யா அல்லாஹ்!!!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன்.என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக.

சனி, 20 ஜூலை, 2013

நாய் உணவுகளைப் பற்றிய சில மூடநம்பிக்கைகள்!!!

வீட்டில் ஆசையாக நாய் வாங்கி வளர்த்தால், வீட்டிற்கு அருகில் உள்ளோர் நாய்களுக்கு இந்த உணவுகளை கொடுக்க வேண்டாம், அந்த உணவுகளை கொடுக்க வேண்டாம், இதை சாப்பிட்டால் நாய்க்கு ஏதாவது ஆகிவிடும், அதை சாப்பிட்டால் நாய் நோய்வாய்ப்படும் என்று பலர் பலவிதமாக கூறுவார்கள். இந்த உலகில் மூடநம்பிக்கைகளுக்கு அளவே இல்லை. எதிலும் ஒரு மூடநம்பிக்கையானது நிறைந்திருக்கும். அந்த வகையில் நாய்கள் மீது மட்டும் மூடநம்பிக்கை இல்லாமலா இருக்கும். ஆம், முதலில் நாயை வளர்க்க ஆசைப்பட்டால், நாய்களைப் பற்றிய முழு விவரங்களையும் நன்கு தெரிந்து கொண்டு வளர்க்க வேண்டும். அதை விட்டு மற்றவர்கள் சொல்கிறார்கள் என்று, அதற்கு கொடுக்க வேண்டிய உணவுகளில் தவறு செய்தால், பின் நாய் வளர்க்கும் ஆசையை கைவிட வேண்டியது தான். பொதுவாக நாய்க்கு கொடுக்கும் உணவுகளில் இரண்டு வகைகள் உள்ளன. அவை வீட்டு உணவு மற்றொன்று ஃபார்முலா உணவு. இத்தகைய நாய்களின் உணவுகள் பற்றி சில மூடநம்பிக்கைகள் மக்கள் மனதில் உள்ளன. அது என்னவென்று கொடுத்துள்ளோம். அத்தகைய மூடநம்பிக்கைகளை உடைத்தெறிந்து, சரியான உணவுகளை நாய்க்கு கொடுத்து வளர்த்து வாருங்கள். * நாய்கள் எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம். உண்மையில் இது ஒரு பைத்தியக்காரத்தனமான ஒரு நம்பிக்கையாகும். ஆம், நாய்களின் செரிமான மண்டலத்திற்கும், மனிதனின் செரிமான மண்டலத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. எனவே மனிதன் சாப்பிடும் அனைத்து உணவுகளையும் நாய்களுக்கு கொடுக்கக்கூடாது. சிலர் "என் நாய்க்கு நான் அனைத்து உணவுப் பொருட்களையும் கொடுத்துள்ளேன். இதுவரை அதற்கு ஒன்று ஆனதில்லை" என்று சொல்வார்கள். ஆனால் உண்மையில், நாய்க்கு ஏற்படும் பாதிப்பானது உடனே தெரியாது. திடீரென்று என்றாவது தேவையில்லாமல் உடல்நலம் சரியில்லாத போது தான் உணர்வீர்கள். * நாய்கள் சைவமாக இருக்க முடியாது. உண்மையில், நாய்கள் சைவமாக இருக்க முடியும். அதிலும் அதற்கு சரியான உணவுகளை கொடுத்து வந்தால். இறைச்சியில் மட்டும் தான் நாய்களுக்கு வேண்டிய சத்துக்கள் இருக்கும் என்றில்லை. அவற்றிற்கு புரோட்டீன் அதிகம் நிறைந்துள்ள சரியான சைவ உணவுகளை தொடர்ச்சியாக கொடுத்தாலே, நாய்கள் இறைச்சி சாப்பிடாமல், சைவ நாயாக இருக்கும். * நாய்களுக்கான ஃபார்முலா உணவுகள் அனைத்தும் ஒன்று தான். மனிதர்களுக்கான அனைத்து ஃபார்முலா உணவுகளும் ஒன்றா? இல்லையெனில், நாய்களுக்கு மட்டும் எப்படி ஒன்றாக இருக்க முடியும். எப்போதும் நாய்களுக்கு வாங்கும் உணவுப் பொருட்களின் பின்னால் எழுதப்பட்டிருக்கும் சத்துக்கள் சரியானதாக இருந்தால் மட்டும் வாங்க வேண்டும். ஒருவேளை குறைவாக இருந்தாலும், வேறொரு உணவுப் பொருட்களை தேர்ந்துதெடுத்து வாங்கலாம். * வீட்டில் சமைக்கும் உணவுகள் தான் எப்போதும் நல்லது. இதுவும் ஒரு மூடநம்பிக்கை தான். உண்மையில் வீட்டில் சமைக்கும் உணவுகளின் மூலம் மட்டும் நாய்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காது. அதற்கும் ஒருசில ஃபார்முலா உணவுகளை தினமும் கொடுத்தால் தான், நாய்க்கு வேண்டிய அத்தியாவசிய சத்துக்கள் முழுமையாக கிடைக்கும்.
லாப்ரடர் நாய்கள் ஆரோக்கியமா இருக்க, இந்த உணவுகளை கொடுங்க...
****************************************************************************
பெரும்பாலானோர் செல்லப் பிராணிகள் என்று வரும் போது நாய்களைத் தான் தேர்ந்தெடுத்து வளர்ப்பார்கள். அத்தகைய நாய்களில் பல இனங்கள் உள்ளன. அவைகளில் லாப்ரடர் (Labrador) என்னும் நாய் இனத்தை தான் பலரும் தேர்ந்தெடுப்பார்கள். மேலும் உலகில் உள்ள அனைவருக்குமே, இந்த இன நாய் தான் விருப்பமானதாக இருக்கிறது. ஏனெனில் இத்தகைய நாய்கள் அனைத்துவிதமான உணவுகளையும் விரும்பி சாப்பிடக்கூடியது. அதே சமயம், இந்த நாய்களுக்கு தான் அடிக்கடி உடல் நலத்தில் பிரச்சனைகள் ஏற்படக்கூடும். ஆகவே இந்த நாய்களை வாங்கும் முன்பு, அதன் உடல்நலத்தில் அக்கறை கொள்ளும் வண்ணம், எந்த மாதிரியான உணவுகளைக் கொடுக்க வேண்டும், கொடுக்கக்கூடாது என்று தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் தற்போது அனைவருக்கும் லாப்ரடர் நாய்கள் பிடித்திருப்பதால், பணத்திற்காக சிலர் நோய்வாய்ப்பட்ட நாய்களை விற்கின்றனர். நாமும், நாய் நோய்வாய்ப்பட்டுள்ளது என்பதை தெரியாமல் வாங்கிவிடுகிறோம். அதற்காக நோய்வாய்ப்பட்ட நாய்களை தூக்கிப் போட முடியாதல்லவா? எனவே அந்த மாதிரியான நிலையிலும், நோய்வாய்ப்பட்ட நாய்களுக்கு சரியான ஆரோக்கியமான உணவுகளைக் கொடுத்தால், அதன் உடல் நலத்தில் முன்னேற்றத்தைக் கொண்டு வர முடியும். சரி, இப்போது லாப்ரடர் நாய்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுப் பொருட்களை கொடுத்துள்ளோம். அதைப் படித்து, அந்த உணவுகளைக் கொடுத்தால், நாய்கள் ஆரோக்கியமாக இருக்கும். 

