கோழிப்பண்ணை உபகரணங்கள் குஞ்சுப் பொரிப்பான் உபகரணங்கள்
1. அடை காப்பான்
அடை காப்பான்
|
- இதில் அடை முட்டைகள் முதல் 19 நாட்கள் வைத்து அடைகாக்க படும். இந்த இயந்திரத்தில் வெப்பநிலை, ஈரப்பதம் மற்றும் முட்டைகளை திருப்புதல் ஆகியவை கட்டுபடுத்துவதற்கான வசதிகள் உள்ளன.
2. குஞ்சு பொரிப்பான்
- இது அடைகாப்பானை போல இருந்தாலும் அடை முட்டைகளை திருப்புவதற்கான வசதி இல்லை. மேலும் இதில் தட்டுகள் பொரிக்கும் குஞ்சுகளுக்கு ஏற்றவாறு அமைக்கபட்டிருக்கும்.
- இதில் அடைமுட்டைகள் அடைகாத்தல் காலத்தின் கடைசி 3 நாட்கள் இருக்கும்.
- உலகில் காணப்படும் பல்வேறு வகையான அடைகாப்பான் மற்றும் குஞ்சுப்பொரிப்பான்கள்:
- காரிடார் வகை பொரிப்பான்கள்
- குகை வகை பொரிப்பான்கள்
- செங்குத்தான காற்றாலை பொரிப்பான்கள்
3. அழுத்த காற்று அமைப்பு
- சில அடைகாக்கும் கருவியில் அழுத்த காற்று முட்டைகள் அடங்கிய தட்டுகளை திருப்பி விட பயன்படுத்தப்படுகிறது.
- மத்திய பெரிய அழுத்தகாற்று அமைப்பு ஒன்று தூசி தட்டவும் குஞ்சுப் பொரிப்பகத்தினை சுத்தம் செய்யவும் தேவைப்படுகிறது.
4. அவசரகால தயாரன மின் அமைப்புகள்
- உள்ளூர் மின் வழங்கல் அமைப்பிலிருந்து மின்சாரம் கிடைக்காத பட்சத்தில் குஞ்சுப் பொரிப்பகத்திற்கு மாற்று மின்சார அமைப்பு இருக்கவேண்டும்.
- ஒரு நிலையான மின்சார ஜெனரெட்டர் குஞ்சுப்பொரிப்பகத்திற்கு அருகில் அல்லது அடுத்த கட்டிடத்தில் இருக்கவேண்டும்.
- நிலையான மின்சார ஜெனரெட்டர் குஞ்சுப் பொரிப்பகத்தின் அனைத்து மின்சார தேவைகளை பூர்த்தி செய்யும் அளவு இருக்கவேண்டும்.
5. குஞ்சுப் பொரிப்பகத்தில் உள்ள உபகரணங்கள்
- குஞ்சுப் பொரிப்பானின் தட்டு கழுவிகள்
- குப்பைகளை நீக்கும் அமைப்புகள்
- முட்டைகளை மாற்றும் இயந்திரங்கள்
- முட்டைக்குள் தடுப்பூசி போடும் இயந்திரங்கள்
- குஞ்சுப் பெட்டிகள் கழுவிகள்
- அலமாரி கழுவிகள்
- தடுப்பூசி போடுதல் / இனம் பிரித்தல் / தரம் பிரித்தல் அமைப்புகள்
- அதிக அழுத்த காற்றடிப்பான்கள்
முட்டைகளை கையாளும் உபகரணங்கள்
1. குஞ்சுப் பொரிக்கும் தட்டுகள்
- பொதுவாக குஞ்சுப் பொரிக்கும் தட்டுகள் தட்டையாகவோ குழியாகவோ இருக்கும்.
- ஒவ்வொரு தட்டிலும் 90 அல்லது 180 முட்டைகள் வைக்கலாம்.
