பதிவு செய்த நாள் - பெப்ரவரி 21, 2014, 10:19:51 PM
மாற்றம் செய்த நாள் - பெப்ரவரி 21, 2014, 10:19:51 PM
புதிய தலைமுறையின் உழவுக்கு உயிரூட்டு. உழவர்க்கு வாழ்வூட்டு. வேளாண் கண்காட்சி திருச்சியில் இன்று தொடங்கியுள்ளது.
தேசியக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த கண்காட்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இயற்கை வேளாண்மை குறித்தும், நவீன வேளாண் கருவிகள் குறித்தும் இந்த அரங்குகளில் விவசாயிகள் அறிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வேளாண் கண்காட்சி வரும் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற உள்ளது. தினம்தோறும் பிற்பகல் 2 மணிக்கு சிறப்பு கருத்தரங்கமும் நடைபெற உள்ளது.
இதில் வேளாண் பேராசிரியர்கள் மற்றும் விவசாயத் துறை அறிஞர்களுடன், சாதனை விவசாயிகளும் பங்கேற்று விவசாயம் சார்ந்த பிரச்னைகளுக்கு தீர்வு அளிக்கின்றனர். மேலும் வங்கிக் கடன் பெறுவது குறித்தும் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.