யா அல்லாஹ்!!!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன்.என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக.

புதன், 12 மார்ச், 2014

ஒருங்கிணைந்த இயற்கை வேளாண் பண்ணைக்குப் பத்துக் கட்டளைகள்

ஆஸ்ட்ரா ஃபாம் ஆஸ் (Auztra FamAuz) இன் சிறிய வேண்டுகோள்--அனுபவம் உள்ள விவசாயிகளுக்கும் இள்ம் விவசாயிகளுக்கும் புதிதாக விவசாயத்திற்கு வரும் விவசாயிகளுக்கும்.
தனியாகவோ அல்லது உங்களுடைய ஒருங்கிணைந்த விவசாயப் பண்ணையின் ஒரு அங்கமாகவோ நீங்கள் தோட்டக் கோழிப் பண்ணை, புறாப்பண்ணை, தோட்ட ஆட்டுப் பண்ணை, முயல் பண்ணை, தேனீப் பண்ணை, நாட்டு மாட்டுப் பண்ணை, பால்பண்ணை என எந்த உயிரினப் பண்ணையைத் துவக்குவதாக இருந்தாலும், மிக மிக முக்கியமாகன இந்தப் பத்துக் கருத்துக்களை உங்கள் மனதில் இருத்த வேண்டும்.
அவை :
01. அந்தப் பண்ணையில் இருந்து எந்தெந்த வகையில் இழப்புக்கள் வரும்;
02. அந்தப் பண்ணை உயிர்களுக்கு எந்தெந்த வழிகளில் நோய்கள் வரும்;
03. அந்தப் பண்ணைக்கு அருகில் கால்நடை மருத்துவ உதவி கிடைக்குமா;
04. எந்தெந்த நோய்களிற்கு நீங்களே வைத்தியம் செய்து கொள்ள முடியும்;
05. உங்களுக்கு எந்த அளவிற்குக் கால்நடை வைத்தியம் தெரியும்;
06. உங்களுக்கு எந்த அளவிற்கு அந்தப் பண்ணையைப் பற்றிய தெளிவான அடிப்படை அறிவு உள்ளது;
07. அந்தப் பண்ணையின் உற்பத்திப் பொருட்களை நீங்களே அருகில் உள்ள வாரச் சந்தையில் விற்க முடியுமா;
08. உங்களிடம் நேரில் வந்து வாங்குவதற்கு உள்ளூர் வியாபாரிகள் உள்ளனரா;
09. அந்தப் பண்ணை நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் பங்கெடுக்கக் கூடிய சிறிய அளவிலானதா அல்லது தொழில் முறையில் செய்யும் பெரிய அளவிலானதா;
10. உங்களுடன் உங்களுக்காக நேரம் காலம் பாராது வேலை செய்யக் குடும்ப உறுப்பினர்கள் அல்லது நம்பிக்கையான ஆட்கள் உள்ளனரா.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக உங்களுக்கு,
"அந்தப் பண்ணைக்கு நீங்கள் "முதலாளி" அல்ல; "முதல் ஆள்" என்பது தெரிந்திருக்க வேண்டும்;
அந்தப் பண்ணையின் அனைத்து வேலைகளும் உங்களுக்கு அத்துப் படி ஆகி இருக்க வேண்டும்;
எந்தெந்த வேலைக்கு யாரை வைத்துக் கொள்ள வேண்டும் என்பது தெரிந்திருக்க வேண்டும்;
அவர்களிடம் திறமையாக வேலை வாங்கத் தெரிந்திருக்க வேண்டும்;
ஆண்டு முழுவதற்கும் ஆன அடிப்படைத் தண்ணீர் வசதி இருக்க வேண்டும்;
உங்களிடம் அந்தப் பண்ணைக்குத் தேவையான ஆறு மாத காலத் தீனி கையிருப்பில் இருக்க வேண்டும்;

அப்புறம்; அந்தப் பண்ணையில் இருந்து குறைந்த வருமானம்தான் வரும் என்றாலும் பரவாயில்லை; அதிக நட்டம் வரக் கூடாது!

இன்னும் ஒன்றே ஒன்று; நீங்கள் அந்தப் பண்ணையின் முதல் ஆள் என்று ஆகிவிட்ட படியால் நீங்கள் அந்தப் பண்ணைக்கு மிக அருகில் (அல்லது பண்ணைக்குள்ளேயே) குடியிருக்க வேண்டும்!

---இத்தகைய ஒருங்கிணைந்த வேளாண் பண்ணைகளுக்காக
வள்ளுவரே குறள் தந்திருக்கிறார் தெரியுமா?
(வள்ளுவர் எங்கே வேளாணமை செய்தார்?----
அவர் செய்யாத வேளாண்மையா?)

--"இதனை இதனால் இவன் முடிப்பன் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்"
(எந்தெந்தப் பண்ணை வேலைக்கு யாரை வைத்துக்
கொள்ள வேண்டும் என்பது தெரிந்திருக்க வேண்டும்;
அவர்களிடம் திறமையாக வேலை வாங்கத் தெரிந்திருக்க
வேண்டும்)

"ஆகாறு அளவிட்டி தாயினும் கேடில்லை;
போகாறு அகலாக் கடை"
(பண்ணையில் இருந்து குறைந்த வருமானம்தான் வரும்
என்றாலும் பரவாயில்லை; அதிக நட்டமும் செலவும்
வரக் கூடாது!)

ஜீரோ பட்ஜெட் விவசாயம்!
ஒருங்கிணைந்த இயற்கை வேளாண் பண்ணைக்குப் 
பத்துக் கட்டளைகள் 

Duck Rice Farming in Japan/Activities of Duck Farm, Niranom, Kuttanadu : A feature story

Activities of Duck Farm, Niranom, Kuttanadu : A feature story