சனி, 22 பிப்ரவரி, 2014
புதியதலைமுறையின் வேளாண் கண்காட்சி : ஆடு வளர்ப்பு குறித்த விழிப்புணர்வு
பதிவு செய்த நாள் - பெப்ரவரி 22, 2014, 12:41:03 PM
மாற்றம் செய்த நாள் - பெப்ரவரி 22, 2014, 1:04:11 PM
புதிய தலைமுறையின் உழவுக்கு உயிரூட்டு... உழவர்க்கு வாழ்வூட்டு... வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு, திருச்சி தேசிய வேளாண் கல்லூரி மைதானத்தில் இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது.
இந்த கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறவுள்ளது. இதில், விவசாய துறையில் ஏற்பட்டுள்ள நவீன வளர்ச்சியை விளக்கும் வகையில் விவசாயத் துறை சார்ந்த சிறப்பு வேளாண் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. நவீன வேளாண் கருவிகள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் காட்சிக்கு வைக்கப்பட உள்ளன.
இயற்கை விவசாய முறைகள் குறித்த தகவல்களும் பார்வையாளர்களுக்கு அளிக்கப்படவுள்ளது. விவசாய பிரச்னைகளுக்கு தீர்வு காண, துறை சார்ந்த நிபுணர்கள் ஆலோசனைகளை வழங்க உள்ளனர். விவசாயிகளுக்கு வங்கிக் கடன் வசதி குறித்தும் தகவல் அளிக்கப்பட உள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)