யா அல்லாஹ்!!!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன்.என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக.

ஞாயிறு, 23 பிப்ரவரி, 2014

உழவர்க்கு வாழ்வூட்டு – வேளாண் கண்காட்சி இன்றுடன் நிறைவு

உழவர்க்கு வாழ்வூட்டு – வேளாண் கண்காட்சி இன்றுடன் நிறைவு
 
பதிவு செய்த நாள் - பெப்ரவரி 23, 2014, 1:45:43 PM
மாற்றம் செய்த நாள் - பெப்ரவரி 23, 2014, 3:20:39 PM
புதிய தலைமுறையின் உழவுக்கு உயிரூட்டு, உழவர்க்கு வாழ்வூட்டு - வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு, திருச்சி தேசிய கலைக் கல்லூரி மைதானத்தில் மூன்றாவது நாளாக நடைபெற்று வருகிறது.
தேசிய கலைக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த கண்காட்சியில், 70 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு, இயற்கை முறை வேளாண்மை மற்றும் நவீன வேளாண் கருவிகள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்படுகிறது. பாரம்பரிய தானியங்கள், இயற்கை முறை விவசாயப் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இன்றைய நிகழ்ச்சியில் ஆடு, மாடு, கோழி வளர்ப்பு, மீன் வளர்ப்பு, நன்னீரில் இறால் வளர்ப்பு குறித்து கருத்தரங்குகள் நடைபெறுகின்றன. கடந்த இரண்டு நாள் நிகழ்வில் ஏராளமான இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். மூன்று நாட்களாக நடைபெறும் இந்த கண்காட்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது.