யா அல்லாஹ்!!!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன்.என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக.

செவ்வாய், 18 பிப்ரவரி, 2014

எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக்கொள்வாயாக

رَبَّنَا تَقَبَّلْ مِنَّاإِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيمُ وَتُبْ عَلَيْنَاإِنَّكَ أَنتَ التَّوَّابُ الرَّحِيمُ
“எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக; நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்”. எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக; நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்.” 2:127-128

காளையின் விந்தணுவை விற்று ஆண்டுக்கு ரூ.40 லட்சம் சம்பாதிக்கும் விவசாயி

காளையின் விந்தணுவை விற்று ஆண்டுக்கு ரூ.40 லட்சம் சம்பாதிக்கும் விவசாயி
காளையின் விந்தணுவை விற்று ஆண்டுக்கு ரூ.40 லட்சம் சம்பாதிக்கும் விவசாயி
மொகாலி, பிப். 17-

அரியானாவைச் சேர்ந்த விவசாயி கரம்வீர் சிங், பால்பண்ணை வைத்துள்ளார். இவருக்கு சொந்தமாக பல மாடுகள் உள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்கதாக முர்ரா வகை எருமை இனத்தைச் சேர்ந்த காளை ஒன்று உள்ளது. ஐந்தரை வயதான இக்காளைக்கு யுவராஜ் என்று பெயரிடப்பட்டுள்ளார். பால் கொடுக்கும் பசுவுக்கு இணையாக இக்காளை தன் உரிமையாளருக்கு வருமானம் அளித்து வருகிறது.

தற்போது மொகாலி அருகே சாப்பர் சிரியில் நடைபெற்று வரும் பஞ்சாப் விவசாய மாநாட்டிற்கு இந்த காளையை கரம்வீர் சிங் கொண்டு வந்துள்ளார்.

இதுகுறித்து யுவராஜின் உரிமையாளர் கரம்வீர் சிங் கூறுகையில், “யுவராஜ் உயர்ரக முர்ரா எருமையினமாகும். எனவே இதன் விந்துவை வாங்க பஞ்சாப், அரியானா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

நான் ஒரு குப்பி (ஒரு டோஸ்) விந்துவை ரூ.300க்கு விற்று வருகின்றேன். ஆண்டுக்கு 15000 முதல் 20000 குப்பிகள் விற்று வருகின்றேன். இதனால் ஆண்டுக்கு ரூ.40 லட்சம் வருமானம் வருகிறது” என்று தெரிவித்தார்.

“யுவராஜின் பராமரிப்புக்கு மட்டும் நாளொன்றுக்கு ரூ.2000 செலவாகிறது. தினமும் 10 கிலோ பாலும் 5 கிலோ ஆப்பிளும் அதற்கு உணவாக வழங்கப்படுகிறது. யுவராஜை ஆந்திராவைச் சேர்ந்த ஒருவர் ரூ.2 கோடிக்கு கேட்டபோது நான் கொடுக்க மறுத்துவிட்டேன். அதேபோன்று இதன் தம்பியான பாலியை ரூ.1 கோடிக்கு கேட்டபோதும் விற்பனை செய்ய மறுத்துவிட்டேன்“ என்றும் கரம்வீர் சிங் தெரிவித்தார்.

பஞ்சாப் விவசாயிகள் ஆணையத்தின் பால்பண்ணை நிபுணர் அனில் கவுரா கூறுகையில், “இக்காளையின் விந்துவை விவசாயிகள் வாங்கிச்செல்வதற்கு காரணம், இவ்விந்தணு செலுத்தப்படும் எருமைகள் மற்ற கலப்பின எருமைகளை காட்டிலும் அதிகமாக, அதாவது பால்சுரக்கும் காலத்தில் 4000 லிட்டர் பால் கொடுக்கும்” என்று தெரிவித்தார்.

யுவராஜின் தாய் எருமை நாளொன்றுக்கு 26.5 கிலோ பால் தருவது குறிப்பிடத்தக்கது.