2. அடை முட்டைகளை மாற்றும் எந்திரங்கள்
- இதன் மூலம் பண்ணை முட்டை அட்டையிலிருந்து முட்டைகளை குஞ்சுப் பொரிக்கும் தட்டிற்கு மாற்றப்படுகிறது.
- அதிகமாக முட்டைகளை மாற்றும் குஞ்சுப்பொரிப்பகங்களில் வெற்றிட முட்டை தூக்கிகள் உபயோகப்படுத்தபடுகிறது
முட்டை கண்டறிவான்
- ஒளியை கொண்டு முட்டையின் உள் அமைப்புகளை காணும் கருவியாகும்.
- ஒவ்வொரு முட்டை மற்றும் பல முட்டைகளை காணுமாறு இரண்டு வகையான முட்டை கண்டறிவான்கள் உள்ளன.
அடைகாப்பான் உபகரணங்கள்
- இவை இளங்குஞ்சுகளுக்கு முதல் சில வாரங்கள் கதகதப்பும் மற்றும் வெளிச்சமும் கொடுக்ககூடியவை.
- இதில் கதகதப்புக்கு என்று ஒரு உபகரணம், வெப்பம் மற்றும் வெளிச்சத்தை எதிரொலிப்பான்கள் மற்றும் உயரங்களை மாற்றி அமைக்க தேவையான வசதிகள் ஆகியவை உள்ளன.
- அடை காக்க உபயோகப்படுத்தப்படும் சில உபகரணங்கள்:
1. கரி அடுப்பு / மண்ணெய் அடுப்பு
கரி அடுப்பு
|
- இவ்வகையான அடுப்புகள் மின்சாரம் இல்லாத இடங்கள் அல்லது மின்சாரம் விலை அதிகமாக இருக்கும் இடங்களிலும், மின்சாரம் தட்டுபாடு உள்ள இடங்களிலும் பயன்படுத்தபடுகின்றன.
- இவ்வகையான அடுப்புகளில் தட்டுகள் மற்றும் குழி போன்ற அமைப்புகள் உள்ளதால், அது வெப்பத்தை ரொம்ப நேரம் இருக்குமாறு செய்கிறது.
2. எரிவாயு அடைக்காப்பான்
எரிவாயு அடைக்காப்பான்
|
- இயற்கை எரிவாயு அல்லது திரவ பெட்ரோலிய வாயு அல்லது மீத்தேன் ஆகியவற்றின் மூலம் சூடாக்கும் கம்பி வெப்படுத்தபட்டு சுமார் 3 – 5 அடி குஞ்சுகளுக்கு மேலே அமைக்கப்படுகிறது.
- இவ்வகை அடுப்புகளில் பிரதிபலிப்பான்கள் அமைக்கப்பட்டு வெப்பத்தை குஞ்சுகளை நோக்கி எதிரொலிக்கப்படுகிறது.
3. மின்சார அடைக்காப்பான்கள்
மின்சார அடைக்காப்பான்கள்
|
- இந்த அமைப்பில் சீரான ஒரே அளவு வெப்பம் பெரிய அளவு இடத்திற்கு இருக்குமாறு அமைக்கப்படுகிறது. இதனால் குஞ்சுகள் அடைக்காப்பானில் ஒரே இடத்தில் அடைவது தடுக்கப்படுகிறது.
- ஒரு மின்சார அடைக்காப்பானை கொண்டு 300 முதல் 400 இளங்குஞ்சுகளை வளர்த்தலாம்.
4. அகச்சிவப்பு விளக்குகள்
அகச்சிவப்பு விளக்குகள்
|
- இது அதே எதிரொலிக்கும் தன்மை கொண்டுள்ளதால் தனியாக எதிரொலிப்பான்கள் தேவைப்படாது.
- 150 வாட் பல்புகள் 250 குஞ்சுகளுக்கும் 250 வாட் பல்புகள் 250 குஞ்சுகளுக்கும் தேவையான வெப்பத்தை அளிக்ககூடியது.
5. எதிரொலிப்பான்கள் அல்லது ஹொவர்கள்
- இவ்வகை எதிரொலிப்பான்கள் ஹொவர்கள் என அழைக்கப்படுகிறது.
- இவை வெப்பத்தையும் ஒளியையும் எதிரொலிக்ககூடியது.
i).தட்டையான ஹொவர்கள்
- இவ்வகை தட்டையானது .இதில் சூடாகும் கம்பிகள், சூடேற்றும் அமைப்புகள் மற்றும் தலைமை விளக்கு ஆகியவை உள்ளன.சிலவற்றில் வெப்பத்தை அளவிட வெப்பமானிகள் அமைக்கப்பட்டிருக்கும்.
- இவை கூரையிலிருந்து தொங்கவிடமால், நான்கு மூலைகளில் அமைக்கப்பட்ட தூண்கள் மூலம் நிற்க வைக்கப்படுகிறது.
ii).குழி வடிவான ஹொவர்
- இதில் குழிவடிவான அமைப்பில் சதாரண மின்சார விளக்கும், வெப்ப நிலைப்படுத்தியும் , சில இடங்ளில் வெப்பமானியும் அமைக்கப்பட்டிருக்கும்.
6. இளங்குஞ்சு தடுப்பு அல்லது அடைக்காப்பான் தடுப்பு
இளங்குஞ்சு தடுப்பு அல்லது அடைக்காப்பான் தடுப்பு
|
- இவைகள் 1 – 1.5 அடி உயரம் மற்றும் வெவ்வேறு நீளம் கொண்ட மெல்லிய இரும்பு தகடுகள் , அட்டை தட்டிகள் மற்றும் மூங்கில் பாய்களாகும்.
- இந்த தடுப்பு போன்ற அமைப்பால் கோழிக்குஞ்சுகள் புரூடரை விட்டு தள்ளி சென்று குளிரால் பாதிக்கபடாமல் தவிர்க்கப்படுகிறது.
- இதனால் கோழிக்குஞ்சுகள் சூடான பகுதிக்கு அருகே செல்ல பழக கற்றுகொள்கிறது.
- அடைக்காப்பானின் தடுப்பின் விட்டம் 5 அடி மற்றும் உயரம் 1.5 மிகாமல் இருக்குமாறு அமைக்கவேண்டும்.
- பருவகாலங்களை பொறுத்து அட்டை தட்டு, இரும்பு தகடு, கம்பி வலை மற்றும் பாய் ஆகியவைகளை தடுப்புகளாக பயன்படுத்தலாம்.
- வெயிற்காலங்களில் அடைக்காக்கும் காலம் 5-6 நாட்களும் குளிர்காலங்களில் 2-3 வாரங்களும் இருக்கவேண்டும்.
7. மின்சார சூடாக்கிகள் (heating rods or coils)
மின்சார சூடாக்கிகள்
|
- இதில் சூடாக்கும் கம்பிகள் மற்றும் விளக்கு ஆகியவை உள்ளன. சிலவற்றில் வெப்பமானி உள்ளன.
- சூடாக்கும் கம்பிகள் மற்றும் சுருள் கம்பிகள் மேலே எதிரொலிப்பான்கள் வைக்கப்பட்டிருக்கிறது.
- இதில் தேவைக்கு ஏற்ப வெப்பநிலையை மாற்றிகொள்ளலாம்.
தீவன உபகரணங்கள்
- இது கோழிகளுக்கு தீவனம் அளிக்க பயன்படுத்தபடுகிறது.
- இது வெவ்வேறு அளவுகளில் மற்றும் மாடல்களில் பழைய வகையில் அல்லது பாதி தானியங்கி வகையில் இரும்பு அல்லது பிளாஸ்டிக் ஆகியவற்றால் செய்யப்பட்டிருக்கும்.
- தீவனத் தொட்டிகளின் வகைகள்:
1. தானியங்கி தீவன தொட்டிகள்
தானியங்கி தீவன தொட்டிகள்
|
- இவைகள் கோழிக்கொட்டகையின் மொத்த நீளத்திற்கு தள்ளி செல்லும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும்.
