மானிய விலையில் வழங்கப்படும் கால்நடைகளுக்கான உலர் தீவனத்தை அதிகரிக்குமாறு, கரூர் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி உள்ளிட்ட 3 இடங்களில், கால்நடைகளுக்கான உலர்தீவன கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், மானியவிலையில், கால்நடைகளுக்கான உலர் தீவனம் வழங்கப்பட்டு வருகிறது. ஒரு மாட்டுக்கு நாளொன்றுக்கு 3 கிலோ வீதம், அதிகபட்சமாக 5 மாடுகளுக்கு 15 கிலோ உலர் தீவனம் வழங்கப்படுகிறது.
இந்த அளவு போதுமானதாக இல்லை என கூறும் விவசாயிகள், இதனை அதிகரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, அரசு வழிகாட்டுதலின்படியே, கால்நடை தீவனம் வழங்கப்படுவதாக தெரிவித்தனர்.