யா அல்லாஹ்!!!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன்.என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக.

செவ்வாய், 22 ஏப்ரல், 2014

Programme

Programme Coordinator
******************
Krishi Vigyan Kendra
Kattupakkam,
Kattankulathur (Post),
Kancheepuram (District),
Tamil Nadu - 603 203 .
Telephone : 044-27452371




திங்கள், 21 ஏப்ரல், 2014

அசோலா தீவன வளர்ப்பு



கால்நடைகளின் உணவுத் தேவையான அசோலா தீவன வளர்ப்பில், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பகுதி விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

அதிக விளைச்சல் தரும் புதிய தீவனப்புல் ரகங்களின் வருகையால், வைக்கோல் மற்றும் தானியங்களின் விகிதம் குறைந்து, கால்நடைகளுக்கு தீவனத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும், விளைநிலங்கள் இருப்பிடங்களாகவும், தொழிற்சாலைகளாகவும் மாறி வருவதால் தீவனத்திற்கு தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது.

தீவன தட்டுப்பாட்டை சரிசெய்யும்

இத்தகைய சூழ்நிலையில், கால்நடைகளுக்கு தேவையான நிறைய சத்துக்களை தன்னகத்தே கொண்டுள்ள ''அசோலா'' போன்ற சிறிய வகை தாவரங்களை வளர்ப்பதன் மூலம், கால்நடைகளுக்கான தீவனத் தேவையை சமாளிக்க முடியும் என்கின்றனர் கால்நடை பரமாரிப்புத்துறையினர். அசோலாவை வளர்க்க சிறிய அளவிலான இடவசதி போதும் என்பதால், தீவன வளர்ப்பில் கரூர் மாவட்ட விவசாயிகள் ஆர்வமுடன் ஈடுபடுகின்றனர்.

அரவக்குறிச்சி வட்டாரத்தில் உள்ள சின்னதாராபுரம், நஞ்சைகாளக்குறிச்சி, புளியம்பட்டி, செளந்தராபுரம் உள்ளிட்ட பகுதிகளில், அசோலா வளர்ப்பிற்கு தேவையான அனைத்துப் பொருட்களையும் இலவசமாக வழங்கி விவசாயிகளை ஊக்கப்படுத்தி வருகின்றனர் கால்நடை பராமரிப்புத் துறையினர்.

இதன் மூலம் வளர்க்கப்படும் அசோலா தீவனத்தை உண்ணும் கால்நடைகள், அதிகளவு பால் கறப்பதாகவும், கோழிகள் அதிக எடையோடு வளர்வதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

மாவுச்சத்து மற்றும் புரதச்சத்து அதிகமாக நிறைந்த தீவனமாக இருக்கும் அசோலாவை, குறைவான நீரைக் கொண்டும் வளர்க்க முடியும் என்கின்றனர் கால்நடை பராமரிப்புத் துறையினர். பொதுவாக முக்கோணம் அல்லது வட்டவடிவில் இருக்கும் அசோலா தீவனத்தின் இலைகள் சிறியதாகவும், ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைத்தது போன்று இருக்கும் என்பது சிறப்பு.


கால்நடைகளுக்கான தீவனத் தட்டுப்பாட்டை சரிசெய்ய, மாற்று வழிகள் மூலம் தீவன வளர்ப்பில் விவசாயிகள் ஈடுபடுவது வரவேற்பக்குரியதும், பாராட்டுக்குரியதுமாகும்.