லாப்ரடர் நாய்களுக்கான சிறந்த உணவுகள்!!!
**********************************************

1.சூரியகாந்தி எண்ணெய் நாய்கள் நோய்வாய்ப்படாமல் இருக்க வேண்டுமெனில், அவைகளின் உணவுகளில் தேங்காய் எண்ணெயை பயன்படுத்தாமல், சூரியகாந்தி எண்ணெயைப் பயன்படுத்தினால், நாய்கள் ஆரோக்கியமாக இருக்கும்.
2.காய்கறிகள் லாப்ரடர் நாய்களுக்கு அனைத்து விதமான காய்கறிகளையும் கொடுக்கக்கூடாது. ஆனால் வாரத்திற்கு ஒருமுறையாவது, நாய்களுக்கு கேரட்டை கொடுக்க வேண்டும்.
3.ஆப்பிள் தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் ஆரோக்கியமாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் சொல்வார்கள். அந்த வார்த்தை மனிதர்களுக்கு மட்டுமின்றி, நாய்களுக்கும் தான். அவ்வாறு நாய்களுக்கு ஆப்பிள் கொடுக்கும் போது, தோலை நீக்காமல் கொடுக்க வேண்டும். இதனால் நாய்களின் செரிமான மண்டலம் சீராக இயங்கும்.
4.தயிர் தயிரை லாப்ரடர் நாய்களின் உணவில் சேர்த்து வந்தால், நாய்களின் வாயில் உள்ள கிருமிகள் அனைத்தும் அழிந்துவிடும்.
5.முட்டை லாப்ரடர் நாய்களுக்கு வயிற்று உப்புசம் இருந்தால், அதனைப் போக்குவதற்கு முட்டையின் வெள்ளைக்கருவைக் கொடுப்பது நல்லது. மேலும் முட்டையின் வெள்ளைக்கரு நாய்களுக்கு போதிய ஆற்றலைக் கொடுத்து, ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.
6.தண்ணீர் லாப்ரடர் நாய்கள் தினமும் 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால் நாய்களின் உடலில் உள்ள டாக்ஸின்கள் அனைத்தும் வெளியே, நாய்கள் நோய்வாய்ப்படாமல் இருக்கும்.
7.மிஞ்சிய உணவுகள் சிலர் லாப்ரடர் நாய்களுக்கு மிஞ்சிய உணவுகளைக் கொடுத்தால், அலர்ஜிகள் ஏற்படும் என்று சொல்கின்றனர். ஆகவே மிஞ்சிய உணவுகளை கொடுக்க நினைத்தால், கை வைக்காத மிஞ்சிய உணவுகளை கொடுப்பது நல்லது.
*******************************************************************************