்த வேண்டும். 4. நாய்களின் உரோமங்களை நன்கு சீவி விட வேண்டும். இதனால் பாக்டீரியா மற்றும் தேவையில்லாத அழுக்கை நீக்க முடியும். அதிலும் அவ்வாறு சீவும் போது, பின் பக்கம் ரோமங்கள் படியும் படி சீவ வேண்டும். இதனால் நாய்களின் ரோமங்களை உதிராமல் பார்த்து கொள்ள முடியும். 5. குறிப்பாக நாய்களின் பற்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். பற்கள் நன்றாக தூய்மையாக இல்லையென்றால், நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதால் அவைகளின் பற்களை தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும். அதற்கு நாய்களுக்கென இருக்கும் டூத் ப்ரஷ் வைத்து பற்களை சுத்தம் செய்ய வேண்டும். மேலும் அவைகளுக்கு ஏற்ற பேஸ்டை வாங்க வேண்டும். அதிலும் நாய்க்கு பிடித்த இறைச்சியின் சுவை கலந்த பேஸ்ட்டை தேர்வு செய்தால், தொல்லை இல்லாமல் நாய்களின் பற்களை சுத்தம் செய்யலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக