யா அல்லாஹ்!!!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன்.என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக.

புதன், 12 மார்ச், 2014

ஒருங்கிணைந்த இயற்கை வேளாண் பண்ணையின் அங்கங்கள்.

ஒருங்கிணைந்த தன்னிறைவு இயற்கை வேளண்மை அல்லது 
ஜீரோ பட்ஜெட் விவசாயம்;
நமக்கு என்ன நன்மைகளைத் தரும்?
தனக்குத் தானே விதைகளைத் தயாரித்துக் கொண்டு;
தனக்குத் இயற்கை உரங்களைத் தயாரித்துக் கொண்டு;
தனக்குத் தானே நுண்ணயிர் உரங்களைத் தயாரித்துக்கொண்டு;
தனக்குத் தானே பூச்சி விரட்டி மருந்துகளைத் தயாரித்துக் கொண்டு;
தனக்குத் தானே பயிர் ஊக்கு மருந்துகளைத் தயாரித்துக் கொண்டு;
தனக்குத் தானே உரங்களை மண்ணில் இட்டுக் கொண்டு;
அந்த உரங்களை மண்ணில் இட்டதும் அதை உழவோட்டிக் கலப்பதற்கு ஒரு உழவர் பட்டாளத்தை அமைத்துக் கொண்டு;
அந்த உழவர் பட்டாளத்திற்கு உணவையும் தானே தயாரித்துக் கொண்டு;
தனக்குத் தானே மகரந்தச் சேர்க்கைப் பட்டாளத்தை அமைத்துக் கொண்டு;
அந்த மகரந்தச் சேர்க்கைப் பட்டாளத்திற்கு உணவையும் தானே தயாரித்துக் கொண்டு;
தனக்குத் தானே விதைப் பரவலிற்கு ஒரு பட்டாளத்தை அமைத்துக் கொண்டு;
அந்த விதைப் பரவல் பட்டாளத்திற்கும் உணவைத் தானே தயாரித்துக் கொண்டு;
அந்த விதைப் பரவல் பட்டாளத்திற்கு உறைவிடத்தையும் தானே அமைத்துக் கொண்டு;
பாக்டீரியா முதல் வைரஸ் முதல் புழுக்கள் முதல் பூச்சிகள் முதல் பறவைகள் முதல் பிராணிகள் முதல் மிருகங்கள் முதல் "நான்தானே பெரியவன்; அனைத்தையும் அறிந்தவன்" என்று தலை கனத்து ஆடும் மனிதர்கள் வரை எல்லாருக்கும் உணவும் உறைவிடமும் தானே தயாரித்துக் கொண்டு
அந்த மனிதர்களுக்குத் தன் உற்பத்தி பொருட்களை வாரி வழங்கும்!
அளந்து பார்க்காது;
விலை மதிக்காது;
ஒரு அணுவளவும் வீணாக்காது;
அள்ள அள்ளக் குறையாது;
முறை கோணாது;
ஒழுங்கு மாறாது!
எது வரைக்கும் இதைச்செய்யும்?
நாம் இந்த ஒப்பற்ற சங்கிலியை உடைத்து உள்ளே நுழைந்து உருக் குலைக்காது இருக்கும் வரை!
அவ்வாறுதானே கோடாமல் குறைக்காமல் நமக்கு முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை கூடச் செய்து வந்தது?
அதனால்தானே நம் முன்னோர்கள் தாமும் கோடி ஆண்டுகள் வாழ்ந்து பல்கிப் பெருகி நம்மை எல்லாம் பெற்று வளர்த்தார்கள்?
மனித இனத்தை நம் தலைமுறை வரை கொண்டு வந்தார்கள்?
நாம்தான் வெறும் முப்பது ஆண்டுக் கால மனிதர்களாகிய நம் தலைமுறைதான் இந்த இயற்கைச் சக்கர வியூகத்தை உடைத்து உட்புகுந்தோம்; அபிமன்யூவைப் போல!
உடைக்கத் துணை நின்ற யாரையும் இப்போது காண முடியவில்லை!
வியூக உடைப்பு அடைக்கப் பட்டு நம்மைச் சுற்றிலும் அயல்நாட்டு உள்நாட்டுக் கௌரவர்கள்தான் உள்ளார்கள்!
காப்பதற்குத தனஞ்செயனும் தாமரைக் கண்ணனும் இல்லை!
பஞ்ச பூதங்களையும் "டெக்னாலஜி"யைக் கொண்டு நொறுக்கித் துவைத்து வைத்துள்ளோம்!
நொறுங்கிய சடலங்களைத்தான் (பிளாஸ்டிக்) எங்கெங்கும் குவித்து வைத்துள்ளோம்!
எதனாலும் கெடுக்க முடியாத நெருப்பைக்கூட நாம் அது எரியும் காற்றில் உள்ள கசடுகள் மூலம் கெடுத்துள்ளோம்!
நமக்கு நம் முன்னோர் போற்றிப் பாதுகாத்துக் கொடுத்துச் சென்ற அந்தத் தூய்மையான காற்றை நம் குழந்தைகளுக்குத் தர முடியுமா?
அந்தத் தூய்மையான நீரை நம் குழந்தைகளுக்குத் தர முடியுமா?
அந்த வளமான மண்ணை நம் குழந்தைகளுக்குத் தர முடியுமா?
அந்தத் தூய்மையான வான்வெளியை நம் குழந்தைகளுக்குத் தர முடியுமா?
அந்தத் தூய்மையான நெருப்பை நம் குழந்தைகளுக்குத் தர முடியுமா?
இவை போதாவென்று காற்று மண்டலத்தில் துளையிட்டுச் சூரியனின் நீலக் கதிர்களை மண்ணிற்குக் கொண்டு வந்திருக்கிறோமே!
அந்தத் துளையை அடைத்து நம் குழந்தைகளுக்கு முழுதான காற்றுக் கவசத்தைத் தர முடியுமா?
முடியும்!
உயிர்ச் சங்கிலியை உடைத்த நாம்தான் ஒட்டவும் வேண்டும்!
இப்பொழுதே துவக்குவோம்!
இயற்கைக்குத் திரும்புவோம்!
இயன்றவரை அழிவைத் திருத்துவோம்!
நமது குழந்தைகள் நாம் விளைத்த நாசத்தைச் சீராக்க ஒரு போர்க்களத்தையாவது கொஞ்சம் உயிருள்ள சூழலாக விட்டுச் செல்வோம்!
எத்தனையோ பேரிடர்களையும் ஊழிகளையும் தாங்கி நின்ற நம் இயற்கை அன்னை நிச்சயமாக நம்முடனும் தாங்கி நிற்பாள்!
வாருங்கள்!
இனிமேல் பஞ்ச பூதங்களில் எந்த நஞ்சையும் கலக்க மாட்டோம் என வாக்குரைப்போம்!
இயற்கைச்சக்திகளை ஒருங்கிணைத்து இயங்கும் அங்கக இயற்கை வேளாண்மைக்குத் திரும்புவோம்!
இந்த உறுதியை நாம் ஏற்றால்தான் இயற்கை அன்னையும் நமக்கு மழை தருவாள்!
********************************************************************************
Images Credit - TNAU, Department of Agronomy, Coimbatore.
Chandramouleeswaran MK Marudhachalam's photo.
Chandramouleeswaran MK Marudhachalam's photo.
Chandramouleeswaran MK Marudhachalam's photo.
Chandramouleeswaran MK Marudhachalam's photo.
Chandramouleeswaran MK Marudhachalam's photo.
Chandramouleeswaran MK Marudhachalam's photo.
Chandramouleeswaran MK Marudhachalam's photo.
Chandramouleeswaran MK Marudhachalam's photo.
Chandramouleeswaran MK Marudhachalam's photo.

அசோல உற்பத்தி பற்றி ...