- மின்சாரத்தில் இவை இயங்ககூடியது. இதன் உயரம் கோழிகளின் வயதுக்கேற்ப மாற்றி கொள்ளலாம்.
2.நீளமான தீவனத்தொட்டி
நீளமான தீவனத்தொட்டி
|
- வெவ்வெறு நீளங்களில் தடுப்புகள் கொண்டவையாக கிடைக்கிறது.
- உயரத்தை மாற்றிக்கொள்ள வசதிகள் உள்ளன.
- இவைகள் பொதுவாக துருபிடிக்காத இரும்பினால் தயாரிக்கப்பட்டிருக்கும். சில சமயங்களில் மரம் மற்றும் மூங்கிலால் செய்யப்பட்டிருக்கும்.
- தீவனத்தொட்டிகள் ஆடாமல் இருக்கவும் உயரத்தை மாற்றிக்கொள்ளவும் தேவையான வசதிகள் உள்ளன.
- கோழிகள் தீவனத்தொட்டியின் இருபுறங்களிலும் இருந்து தீவன எடுக்கும்.
- மொத்த தீவன இடம் = 2 X தீவனத்தொட்டியின் நீளம்.
- நீளமான தீவனத்தொட்டிகள் = (2 X தீவனத்தொட்டியின் நீளம்) ÷ தீவனத்தொட்டியின் அளவு ( செ.மீ.)
3. வட்ட தீவனத்தொட்டி
வட்ட தீவனத்தொட்டி
|
- இவை பாதி தானியங்கி தீவனத்தொட்டிகள் ஆகும். இதிலுள்ள உருளை போன்ற அமைப்பில் 5 -7 கிலோ வரை போட்டு வைக்கலாம்.
- தீவனம் மெதுவாக புவிஈர்ப்பு விசையால் தீவனத்தொட்டிக்கு கீழே செல்லும்.
- இதில் தடுப்புகளை அமைத்து தீவன விரயத்தை தடுக்கலாம்.
- இவைகள் பிளாஸ்டிகினால் தயாரிக்கப்படுகிறது.மேலும் இவைகள் கூரையிலிருந்து அல்லது தனியாக குழாய் அமைத்து அதில் இருந்து தொங்கவிடப்படுகிறது.
- இவைகள் தொங்கும் தீவனத்தொட்டிகள் எனவும் அழைக்கப்படுகிறது.
- இவைகள் வெவ்வேறு அளவுகளில் கிடைக்கின்றன. இந்த தீவனத்தொட்டிகள் நிறைய தீவனம் ஒரு முறை இட்டால் ஏறக்குறைய 4- 7 நாட்கள் வரை கோழிகளின் வயது மற்றும் தீவனம் சாப்பிடும் எண்ணிக்கை பொறுத்து போதுமான இருக்கும்.
- இதன் உயரத்தை சின்ன வசதி மூலம் சுலபமாக மாற்றி கொள்ளலாம்.
- இவைகள் வெவ்வேறு வண்ணங்ளில் பளிச்சென்று ( நீலம் மற்றும் சிவப்பு ) இருப்பதால் முட்டைகோழிகள் மற்றும் இளங்குஞ்சுகள் ஈர்க்கப்பட்டு தீவனம் உட்கொள்ளுவது எளிதாக நடைபெறுகிறது.
- தொங்கும் தீவனத்தொட்டிகளின் எண்ணிக்கை = 1.3* ( சுற்றளவு ÷தீவன உண்ணும் இடளவு ) செ.மீ.ல்
- நீளவாக்கு தீவனத்தொட்டிகளை விட தொங்கும் தீவனத்தொட்டிகளில் 30 சதவீதம் அதிகம் கோழிகள் தீவனம் உண்ணும்.
