''எங்கள ஜீவனோட
வாழ
வைக்குது
ஜீவாமிர்தம்!''
''வாழைக்கு
முட்டுச்
செலவு
இல்லை...''
''இத்தனை பெரிய இலை வாழையைப் பார்த்ததில்லை''
‘‘ஜீரோ பட்ஜெட் விவசாயத்தை ஆரம்பிச்சதுமே, தென்னைக்கு நடுவுல ஊடுபயிரா இலைவாழை 3 ஏக்கரும், நேந்திரம் வாழை 1 ஏக்கரும் போட்டேன். '10 ஏக்கர் நிலமிருந்தா, அதுல 2 ஏக்கரை மழைநீர் சேகரிப்புக்கு ஒதுக்கணும்Õனு பாலேக்கர் சொல்லியிருக்கிறார். அதனால, மழைநீர் சேகரிப்புக் குட்டை ஒண்ணு அமைச்சேன். இது என்னோட விவசாயத்துக்கு ரொம்ப உதவியா இருக்கு.
இப்ப என் தோட்டத்துல இலை வாழை மரங்கள் 3,000 இருக்கு. இலை வாடாம இருக்கற துக்காக 15 நாளைக்கு ஒரு தடவை ஜீவாமிர்தக் கரை சலை விடுறேன். இதனால இலை வாடாம இருக்குது. கூடுதல் பலனா, மரத்தோட அடித்தண்டு பெருத்து வளருது. வேகமா காத்து அடிச்சாலும் மரம் சாயாம நின்னுக்கிட்டிருக்கு. ரசாயன உரத்தைக் கொட்டினா... மரம் மெலிஞ்சி இருக்கும். காத்துல சாய்ஞ்சிடாம இருக்கறதுக்கு முட்டு கொடுப்போம். இப்ப அந்த வேலை கிடையாது. முட்டுக்கான செலவும் கிடையாது.
இலை வாழையைப் பொறுத்தவரைக்கும் ஆறு மாசத்துல இலையை அறுக்க ஆரம்பிக்கலாம். ஆனா, என்னோட தோட்டத்துல நாலரை மாசத்துலயே இலை அறுப்புக்கு வந்துடுது. Ôஇந்த அளவுக்கு பெரிசான இலையை வேற எங்கயும் பார்த்ததில்லைÕனு வியாபாரிங்க ஆச்சர்யப்பட றாங்க. எல்லாம் ஜீவாமிர்தம் தந்த மகிமைதான்னு அவங்களுக்கெல்லாம் விளக்கிச் சொன்னப்ப, அசந்துபோயிட்டாங்க.