யா அல்லாஹ்!!!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன்.என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக.

வெள்ளி, 21 பிப்ரவரி, 2014

மானிய விலையில் கால்நடை தீவனம்

மானிய விலையில் கால்நடை தீவனம்: ஆட்சியர் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் மானிய விலையில் கால்நடை தீவனம் பெற்றுக்கொள்ளலாம். 

இது தொடர்பாக ஆட்சியர் ரவிகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கோடை காலத்தில் கால்நடைகளின் தீவனப் பற்றாக்குறையைப் போக்குவதற்கும், விவசாயிகளுக்கு மானிய விலையில் உலர் தீவனம் கிடைக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில் ஒரு கிலோ உலர் தீவனம் ரூ.2க்கு வழங்க வழி செய்யப்பட்டுள்ளது. 

அடையாள அட்டை வைத்திருக்கும் கால்நடை வளர்ப்போருக்கு ஒரு மாட்டிற்கு நாள் ஒன்றிற்கு 3 கிலோ வீதம் அதிகபட்சமாக 5 மாடுகளுக்கு உலர் தீவனம் வாரந்தோறும் பெற்றுக்கொள்ளலாம். தூத்துக்குடி மாவட்டத்தில் புதுக்கோட்டை, கருங்குளம், தென்திருப்பேரை, மெஞ்ஞானபுரம், கோவில்பட்டி மற்றும் விளாத்திகுளம் ஆகிய 6 கால்நடை மருந்தகங்களில் உலர் தீவன மையங்களில் 22.02.2014 முதல் பெற்றுக் கொள்ளலாம்.

எனவே, கால்நடை வளர்ப்போர் அருகிலுள்ள கால்நடை மருந்தகங்களில் தங்களது குடும்ப அட்டை நகல் மற்றும் புகைப்படத்தினை கொடுத்து உலர் தீவனம் வாங்குவதற்கு உரிய அடையாள அட்டை பெற்று பயனடைய மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார். 

உழவுக்கு உயிரூட்டு... உழவர்க்கு வாழ்வூட்டு திருச்சியில்

உழவுக்கு உயிரூட்டு... உழவர்க்கு வாழ்வூட்டு... என்ற முழக்கத்துடன் புதிய தலைமுறையின் வேளாண் கண்காட்சி திருச்சியில் feb 21to feb 23 2014 நடைபெற உள்ளது.

கண்காட்சியில், விவசாயப்பிரச்னைகளுக்கு தீர்வுகள், அதிக விளைச்சல் பெற ஆலோசனைகள், நிதி உதவிகள் குறித்த வழிகாட்டுதல்கள், மானியங்கள் பற்றிய தகவல்கள், மதிப்பு கூட்டுதல், விளைபொருட்களை சந்தைப்படுத்துதல், இயற்கை விவசாயம், குறைந்த செலவில் அதிக வருவாய் ஈட்டும் வழிமுறைகள் ஆகியவற்றுக்கு விளக்கம் அளிக்கப்படுகிறது.

புதிய தலைமுறை சார்பில் இரண்டாம் ஆண்டாக நடத்தப்படும் இந்த கண்காட்சி திருச்சியில் உள்ள பொன்மலை ரயில்வே மைதானத்தில், வரும் பிப்ரவரி மாதம் 21ந்தேதி தொடங்கி 23ந்தேதி வரையிலும் நடைபெறுகிறது.

கண்காட்சி தொடர்பான தகவலுக்கு, 8056007209, 8754428928, 8754417328, 9500019431/32/36 ஆகிய எண்களில் தொடர்புக்கொள்ளலாம்.

அரங்குகளில் நவீன வேளாண் கருவிகள், வேளாண் சார்ந்த புதிய கண்டுபிடிப்புகள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட உள்ளன.
விவசாயிகளுக்கு மட்டுமின்றி, இளைஞர்களுக்கு வேளாண்மையில் ஆர்வத்தை ஏற்படுத்துவது, கால்நடைகள் வளர்ப்பவர்கள், இயற்கை ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் வல்லுநர்கள் என அனைத்து தரப்பினருக்கும் பயனளிக்கும் வகையில் வேளாண் கண்காட்சிக்கு புதிய தலைமுறை ஏற்பாடு செய்துள்ளது.