4. கிளிஞ்சல் பெட்டி
கிளிஞ்சல் பெட்டி
|
- முட்டைகோழிகளுக்கு தேவையான சுண்ணாம்பு சத்துக்காக கிளிஞ்சல் வைப்பதற்கு இவைகள் உபயோகப்படுத்தபடுகிறது.
கோழிகளுக்குத்தண்ணீர் அளிக்கும் உபகரணங்கள்
1. தண்ணீர் மென்மையாக்கிகள் மற்றும் வடிப்பான்கள்
- தண்ணீரில் கலந்துள்ள அதிகமாக திடப்பொருள்களால் ஈரப்பத கட்டுபாட்டு கருவிகள், தெளிப்பான் துளைகள், ஜெட்கள், மற்றும் வால்வுகள் போன்றவற்றில் படிவங்கள் ஏற்பட்டு அதன் செயல்பாடுகளை குறைக்கின்றன.
- தண்ணீர் மென்மையாக்கிகள் மற்றும் வடிப்பான்கள் ஆகியவற்றை பயன்படுத்தி தண்ணீரில் உள்ள மொத்த கரைந்துள்ள திடப்பொருள்களின் அளவை குறைக்கலாம். இந்த தண்ணீர் பிறகு குஞ்சு பொரிப்பகத்திற்கு உபயோகப்படுத்தபடுகிறது.
2. தண்ணீர் சூடாக்கிகள்
தண்ணீர் சூடாக்கிகள்
|
- வெந்நீர் குஞ்சுப்பொரிப்பக தட்டு கழுவிகள் மற்றும் பொதுவான சுத்தம் பண்ணுவதற்கு தேவைப்படுகிறது.
- பெரிய அளவு பாய்லர் தண்ணீரை சூடாக்க பயன்படுத்தபடுகிறது.
தண்ணீர் தொட்டிகள்
- தண்ணீர் தொட்டிகள் மற்றும் தண்ணீர் குடிப்பான்கள் கோழிகளுக்கு தண்ணீர் வைக்க பயன்படுத்தபடுகிறது.
- இவைகள் வெவ்வேறு அளவு மற்றும் அமைப்புகளில் கிடைக்கின்றன.
1. தட்டு மற்றும் குடுவை அமைப்பு
தட்டு மற்றும் குடுவை அமைப்பு
|
- குடுவை போன்ற அமைப்பில் தண்ணீர் நிரப்பி வட்டமான தட்டு போன்ற அமைப்பில் வைத்து கோழிகளுக்கு அளிக்கப்படுகிறது.
2. நீளமான மற்றும் கால்வாய் தண்ணீர் தொட்டிகள்
- இவைகள் பொதுவாக கூண்டுகளில் பொறுத்தபட்டு இடைவிடாத தண்ணீர் வசதி செய்யப்படுகிறது.
- ஒரு முனையில் புனல் போன்ற அமைப்பின் மூலம் தண்ணீர் நிரப்பவும் மற்றோரு முனையில் நீரை வெளியேற்ற தேவையான வசதியும் இருக்கிறது.
3. தண்ணீர் பேசின்கள் (பிளாஸ்டிக் அல்லது மரம் அல்லது இரும்பு தடுப்புகளுடன்)
தண்ணீர் பேசின்கள்
|
- பேசின்கள் வெவ்வேறு விட்டளவுகளில் கிடைக்கின்றன. ( 10, 12,14 மற்றும் 16 அங்குலம்)
- தனியாக தடுப்புகள் இருப்பதால் கோழிகள் தண்ணீருக்குள் செல்லுவது தடுக்கப்படுகிறது.
4. பெல் வகை தானியங்கி தண்ணீர் அளிப்பான்கள்
பெல் வகை தானியங்கி தண்ணீர் அளிப்பான்கள்
|
- கடினமான பிளாஸ்டிக்கினால் ஆன இவைகள் இதற்கென அமைக்கப்பட்ட குழாய்கள் மூலம் தொங்கவிடப்படுகிறது.
