கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளி சந்தை, தமிழகத்தின் இரண்டாவது பெரிய சந்தை எனக் கூறப்படுகிறது. இங்கு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சந்தை கூடுகிறது. இந்த சந்தையில் காய்கறி, தானியங்கள், தங்கம், வெள்ளி, இரும்பு சாமான்கள் மட்டுமல்லாது ஆடு, மாடுகள் என அனைத்து பொருட்களும் விலை மலிவாக கிடைக்கின்றன.
ஒவ்வொரு பொருளுக்கும் தனித்தனி இடம் ஒதுக்கப்பட்டு, அங்கு விற்பனை நடக்கின்றது. அந்தந்த இடங்களில் வியாபாரிகளும், பொதுமக்களும் தங்களுக்கு தேவையானதை மொத்தமாகவோ அல்லது சில்லறையாகவோ வாங்கி செல்வது வழக்கம். இதன்மூலம், கணிசமாக பணம் மிச்சமாகும் என்கின்றனர் அந்த சந்தை பற்றி தெரிந்தவர்கள்.
வெளியில் உள்ள கடைகளை விட, இந்த சந்தையில். பொருட்களுக்கு ஏற்ப, கிலோவிற்கு ஒன்று முதல் 10 ரூபாய் வரை, விலை குறைவாக உள்ளதாம். அதனால், இந்த பகுதி மக்கள் மட்டுமல்லாது வெளியூர்களில் இருந்தும் அதிக மக்கள் இந்த சந்தையை நாடி வருவதாகக் கூறப்படுகிறது. ஒரு குடும்பத்துக்கு. ஓராண்டுக்கு தேவையான மிளகாய், தனியா, பருப்பு வகைகள் என அனைத்தையும் மொத்தமாக இங்கு வாங்கி செல்வதால், குடும்ப பட்ஜெட்டில் கணிசமாக பணத்தை மிச்சப்படுத்த முடிகிறது என்கின்றனர் இப்பகுதி மக்கள். இங்கு வாங்கப்படும் பொருட்கள் தரமுள்ளதாக இருப்பதாகவும், இடைத் தரகர்கள் இல்லாமல் நேரடியாக விவசாயிகளிடமிருந்தே உணவு தானியங்கள் வாங்கப்படுவதால், அவர்களுக்கு சற்றே கூடுதல் விலையும், வாடிக்கையாளருக்கு விலை மலிவாகவும் உள்ளது எனக் கூறப்படுகிறது.
தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் இதுபோன்ற சந்தைகள் இருக்கத்தான் செய்கின்றன. அதனால், நாம் வசிக்கும் இடத்திற்கு அருகில் இதுபோன்ற சந்தைகள் இருப்பின், அங்கு வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவது உங்களது பர்ஸை கரைந்து போகாமல் பாதுகாக்கும் வழி எனச் சொல்லலாம்
.