- இதில் தண்ணீர் செல்லும் அளவை கட்டுபடுத்துவதற்கு என தனியாக அமைப்பு உள்ளதால் அதன் மூலம் எப்போதும் தண்ணீர் இருக்குமாறு பார்த்து கொள்ளமுடியும்.
- இதில் தொடர்ச்சியாக தண்ணீர் செல்லும் வசதி இருப்பதால் நாள்முழுவதும் கோழிகளுக்கு தண்ணீர் கிடைக்கிறது.
- இந்த தண்ணீர் அளிப்பான்களின் உயரத்தையும் தண்ணீர் செல்லும் அளவையும் மாற்றுவதற்கான அமைப்புகள் இதில் உள்ளன.இந்த பிளாஸ்டிக் தண்ணீர் அளிப்பான்கள் பளபளக்கும் வண்ணங்களில் (சிவப்பு மற்றும் நீலம்) இருப்பதால் கோழி மற்றும் குஞ்சுகள் இவற்றால் கவரப்படுகிறது.
- பெல் வகை தண்ணீர் அளிப்பான்களின் எண்ணிக்கை =1.3*(சுற்றளவு ÷ தண்ணீர் குடிக்கும் இடஅளவு)
5. நிப்பிள் தண்ணீர் அளிப்பான்
நிப்பிள் தண்ணீர் அளிப்பான்
|
- இது ஆழ்கூளமுறை மற்றும் கூண்டு முறை வளர்ப்பில் பயன்படுத்தபடுகிறது.
- ஆழ்கூள முறையில் நிப்பிளுக்கு கீழே கிண்ணம் அமைத்து அதன் மூலம் ஆழ்கூளம் ஈரமாவது தடுக்கப்படுகிறது.
- நிப்பிளை அழுத்தும் போது அதில் இருந்து தண்ணீர் வெளியே வரும்.
- They can be used for all types and classes of
birds , but most commonly used in laying cages. - ஒவ்வொரு கூண்டுக்கும் ஒரு நிப்பிள் அமைத்தால் அது 3 முட்டைக்கோழிகளுக்கு போதுமானது.
6. கையால் நிரப்பப்படும் தண்ணீர் அளிப்பான்கள்
கையால் நிரப்பப்படும் தண்ணீர் அளிப்பான்கள்
|
- இளங்குஞ்சுகளுக்கு முதல் வாரத்தில் இது அதிகமாக உபயோகப்படுத்தபடுகிறது.
- இதில் துளையிலிருந்து ஊற்றுப்போல நீர் வருவதால் இதை ஊற்று தண்ணீர் அளிப்பான்கள் எனவும் அழைக்கப்படுகிறது.
- இதில் மருந்துகள் மற்றும் டானிக்கள் ஆகியவற்றை சுலபமாக கோழிக்குஞ்சுகளுக்கு அளிக்கலாம்.
- இவைகள் சிவப்பு மற்றும் நீலம் வண்ணங்களில் கிடைக்கின்றன.
- தண்ணீர் தொட்டிகள் மற்றும் தீவனத் தொட்டிகளுக்கு இடையே உள்ள இடவெளி 0.6 மீ இருக்குமாறு அமைக்கவேண்டும்.
VIII. தடுப்பூசி அளிக்கும் உபகரணங்கள்
1. மருந்தூசி ஊசியுடன் அல்லது தடுப்பூசி சொட்டு அளிப்பான்
- இதைக்கொண்டு நாசித்தூவரங்களிலும் கண்களிலும் தடுப்பூசி மருந்துகளை அளிக்கலாம்.
2. தானியங்கி தடுப்பூசி அளிப்பான்
தானியங்கி தடுப்பூசி அளிப்பான்
|
- இதன் மூலம் குறைந்த நேரத்தில் அதிக கோழிகளுக்கு கண்கள் மற்றும் மூக்கின் வழியே தடுப்பூசி மருந்துகளை இடமுடியும்.
3. கோழி அம்மை தடுப்பூசி அளிப்பான்
- இறக்கையில் தோலுக்கடியில் தடுப்பூசி மருந்துகளை இட இது உபயோகமாக இருக்கிறது.
IX. பிற உபகரணங்கள்
1. அலகு வெட்டி
அலகு வெட்டி
|
- மின்சாரத்தால் இயங்கும் இதைக்கொண்டு கோழியின் அலகை வெட்டி கோழிகள் கொத்திகொள்ளுவதை கட்டுப்படுத்தலாம்.
- இது 2 அல்லது 2.5 அடி உயரமுள்ள தூண் மீது பெடல் போன்ற அமைப்புடன் அமைக்கப்பட்டிருக்கும்.பெடலை கால் மூலம் அழுத்தினால் சூடாக்கப்பபட்ட தகடு கோழியின் அலகை வெட்டுமாறு அமைக்கபட்டிருக்கும்.
- தகட்டின் சூட்டை கட்டுபடுத்த ஒரு அமைப்பும் இந்த கருவியில் உள்ளன.
2. முட்டை பெட்டிகள்
முட்டை பெட்டிகள்
|
- இவை தரைவழி கோழிவளர்ப்பில் சுத்தமான முட்டை உற்பத்திக்கு உபயோகப்படுத்தபடுகிறது.
- இவை தனியாகவும் கூட்டாகவும் மூடிக்கொள்ளும் தன்மையுடனும் கிடைக்கின்றன.
3. எடை தராசுகள்
எடை தராசுகள்
|
- வெவ்வேறு வகையான எடை தராசுகள் கோழிகள் மற்றும் தீவனங்களை எடைப்போட பயன்படுத்தபடுகின்றன.
4. உட்காரும் குச்சிகள்
உட்காரும் குச்சிகள்
|
- தரையிலிருந்து 3 – 5 அடி உயரத்தில் மரத்திலான இவ்வமைப்புகள் மூலம் கோழிகள் நிற்க பயன்படுகிறது.
5. அலமாரிகள்
அலமாரிகள்
|
- இரும்பு மற்றும் மரத்தால் ஆனது.
- ஆழ்கூள முறையில் ஆழ்கூளம் இதன் மேல் வைக்கப்படுகிறது.
6. தண்ணீர் தெளிப்பான்
தண்ணீர் தெளிப்பான்
|
- வெப்பமான பகுதிகளில் பயன்படுத்தபடுகிறது.
- சந்தையில் கிடைக்கும் தெளிப்பான் மூலம் பண்ணை சுற்றுபுறம் மட்டுமல்லாமல் கொட்டகையின் கூரை மேல் தண்ணீர் தெளிக்க பயன்படுத்தபடுகிறது.
- வெப்ப மற்றும் ஈரப்பதம் அதிகமான பகுதியில் மதியவேளையில் கூரையை குளிர்விக்க பயன்படுத்தபடுகிறது.
7. தெளிப்பான்
தெளிப்பான்
|
- பல வகையான தெளிப்பான்கள் சந்தையில் கிடைக்கின்றன.
- கையால் இயக்ககூடிய வகை கோழிப்பண்ணைகளில் உபயோகப்படுத்த மிக சரியானது.
- இதில் உள்ள டேங்கில் தேவைப்படும் கிருமிநாசினி நிரப்பி தெளிக்கப்படுகிறது.
8. தீ துப்பாக்கி
தீ துப்பாக்கி
|
- மண்ணென்ணெய் மூலமோ அல்லது எரிவாயு மூலமோ இயங்கும் இந்தத் துப்பாக்கியினைப் பயன்படுத்தி கிருமி நீக்கம் செய்யலாம்.
- உலோகத்தாலான கம்பிகளை தீத்துப்பாக்கி கொண்டு சூடாக்குவதால் அதிலிருக்கும் அக ஒட்டுண்ணிகள், அவற்றின் முட்டைகள் மற்றும் இளங்கூட்டுப்புழுக்கள் கொல்லப்படுகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக